Friday, June 25, 2010

எங்கள் பேரன்பிற்குரிய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

எங்கள் பேரன்பிற்குரிய தமிழகத் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

உங்கள் சமூகப் பணி மென்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

கடந்த பல ஆண்டுகளாக வெளி நாட்டில் பணி புரிந்து, வாழ்ந்து வரும் J. Iqbal Ahmed குவைத்திலிருந்து விடுக்கும் கோரிக்கை:

ஐயா, லட்சக் கணக்கான தமிழர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் (வீட்டு டிரைவர், வீட்டு வேலை, கட்டிட வேலை) சொற்ப வருவாய் பெற்று, பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 22 அன்று குவைத்தில் உள்ள இந்திய தூதரக வாசலில் வைத்து மயிலாடுதுறையைச் சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞரை அவரது குவைத் முதலாளி ( இரும்பு கம்பியால்) அடித்து, போலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளார். இந்த செய்தி அரப் டைம்ஸ் என்ற நாளிதழில் (23.4.2010) வந்துள்ளது. அவரது நிலை இன்று வரை சரியாகத் தெரியவில்லை. இதை, போல் ஏராளமான சம்பவங்கள் அன்றாடம் நடக்கின்றன. இந்த oடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டிட, அவர்களின் நலனுக்காக தமிழக அரசு தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.(கேரளா மாநில அரசு வெளிநாடு வாழ் கேரள மக்களுக்காக தனி அமைச்சகம் அமைத்து பல ஆண்டுகளாக பணி ஆற்றி வருகிறது)

இதை கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சரிடம் Oப்புதல் பெற்று தாங்கள் அறிவிக்க வேண்டும் என்று இந்த நல்ல நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

DeputyCM web link

இப்படிக்கு, வெளிநாடு வாழ் தமிழன்.
J. Iqbal Ahmed
Kuwait
Mobile +965 97823446

நம் மொழி தமிழ்!

நம் மொழி தமிழ்!

-சுதா அறிவழகன்

திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.

இந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இவை தவிர 35 சிறு மொழிக் கூட்டத்திற்கும் தமிழே மூல மொழியாக இருப்பது வியப்புக்குரியது.

இன்று தனிச் சிறப்புடன் கூடிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், 9வது நூற்றாண்டு வரை தமிழின் ஒரு 'டயலக்ட்' ஆகத்தான் இருந்து வந்தது -அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம்.

தமிழை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். கி.மு. 300க்கும், 700க்கும் இடைப்பட்ட காலம் பழந்தமிழ்க் காலம் என்றும், 700க்கும், 1600க்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலத் தமிழ் என்றும், 1600 முதல் இன்று வரையிலான காலத்தை நவீன தமிழ் காலம் என்றும் ஆய்வாளர்கள்
வகைப்படுத்துகின்றனர்.

தமிழ் என்ற பெயர் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன.

செம்மொழித் தமிழ்...

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.

மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.

இன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.

இலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, கிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.

ஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.

செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

தமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.

செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.

செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.

செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.

தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.

தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.

பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.

தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.

ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.

தனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...

தொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க கால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.

கி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.

வால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.

பரவசப்படுத்தும் பக்தி இலக்கியம்

பக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.

அதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.

தமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.

அதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒன்றாக ஜொலிக்கிறது.

இப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.

தமிழின் பிற சிறப்புகள்

- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.

- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.

- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.

- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.

- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.

- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.

- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.

இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்துவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, தமிழக அரசு சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.

ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.

தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம், அக மகிழ்வோம்.

Thanks: Thatstamil.com

HEAT - PREVENTION IS BETTER THAN CURE!!!

HEAT - PREVENTION IS BETTER THAN CURE!!!


While your efforts and work outside the office are essential to the performance and operation of the company, your wellbeing is equally vital, hence, we would highly recommend taking the necessary precautions such as

· Drinking plenty of water
· not to remain under direct sun exposure, try to remain in the shade
· keep your cars well ventilated and aired
· take extra percussions with elders and children
· Do not leave your cell phone or other electronic items in the car exposed to the heat as it is easily flammable
· Please be sure to protect yourself with sunscreen.
· Dress in loose light clothing and avoid tight, air restricting garments.
· wear your sunglasses outside the office in day light to protect your eyes tissue which can be easily damaged by such a heat and sun.
· Try to leave an open bottle of water in your car if you leave it in an un-shaded car park as the evaporated water will counter act the heat impact.
· Do not leave perfumes or lighters in the car as they are flammable.
· Do no leave children or pets in locked unventilated areas such as cars (heat will kill them).
· Do not walk for long times directly under the sun (i.e. wear hat or umbrella).

செம்மொழிப் பாடல் !!!

செம்மொழிப் பாடல் !!!


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழி செம்மொழி - தமிழ் மொழியாம்!

கம்ப நாட்டாழ்வாரும் கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எம்மதமும் ஏற்ற புகழ்கின்ற
எத்தனயோ ஆயிரம் கவதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழி!
தமிழ் மொழி!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
செம்மொழியான - தமிழ் மொழியாம்!

தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!
தமிழ் மொழியாம்!
எங்கள் தமிழ் மொழியாம்!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!
வாழிய வாழியவே! தமிழ் வாழிய வாழியவே!

செம்மொழியான - தமிழ் மொழியாம்!


இசை - எ.ஆர்.ரஹ்மான்
எழுத்து - கலைஞர் மு.கருணாநதி
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக், ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன், சின்ன பொண்ணு, சுசீலா ராமன், ப்ளேஸ், காஷ், ரெஹ்னா ஆகிய 30 பேர்.

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு.: சிவதாணுப்பிள்ளை

கோவை: குமரிக் கண்டத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில் உலக வரலாறு தெரிய வரும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி, சிவதாணுப்பிள்ளை தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கம்பர் அரங்கில் நேற்று நடந்த அறிவியல் தமிழ் அமர்வில் சிவதாணுப்பிள்ளை பங்கேற்ற பின், தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது:

தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்த்து அமைந்திருந்த லெமூரியா எனும் குமரிக் கண்டத்தில்தான் முதல் மனிதன் தோன்றியிருக்க வேண்டும். இன்றும் இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் திராவிடக் கலாச்சாரப் பண்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மூரில் மறைந்துவிட்ட வழக்கங்கள் கூட அங்கிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சிலப்பதிகாரத்தில் குமரிக் கண்டம் மூழ்கியது குறித்த தகவல்கள் காணக்கிடைக்கின்றன. தமிழர்கள் வாழ்ந்த இந்த பூர்விக இடத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். கடந்த 38 ஆண்டுகளாக, குமரிக் கண்ட ஆய்வுப் பணிகள் நின்றுவிட்டன. நம் கப்பல் படையே இந்த ஆய்வை நடத்த முடியும். அவ்வாறு ஆய்வு நடத்தும் பட்சத்தில் உலகின் வரலாறு தெரியும். நாம் இந்த ஆராய்ச்சியை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

திப்பு சுல்தான் 6 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஆங்கிலேயர்களை தாக்கியிருக்கிறார். உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தது இன்றும் நம்மால் மறக்க முடியாத வரலாறு. ராக்கெட் தயாரிக்கும் பணியை 1983ல் இந்தியா துவக்கிய போது, நாம் உலக அளவில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று விண்வெளியில் சர்வதேச அளவில் சாதனை நடத்தியிருக்கிறோம். அதற்கு தமிழரான அப்துல் கலாமுக்கே பெருமைகள் சேரும்.

பிரம்மோஸ் ஏவுகணையை நிலத்திலிருந்து கப்பல் இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கவும், கப்பலிலிருந்து கப்பலில் உள்ள இலக்கைத் தாக்கவும் பயன்படுகிறது. இது செலவு குறைந்த தொழில்நுட்பம். அதே சமயம் துல்லியத் தன்மையும் புதுமைகளையும் கொண்டது.

தமிழ் மொழி சக்தி வாய்ந்த மொழி. பாரதியின் தொலைநோக்குப் பார்வைகள் நம் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்கள் அறிவியல் துறையில் வர வேண்டும். அறிவியல் சிந்தனை அதன் வழி வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமீரகத்தின் தகவல் களஞ்சியம்

அமீரகத்தின் தகவல் களஞ்சியம்

http://www.vkalathur.com/muduvai.php

ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து அந்நிய நாட்டில் வாழ்கின்றோம். நாம் இங்கு இருந்தாலும் எண்ணங்கள் முழுக்க இந்தியாவையேச் சுற்றி சுற்றி வருவது நிதர்சனம். நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சொந்தங்களிடம் சுகம் விசாரிக்கும் போது தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஊரில் நடப்பவற்றை... நாட்டில் நடப்பவற்றை எப்படித் தெரிந்து கொள்வது? பேப்பர் படித்துக் கொண்டே நண்பர்களுடன் விவாதித்த விவாதித்த விஷயங்கள் எல்லாம் இப்போது எந்த நிலையில் இரக்கின்றன? இவற்றையெல்லாம் இங்கிருந்து கொண்டு எங்கே கிடைக்கும் என்ற ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கும். வளைகுடாவில் வாழும் தமிழர்களின் இந்த வாட்டத்தைப் போக்குவதற்காகவே தமிழ்சசேவை புரிந்துவருகிறார் காஹிலா என்கிற முதுவை ஹிதாயத்துல்லா.

இவர் தமிழ் உள்ளங்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த முக்கியச் செய்திகளைத் திரட்டி பத்திரிக்கைகள் மூலம் நம்மைப் படிக்க வைப்பவர், தானாக முன்வந்த பத்திரி்க்கைகளுக்குச் செய்தி தரும் தேனீயான முதுவை ஹிதாயத்துல்லாவைப்பற்றி செய்திகளைத் தெரிந்து கொள்வொமா?

அமைதி தவழும் சிரித்த முகம் அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பு, அமீரகத்தில் வாழும் நலிந்த தமிழ் மக்களுக்குத் தன்னுடன் தொடர்கொள்ள தமிழ் அமைப்புகள் மூலம் ஆர்ப்பாட்டமில்லாமல் உதவி செய்யும் சேவகர், எதையும் இலகுவாக மென்மையாக பேசி முடிக்கும் தன்மை, ஆடம்பரமில்லாத தோற்றம் இத்தனையும் சேர்ந்த மொத்தம் தான் முதுவை ஹிதயாத்துல்லா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுவை என்னும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் M.Sc. படித்த திருச்சி வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியி்ல் வினாடி வினா போன்ற நிகழச்சிகளில் பங்கேற்றும், ஏற்று நடத்தியும் சிறப்பித்தவர், தம் பள்ளி, கல்லூரிகாலங்களில் பொத அறிவுப் போட்டிகளில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வெற்றி பெற்று மகுடம் சூட்டியுள்ளார். பொத அறிவுச்செய்திகளை விரல் நுனியிலும் நாநுனியிலும் சேமித்து வைத்திருக்கும் தகவல் வங்கி இவர்.

மேலும் .......http://www.vkalathur.com/muduvai.php

செம்மொழி எம்மொழி

செம்மொழி எம்மொழி

”தமிழ்” என்றாலே “மூவினம்”

த – என்னும் வல்லினம்;
மி – என்னும் மெல்லினம்
ழ் – என்னும் இடையினம்
முத்தமிழாம்
இயல்,இசை,கூத்து
மூவேந்தர்
சேர்,சோழ, பாண்டியர்
முக்கனியின் சுவைபோன்றே
மூன்று தமிழ்ச் சங்கம்
முப்பெரும் கடல் தாண்டி
முழங்கும் மொழி
தாய்மொழியாம் தமிழ் மற்ற மொழிகட்கும்
தாயான மொழி
தொன்மை;வளமை;தனித்தன்மை
செம்மை;இனிமை;எளிமை;இளமை;
வளமை;புதுமை;மென்மை;மேன்மை கண்டு
பரிதிமாற் கலைஞர் ஆய்வு செய்தார்;
மூதறிஞர் கலைஞர் நிறைவு செய்தார்
எம்மொழி “செம்மொழி”யானதே..!!
ஆதாம் பேசியதும் தமிழே என்று
ஆய்வுகள் உண்டு
பேச்சுத் தமிழ்; எங்களின் செவி வழி
மூச்சுத் தமிழ்
அருந்தமிழ்ப் பற்றிய குறுஞ்செய்திகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்;இதுவே இந்தியாவின் முதல் இணையப் பல்கலைக்கழகமாகும்.
“கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.”- பேரறிஞர் அண்ணா.
நமஸ்காரம் வணக்கமானதும்; உபந்நியாசம் சொற்பொழிவானதும்; பிரகஸ்பதி தலைவரானதும்;
மகாஜனங்கள் பொதுமக்களானதும்; உபாத்தியாயர் ஆசிரியரானதும்; காரியதரிசி செயலாளரானதும்; சர்வகலாசாலை பல்கலைக்கழகமானதும்; ராஜ்ஜியம் மாநிலமானதும்; உப அத்தியட்சகர் துணைவேந்தரானதும் பேரறிஞர் அன்ணாவின் பெரும் முயற்சியே;அதனால் பெற்றது தமிழுக்குப் புதிய வளர்ச்சியே.
சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்கள், இதழ்கள் கிடைக்கின்றன. அந்நாட்டு குடியரசு தலைவர் செல்லப்பன் ராமநாதன் தமிழர்தான். அங்கே பாராளுமன்றம், அமைச்சரவையிலும் தமிழர்கள் அங்கம் வகிக்கின்றனர்; சிங்கப்பூர் வானூர்தியிலும் தமிழில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன.
1955 ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18 மொழிகளின் வல்லுந்னர்களின் ஆய்வரங்கத்தில்
Tax, assessment, duty, customs ஆகிய ஆங்கிலச்சொற்களுக்கு இணையான இந்திய மொழி சொற்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேறு மொழி எதிலும் பொருத்தமான வார்த்தைகள் சமர்ப்பிக்கப் படவில்லை.
தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுந்தார்,”இதில் எல்லாச் சொற்களுக்கும் தமிழில் தனி தனி சொற்கள் உண்டு. அவை வரி, தீர்வை, கடமை, சுங்கம்” என்று முழங்கினார்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.
1991-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகபட்சமாக சீன மொழி(மாண்டரின்)பேசுவோர் எண்ணிக்கை 130 கோடியாக இருந்தது. 8-வது இடத்தில் தமிழ்(11 கோடியே 40 லட்சம் பேர்) இருந்தது. இதைவிடக் குறைவே ஆங்கிலம் பேசுவோர்.
திருக்குறளின் பெருமையை அறிந்த காந்தியடிகள்,”திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன்” என்றார்.
ரஷ்ய கிரளின் மாளிகையில் அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது திருக்குறள்.
விக்டோரியா அரசியும் வைத்திருந்தார் திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் போற்றப்படுகின்றது திருக்குறள்
தமிழ்நாடு சட்டமன்றம் திருக்குறள் ஓதியேத் துவங்கும்
சூரிய ஆண்டு முறையில் திருவள்ளுவராண்டு முறை; தை 1-ந் திகதி புத்தாண்டு;ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவராண்டு 31 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு அரசும் திருவள்ளுவராண்டு முறையைப் பின்பற்றி வருகின்றது. அதன் 12 மாதங்களாவன:
கறவம்(தை); கும்பம்(மாசி);மீனம்(பங்குனி)மேழம்(சித்திரை);விடை(வைகாசி),ஆடவை(ஆனி);கடகம்(ஆடி);மடங்கல்(ஆவணி);கன்னி(புரட்டசி);துலை(ஐப்பசி);நளி(கார்திகை)சிலை(மர்கழி)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொரீசியஸ், பர்மா, தெ ஆப்பிரிக்கா, வியட்நாம் முதலிய நாடுகளில் தமிழ் பேசப்படுகின்றது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக-கல்வி மொழியாக, துணை ஆட்சி மொழியாக, செய்திப் பரவல் தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பயன்பட்டு வருகின்றது. இந்தோனேசியா, மொரீசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் தாய்மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் அறிஞர்கள் விரும்பிப் பயிலும் மொழியாக தமிழ் அமைந்துள்ளது. ”பலநாடுகளில் பேசப்படுகின்ற நிலைகளில் உள்ள உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி திகழ்கின்றது”என்று செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் கமில் கவலபில் கூறியுள்ளார்.”யுனெஸ்கோ” நிறுவனம் தமிழ் மொழியில் இதழ் வெளியிடுவது தமிழுக்கு கிடைத்த இன்னொரு சிறப்பாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
முதல் மாநாடு கோலாலம்பூர்(1966)
2-வது மாநாடு சென்னை(1968)
3-வது மாநாடு பாரீஸ்(1970)
4-வது மாநாடு யாழ்ப்பாணம்(1974)
5-வது மாநாடு மதுரை(1981)
6-வது மாநாடு கோலாலம்பூர்(1987)
7-வது மாநாடு மொரீசியஸ்(1989)
8-வது மாநாடு தஞ்சாவூர்(1995)
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு கோவை(2010)

உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில்
”கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
“அமிழ்து அமிழ்து” என்று திரும்பத் திரும்ப சொன்னால், “தமிழ்.. தமிழ்” என்று ஒலிக்கும்
தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தானே படித்து “முத்தமிழ்க் காவலர்” ஆனார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
1967 ஜூலை 18-ல் “தமிழ்நாடு” என்னும் பெயர் அண்ணாவின் ஆட்சியில் சூட்டப்பட்டது.
நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தமிழில் கையொப்பம் இடுவார்.
தமிழில் தட்டச்சை கண்டுபிடித்தவர் தஞ்சை சோமசுந்தர அய்யர்
தமிழில் ஒருங்குறி கணிணி எழுத்து உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்தவர் அதிராம்பட்டினம்
உமர்தம்பி என்ற விஞ்ஞானி.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பர்சிவெல் என்ற ஆங்கிலேயர்.
செம்மொழி வரையறைகளைப் பெற்ற மொழிகளான லத்தீன்,பாரசீகம்,சீனம்,அரபு,சமச்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இணைந்துள்ளது.
தமிழ்ச்சொற்களின் மூலம் எபிரேய்,மங்கோலிய,ஐரொப்பிய மொழிகலிலும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து சொன்னவர் ஈழத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் 1875-ல் பிறந்த வைத்தியலிங்கம் (ஞானப் பிரகாசம்);இவருக்கு 72 மொழிகள் தெரியும்.

பெண் கவிகள்:
அவ்வையார், ஆதிமந்திரியார், ஆண்டாள், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடியானார், கவெற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கன்னையார், நல்முல்லையார், பாரிமகளிர், பூங்கண் உத்தரையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பூங்கண் உத்தரையார், இளவெயினி, பொன்முடியார், போந்தைப் பசலையார், முடத்தாமக்கண்னியார், மாற்பித்தியார், மறோகத்து நற்பசலையார், வெண்ணிகுயத்தியார், வெள்ளிவீதியார்,
ஸ்பெயின் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து சமயப் பணியாற்ற வந்த “காண்டன்ஸ்டைன் பெஸ்கி” என்பாரே “வீர்மாமுனிவர்” என்று தன் பெயரை தமிழ்ப் படுத்திய அவர்தான், “தேம்பாவணி” என்ற இலக்கியம் படைத்தார்.
1916-ம் ஆண்டு சுவாமிவேதாசலம் என்பார் தன் 13வயது மகள் நீலாம்பிகையுடன், “திருவருட்பா”வில் “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்ற வரியினைப் பாடும் போழ்து, “தேகம்” என்ற வடசொல்லுக்கு மாறாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழ் இனிமைக் குன்றாது இருக்கும் என்று கருதினார். அதைக் கேட்ட நீலாம்பிகை,”அப்படியானால், இன்று முதல் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல், அதற்கான முயற்சியை நாம் விடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வ்த்தோடு கூறினார்.மகளின் வேண்டுகோளை ஏற்று “சுவாமி வேதாசலம்” எனும் தன் பெயரை ”மறைமலை அடிகள்” என்று தனித் தமிழில் மாற்றினார். இப்படித் தோன்றியதுதான் “தனித்தமிழ் இயக்கம்”!
வ.ரா. என அழைக்கப்படும் வ.ராமசாமி, பாரதியாரைச் சந்திக்கப் புதுச்சேரி சென்றார்.அப்போது ஆங்கிலத்தில் வ.ரா.பேசினார்.”ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம்தன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டார் பாரதி. வ.ரா.வுக்கு அழுகையே வந்து விட்டது.
இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களே பாடப்பட்ட நேரத்தில், “தமிழிசைச் சங்கம்” நிறிவி-தமிழிசையை வளர்த்த பெருமை ‘செட்டிநாட்டரசர்’ ராஜா அண்ணாமலை செட்டியாரைச் சாரும்.
ஒரு மொழி வழக்கொழிதலுக்கான காரணங்கள் ஆறு என ஆய்வில் கூறுகின்றார்:மார்டின் ஹாஸ்பல்மாத் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
1) மக்கள் இடப்பெயர்ச்சி
2) வணிகம்
3) சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்
4) ஊடகங்கள்
5) காலனி ஆதிக்கம்
6) இனப் படுகொலை

முதல் தமிழ்ச் சஙம் 4440 ஆண்டுகளும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாம் தமிழ்ச் சஙம் 1850 ஆண்டுகளும் செயல்பட்டன. இவை முதல், இடை, கடை என வழக்கில் இருந்தன. கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சஙகாலம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்கள் ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழ் பேசும் மாந்னிலத்திற்கு “மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் வழங்குதல் கூடாது. “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டும் என்று 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் தியாகி சங்கரலிங்கனார். தமிழுக்காகத் தன் உயிரையே தந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார்.