Tuesday, July 22, 2008

தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?

). தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?

1. கையால் எழுதியோ அல்லது மின்னச்சு மூலமாக ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தி அல்லது அந்தப் பகுதியின் அதிகாரபூர்வ மொழியில், எந்த மாதிரியாகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டு, மக்கள் தகவல் தொடர்பு அதிகாரிக்கு எழுதலாம்.

2. என்ன காரணத்திற்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை.

3. அவர்கள் வரையறுத்துள்ளபடி கட்டணம் செலுத்த வேண்டும் (வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களுக்கு இது உரியதல்ல)

2). தகவல் பெறுவதற்கான கால வரையறை என்ன?

1. விண்ணப்பத்திலிருந்து 30 நாட்கள்

2. ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் சம்மந்தமான தகவலாக இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் தரப்பட வேண்டும்.

3. ஒரு வேளை, தகவலுக்கான விண்ணப்பம், உதவி மக்கள் தகவல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டிருந்தால், முன்குறிப்பிட்ட தேதியிலிருந்து 5 நாட்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

4. மூன்றாவது நபரின் தலையீடு இருக்குமானால் கால வரையறை 40 நாட்கள்.

5. குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவல் தரத் தவறினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொள்ளலாம்.

3). கட்டணம் என்ன?

1. வரையறுக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இருக்க வேண்டும்.

2. மேலும் கட்டணம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்டவருக்கு, கட்டணம் குறித்த கணக்கிடப்பட்ட விவரங்களை எழுத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.

3. மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி விதித்த கட்டணத்தை, மேல்முறையீடுகளைக் கவனிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பிப்பதின் மூலம் மறு ஆய்வுசெய்யலாம்.

4. வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் மக்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.

5. ஒரு வேளை மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி குறிப்பிட்ட கால வரையறைக்குள் தகவலை தெரிவிக்கத் தவறினால், விண்ணப்பதாரருக்குத் தகவலை இலவசமாகத் தர வேண்டும்.

4). எந்த அடிப்படையில் நிராகரிக்கலாம்.

1. ஒருவேளை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதிலிருந்து விதிவிலக்குப் பெற்றிருந்தால்.

2. ஒருவேளை மாநிலத்தைத் தவிர வேறு நபருடைய உரிமையைச் சட்டபப்டி பெறுவதாக இருந்தால்.
_______________________

minjamal@gmail.com

தப்லீக்

தப்லீக்

- கம்பம் ஹாருன் ரஷீத்

இஸ்லாத்தைப் பரப்புகின்ற
கடமைகள் நினைவிருக்க
நமக்குள்ளே பின்பற்றல்
பின்னடைந்து போனதினால் -

முஸ்லிம்களையே
முஸ்லிம்களாய் ஆக்குகின்ற
மேன்மையான முயற்சியிது !
மருவில்லாத மாமணியாய்
கருவுக்குள் இருந்த இடம்
இஸ்லாத்தில் இருந்ததினால் -

பெயர் தாங்கும் முஸ்லிமாய்
பெயரளவில் வாழ்வு நிலை !
நுனிப்புல் மேய்கின்ற
பரபரப்பு வாழ்க்கைக்குள்
விபத்தாக வந்ததினால் -

விளங்கிக்கொள்ள நேரமில்லை !
மார்க்கமெனும் நல்வழியை
மனதார நினைந்துருகி
பண்பட்ட தெளிவோடு
பற்றுதலைப் பற்றவில்லை !

சின்னஞ்சிறு அசைவுகளும்
சிந்தனையைக் கிளறுகின்ற
சித்தாந்தம் பேசவில்லை !
வழிகாட்டி விளக்குதற்குப்
பெற்றோரின் தெளிவுநிலை
பேருதவி செய்ததில்லை !

இஸ்லாமிய வாழ்வுநிலை
வாழ்க்கையோடு வாழும் விதம்
மாற்றுமதப் பார்வைகளில்
பதியமிட்டுப் பவனிவர,
மார்க்கத்தின் நெறிமுறைகள்
மனதிற்குள் சென்று பேச,

சத்திய மார்க்கத்திற்கு
எத்திவைத்தல் என்னும்
ஆர்ப்பாட்டமில்லாத
அமைதிப் புரட்சியிது !

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் ! - தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

முன்னோக்கும் என் நோக்கு :

ஐக்கிய அரபகம் ஓர் அதிசயம் !

- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்


வீடும் வாசலும் நம்மிரு விழ்கள்தாம். அந்த விழிகள், வெறுமையை - பசுமையற்ற வாழ்க்கைப் பாதையை - எவ்வளவு நாள்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும் ?

பொருளீட்டல் பூக்கள், எத்தனை தூரத்தில் இருந்தால் என்ன ? அவற்றை அடைந்தால்தானே வாழ்க்கையே அழகாகும் ?

இந்த யதார்த்த உண்மை, தகைசால் ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களின் கேள்வியில் கிளைத்திருந்தது.

நான் எழுதியுள்ள இளைஞனே புத்தகத்தின் கடைசிப் பக்கங்களில் நான் இவ்வாறு கேட்டிருந்தேன்.

வீட்டுக்கு வருகின்றாய் ஒரு விருந்தினரைப் போல. நீ என்ன சரக்குக் கப்பலா, சாமான்களை இறக்கிவிட்டுச் செல்ல ?

எனினும் அரபிக் கடலில் நம் இளைஞர்கள் வியர்வை நீச்சல் அடிக்காமல் இருந்திருந்தால் - செல்வ முத்துக்களைச் சேமித்திருக்க முடியுமா ?

இன்றைக்கு துபாய் நாட்டின் பெருநகர வீதியொன்றில் ‘ஸலாஹுத்தீன் தெரு' என ஒளிவீசக் காணமுடிகிறதென்றால் - அது, பிற்ந்த நாட்டை விட்டுப் பிரிந்து சென்ற அறிவையும் உழைப்பையும் முதலீடு செய்ததால் தானே ?

இதனை துபாய்ப் பயணம், எனக்குத் துல்லியமாகத் துலக்கியது.

சொந்த நாட்டில் - வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. கைப்பொருளை விற்றுக் காசாக்கி, சிறு கடையொன்றில் வியாபாரம் செய்தாலும் அதனால் குடும்பத்தைக் கால் வயிறுகூட கழுவ முடிவதில்லையே !

இந்த வெட்ட வெளிச்சமான வெப்ப உண்மைதானே நம் இளைஞர்களை விரட்டுகிறது. வேலை தேடச் சொல்லி வெளிநாட்டிற்கு ?

துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய அமீரக நாடெனும் குளத்துத் தாமரைகளாகப் பூத்திருக்கும் தமிழக இளைஞர் முகங்களை நான் பார்த்த போது மலர்ந்தே காணப்பட்டன.

இந்ந்நாடுகளில் வேலை வாய்ப்பு நெல்மணிகள் அதிகமாக விளைந்து கிடக்கின்றன. எனவே நம் நாட்டு இளைய தலைமுறை, அந்த நெல்மணிகளை அறுவடை செய்யப் புறப்படுதல் தவறே அல்ல என்பதை நேரிற் கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றேன்.

எனவே மதிப்புமிகு ஈடிஏ ஸலாஹுத்தீன் காக்கா அவர்களிடம் நான் சொன்னேன் :

நிலவின் ஒரு பக்கத்தை குறிப்பிட்டது போல, அயலகம் செல்வதைத் தவிர்க்கலாம்' என எழுதிவிட்டேன். இனி நிலவின் மறுபக்கமான ‘வேலை தேடி விரைந்து செல்லுங்கள்' என்று குறிப்பிடுவேன் என நான் விளக்கம் தந்ததும் ஸலாஹுத்தீன் காக்கா சிரித்துவிட்டார்கள்.

குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான், ‘இந்த உலகமே மனித உலகத்திற்கு' என்று. மனிதன் தான், உன் நாடு, என் நாடு என எல்லை பிரித்து, இயல்புகள் பிரிந்தும் கெட்டுக் கிடக்கின்றன.

திரைகடலோடியும் திரவியம் தேடு' எனபதும் மேலே சொன்ன குர்ஆனின் கூற்றுக்கு இணங்கக் கூறப்பட்டதுதான்.

கரும்புகள் விளைச்சல் கண்டிருப்பது போல - எங்கு பார்த்தாலும் கட்டட விளைச்சல்கள், பாலைவனமெங்கும் இன்று பல நூற்றுக்கணக்கில் அடுக்கு மாடிகள் அரும்பிக் காணப்படுகின்றன.

பெட்ரோலியப் பொருளாதாரம் - அமீரகத்தை - கடலைத் திடலாக்கும் அளவுக்குக் கட்டுமீறி காணப்படுகிறது. செல்வச் செழிப்பும் அதனையொட்டி நவநாகரீகப் பயன்பாட்டுப் பொருட்குவியலும் - சூப்பர் மார்க்கெட்களாக சூழ்ந்து கிடக்கின்றன.

குடும்பத்தை விட்டு அமீரகத்தில் குழுமியிருக்கும் நம் தோழர்கள், மீலாதுந்நபி விழாவை - ஒன்று ஒருமித்துச் சிறப்புச் செய்து வருகிறார்கள்.

துபாயில் ஈமான், அபுதாபியில் அய்மான் என உருவான அமைப்புகள் தமிழ் முஸ்லிகளின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.

தரை வழிப் பயணத்திற்குப் பேருந்தும், ஆற்று வழிப் பயணத்திற்குக் கப்பலும், ஆகாய வழிப் பயணத்திற்கு விமானமும் போல மேற்கண்ட பண்பாட்டு அமைப்புகள், தங்கள் தங்களுக்கெனத் தனித்தனி வழிமுறைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

துபாய் ஈமான் அமைப்பின் சார்பாக நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

தூதர் திருநபி ( ஸல் ) அவர்களின் சிறப்புக்களை எடுத்துக்காட்ட - திருக்குறளில் இருந்து ஒரு மேற்கோளுடன் என் உரைப்படகு, மேடை நதியில் வெள்ளோட்டங் கண்டது.

தூது உரைப்பவர் பற்றி திருக்குறளில் -

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று' என இலக்கியம் செய்யப்பட்டதற்கு இலக்கணமாக நபி ( ஸல் ) அவர்கள் விளங்குகிறார்கள். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய மூன்று குணாம்சங்களில் நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து விளக்கம் தந்த என் பேச்சு குவைத் மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு ஒப்பவில்லை போலும் அது.

-- தொடரும்நன்றி : இஸ்மி - ஜுலை 2005

பத்திரிகை தொடர்புகள்

பத்திரிகை தொடர்புகள்

கைராலி மலையாள தொலைக்காட்சி

ஷார்ஜா : 050 7262997

pravasalokam@gmail.com

அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்

அமெரிக்க படிப்பு வேண்டும், வாட்ச் வேண்டும், டீல் வேண்டாமா - லாலு நக்கல்
செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008

டெல்லி: அமெரிக்க வேலை வேண்டும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச் வேண்டும். ஆனால் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் வேண்டாம் என்று நாடகமாடுவதா என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆவேசமாக கேட்டார்.

லோக்சபாவில் நடந்து வரும் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு லாலு பேசுகையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமரே தானாக முன்வந்து கொண்டு வந்துள்ளார். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது மன்மோகன் சிங்கிற்கு உள்ளது.

பாஜக அணு சக்தி ஒப்பந்தத்தை ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அத்வானி ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அமெரிக்காவை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை.

அணு ஒப்பந்தத்துக்கு அத்வானி எந்தக் காலத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இப்போது எதிர்க்கிறார்களாம்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணு ஆயுத சோதனை தடை சட்டத்தில் கையெழுத்திட இருந்தார். கடைசி நேரத்தில் அதை கைவிட்டார்.

அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் விஷயத்தில் பாஜகவிடம் உண்மையான பதில் இல்லை. அவர்களுக்கு எதாவது ஒரு பிரச்சனையை வைத்து நாட்டை பிளக்க முயல்வதே வேலை.

இந்தியா முன்னேற, தொழிற்சாலைகள் நடக்க அணு ஒப்பந்தம் மிக அவசியம். அடிப்படைக் கட்டமைப்பும் மின்சாரமும் தான் ஏழைகளுக்கு ரொட்டி தரும். வானிலிருந்து ரொட்டி மழை பெய்யுமா?.

இடதுசாரிகளே எங்களுடன் இருங்கள்.. என இப்போதும் கேட்கிறோம்.

இங்கு இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் பலரின் பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றனர். அங்கே போய் படிக்கிறார்கள். அதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கின்றனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை பெருமையாக கட்டிக் கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவை பார்த்து பயப்படுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்ைத எதிர்க்கிறார்கள்.

எல்லோருக்கும்தான் பிரதமராக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. முலாயம் சிங் ஆசைப்படுகிறார், மாயாவதிக்கும் ஆசை வந்து விட்டது. எனக்கும்தான் ஆசை இருக்கிறது. ஆனால் அதெல்லாம் முடிகிற காரியமா. அவசரப்படக் கூடாது.

இடதுசாரிகள் குழப்பும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அதில் அவர்களை குறை கூறவே முடியாது.

தீவிரவாதம் குறித்து, அப்சல் குரு பற்றி பேசுகிறது பாஜக. உலகின் மிகப் பெரிய தீவிரவாதியான அஸார் மசூதை ஆப்கானி்ஸ்தானில் போய் விட்டுவிட்டு வந்தது யார்?. பாஜக தானே... இவ்வாறு லாலு பேசியபோது பாஜகவினர் எழுந்து கடும் கூச்சல் போட்டனர்.

அப்போது குரலை மேலும் உயர்த்தி தொடர்ந்து பேசிய லாலு, இந்தக் கூச்சலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இப்போது குஜராத்தில் மதக் கலவரம் நடத்தியவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்களுடன் இடதுசாரிகள் கைகோர்க்கிறார்கள்.

நான் சாதாரண ஆள் இல்லை. மொரார்ஜி தேசாய் அரசையே கவிழ்த்தவன். அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவன். கைதும் செய்தவன். என்னை உங்களது மிரட்டல் ஒன்றும் செய்யாது.

நம்மிடம் நிலக்கரி ரிசர்வும் குறைந்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இதனால் இந்த அணு ஒப்பந்தம் மிக அவசியம்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமல்ல, மின்சாரமும் வேண்டும். அதை எங்கிருந்து தருவது?. மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டாமா? என்றார் லாலு.

மற்ற உறுப்பினர்கள் பேசும்போதெல்லாம் அவை முழுவதும் எதிர்ப்பலைகள் பரவி அவையே அமளியில் மூழ்கியிருந்தது. ஆனால் லாலுவின் பேச்சுக்கு அவை முழுக்க ஒரே சிரிப்பலையாக இருந்தது. பாஜக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் கூட லாலுவின் ரகளையான பேச்சைக் கேட்டு சிரித்தபடி கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தனது பேச்சின்போது, எனக்கு ஆங்கிலத்திலும் பேசத் தெரியும். ஆனால் அவையின் நேரம் வீணாகி விடக்கூடாது என்று பார்க்கிறேன் என்று லாலு கூற அவை சிரிப்பலையில் மூழ்கி தத்தளித்தது.