Tuesday, October 7, 2008

ஏழையின் சிரிப்பில்...!

ஏழையின் சிரிப்பில்...!
--------------------------
-இமாம்.கவுஸ் மொய்தீன்

அனைத்துப் புகழுக்கும்
நன்றிக்கும் உரியவனே
யா அல்லாஹ்!
எச்சில் வாயாலா
உனைப் புகழ்வது?

பன்மடங்கு
புண்ணியமளிக்கும்
ரமதானை
எமக்குக்
கடமையாக்கினாய்!

உன் அடியாரின்
நல்வினைகட்கு
உன் வற்றாத
அருட்கொடையால்
நிறையாக்கினாய்!

பசியறியா திருந்தோரையும்
பசியுணர வைத்தாய்!
பசித்திருந்தோரையும்
நிறைவாய்ப்
புசிக்க வைத்தாய்!

ஈகையையும் மார்க்கவரியையும்
கட்டாயமாக்கி
இருப்போரைக் கொடுக்கவைத்தும்
இல்லாதோரைப் பெறவைத்தும்
களிப்பளித்தாய்!

ரமதானை
எமக்களித்து
வையத்தில்
நல் அறத்தைத்
தழைக்க வைத்தாய்!

'ஈகைத் திருநாள்' மூலம்
ஏழையின் சிரிப்பில்
உனைக் காணவைத்த
எம் இறைவா!
அகிலத்தின் புகழனைத்தும் உனக்கே!!
Last update : 01-10-2008 23:00Users' Commentsநன்றி: அதிகாலை.

அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/

சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி

முகப்பு கட்டுரைப்போட்டி ஆண்டு 2008 சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி - 2008/09(அனைவரும் பங்கு கொள்ளலாம்)

சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி - 2008/09(அனைவரும் பங்கு கொள்ளலாம்)
வெள்ளி, 08 ஆகஸ்ட் 2008

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.இறைவனின் மாபெரும் அருளால் கடந்த 2007-08 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றைச் சத்தியமார்க்கம்.காம் நல்லமுறையில் நடத்தியது. அதனைப் போன்றதொரு கட்டுரைப் போட்டியினை தமிழ் மொழியில் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் சத்தியமார்க்கம்.காம் நடத்தத் தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றோடு, எடுத்தாளப்படும் கட்டுரைத் தலைப்பில் சிறப்பான ஆய்வுடன் கூடிய சமுதாயத்தின் எதிர்கால நன்மைக்கான சரியானத் தீர்வைத் தரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் தங்களின் அரிய சிந்தனைகளைச் சிறப்பான ஆய்வுகளுடனும் அதற்குரிய சரியான தீர்வுகளுடனும் சமர்ப்பிக்க முன்வருமாறு தமிழ் சமுதாய வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

------------------------------------------
நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு
------------------------------------------

(பரிசுகள் விபரம்: ஆண்கள் & பெண்கள்)

சிறப்புப் பரிசு: x 1

லேப்டாப் (acer-aspire)முதல் பரிசு: x 2 (ஆண்-1, பெண்-1)
டிஜிட்டல் திருக்குர்ஆன்

இரண்டாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்,

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்.மூன்றாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்ஆறுதல் பரிசுகள் : x 2 (ஆண்கள்-2, பெண்கள்-2)ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்
கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்

3.5 சத இடஒதுக்கீடு தீர்வாகுமா?.

இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?

இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!

உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்?

இந்திய அரசியல் முஸ்லிம்களுக்கு ஹராமா?!

இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு...?

காங்கிரஸில் சங்கபரிவாரத்தின் ஊடுருவல்.

பெருகிவரும் போலி முஸ்லிம் தீவிரவாத குற்றச்சாட்டுக்கான தீர்வு!

உலக அமைதி இஸ்லாத்தினூடாக..!

உலகின் அழியா நிலையான இஸம் - இஸ்லாம்!

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதற்கான வழிகள்!

உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!

இஸ்லாமியப் பிரச்சாரம் திரைப்படத்துறை மூலமாக...

சாவர்க்கரும் பாராளுமன்றத்தீட்டும்!

இலங்கை முஸ்லிம்களின் அவலநிலைக்கான தீர்வு!

குண்டுவெடிப்புகளும் திரைமறைவு சதிகளும்!

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?

போராட்டம் - நிலையான வாழ்விற்கான ஒரே வழி!.

அமெரிக்கா இஸ்லாத்தை நோக்கி..!.

மத்திய கிழக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளும்!

மஸ்ஜிதுல் அக்ஸா - முஸ்லிம்களின் ஆன்மா!

சியோனிஸ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி!

ஊழல் அரசியலை ஒழிப்பதற்கான வழி!

தமிழகம் - ஜாதி அரசியலிலிருந்து விடியலை நோக்கி!


-------------------------------
கட்டுரைப் போட்டிக்கான விதிகள் :
-------------------------------
1. போட்டியாளர் மேற்கூறப்பட்ட தலைப்புகளில் அதிகபட்சமாக மூன்று தலைப்பில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்.2. கொடுக்கப்பட்ட தலைப்பைத் தழுவி மட்டுமே கட்டுரை இருத்தல் வேண்டும்; சம்பந்தப்பட்டத் தலைப்புக்கான தீர்வு இஸ்லாமிய அடிப்படையில் அலசப்பட்டிருக்க வேண்டும்.3. போட்டியாளர் சமர்ப்பிக்கும் கட்டுரைகள் தானே சொந்தமாய் எழுதியதாகவும் முன் எந்தத் தாளிகளிலோ இணையத் தளத்திலோ வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்.4. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் குறிப்பிடும் பொழுதுத் தெளிவாக எண்களுடன் குறிப்பிட வேண்டும்.5. கட்டுரை கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும். எந்த நாட்டினதும் சமயம், அரசியல் கட்சி, இயக்கங்கள் ஆகியவற்றையோ தனிமனிதரையோ இழித்துரைப்பதாகவோ தாக்குவதாகவோ இல்லாமல், தெளிவான ஆதாரங்களுடனும் அழகிய வாதங்களுடன் ஓர் அழகிய இஸ்லாமியப் படைப்பு என்ற தகுதியை நாடுவதாகவும் நயத்துடனும் எழுதப்படவேண்டும்.6. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் கட்டுரைப்போட்டி குழுவினர்களால் தணிக்கை செய்யப்பட்டு தளத்தில் பதிக்கப்படும்.7. கட்டுரைப் போட்டியில் பங்குபெறுபவருக்கு வயதிற்கான வரம்பு ஏதுமில்லை.8. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அறிவிக்கப்படும்.9. தமிழ் அறிந்த சர்வதேச அளவிலான அனைத்துலக வாசகர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.10. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்குபெற முடியாது.11. போட்டியாளர் கண்டிப்பாகத் தனது தொடர்பு எண்ணைத் தவறாமல் கட்டுரையின் இறுதியில் தெரிவித்திருக்க வேண்டும்.12. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.------------------------------
கட்டுரை எழுதுபவர் கவனத்திற்கு :
------------------------------

1. கட்டுரைகள் தட்டச்சியோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ எவ்வடிவில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.2. கட்டுரை தட்டச்சப்பட்டு அனுப்பப்படுகிறது எனில், கட்டுரையின் எழுத்துரு எண் 10 அளவை தேர்ந்தெடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டு, A4 தாள் அளவில் மூன்று பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டுரை வரைவதற்குத் துணை நின்ற நூல்கள், துணை ஆக்கங்களுக்கான குறிப்புக்களைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட வேண்டும். இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டிருந்தால் தள முகவரியைக் குறிப்பிட வேண்டும். சுட்டப்படும் ஆதாரங்கள் இணையத்தில் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைக்கலாம். போட்டிக்குச் சமர்ப்பிக்கும் கட்டுரையின் துவக்கப் பக்கத்தில் கட்டுரைக்கான தலைப்பைக் குறிப்பிட வேண்டும்.3. குர்ஆன், ஹதீஸ்களை பக்கபலமாக சேர்க்க விரும்புபவர்கள், மிகவும் அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே சேர்க்கவேண்டும். அதிக அளவில் இறைவசனங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். இறைவசனங்கள், ஹதீஸ் சம்பவங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, சொல்லவரும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.4. கட்டுரையாளரின் பெயர் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்ணிட்டு முழு முகவரியுடன் 15.11.2008 அன்று இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு வந்து சேரும் ஆக்கங்கள் போட்டிக்குப் பரிசீலிக்கப்படாது.


5. கட்டுரைகளை contest@satyamargam.comThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரையாளரின் ஆக்கத்தை நிர்வாகம் பெற்றவுடன் அதை உறுதிப்படுத்தும் செய்தி கட்டுரையாளருக்கு மின்மடல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


7. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியிடப்படும். வெற்றியாளர்கள் விரும்பினால் அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிடும். பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் இருப்பின் அவர்கள் வெளியிட விரும்பும் புனைப்பெயர்களின் விபரங்களைக் கட்டுரையின் முடிவில் குறிப்பிட வேண்டும்.போட்டி சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், ஆலோசனை வழங்க விரும்புவோர் நிர்வாகத்தை contest@satyamargam.comThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

ஸஹீஹுல் புகாரி

you could download ஸஹீஹுல் புகாரி - 7 பாகமும் 10.85 MB Only 12:00 PM

http://www.ziddu.com/downloadfile/2281026/Bukari_Tamil_full_7_parts.pdf.html

தடுப்பூசி மரணங்கள்!!

தடுப்பூசி மரணங்கள்!!

இமாம்.கவுஸ் மொய்தீன்

கண்டம் விட்டுக்

கண்டம் பாயும்

அழிவுச் சக்திமிக்க

ஏவுகணைகள்!


வானிலும்

ஒற்றர்களாய்

விண்கோள்கள்!


விண்ணில் மண்ணில்

நீரில் பயணம் செய்திட

புதுமைகள் மிக்க

வாகனங்கள்!


உலகின் நிகழ்வுகளை

உடனே அறிந்திட

தொலைக்காட்சி

வானொலிகள்!


பூவுலகின்

மூலைமுடுக்கெல்லாம்

தொடர்பு கொண்டிட

தொலைபேசி செல்பேசிகள்!


பரந்த பூபாளத்தைச்

சிறு அறைக்குள்

சுறுக்கிவிட்ட

தகவல் தொழில் நுட்பம்!


வெப்ப குளிர் பிரதேசங்களில்

வசிப்பவர் வசதிக்காக

குளிரூட்டி

வெப்பமூட்டிகள்!


பழுதடைந்த

உறுப்புகளுக்குப் பதில்

மாற்றுறுப்பு

பொருத்தங்கள்!


இன்னும் சொல்லிமாளா

எத்தனை யெத்தனையோ

சாதனைகள் புதுமைகள்

இவ்வறிவியல் யுகத்தில்!


இருப்பினும்

அடிக்கடி நிகழ்கின்றன

நோய்தடுப்பு மருந்துகளால்

மழலையரின் மரணங்கள்!


இவற்றுக் கெல்லாம்

யார் பொறுப்பு?

எப்படி தவிர்க்கப் போகிறோம்?

drimamgm@hotmail.comநன்றி:திண்ணை.

அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/

உணவு உண்ணும் போது கவணிக்க..

உணவு உண்ணும் போது கவணிக்க..

எழுதியவர்/உரை:மௌலவி லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
On Tuesday, 19th August 2008

பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்கள். பறக்கப் பறக்க உண்டாலும் பக்குவமாக உண்ண வேண்டும். இதோ அண்ணலார் அவர்களின் அழகிய சில வழிகாட்டுதல்கள்:


உமய்யா (ரழி) அறிவிக்கின்றார்கள்:
‘நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ‘பிஸ்மில்லாஹ்’ கூறவே இல்லை. அவரின் உணவில் ஒரு கவளம் மட்டுமே இருந்த சமயம், தன் வாய் அருகே அதை உயர்த்திய போது, ”பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு”என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பின்பு, ”இவருடன் ஷைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவர் ”பிஸ்மில்லாஹ்” ‘கூறியதும் தன் வயிற்றில் உள்ளதை வாந்தி எடுத்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” (அபூதாவூது, நஸயீ)

அபூஉமாமா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
”நபி(ஸல்) அவர்கள் (தான் சாப்பிட்டு முடித்து) தன் தட்டை உயர்த்துவார்களானால், ”அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹா ஙைர மக்ஃபிய்யி வலா முவத்தஇன், வலாமுஸ்தஹ்னன் அன்ஹுரப்புனா ” என்று கூறுவார்கள்... (புகாரி)

துஆவின் பொருள்:
அபிவிருத்தி மிக்க – தூய்மையான அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அப்புகழ், போதுமாக்கப்படமாட்டாது. அதை விட்டும் தேவையற்றதாகப்பட மாட்டாது.. நீயே எங்களின் இறைவன்.(ரியாளுஸ்ஸாலிஹீன்: 734)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
‘நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் உணவைக் குறை கூற மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் அந்த உணவைச் சாப்பிடுவார்கள். அந்த உணவை வெறுத்தால் சாப்பிடாமல் விட்டு விடுவார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

அம்ரு இப்னு அபீ ஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
"நபி(ஸல்) அவர்களின் வீட்டில் நான் சிறுவனாக இருந்தேன். (உணவுத்) தட்டில் இங்கும் அங்கும் என என் கை அலைந்து கொண்டிருந்தது. அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "சிறுவரே! பிஸ்மில்லாஹ் கூறு! உனது வலது கையால் சாப்பிடு! உனக்கு அருகில் உள்ளவற்றில் சாப்பிடு என்று கூறினார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

Whatever of good befalleth thee (O man) it is from Allah, and whatever of ill befalleth thee it is from thyself. (4:79)

sapeermuhammad@yahoo.com

THINGS YOU NEVER KNEW YOUR CELLPHONE COULD DO

----- Original Message ----
From: haja nizam
To: aimantimes@yahoogroups.com
Sent: Saturday, 18 August, 2007 12:08:15
Subject: Re: [AIMAN Times] cellphone


Dear all,

THINGS YOU NEVER KNEW YOUR CELLPHONE COULD DOThere are a few things that can be done in times of grave emergencies.

Your mobile phone can actually be a life saver or an emergency tool for

survival. Check out the things that you can do with it: -1
EMERGENCY

The Emergency Number worldwide for **Mobile** is 112 ...* If you find

yourself out of coverage area of your mobile network and there is an

emergency, dial 112 and the mobile will search any existing network to

establish the emergency number for you, and interestingly this number 112

can be dialed even if the keypad is locked. **Try it out.**

2
Have you locked your keys in the car? Does you car have remote keys?


This may come in handy someday. Good reason to own a cell phone:

If you lock your keys in the car and the spare keys are at home, call

someone at home on their cell phone from your cell phone.

Hold your cell phone about a foot from your car door and have the person

at your home press the unlock button, holding it near the mobile phone on

their end. Your car will unlock. Saves someone from having to drive your

keys to you. Distance is no object. You could be hundreds of miles away,

and if you can reach someone who has the other "remote" for your car, you

can unlock the doors (or the trunk).

Editor's Note: *It works fine! We tried it out and it unlocked our car over a cell phone!"*

3

Hidden Battery power


Imagine your cell battery is very low , you are expecting an important call

and you don't have a charger. Nokia instrument comes with a reserve

battery. To activate, press the keys *3370# Your cell will restart with

this reserve and the instrument will show a 50% increase in battery. This

reserve will get charged when you charge your cell next time.

AND
4
How to disable a STOLEN mobile phone?


To check your Mobile phone's serial number, key in the following digits on your phone:

* # 0 6 #

A 15 digit code will appear on the screen. This number is unique to your

handset. Write it down and keep it somewhere safe. when your phone get

stolen, you can phone your service provider and give them this code. They

will then be able to block your handset so even if the thief changes the

SIM card, your phone will be totally useless.

You probably won't get your phone back, but at least you know that whoever stole it can't use/sell it either.

If everybody does this, there would be no point in people stealing mobile phones

hajanizamudeen

அது ஒரு காகம்!

அது ஒரு காகம்!

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
'என்ன இது?' என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், 'அது ஒரு காகம்'
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், 'என்ன இது?'
'இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்' என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், 'என்ன இது?'

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், 'அது ஒரு காகம், காகம்!'
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், 'என்ன இது?'

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், 'அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, 'அது ஒரு காகம்' என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?'

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.
அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

'எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் 'அது என்ன' என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்' என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது'.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது. திருமறை குர்ஆனின் கீழ்க்கண்ட போதனைகளும் அவரது நினைவுக்கு வந்தன.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட போதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் 'சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

தமது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனுடைய தாய் அவனைச் சிரமத்துடன் (கர்ப்பத்தில்) சுமந்திருந்து, சிரமத்துடனே அவனை ஈன்றெடுத்தாள். அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்ததும், அவனுக்குப் பால் குடியை மறக்கடித்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது ஆண்டு களை அவன் அடைந்திட்ட பொழுது, 'என்னுடைய ரப்பே! நீ எனக்கும், எனது பெற்றோருக்கும் அருளிய உனது அருட் கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அத்தகைய நற்செயல்களை நான் செய்வதற்கும், எனக்கு உள்ளுணர்வை உதிப்பாக்குவாயாக! என் சந்ததியினரை எனக்கு நல்லிணக்கமாக்கி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே (தவ்பாச் செய்து) மீண்டு விட்டேன். நிச்சயமாக நான் (உனக்கு வழிப்படுகின்ற) முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கின்றேன்' என்று அவன் கூறுகின்றான். (அல் குர்ஆன் 46:15)

From: Abdur Rawoof AbdurRazaq
Subject: [Bahrain Circle] அது ஒரு காகம்!

---------- Forwarded message ----------
From: noorullah 86
Date: 2008/9/28
Subject: [Bahrain Circle] அது ஒரு காகம்!
To: bahrain-circle@googlegroups.com

feroze Ahamed
dateMon, Oct 6, 2008 at 1:08 PM
subjectRe: [Bahrain Circle] அது ஒரு காகம்!

thousends of thanks........for the imantimes team.

najumudeen.A.J.
reply-tonajumudeenaj87@yahoo.co.in

toimantimes+owner@googlegroups.com

dateTue, Oct 7, 2008 at 11:03 AM
subjectRe: [Bahrain Circle] அது ஒரு காகம்!

hide details 11:03 AM (13 minutes ago) Reply


Asslamualikum ! How are you? abdur rawoof My Name is Najumudeen

your massage is very use ful and advise also so if you have more massages or

any maill avlable can you farwared me send pls

by Najumudeen aj


najumudeenaj87@yahoo.co.in