Monday, September 22, 2008

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தினமலரை ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தினமலர் உட்பட எந்த ஒரு நாளிதழையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை.

மாறாக - அந்த நாளிதழுடன் மட்டுமல்ல, மற்ற ஊடகங்களுடனும் நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும்.

கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்த நாம், நாம் அந்த ஊடகங்கள் செய்யும் நல்ல செயல்களை என்றேனும் பாராட்டியதுண்டா ?

எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் முத்திரை குத்தி செய்தி வெளியிடும் புகழ் பெற்ற தமிழ் நாளிதழ் ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் முப்பது நாளும் இஸ்லாமியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்த நாளிதழுக்கு எத்தனை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருப்போம் ?

இதைத் தெரிந்து கொள்ள அந்த நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றும் என் நண்பரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'ஊஹூம்...! அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒன்றிரண்டு வரும்; அவ்வளவுதான்' என்று சொல்லி வருந்தினார்.

முஸ்லிம்கள் என்றால் எதற்கடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள்; ஆக்கபூர்வமாகச் செயல்பட மாட்டார்கள்; அப்படிக் கத்துவது கூட அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானே தவிர மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்' எனும் ஒரு விமர்சனத்தையும் அந்த நாளிதழின் துணை ஆசிரியர் முன்வைத்தார்.

விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா ? எனும் வினாவையும் தொடுத்தார்.

இந்த விமர்சனம் சரிதானா ?

வாசகர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.


- சிராஜுல் ஹஸன்

பொறுப்பாசிரியர், சமரசம்
www.samarasam.com
www.iftchennai.org
samarasam12@gmail.com

16-30 செப் 2008 சமரசம் இதழிலிருந்து


பிறைநதிபுரத்தான்
dateTue, Sep 23, 2008 at 5:29 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்


"கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலர்; வேலூர் ஜெயிலில் பெரியவர் ஜெயேந்திரன் விளக்கு, பூ, பழம், பூசை வரை போட்டதையும், "சின்னவர்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகர்த்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பூணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்' ஆட்கள்! அபாயம்!' என்று அலறும் தினமலருக்கு, ஜெயேந்திரருக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூர் சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட 'குளுகுளு' சிறை வசதிகள் - பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?

ஒவ்வொரு வருடமும் டிசம்பர ஆறை முன்னிட்டு அப்பாவி இஸ்லாமியர்கள் - நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்படுவதை வரவேற்கும் தின மலர் - 'ஜெயேந்திரர்' இரவில் கைது செய்யப்பட்டதை மட்டும் மனித உரிமை மீறலாக திரிப்பது ஏன்?

பிற்படுத்தப்பட்ட சாதிகளை அரசியலுக்காக ஒன்றினைக்கும் தலைவர்களையெல்லாம் 'சாதி வெறியர்களாக' கட்டம் கட்டும் - தின மலருக்கு. மதவெறி பிடித்த பா.ஜ.க முதல் - பஜ்ரங் தள் வரை தேசப்பற்றுள்ள இயக்கங்களாக தெரிவது எப்படி?

பல ஆண்டுகளுக்கு முன்பு, 'ஒன்றுபட்டிருந்த' த.மு.மு.க,வால் (முஸ்லீம் மீடியா டிரஸ்ட்) தமிழக முஸ்லிம்களுக்காக 'சஹர்' நேர நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதை - தான் வெளியிடும் 'தொலைக்காட்சி நிகழ்ச்சி' பட்டியலில் கூட வெளியிட மறுத்தது இந்த தினமலர்.

விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா? என்று தினமலர் துனை ஆசிரியர் கேட்டதாக 'நொந்து' கொள்ளும் சிராஜுல் ஹசனுக்கு தெரியாதா - இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடு...

முஸ்லிம்கள் பார்ரட்டு கடிதம் எழுதவில்லை என்று அலுத்துக்கொள்ளும்
சிராஜுல் ஹஸன் - முஸ்லிம்களுக்கெதிராக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக, பிராமனீயத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக - 'மொட்டை' கடுதாசிகளை தானே எழுதி பிரசுரித்துக்கொள்ளும் தினமலர் - முஸ்லிம்கள் எழுதியதாக சில பாராட்டு கடிதங்களையும் எழுதி பிரசுரித்து கொண்டிருக்கலாமே?

சிராஜுல் ஹஸன் சொல்வது மாதிரி இவர்களிடையே 'உரையாடலாக' எதுவும் நடைபெறவில்லை போலிருக்கிறது - தினமலர் துனை ஆசிரியர் 'பயான் செய்ததை' - எதிர் கேள்வி கேட்காமல் 'பவ்யமாக' செவிமடுத்துக் கொண்டு இருந்திருக்கிறாரோ சிராஜுல் ஹஸன் என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தேங்கை முனீப்
dateTue, Sep 23, 2008 at 9:35 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

தன்னை ஒரு முற்போக்கு சிந்தனையாளராகக் காட்டிக் கொள்ள முயலும் சிராஜுல் ஹஸன் போன்றவர்கள் சமுதாய நலம் என்பதை விட அவாள்களை திருப்திப்படுத்தல் என்பதிலேயே கவனத்தை செலுத்துகின்றனர்.

//தினமலர் உட்பட எந்த ஒரு நாளிதழையும் நாம் வெறுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை. மாறாக - அந்த நாளிதழுடன் மட்டுமல்ல, மற்ற ஊடகங்களுடனும் நமது தொடர்பை வலுப்படுத்த வேண்டும். //


டென்மார்க் வெளியிட்ட கார்டூனும் அததைக் குறித்து உலகெங்கும் ஏற்பட்ட கொந்தளிப்பும் உலகுக்கே வெளிச்சமானது. இதை அறிந்தும் தனது கயமைத் தனத்தை வெளியிட்ட தினமலரை எதிர்க்கும் முஸ்லிம்களின் எதிர்ப்புணர்வை கொச்சைப் படுத்துவதாக இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. உலக அரங்கில் இது குறித்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் சிராஜுல் ஹஸனின் இந்த வேண்டுகோளை ஏற்று தினமலர் மற்றும் ஜில்லாண்ட போஸ்டனின் ஆசிரியர்களைக் கூப்பிட்டு ஸலாம் கூறி நமது தொடர்பை வலுப்படுத்திக் கொள்ளலாம்!?


//கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்த நாம், நாம் அந்த ஊடகங்கள் செய்யும் நல்ல செயல்களை என்றேனும் பாராட்டியதுண்டா ? எடுத்துக்காட்டாக, முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் முத்திரை குத்தி செய்தி வெளியிடும் புகழ் பெற்ற தமிழ் நாளிதழ் ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் முப்பது நாளும் இஸ்லாமியச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த நாளிதழுக்கு எத்தனை முஸ்லிம்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் எழுதியிருப்போம் ? //


குப்பைத் தொட்டியில் கிடக்கும் மலர்களுக்காக எவரும் ஆசைப் படுவதில்லை. கழிவு நீர்த் தொட்டியில் வாசனைத் திரவியம் ஊற்றி விடுவதால் அதன் நாற்றம் மாறுவதும் இல்லை.

//முஸ்லிம்கள் என்றால் எதற்கடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவார்கள்; ஆக்கபூர்வமாகச் செயல்பட மாட்டார்கள்; அப்படிக் கத்துவது கூட அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தானே தவிர மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்' எனும் ஒரு விமர்சனத்தையும் அந்த நாளிதழின் துணை ஆசிரியர் முன்வைத்தார்.//

தன் நியாயமான உணர்வுகளை வெளிப் படுத்தும் முஸ்லிம்களை கத்துகிறார்கள் என்று கருத்து தெரிவித்தவரின் கருத்துக்களை ஏதொ பெரிய தத்துவம் என்று பதிவு செய்துள்ளார். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் ஏதொ எல்லா ஊடகங்களும் மற்ற மதத்தினரும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் முஸ்லிம்கள் மட்டும் சுயநலத்துடன் தங்களுக்காக மட்டும் போராடுகிறார்கள் என்பதைப் போலவும் நினைக்கத் தோன்றுகிறது இவர்களின் கருத்தைப் பார்த்தால்.

விநாயக ஊர்வலத்தில் முஸ்லிம்களைத் தாக்கி அவர்களின் சொத்துக்களை சுறையாடிய சங்கப் பரிவாரையும் அவர்களுக்கு ஆதாரவாக இருந்ததுடன் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கிய அரஜக காவல் துறையைக் குறித்து இவர்கள் என்ன கருத்து வெளியிட்டார்கள்? தப்பு செய்தவனைத் தண்டிக்காமல் தடுத்தவனைத் தீவிரவாதியாக்கிக் காட்ட முயலும் போது தன்சார்பு நியாயத்தை வெளிக் காட்டும் சமுதாயத்தின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் பத்திரிக்கையாளனின் கருத்துக்களை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு பதிவு செய்யும் சிராஜுல் ஹஸன் சமுதாயத்துக்கு என்ன நலவை நாடுகின்றார்?

//விலைவாசி ஏற்றம், குடிநீர்ப் பிரச்னை, மின்வெட்டு போன்ற பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காவது எந்த முஸ்லிம் அமைப்பாவது போராடி இருக்கிறதா ? எனும் வினாவையும் தொடுத்தார்//

நல்ல கேள்விதான். இது வரை சமுதாயத்தின் எந்தப் பிரச்சினைகளுக்கும் போராடாத, சமுதாயத்தின் உணர்வுகளை முனை மழுங்கச் செய்யும் இவர் சார்ந்த அமைப்பு இதை முதலில் செய்யட்டும்.

அவரவரை திருப்திப் படுத்த அவரவருக்கு ஏற்ப கருத்துக்களையும் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் இவர் சார்ந்த அமைப்பு முதலில் தன் மனசாட்சியை கேள்வி கேட்கட்டும்

அதி. அழகு
dateTue, Sep 23, 2008 at 10:18 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

இந்த மாதிரி ஆளுங்க எதுக்கு இருக்கிறானுங்க?

தமிழக முஸ்லிம்களுக்குக் கொஞ்சம் உணர்வு வந்துடக் கூடாது. அப்புடி வந்துட்டா அதையும் மழுங்கடிக்கனும்.

போங்கடா .... நோன்புக் கஞ்சி காய்ச்சி குடுத்து, ஈத் மிலன் நடத்துங்க.

கூடவே ஒரு ஜெய் ஹிந்த் போட்டுக்க! சமுதாயம் உருப்பட்டுடும்.

Abu Shaimah
dateTue, Sep 23, 2008 at 10:42 AM
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

சமரசம்-னா கையாலாகாத தனம் என்ற பொருளா?

சிலம்பம் அளவுக்கு ஒரு பெரிய கம்பை அஞ்சாறு போலீசு நாய்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சகோதரரின் மண்டையைக் குறிவைத்து அடித்தார்களே, அதைப் பார்த்ததுக்கு அப்புறமும் எப்படி இப்படி எல்லாம் வழாவழா கொழாகொழான்னு எழுத முடியுதோ?

சமரசம் பேருக்கு ஏத்தமாதிரி இறைக் கொள்கையையும் சமரசம் செய்யாமல் இருந்தா சரி!

சமுதாய இயக்கங்கள் கொஞ்சம் போல இயங்க ஆரம்பித்த ஒரே நிகழ்வு இந்த கார்ட்டூன் விவகாரம்; அதிலயும் தண்ணி ஊத்தி மழுங்கடிச்சுட்டு 'தேசிய' நீரோட்டத்தில கலந்து ஐக்கியமாக வேண்டியது தான்!!!

//கூடவே ஒரு ஜெய் ஹிந்த் போட்டுக்க! சமுதாயம் உருப்பட்டுடும்.//

ஜெய் 'ஹிந்து'-ன்னு போட்டா இன்னும் சமரசமா -வும் தேசப்பற்றோடும் இருக்கும்.

Mohamed Mahir Ahamed Ibrahim
subject[GTMG] Re: ஏன் வெறுக்க வேண்டும் ? - சிராஜுல் ஹஸன்

subjectClaiming Authorship for the featured article TV and Children dated 16-18 jan 2008

Assalamu alaikum

Sub: Samarasam dated 16-31 Jan 2008 issue's featured article's authorship claim

I am glad to see the featured article in Samarasam by today regarding TV and Children. I did not expect this topic could get this much appreciation even after almost more than 1.6 years.

It was first published in Adirai.com (unfortunately since adirai.com is down i can't able to give u link) and then in my blog and the topic named விளையும் வினை

http://techtamil.blogspot.com/2006/09/blog-post_25.html

It was also then recognized and published in thamizmanam.com's Poongaa.com

http://poongaa.com/content/view/127/1/

It was already published in Manarul Huda during 2007 ( I forgot the month/issue, Ref: Mohamed Ibrahim of Basharath publishers)

except the title and author name, I see the entire (main) content (word-by-word) was written by me... even the present author claims he got it from Readers Digest which is a big lie.

As an young author I might expect my name in a magazine like yours which could give me recognition of my work and could boost me writing up further articles/writings. But unfortunately this kind of stealing by some of our brothers really discourage.

:(

Regards,
Mohamed Mahir
Chennai
9444289450

தொலைபேசியிலும் பேசினேன். சமரசம் இதழில் மறுப்பு வரவேயில்லை - மாஹிர்

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி : யேமன் மாணவர் முதல் பரிசு பெற்றார்

http://www.kayalpatnam.in/latest/news-23092008-1
http://www.muduvaivision.com/
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????-???????/???????-?????????????-?????-??????


துபாயில் வருடந்தோறும் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் அமீரக துணை அதிபர்,பிரதம அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.

12 ஆவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த எண்பத்து ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் யேமன் நாட்டைச் சேர்ந்த ஃபரேஸ் அல் அகம் முதல் பரிசைப் பெற்றார். இவருக்கு திர்ஹம் 250,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை லிபியாவின் நூர் அல் தீன் அல் யூனுஸி ( திர்ஹம் 200,000 ), மூன்றாவது இடத்தை குவைத்தின் காலித் அல் அய்னதி ( திர்ஹம் 150,000 ), நான்காவது இடத்தை ஆப்கானிஸ்தானின் மஜித் அப்துல் சமி ( திர்ஹம் 65,000 ), ஐந்தாவது இடத்தை மொரிடானியாவின் அஹ்மது தாலிப் ( திர்ஹம் 60,000 ) ஆறாவது இடத்தை லெபனானின் நாஜிஹ் அல் யாஃபி ( திர்ஹம் 55,000 ), ஏழாவது இடத்தை தைவானின் உசாமா சியான் ( திர்ஹம் 50,000 ), எட்டாவது இடத்தை பாகிஸ்தானின் முஹம்மது ஆலம் ( திர்ஹம் 45,000 ), ஒன்பதாவது இடத்தை கேமரூனின் அப்துல் ரஹ்மான் அட்ஜித் ( திர்ஹம் 40,000 ), பத்தாவது இடத்தை சவுதி அரேபியாவின் தாரிக் அல் லுஹைதான் ( திர்ஹம் 35,000 ) பெற்றனர்.

மேலும் பத்தாவது இடத்திற்குப் பின்னர் எண்பது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 30,000 மும், 70 முதல் 79 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 25,000 ம், 70 சதவிகிதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு திர்ஹம் 20,000 மும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சிறந்த குரல் வளத்துக்கான பரிசு மலேசிய மாணவருக்கு வழங்கப்பட்டது.

இப்பரிசுகளை துபாயில் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார்.

விருது

சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியினையொட்டி வருடந்தோறும் சிறந்த இஸ்லாமிய அறிஞருக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்விருது தனிநபருக்கு இல்லாமல் திருக்குர்ஆன் பிரதிகளை அதிக அளவில் அச்சிட்டு வழங்கி வரும் சவுதி அரேபியாவின் மன்னர் பஹத் திருக்குர்ஆன் அச்சகத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 200 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இவ்வச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் 10 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் இங்கு அச்சிடப்பட்டு வருகின்றன. 30 மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகள் அச்சிடப்படுவதற்குரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான பரிசுத்தொகை திர்ஹம் ஒரு மில்லியன் ஆகும். இதன் மூலம் இவ்வச்சகம் இன்னும் பன்மடங்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருடந்தோரு இப்போட்டிகள் பெருமளவு மக்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்போட்டியைக் காணவருவது இப்போட்டிக்கு ஏற்பட்டு வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திவருவதாக இப்போட்டிக்கான தலைவர் இப்ராஹிம் பூ மெல்ஹா தெரிவித்தார்.

http://www.kayalpatnam.in/latest/news-23092008-1