Tuesday, April 20, 2010

துபாய் ஹோர் அல் அன்ஸ் / அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ள் அர‌பி மொழி ப‌யில‌..

துபாய் ஹோர் அல் அன்ஸ் / அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ள் அர‌பி மொழி ப‌யில‌..

துபாய் ஹோர் அல் அன்ஸ் ம‌ற்றும் அல் முத்தீனா ப‌குதியில் குழ‌ந்தைக‌ளுக்கு அர‌பி மொழியினை த‌ஜ்வீத் முறைப்ப‌டி சொல்லித் த‌ருவ‌த‌ற்கு த‌மிழ‌க‌த்தின் ப‌ர‌ங்கிப்பேட்டையைச் சேர்ந்த‌ ஹாபிஸ் உள்ளார்.


இவ்வாய்ப்பினை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ விரும்புவோர் ஹாபிஸ் அப்துல் ர‌ஷீது அவ‌ர்க‌ளை 050 3024352 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.
--

கேட்டரிங்

கேட்டரிங்

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=278

அறிமுகம்
ஒருவரின் ஆரோக்கியம் அவரது உடல்நிலையை அடிப்படையாக வைத்தே அமைகிறது. உடல்நிலையைச் சீராக வைத்துக் கொள்வதில் உணவே முக்கியப் பங்கு வகிக்கிறது. உணவைச் சமைப்பது ஒரு கலை. அதைப் பரிமாறுவது இன்னொரு கலை. அப்போது விருந்தினரிடம் நடந்து கொள்ளும் பண்பும் ஒரு கலை.
இவையெல்லாம் இன்றைய நவீனச் சூழலில் நிறுவனமயமாகிவிட்டன. எனவே, உணவு சார்ந்த நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதனால் இந்நிறுவனங்களில் உலக அளவிலான வேலைவாய்ப்புகளும் பெருகி வருகின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் உணவுக்காகத் தினமும் ஹோட்டல்களைச் சார்ந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் அதிகரித்துள்ளன. பொது இடங்களில் மட்டுமன்றித் தொழில், கல்வி நிறுவனங்கள், கப்பல், ரயில்வே, விமானத் துறையிலும் கேட்டரிங் படித்தவர்களுக்கு வேலை இருக்கிறது. கேட்டரிங் கலை சுற்றுலாத் துறையின் ஓர் அங்கமாகி விட்டது. எனவே, மெரிடியன், ஹில்டன், ஹயத், மேரியோட், பெஸ்டு வெஸ்டன், ரேடிசன் எனப் பன்னாட்டு நிறுவனங்களும் இதில் முதலீட்டைச் செய்து வருகின்றன.
கேட்டரிங் படித்தவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமன்றி, எளிய ரெஸ்டாரண்டுகளில்கூட வேலை வாய்ப்புகள் உள்ளன.
இவை தொடர்பான படிப்புகள் விவரம்
பி.எஸ்.சி உணவு மற்றும் மேலாண்மை (கேட்டரிங் சயன்ஸ் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) இது 3 ஆண்டுப்படிப்பு தவிர, பி.எச்.எம். இளநிலை ஹோட்டல் மேனேஜ்மென்ட் 4 ஆண்டுகாலப் படிப்பும் உண்டு. தவிர ஓராண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்புகளும் உண்டு. நாடு முழுவதும் ஏராளமான கல்வி நிறுவனங் களில் இப்படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. இதனால் இப்படிப்பு உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் 3 வகையான ஆய்வுக்கூடங்கள் (சமையல் அறை) அவசியம். முதலாவது அடிப்படைச் சமையல் அறை, அதிகம் பேருக்குச் சமைக்கும் அறை, சர்வதேச உணவு வகைகள் தயாரிக்கும் அறை. மத்திய அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 19 இடங்களில் அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னையிலும் திருச்சியிலும் உள்ளன. இங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் சம்பந்தமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இதில் என்னவெல்லாம் சொல்லித் தரப்படும்? பெயரிலேயே இருப்பது போல் இரண்டு விதமான படிப்புகள் இதில் உள்ளன. சமையல், சமையலறை, சாப்பாடு பரிமாறுதல் போன்ற இன்னும் பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி படிப்பு ஒரு வகை. ஹோட்டல் சம்பந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர் களை உபசரித்தல், ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு இரண்டாவது வகை.
பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு சான்றிதழ்ப் படிப்பு எனப் பல வகை யிலும் நடத்தப்படுகின்றன. குறுகிய காலப் பயிற்சிகளும் உள்ளன. படிப்புக்கு ஏற்ற வகையில் 6 மாதம், ஓராண்டு எனப் படிக்கலாம். பெரிய படிப்புகளை 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் செலவழித்துப் படிக்க வேண்டிய சூழ்நிலையில் இல்லாதவர்கள்கூட உடனடி வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் பத்தாம் வகுப்பு முடித்ததும் குறுகிய காலச் சான்றிதழ்ப் படிப்புகளிலும் சேரலாம்.
உணவு தயாரிப்புக் கலை (craft course in food production):
ஒரு ஹோட்டலில் முக்கியமான இடம் உணவு தயாரிக்கும் இடம் ஆகும். சமையல் அறை என்றாலும் இப்பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உணவு தயாரிப்பு இடம் சுத்த மானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தால்தான் ஹோட்டல் நிறுவனத்துக்கே சிறப்பு இருக்கும். இந்த உணவுத் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றுவதற்குத் தேவையான தகுதிகளைத்தான் ஃபுட் புரொடக்‌ஷன் எனப்படும் படிப்புக் கற்றுத் தருகிறது. இப்படிப்பு ஒன்றரை ஆண்டுக் காலப் படிப்பாகும். இதில் சேருவோருக்கு ஆறு மாதங்கள் நேரடிப் பயிற்சி (இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங்) அளிக்கப்படும். சில கல்வி நிறுவனங்கள் ஓராண்டுக் காலச் சான்றிதழ்ப் படிப்புகளையும் நடத்து கின்றன. இதில் சேருவதற்குப் பத்தாம் வகுப்பு படித்தால் போதும். வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை.
பேக்கரி உணவு தயாரிப்புக் கலை (Craft Course in Bakery and Confectionary)
பிரெட், பிஸ்கெட், பன், கேக் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விரும் பாதவர்களே கிடையாது. அது மட்டுமல்ல, இயந்திரமயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் இது போன்றவை காலை உணவாகவோ, மதிய உணவாகவோகூட மாறிவிடுகின்றன. குழந்தைகளை மகிழ் விக்கும் இத்தகைய பேக்கரி உணவுப் பண்டங்கள் இல்லாத வீடுகளே இல்லை.
இந்நிலையில் இப்பண்டங்களின் தேவையும் அதிகரித்து வருவதால், இத்தொழிலும் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. அதன் காரணமாக, இது தொடர்பான படிப்புக்கும் மதிப்புக் கூடி வருகிறது. பேக்கரி உணவுத் தயாரிப்புக்கலைப் படிப்பு ஓராண்டு டிப்ளமோ படிப்பாகும். இதில் 6 மாதங்கள் தொழில் பயிற்சியும் (இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங்) உண்டு.
10- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். வயது வரம்பு இல்லை. இதைப் படித்து முடித்தவர்கள் ஹோட்டல்களிலும் பேக்கரி களிலும் கேக், பிரெட், பிஸ்கெட், சாக்லெட்களைத் தயாரிக்கலாம். இல்லையென்றால் சொந்தமாகவும் தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறலாம். இப்படிப்பை முடித்தோருக்குப் பெரிய ஹோட்டல்களில் கூட வேலை கிடைக்கும். ஆர்வமும் முயற்சியும் உழைப்பும் போதும். சுயமாகத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவியும் உண்டு.
இல்லப் பராமரிப்பு (Craft Course in House Keeping)
உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர்வாகம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று கைகோத்துக் கொண்டிருக்கின்றன. ஹோட்டல் என்றதும் ‘சாப்பிட்டோம் தங்கினோம்’ என்று மட்டும் இருந்தால் போதாது அது சுற்றுலா மேம்பாட்டுக்கும் உதவாது. மாறாக, நல்ல இல்லத்தில் தங்குவது போன்ற உணர்வை அதன் சூழல் ஏற்படுத்த வேண்டும். அதைச் செய்வதுதான் ஹவுஸ் கீப்பிங் படிப்பு.
மாறி வரும் நாகரிக உலகில், மேலைநாட்டவர்களையும் வசீகரிக்க வேண்டுமானால் சொகுசுகள் சரிவரப் பராமரிக்கப்பட வேண்டும். ஹோட்டல் அறைகள், பூங்கா, மதுக் கூடம், கூட்ட அரங்கம், உணவு தயாரிப்பு அறை ஆகியவற்றைச் சரிவரப் பராமரித்தல், சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், அழகாக வைத்திருத்தல் ஆகிய பயிற்சிகள் தரப்படுகின்றன.
அவற்றைப் பராமரிப்போரிடம் சிறந்த வகையில் பணியைப் பெறுவதும் நிர்வாகவியலின் ஓர் அங்கமாகும். இத்தகைய பயிற்சிகளை அளிப்பது தான் இப்படிப்பு. ஓராண்டுக்கான டிப்ளமோ படிப்பு இது. இதிலும் 10-ஆம் வகுப்பு முடித்தோர் சேரலாம்.
உணவுச்சேவை (Craft Course in Food Service):
ஹோட்டல்களிலும் எளிதில் வேலைவாய்ப்பு அளிக்கும் இன்னொரு படிப்பு ‘கிராஃப்ட் கோர்ஸ் இன் ஃபுட் சர்வீஸ்’ ஆகும். இது ஆறு மாத காலப் படிப்பு ஆகும். ஆண்களும் பெண்களும் இதில் சேரலாம்.
கிராஃப்ட் கோர்ஸ் இன் ஃப்ரென்ட் ஆபிஸ் ஆபரேஷன் (Craft Course in Front Office Operation )
ஹோட்டலுக்கு வருவோரை முதலில் வரவேற்பது ஃப்ரென்ட் ஆபிஸ் தான். ஹோட்டல் குறித்த விவரங்களை இங்குதான் அறிந்து கொள்ள வேண்டும். ஒருவர் குறிப்பிட்ட ஹோட்டலில் தங்குவதா, வேண்டாமா என்பதைக்கூட இதுதான் முடிவு செய்யும். ரிசர்வேஷன் இன்பர்மேஷன், கேஷியர், பெல்டெஸ்க் என்ற பல பிரிவுகள் கொண்டது. இப்பிரிவு களில் சேவை புரிய முன்வருவோரைத் தயார் செய்வதே இப்படிப்பு ஓராண்டுக்கு உரியது. சில கல்வி நிறுவனங்கள் 10-ஆம் வகுப்பை முடித்தவர்களையும் வேறு சில கல்வி நிறுவனங்கள் பிளஸ் 2 முடித்தவர்களையும் சேர்த்துக் கொள்கின்றன.
ஃபிரென்ட்ஆபிஸர், லாபி மேனேஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூடிவ் அக்கவுண்டண்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன் எனப் பலதரப்பட்ட பொறுப்புகள் கிடைக்கும். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் மேனேஜராகவும் உயரலாம்.
இந்த மூன்று வருட டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூவில் நீங்கள் ஆர்ட்ஸ், சயின்ஸ், காமர்ஸ் ஆகிய எந்த குரூப் எடுத்திருந்தாலும் பரவாயில்லை. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் வொகேஷனல் குரூப் எடுத்தவர்களும் தகுதியுடையவர்களே.
வேலைவாய்ப்பு
இன்று சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறையில் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சி இத்துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருப்பதோடு பணம், புகழ் அந்தஸ்து மூன்றையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது. பெண்களும், கணிசமான அளவு இத்துறைகளில் படித்து நல்ல பதவிகளில் வெற்றிகரமாகச் சாதித்து வருகிறார்கள். தவிர, இப்படிப்பிற்கு வெளிநாடுகளில் உள்ள ஏராளமான ஸ்டார் ஹோட்டல்களிலும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தரும் சக்தி உள்ளது.

நன்றி :
சி.எஸ்.சி. கம்யூட்டர் எஜுகேஷன் பிரைவேட் லிட்
மாணவர் வழிகாட்டி

தமிழ் செய்தி வலைத்தளங்கள்......

தமிழ் செய்தி வலைத்தளங்கள்......




வீட்டிற்கு வெளியே பால் பாக்கெட்டும், செய்திதாளும் கிடக்கின்றது. ஒரு குழந்தை அதை எடுத்துக்கொண்டு அம்மாவின் கையில் பால் பாக்கெட்டையும், அப்பாவின் கையில் செய்தி தாளையும் கொடுத்து நற்பெயர் சம்பாதித்துக் கொள்கிறது. ஆண்கள் என்றாலே வெளியுலகை தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.

எங்கே போய் இத்தனை செய்திகளை படிப்பது என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம். இணையத்தில் ஏகப்பட்ட செய்திகளை வெளியிடும் தளங்கள் இருக்கின்றன. மிகச் சிறந்த நாளிதல்களின் தளங்கள் கூட இருக்கின்றன.

இணையத்தில் செய்திகளைப் படிக்க சில இணைய முகவரிகள் இங்கே,.

பி.பி.சி தமிழ் செய்திகள்
யாகூ தமிழ் செய்திகள்
கூகுள் தமிழ் செய்திகள்
தினகரன் தமிழ் செய்திகள்
தினமலர் தமிழ் செய்திகள்
நக்கீரன் தமிழ் செய்திகள்
தினமணி தமிழ் செய்திகள்
தட்ஸ்தமிழ் தமிழ் செய்திகள்
புனிதப்பலகை தமிழ் செய்திகள்
மாலைமலர் தமிழ் செய்திகள்
வெப்துனியா தமிழ் செய்திகள்
தமிழ்விண் தமிழ் செய்திகள்
குலோபல் தமிழ் செய்திகள்
விண்மணி தமிழ் செய்திகள்

நன்றி -
திருடா இணையதளம்

போலி கவுரவம் பொல்லாதது

போலி கவுரவம் பொல்லாதது

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.


"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.


"கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.


"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.


"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர்.

இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கவுரவவுமே முக்கியக் காரணம்.

போலி கவுரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது. ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான். யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கவுரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல. அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள். கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கவுரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கவுரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கவுரவத்தின் அறியாப்பருவம். "இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கவுரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கவுரவத்திற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கவுரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்? பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கவுரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்! அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கவுரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கவுரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.


சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது. வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கவுரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது. 'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர். 'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விïக்களை அவர்கள் வெல்ல முடியும். 'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை? நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து. அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்! மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள். நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை. 'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை; உருக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை, பிசையப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை; அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கவுரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை; நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது. இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கவுரவமா அல்லது போலி கவுரவமா என்பதுதான் கேள்வி.

போலிக் கவுரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

Arab News Reflects the Times With Accuracy, Vision

Arab News Reflects the Times With Accuracy, Vision
By SIRAJ WAHAB


Published in Arab News 35th Anniversary Supplement (April 20, 2010)


In 1975, when the Green Truth was launched, the Muslim world was seething with anger against the United States. This anger reached its crescendo four years later in 1979 when deviants, a term that was not in vogue then, seized the Grand Mosque and created havoc. Those were not the days of cell phones and the Internet; therefore, people believed rumors. People had heard of Juhayman, the leader of the deviants, but they believed that he was an American agent. The Muslim world from Pakistan to Indonesia was on fire. The sentiment was heavily loaded against the Americans. There were protests in front of American embassies across the Muslim world. All these were recorded in the pages of Arab News during its first four years. Of course, there was not much independent coverage of the siege of Makkah. Information was difficult to come by, and government agencies were very leery of sharing information with the media. This was evident from the stories that we carried in those days about the siege.

As it turned out, all those responsible for the carnage in Makkah were local fanatics who had twisted the ideology of Islam to achieve their own aims. The year 1979 was also when Iran was undergoing cataclysmic changes. The overthrow of the Shah further increased anti-American sentiment in the region. The editorials of those days did talk about the dangers of anti-Americanism, but the Arab street was by and large convinced that America was out to destroy the Muslim world.

However, as we go through the pages of the newspaper from the mid-1980s, one notes a perceptible shift in the mood of the people. The anti-American clouds had by and large cleared. The focus was firmly on the Soviets who were eying Muslim countries. Afghanistan had become the USSR's target, and Arab News' pages were filled with the Russian atrocities in Kabul and the Panjsher Valley. The stark black-and-white photos gave a complete picture of what was happening there. In Pakistan, Gen. Ziaul Haq had firmly taken the country into the American fold. Most Muslim countries were now arrayed against the now-defunct communist Soviet Union. Pakistan became a front-line state. The United States was now the Muslim world's chief ally. Money and arms and fighters flowed into Pakistan. Zia became a hero, and so did President Ronald Reagan. The Arab News front pages bear testimony to what seemed like an unshakable alliance. The back pages of Arab News also had stories about Rambo movies with Afghan themes.

In the mid-1980s Haj reporting was not noteworthy, but one group which found a special place in Arab News pages were the Afghans. Young Saudis who came back from the battlefront told their stories of heroics in combat, and they were prominently featured in Arab News pages. There was euphoria, and it was obvious from the letters to the editor. The end of Communism was being predicted and seemed a near certainty. The inside pages or the international pages had pictures of proud Afghans on the battlefield with American Stinger missiles on their shoulders. When victory came in Afghanistan, there were cheers in the Muslim world. "Kabul has fallen, and so too will Communism," wrote a letter writer.

The victory in Kabul was the high point of American-Muslim ties. But then Zia was assassinated and the Mujahedeen fighters who played a key role in ending the Cold War fell upon each other. Soon Afghanistan was in ruins, and then the tone of Arab News also became glum. There were appeals in the newspaper from various visiting delegates and government ministers to intervene in Afghanistan and to bring about a compromise between the warlords. All of them were invited to Makkah, and all of them signed a peace treaty; however, that treaty was consigned to the dustbin the moment they landed in Peshawar and resumed bitter combat in Afghan cities and villages. The United States, having achieved its objective of dealing a mortal blow to the Communist Soviet Union, left Afghanistan in shambles and never bothered to look back.

It was about this time that the late Kahil was at his sarcastic best. His cartoons captured the essence of what was happening. The editorials struck a very somber note and did warn of what was to come.

And then Saddam Hussein marched into Kuwait. The Gulf was on fire. There was uncertainty. The newspapers of that period are full of anxious expatriates streaming out of Kuwait and heading home. There were stories of gas masks being supplied. There was a fear of Saddam using poison gas. The Muslim world, led by Saudi Arabia, launched a massive diplomatic offensive to make Saddam see reason. He wouldn't. His men plundered Kuwait and were issuing inflammatory statements. All these were very ably and aptly covered by Arab News. In the end, the military option remained the only way to liberate Kuwait. An international force led by the US military gathered in Saudi Arabia, and Saddam and his men were driven out of Kuwait. Kuwait was destroyed, and parts of Saudi Arabia weathered Scud-missile attacks. This was the time when Arab News under Editor in Chief Khaled Almaeena became the voice of the Muslim world. Arab News stories were regularly quoted by the world media, and the front pages were regularly quoted on world television in prime time. The coverage was impeccable, and almost everybody who visited Saudi Arabia in those days took home a copy of the Green Truth as a souvenir.

Unbeknown to the journalists, there was something rumbling under the desert. The arrival of Americans in Saudi Arabia did not go down well with a tiny group of conservative Muslims, and they used it to create fissures in society. It was this that led to some angry individuals to plot against the United States, and lawless Afghanistan became a refuge for these disgruntled elements. This anger of this tiny minority resulted in Sept. 11, 2001. And then the world was divided into Muslim and non-Muslim. Arab News played its part in trying to bridge the gap but there were fanatics on both sides. And they fed each other.

After 9/11, Arab News pages display a sense of urgency and a sense of purpose about halting the bloodshed. Almaeena, James Zogby, Michael Saba and Robert Fisk were writing on the editorial and Op-Ed pages about the disastrous consequences of the so-called war on terrorism. "It cannot be fought only militarily," they were suggesting and were denouncing the collective punishment of Muslims. On Sept. 12, 2001 as Arab News condemned the atrocity in the strongest possible words, it expressed full sympathy for the Americans. Writing from Boston, Almaeena wrote a most memorable piece about how the 9/11 bombers had killed humanity by their act. That widespread sympathy for America and Americans was to dissipate as George W. Bush launched a series of ill-timed and ill-thought out measures. America was again the most hated country, not just by Muslims but by all justice-loving people in the world. One only needs to go through the editorial and Op-Ed pages of Arab News to understand what the people in the Muslim world were going through. The Iraq War only hardened Muslim sentiments against America. While there was little sympathy for Saddam Hussein, the massive killing of Iraqis fueled unprecedented anger in the Muslim world. The coverage of the Iraq War in Arab News shows that to the fullest.

ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது கைவிடேல்

(ஏ.பீ. முகம்மது அலி)


நான் 2010 ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை மண்ணடியிலுள்ள முன்னாள் புதுக்கல்லூரி செயலாளர் ஒருவருடைய அலுவலகத்தில் இரண்டு முன்னாள் செயலாளர்கள் மற்றும் மியாசி(தி முஸ்லிம் எஜூகேஷனல் அசோசியேசன் ஆப் சதர்ன் இந்தியா,புதுக்கல்லூரி) உறுப்பினர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வேலைகளுக்கான(ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ், தமிழக தேர்வுகள்) ஒரு பயிற்சு மையம் புதுக்கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றேன.; அதற்கு ஒரு முன்னாள் செயலளரும் தற்போதைய உதவி தலைவரும் தற்போதை தலைவருக்கு ஆசைப்படுவருமான ஒருவர் சொன்னார் ‘போங்க, நம்ம பசங்க என்ன பயிற்சு கொடுத்தாலும் முன்னேற மாட்டார்கள். கிரசண்டு இன்ஜினீரிங் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி கொடுக்கிறார்கள் ஆனால் தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார். அவர் தோல்விகளை முன்னுதாரணமாக எடுத்துச் சொன்னார். அதே நேரத்தில் நாட்டிலுள்ள 649 ஐ.ஏ.எஸ் வேலைக்கு சென்னை மனிதநேய மையம் நடத்தும் பயிற்சியில் 83 பேர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற வெற்றி உதாரணத்தினை எடுத்துக்கொண்டு தோல்வியினை முறியடித்து வெற்றிக்கனி பெறுவது என்ற செயலில் இறங்க அவர் மனம் மறுக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? அதைத் தான் ஆங்கிலத்தில், ‘டிபீட்டிஸம்’ அதாவது ‘கையாலாகாத்தனம்’ என்று சொல்லுகிறார்கள்.

பிரான்ஸ் நாடு பல ஆண்டுகளுக்கு முன்னால் போரில் தோல்வியினை அடுக்கடுக்காக சந்தித்துக் கொண்டிருந்தது. அந்த நாட்டுத் தலைவருக்கு ஒரு நாள் பல இளைஞர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்;த இளைஞர் கூட்டத்தில் நெப்போலியனும் இருந்தான். அந்தத் தலைவரிடம் நெப்போலியன், ‘ஏன் பிரான்ஸ் நாடு போரில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுள்ளது, உங்களுக்கு வெற்றி பெறும் திறமையில்லையா என்று வினவினார்?’ அப்போது அந்தத் தலைவர், நெப்போலியனைப்பார்த்து, ‘உன்னால் முடியுமா என்றார்?’ அதற்கு ஒரே வரியில் நெப்போலியன், ‘முடியும்’ என்றான். பின்பு நெப்போலியன் மிகவும் குறைந்த உயரமே கொண்டிருந்தாலும் பார்ப்பதிற்கு சிறுவன் போல இருந்தாலும் பிரான்ஸ் நாட்டுத்தலைவராகி போரில் வெற்றிக்கு மேல் வெற்றி ஈட்டினான். வுரலாற்றில் அவனது வெற்றியினை, ‘ஐ ஃபவுண்ட் தி துரோன் ஆப் பிரான்ஸ் ஆன் தி கிரவுண்ட், அன்டு ஐ பிக்ட்டு இட் பை மை ஸ்வோர்ட்’ என்று நெப்போலியன் சொன்னதாக ஆங்கிலத்தின் இருக்கிறது. அதாவது ‘பிரான்ஸ் நாட்டின் மகுடம் தரையில் வீழ்ந்து கிடப்பதினைக் கண்டேன், அதனை நான் எனது கத்தியால் எடுத்தேன்’ என்றான். ஆகவே சாதிக்க நினைத்தால் தோல்வி உன்னை நெருங்காது என்றால் மிகையாகாது.

அமெரிக்காவில் மெம்பிஸ் கிறித்துவ சர்ச்சுகளுக்கு மக்கள் கூட்டம் குறைந்த அளவே வந்தனர். ஆகவே சர்ச் நிர்வாகிகள் எவ்வாறு கூட்டத்தினை அதிகரிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். அப்போது அவர்கள் சர்ச்சுகள் அருகில் உள்ள மைதானத்தில் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் வைத்தால் மக்கள் பார்க்க அதிகம் வருவார்கள் அத்துடன் சர்ச்சுளிலும் பிராத்தனை செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. உடனே குத்துச்சண்டை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. என்ன ஆச்சரியம்? அவர்கள் எதிர்பார்த்தது போல் ஏராளமானோர் சண்டையும் பார்த்துவிட்டு சர்ச்சுக்கும் வந்தனர். அதேபோல் 700 இவாஞ்சலி சர்ச்சுகளிலும் டி.வி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மக்களை இழுத்தார்களாம். இதனை இங்கு ஏன் சொல்கிறேனென்றால் சர்ச் நிர்வாகிகள் தோல்விக்கான காரணம் ஏன் என்று அறிஞர் சாக்ரடீஸ் சொன்னது போல யோசித்து நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள். ஏன் கட்டுக்கோப்பான முஸ்லிம் சமுதாய அமைப்பினைக் கொண்டுள்ள நம்மால் முடியாதா? சென்னை சைதாப்பேட்டை மனித நேய மையம் போல் இலவச உணவு, தங்கும் இடம், பயிற்சி அளிக்க நமது முஸ்லிம் அமைப்புகளிடம் வசதி குறைவா? எத்தனை லட்சம் ரூபாய்கள் நன்கொடையாக வருகின்றன, மானியம் கிடைக்கிறது, வங்கியில் பிக்ஸட் டெப்பாசிட்டில் கோடிக்கணக்கான பணம் தூங்கும்போது முஸ்லிம் இளைஞர்களுக்கு ஏன் சென்னை மையப்பகுதியில் அரசுப்பணிகளுக்கு பயிற்சி அளிக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை? ஆனால் பதவி சுகமே மேலான ஒன்றாக கருதும் முஸ்லிம் தன்வான்களிடம் நாம் எதை எதிர்ப்பார்க்கமுடியும்?

முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் மற்றும் மாநிலத்தில் நடைபெறும் சர்வீஸ்கமிஷன் தேர்வுகள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகள் சம்பந்தமாகவும் நான் விரிவாக 12.9.2009 அன்று ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் 6.2.2010 அன்று தமிழில், ‘வெற்றிக்கொடி நாட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன் என்ற கட்டுரைகளை எழுதியுள்ளேன் என்பதினை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். சுpல தனி நபர்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி பற்றி எழுதினாலும் அல்லது முகாம்கள் நடத்தினாலும் ஒரு இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் பயிற்சி முகாம்கள் பலர் கவனத்தினை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இப்போது நடக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு ஐ.என்.டி.ஜே சார்பாகவும், தமுமுக மாணவரணி சார்பாகவும் பயிற்சி முகாம் அளிக்கப்படுவது வரவேற்க தக்க ஒன்று. அவர்களுக்கு தேவையான யோசனைகளையும் நான் தெரிவித்துள்ளேன் என்பதினை உங்களுக்கு இந்தத் தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.






அவர்களுடைய சிறிய துவக்கம் நிச்சயமான பெரிய ஆலமரம்போல் பிற்காலத்தில் வளரும் என்பதில் ஐயமில்லை. பெரிய கட்டிடம் எழுப்ப சிறிய கல், ஒரு சட்டி சிமிண்ட் கலந்த மண்ணிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அது போலத்தான் சில எழுத்துக்கள் சேர்ந்து வார்த்தைகள் உருவாகும், ஒரு பட்டுப்புடவை செய்ய சில பட்டு நூல்கள் தேவை, பெரிய மாலை செய்ய பல பூக்கள் தேவை. குழந்தை பிறந்தவுடன் நடக்க முடியுமா? வெற்றியினை தங்கத்தட்டில் வைத்து யாரும் தாரை வார்ப்பதில்லை.

எப்போதும் ஒரு மனிதன் தாழ்வு மனதோடு இருந்தால் வெற்றிக்கனியினை பறிக்க முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சிறு உண்மை நிகழ்ச்சியினைச் சொல்லலாமே என்று நினைக்கிறேன். சென்னை நகரத்தில் ஒரு ஓய்வு பெற்ற 89 வயதான டாக்டர் ஒரு பார்க்கிற்குச் பேரக்குழந்தைகளுடன் சென்றார். அப்போது அங்கு விளையாடும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதிற்காக ஒரு பந்தினை எடுத்துச் சென்று வீல் சேரில் உட்கார்ந்து கொண்டு அந்தப்பந்தை தூக்கி எறிவதும் சிறு குழந்தைகள் அதனை எடுத்து வருவதுமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஒன்பது வயது பெண் குழந்தை அந்த பந்தினை எடுத்து வந்து தந்து விட்டு, ‘ஏன் தாத்தா உங்களால் எழுந்து நடக்க முடியாதா?’ என்று கேட்டது. அதற்கு அந்த பெரியவர், ‘ஏன் முடியுமே’ என்றார். உடனே அந்த சிறிமி தனது கால் சட்டையினைத் தூக்கிக் காட்டியது. அதன் வலது கால் முட்டிக்குக் கீழே விபத்தில் எடுக்கப்பட்டு செயற்கைக்கால் பொருத்தப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ந்த அந்த முதியவர் வீல்சேரை விட்டு எழுந்து நடக்கலானார். இந்த பாடம் எதை உணர்த்துகிறது? நம்மை எந்த சூழலிலும் தாழ்வு மனப்பான்மை என்ற இருள் சூழ்ந்து கொள்ளக் கூடாது என்பதினை உணர்த்தவில்லையா?

நாம் தோல்வி மனதினைக் கொண்டுள்ளவர்களின் அறிவுரையினை ஏற்கக்கூடாது என்பதிற்கு ஒரு சிறு நீதிக் கதையினை சொல்லலாம் என் நினைக்கிறேன். ஒரு நீர் நிலை உள்ள குளத்தின் அருகில் உள்ள உயர்நத மரத்தின் அடியிலே கூடியிருந்த தவளைகளிடே ஒரு போட்டி எழுந்தது. அதாவது அந்த மரத்தில் எந்தத் தவளை வேகமாக முதலில் ஏறுகின்றது என்ற போட்டிதான் அது. பந்தயம் ஆரம்பமானது. சில தவளைகள் கீழே நின்று கொண்டு மரமேறும் தவளைகளுக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருந்தன. போட்டி ஆரம்பமானது. தவளைகள் ஒன்றை ஒன்று முந்தி ஏறத் தொடங்கின. கீழே நிற்கும் தவளைகள் உற்சாகமூட்டுவதால் அவைகளைப் பார்த்து மற்ற தவளைகளையும் பார்த்துப்பார்த்து வேகமாக ஏறின. ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் யாரையும் பார்க்காது வேகமாக ஏறி மற்ற தவளைகள் களைப்படைந்தாலும் அந்த தவளை வெற்றி இடத்தினை அடைந்தது.

பின்பு எல்லாத் தவளைகளும் கீழே இறங்கி வந்தன. அப்போது அங்கே இருந்த பெரிய தவளை வெற்றி பெற்ற தவளையைக் கேட்டது எப்படி நீ மற்றத்தவளைகளைப் பார்க்காது மற்றும் கீழே இருக்கின்ற தவளைகளின் உட்சாகத்தினையும் கேட்காது ஏறினாய் என்று. அப்போது வெற்றிபெற்ற தவளை சொன்னது கீழே நின்ற தவளைகள் சத்தம் போட்டார்களா? அதனை நான் கேட்கவில்லை, ஏனென்றால் என்னால் கேட்க முடியாத செவிடு என்றதே பார்க்கலாம். ஆகவே தோல்வி மனப்பான்மை கொண்டவர்களின் கருத்துக்களைக எப்போது முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்கிறதோ அப்போதே நாம் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுவோம். ஆகவே சிறிய துவக்கமே சிறந்த முடிவாக இருக்கும் என்பதினை வழியுறுத்தி ஐ.என்.டி.ஜே அமைப்பினரையும் த.மு.மு.க அணியினரையும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு பயிற்சியில் தங்களை ஈடுபடுத்துவது போல் மற்ற அமைப்பினரும் பல் வேறு அரசு வேலைகளுக்கு நமது சமுதாய படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.

பெரும்பாலும் காவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் ஓட்டப்பந்தயம் 100, 400, 1500 மீட்டர்கள் இருக்கும் 1500 மீட்டர் ஓட வேண்டுமென்றால் நாம் தினமும் மூன்று கிலோ மீட்டர் தூரமாவது ஓடிப் பழகவேண்டும். பெரும்பாலும் நமது இளைஞரகள் கயிறு ஏறுதல், நெஞ்சு விரிவு போட்டிகளில் தோல்வி அடைவார்கள.; காரணம் கயிறு அல்லது மரம் ஏறி பழக்கம் இருக்காது, ஆகவே ஃபுல்அப்ஸ் எடுத்து பழகவேண்டும் மற்றும் மரத்தில் கயிறு கட்டி ஏறி பழகவேண்டும். அடுத்தது நெஞ்சு விரவு ஐந்து செண்டி மீட்டர் இருக்கவேண்டும். ஆனால் சிறு வயதில் தண்டால் அல்லது பெஞ்ச் பிரஸ் போன்ற பயிற்சி இல்லாதவர்கள் நெஞ்சு ஐந்து செண்டிமீட்டர் விரிவடையாது. மூச்சு இழுத்து 10வினாடி நிறுத்தும் பழக்கமிருந்தால் நெஞ்சு விரிவடையும். அதுபோல நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் பழக்கமிருந்தால்தான் வரும். முஸ்லிம் சமுதாய மக்கள் வாழும் ஊர்களில் உள்ள கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு ஆசிரியர்களைக் கொண்டு அந்த பயிற்சி கொடுக்கலாம். சில இளைஞர்கள் பள்ளிக்கூடங்களில் விளையாடுவார்கள் ஆனால் படிப்பினை முடித்து விட்டு கல்லூரியிலோ அல்லது வேலை வாய்ப்பினைத் தேடிக்கொண்டுள்ளவர்கள் விளையாடுவது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதுபோன்ற பயிற்சி கொடுப்பதினை சென்னை மிண்ட் அருகில் உள்ள ஸ்கூலில் மற்றும் பொது பார்க்குகளிலும் பயிற்சி கொடுப்பதினை பலரும் பார்க்கலாம். நாம் எல்லா வயதிலும் உடற்பயிற்சியினை கைவிடக்கூடாது. அவை உங்கள் வேலைக்கு மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். அடுத்தது ஒரு பரிட்சையில் தேர்வு பெறவில்லையென்றால் மனந்தளராது உங்கள் ஊக்கத்தினை கைவிடாது உங்களது குறிக்கோளில் முனைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் தான்.; ஆகவே தான் ஊக்கமது கைவிடேல் என்றேன்.