Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, September 16, 2012

தினமணி - அயல்மாநிலத் தமிழர்களும், தாய்மொழிக் கல்வியும்


அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த உலகத்தில் கல்விதான் மக்களின் நலத்தையும் வளத்தையும் தீர்மானிக்கிறது. பன்மொழிச் சூழல் நிறைந்த இந்தியாவில் தாய்மொழிக் கல்வி என்பது பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கின்ற மக்களிடம் தாய்மொழிக் கல்வி இன்னும் முழுமையாகச் சென்று சேராத நிலையே தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழி கல்விமொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருந்து வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களிலும் மாநில மொழிகளின் செல்வாக்குக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும், அம்மாநில உள்ளாட்சி அமைப்பும் தாய்மொழி வழிக் கல்வியைப் பயிற்றுமொழியாக்க தொடக்கக் கல்வியில் தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தல் வேண்டும் என்றும், மொழிரீதியான சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இவ்வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருந்தாலும், இன்னும் இந்த இலக்கை எட்டமுடியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். அயல் மாநிலங்களில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தக்கவைத்துக்கொள்ளவும், தங்களுக்கான தாய்மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளவும் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு குழந்தை தானாகவே உள்ளூர் மொழியை தனது முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறது. பேச்சு வழக்கின் தரத்தை அக்குழந்தை கற்றிட மேலும் அதிக வலுவுள்ள கற்கும் சூழலை, அனுபவத்தைப் பெறுதல், உருவாக்கித் தருதல், பேசவும் கவனிக்கவும் ஒரே மொழியாக இருக்கும் சூழலில் கணிசமான குறிப்பிடத்தக்க அளவிற்கு அக்குழந்தை கற்றுவிடும். ஆனால், அயல் மாநிலங்களில் புறச்சூழலில் தாய்மொழி இல்லாத நிலையில் வாழும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய தாய்மொழி அறிவு கிடைப்பதில்லை. இடம்பெயர்ந்த தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகவும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநிலமொழியின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தமிழின் பயன்பாடு குறையத் தொடங்கும். இது இறுதியில் மொழி இழப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே, அயல்மாநிலத் தமிழர்கள் மொழித்தக்கவைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் பிற மொழிப் பயன்பாடு இருத்தல் கூடாது. வீட்டுமொழியாக முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் பயிற்சியைப் பெற்றோர் பெறவேண்டும். அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்ல மறக்கக்கூடாது. பள்ளிகளில் தமிழைப் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி, தமிழைச் சொல்லித்தர முன்வர வேண்டும். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழியின் தேவையைக் குழந்தைகளின் மனங்கொள்ளுமாறு பதிவுசெய்ய வேண்டும். இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்று குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் விழிப்புடனிருந்து அடிப்படைத் தமிழை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். பிற மாநிலங்களில் வசித்துக்கொண்டு தமிழ்ச்சூழலை நுகர தமிழ் இதழ்கள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ் இணையதளங்கள் போன்றவை துணைபுரியும். இவற்றில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளச்செய்தல் பெற்றோர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து விலகிச்சென்று வெகுதூரத்தில் பிற மாநிலங்களில் வாழ்ந்தாலும் தமிழ் மண்ணோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினரிடம் தொடர்பு நீடிக்கும்போது இயல்பாகத் தமிழ் மொழியின் மீதும் தொடர்பு அதிகரிக்கும். திருவிழாக் காலங்களில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து போகும் பழக்கத்தைப் பிற மாநிலத் தமிழர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழரின் மரபார்ந்த பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும். தமிழர் திருநாளாகத் திகழ்கின்ற பொங்கல் விழா நாள்களில் இத்தகைய பிறந்த ஊர் நோக்கிய பயணத்தை அமைத்துக் கொண்டால் மிகுந்த பயன் கிடைக்கும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு ஒன்றுகூடி தமிழ்நாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழவேண்டும். தாங்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும். குழந்தைகளின் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்வியில் தமிழில் கூடுதல் பட்டம் பெற பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களுக்குக் கேரள மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிலையம் தமிழ்ப் பாடங்களைத் தயாரித்து அளித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் பகுதிகளிலும் தமிழ்க் கல்விக்கான வசதிகள் கிடைக்கின்றன. பெங்களூரில் கல்லூரி அளவிலும் தமிழ்மொழி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தையொட்டிய மாநிலங்களில் தமிழ்மொழிக் கல்விக்கான வாய்ப்பு ஓரளவு இருந்து வருகிறது. அந்தமானில் வாழும் தமிழர்களுக்காக தீவு மலர் எனப் பாட நூல்களைத் தயாரித்து அளித்து வரும் பணியை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் செய்து வருகிறது. ஆனால், பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மொழிக் கல்விக்கான வாய்ப்பின்றி இருந்து வரும் சூழலை மாற்ற வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் கால் நூற்றாண்டுக்கு முன்பே இதில் ஆர்வம் கொண்டு பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தொடர்பாக சோமலெ மூலம் கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று அதை நூலாகவும் வெளிட்டது. இன்றையச் சூழலில் மீண்டும் கள ஆய்வு மூலம் புதிய தரவுகளைத் திரட்டி அயல் மாநிலத் தமிழர்களின் தாய்மொழிக் கல்வியின் தாகம் தணிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறது. முனைவர் திருமலை துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம் நன்றி:- தினமணி

Sunday, August 8, 2010

பயனுள்ள கல்வி

பயனுள்ள கல்வி

தலைப்பு : பயனுள்ள கல்வி
உரை நிகழ்த்துபவர் : Dr.KVS ஹபீப் முஹம்மது அவர்கள்
இடம் : ILM Edicational Trust, சென்னை





Click here to download this video

உரையிலிருந்து சில முக்கிய குறிப்புகள் :

1) சொத்துக்களை விற்று கல்வியை பெற்ற காலம் மலையேறி விட்டது.இன்று கல்வியை விற்று சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

2) இளைஞர்கள் அரபு நாட்டிற்கு செல்வதுதான் தங்கள் வாழ்வின் இலட்சியம் என்ற நிலையை விட்டு மாறவேண்டும். அரசு வேலைகளை முஸ்லிம் இளைஞர்கள் பெறுவதற்கு நம் சமுதாயத்தின் பங்கு என்ன? என்பதை சமூக ஆர்வலர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

3) நம் மூளையை செழிப்புள்ளதாக மாற்ற வேண்டியதில்லை, மாறாக நம் மூளையை தெளிவுள்ள மூளையாக மாற்றவேண்டும். ஒரு சமுதாயத்தை அழிக்கவேண்டு மென்றால் கல்வியில் மாற்றம் கொண்டுவந்தால் போதும். மேலை நாட்டின் காலச்சார சீரழிவின் பின்னனி என்ன? என்பதை ஆராய்ந்தால் இவ்விஷயம் தெளிவாக விளங்கும்.

4) மார்க்கக் கல்வியோடு கூடிய உலக்கல்வியே நமக்கு பயனளிக்கும். பயனுள்ள கல்வி என்பது ஒரு செழிப்பான நிலத்தில் பெய்யும் மழைபோன்றது. இறைவனை அஞ்சுபவனே உண்மையான அறிஞன், இறையச்சம் இல்லாதோர் வேதம் சுமக்கும் கழுதைகள்.

5) தீய அறிஞர்களிடமிருந்துதான் ஒரு சமுதாயத்திற்கு சாபக்கேடு உருவாகிறது. நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை, சிறந்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அமானிதம் பற்றி மறுமையில் விசாரணை உண்டு.

இவ்வீடியோ பதிவை இணையதளத்திலிருந்து பார்வையிட கீழுள்ள தொடுப்பை கிளிக்செய்க
http://www.ottrumai.net/TArticles/46-WorthfullEducation.htm
இப்படிக்கு
ஒற்றுமை இணையக்குழு
www.ottrumai.net

Saturday, August 7, 2010

கல்வி விழிப்புணர்வு

அன்பு சகோதரர்களே,

கல்வி விழிப்புணர்வு சம்பந்தமாக நம் அதிரை நிருபரில் “கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது நினைவிருக்கும். அந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் நம் சகோதரர் ஷரபுதீன் அவர்கள் “இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம். அடுத்த கல்வியாண்டின் நுழைவுத்தேர்வில் நமது மக்களை சிறந்த போட்டியாளர்களாக உருவாக்குவோம்.” என்று நம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்கள் என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கும். இது சம்பந்தமாக இணையத்தில் ஏதாவது நல்ல விசயங்கள் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்த நேரத்தில் சகோதரர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களிடமிருந்து ஒரு மடல் வந்தது, அதில் “CARREER and JOB” சம்பந்தமாக மிக அற்புதமான விடியோ சொற்பொழிவு சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயம் இது மிக பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இந்த வீடியோக்களை மிக கவணமாக அனைவரும் கேளுங்கள்.

மேலும் பார்க்க http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_05.html

வஸ்ஸலாம்

தாஜுதீன்

Sunday, August 1, 2010

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”

”கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”
டாக்டர். S.ஆபிதீன்

http://www.mudukulathur.com/educationdetails.asp?id=326

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர் களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.
அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.
இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …
கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.
அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !
இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !
பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.
இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : 99658 92706

E-mail : abideen222270@yahoo.com


Thanks : Samarasam Tamil Fortnightly
May 16-31,2010

Monday, June 21, 2010

கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=261


கல்விப் பெருந்தகை ஜமால் முகமது சாகிப்

ஜனாப். ஜமால் முகமது சாகிப் இளமைப் பருவம்.
சீர்மிகு கல்விப் பணிகள், மக்கள் நலப்பணிகள் பலவற்றை சிறப்பாக செய்த ஜனாப் ஜமால் முகமது அவர்கள், 1882ம் வருடம் ஜனவரி மாதம் இப்பூவுலகில் அவதரித்தார். அவருடைய தந்தையார் ஜமார் முகையதீன் சாகிப் ஆவார்கள். இளமைப்பருவத்தில் திருகுர்ஆனை மனப்பாடம் செய்து ஓதுவதில் ஆர்வம் காட்டினார்கள். ஆரம்பக் கல்வியினை மண்ணடி முத்தியால் பேட் பள்ளியில் ஆர்வமுடன் கற்ற அவர், ஆங்கிலம், கணிதம், பூகோளவியல் ஆகிய பாடங்களில் அதிகம் மதிப்பெண்களைப் பெற்று சிறந்து விளங்கினார். தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை சென்னை கிருத்துவ உயர்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். வகுப்பு நண்பர்களுடனும் பொது விசயங்களையும், மத விசயங்களையும் விவாதிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். உடல் நலக் குறைவின் காரணமாக பள்ளிக் கல்வி தடைபட்டது. எனினும், அவர்தம் தந்தையார் அவர்களுடன் வியாபாரத்தை பெருக்குவதிலும், வியாபார நுணுக்கங்களை அனுபவரீதியாக தெரிந்து கொள்வதிலும் மிக்க ஆவலுடன் ஈடுபட்டார்கள்.
வியாபாரமும் கல்வியும்:
தோல் பதனிடும் தொழிலே அவர்தம் பூர்விக குடும்ப வியாபாரமாக இருந்தது. எனவே அவர் வியாபாரத்தில் ஈடுபட்ட போதும் கல்வியினை நடைமுறையில் கற்றுக் கொள்வதில் அவர் முனைப்புக் காட்டினார். அதன் காரணமாக மெட்ராஸ்யுனைடெட்கிளப்-ல் உறுப்பினராகத் தம்மை ஆக்கிக்கொண்டு, அங்கே வருகின்ற ஆங்கில பிரசுரிப்புகளான, பத்தொன்பதாம் நூற்றாண்டு ரிவீயூவ் தீ ஸ்பெக்டேட்டர் ஆகிய ஆங்கில வார, மாத இதழ்களை விருப்பத்துடன் படித்து வந்தார். அது மட்டுமன்றி, வரலாற்று நூல்கள் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், இதர பல்வேறு பயனுள்ள நூல்களையும், அவ்வப் போது சுயமாகவே வாங்கி படித்து தன்னுடைய ஆங்கில அறிவை நன்கு வளர்த்துக் கொண்டார். அதன் காரணமாக ஆங்கிலத்தில் வியாபார ரீதியான கடிதங்களை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் எழுதி வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்தார்.
நவீன கல்வியும், ஐரோப்பிய பயணமும் :
பெரம்பூரில் இயங்கி வந்த ஜமாலியாப் பள்ளியில், அரபி மொழிக் கல்வியைத் தவிர ஏனைய நவீன பாடத்திட்டத்தினை மாணவருக்கு பயிற்று விக்க முடியுமா? என்ற சர்ச்சைக்கு முடிவுகளான ஜனாப் ஜமால் முகமது சாகிப் ஏப்ரல் 1910-ல் இருந்து ஜனவரி 1911 முடிய 10 மாதங்கள் இடைவிடாது, பயணம் மேற்கொண்டு எகிப்து, வியட்னாம், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து துருக்கி, (மீண்டும் எகிப்து, மக்கா மதினா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளை பார்வையிட்டு அவைகளின் அடிப்படையில் உறுதியான முடிவுக்கு வந்தார். குறிப்பாக கான்ஸ்டாண்டி – நோபிளில் அமைந்துள்ள பழமையான காலிபா, நகரத்தில் – செய்குல் இஸ்லாம் என்ற அமைப்பின் கருத்துக்களை பதிவு செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஜமால் அவர்கள், மத ரீதியான அரபு கல்வியுடன், இதர நவீனப் பாடங்களையும், இஸ்லாமிய மத கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் என்ற கருத்தினை எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம் நவீனக் கல்வியினை இஸ்லாமிய மாணவர்களுக்கு இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் ஏற்படுத்தி தருவதற்குரிய அடிப்படைக் கோட்பாட்டை வடிவமைத்து தந்த கல்வித் தந்தையாக ஜனாப், ஜமால் முகமது சாகிப் அவர்கள் விளங்குகிறார்கள்.
பிரிட்டிஷ் நாணயத்தில் (பவுண் ஸ்டிடர்லிங்க்) இந்திய ரூபாயின் மதிப்பு ஜமால் சாகிப்பின் பொருளாதார கண்ணோட்டம் :
ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் பொருளாதாரப் படிப்பில் பட்டம் பெற்றவர் இல்லை. எனினும், பொருளாதார சிந்தனையில் குறிப்பாக அந்நிய செலவாணி நிர்ணய விகிதத்தில் கூர்மையான அறிவும், அவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, இறக்குமதி ஏற்றுமதியின் வழியாக பாதிக்கும் என்பதை நன்கு அறிந்தவராக விளங்கினார்.
1920 முதல் 1930 முடிய உள்ள 10 ஆண்டுகளில் மூன்று முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை அன்றைய பிடிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்டது 1.ராயல் கமிசன் அமைப்பு, 2. இந்திய பணத்திற்கும் தங்கத்திற்கும் உள்ள விலை நிர்ணய மாற்றம், 3. இந்திய ரூபாய்க்கும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங்க்கும் இடையே உள்ள விலை நிர்ணயம், இம்மூன்று முக்கிய முடிவுகளும் இந்திய பொருளாதாரத்தை குறிப்பாக இந்திய பாமர மக்களைப் பாதிக்கக் கூடியவையாக இருந்தன. நாடு முழுவதும் இப்பொருளாதார முடிவுக்கு தீவிர எதிர்ப்பு கிளம்பின. இவைகள் சம்பந்தப்பட்ட பாதிப்பான பொருளாதார அம்சங்களை தன்னுடைய எழுச்சிமிக்க பேச்சுக்கள் மூலம் தென்னிந்திய மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஜனாப். ஜமால் முகமது ஆவார்கள். இத்தகைய நிலைப்பாட்டை மாற்றுவதற்கும், 1931-32ல் ஜனாப். ஜமால் சாகிப் அவர்கள் இங்கிலாந்து சென்று அவ்வரசிடம் முறையிட்டு பின் நாடு திரும்பினார். இத்தகைய பொருளாதார சிந்தனை மிக்க ஜமால் சாகிப் அவர்களை தென் இந்திய சாம்பர் ஆப் காமர்ஸ்-ன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. இதன் காரணமாக ஜமால் காசிப் அவர்களை படிக்காத பொருளாதார மேதை என்று உறுதியாகக் கூறலாம்.
வட்டமேஜை மகா மாநாட்டில் ஜமால் முகமது அவர்களின் பங்கு:
பிரிட்டிஷ் பிரதம மந்திரி அவர்களால் 1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்கு ஜமால் முகமது சாகிப் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் இந்திய சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்கள். வட்டமேஜை மகா மாநாட்டில் பங்கு பெற்று பொருளாதார கருத்துக்களை சிறப்புற வலியுறுத்தினார்.
மேலும், அவர் செயற்கையான முறையில், நிர்வாக உத்தரவுகள் மூலம் பிரிட்டிஷ் நாணயத்திற்கும் இந்தியாவின் ரூபாய்க்கும் உள்ள மதிப்பு விகிதாச்சார முறையின் சமநிலைப்பாட்டை தோற்றுவிப்பது, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய அம்சம் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்தியா பிரிட்டிஷ்க்கு செலுத்த வேண்டிய கடனை அதிகரித்துக் கொண்டே செல்லும் எனக் குறிப்பிட்டார். வியாபார வளர்ச்சி குன்றினால், இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும் என வலியுறுத்தினார். இத்தகைய கருத்துகள் அப்போது உள்ள காலத்திற்கு மட்டுமின்றி, இப்போது உள்ள காலத்திற்கும் பொருந்தும். இது அவர்தம் தொலை நோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் அவர் பேசுகையில், இந்தியாவுடைய இராணுவ செலவை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்திற்று. மகாண சட்ட மன்றங்களில் அத்தகைய இராணுவ செலவு அதிகரிப்பு ஒப்புக் கொள்ளப்படவில்லை யென்றாலும், அவற்றிற்கு மேல முடிவு எடுத்த திணிப்பது போன்ற நிர்வாக சட்டதிட்டங்கள் அகற்றப்பட வேண்டு மென்று உரையாற்றினார்.
விவசாயம், தொழில்-மேம்பாடு, வியாபாரம், தொழிலாளர்கள் பயன்பாடு ஆகியவற்றில் இந்திய மக்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசில் தீர்மானிக்கும் உரிமை வேண்டும் என்று கூறியது மட்டுமல்லாமல் மாநில அரசாங்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சுயாட்சி முறை அமைப்பு வேண்டுமென்று ஆணித்தரமாகக் கருத்துக்களை எடுத்து வைத்தார். இத்தகையக் கருத்துக்களின் அடிப்படையில் பின்னால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஓரளவு அமைந்தது என்றால் மிகையாகாது. எனவே இரண்டாவது வட்டமேஜை மகா மாநாட்டில் மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் ஜனாப் ஜமால் முகம்மது அவர்களே.
வட்டமேஜை மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு சமயத்தை சார்ந்தவர்களை ஒற்றுமையை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு சமயம், இனத்தைச் சார்ந்த மக்களிடையையும், மத நல்லிணக்கத்தையும், சமுதாய ஒற்றுமையையும் ஏற்படுத்த நல்ல முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக மகாத்மா காந்தி அவர்களுடன் அடிக்கடி உரையாற்றும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தி அவர்களும் இதர தலைவர்களும் ஜமால் சாகிப் அவர்கள் மீது முழு நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருந்தனர். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்குப் பெற்றவுடன் ஜனவரி 1932 –ல் ஜனாப் ஜமால் சாகிப் அவர்கள் இந்தியா திரும்பினார்கள்.
ஜமால் சாகிப் அவர்களின் மெச்ச தக்க குணநலன்கள் :
ஜமால் முகம்மது அவர்கள் ஒரு செல்வாக்கு மிக்க வியாபாரி எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான தேசியவாதி; பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிவருடியாக இல்லாதவர்; இந்திய பொருளாதார விசயங்களிலும், அதன் நிதிநிலை அமைப்பிலும் பாண்டித்தியம் பெற்ற திகழ்ந்தவர்; ஆதலின் சுதந்திர இந்தியாவில் நிதி மற்றும் வணிக அமைச்சராக விளங்குவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்; சிறந்த கொடை வள்ளல்; புகழ்மிக்க கல்வியாளர்; அதனாலேயே தென் இந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர்தம் பெயரில் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி தோன்றுவதற்கு வித்திட்டவர்; பல தரப்பினரும் பாராட்டிய சிறந்த மேடைப் பேச்சின் வித்தகர்; அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி; அகிம்சையில் அசையா நம்பிக்கை கொண்டவர்; பூக்களைக் கண்டு மகிழ்ந்தவர்; பூக்களைப் பறித்தல் கூட நோவினை ஏற்படுத்தும் என்று உணர்ந்தவர்; மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர்; வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவர்; இறைவன் மீது பூரண நம்பிக்கை வைத்தவர்; சுதேசி பொருள்களை விரும்பியவர்; - இத்தகைய ஈடு இணையற்ற பண்பின் காரணமாய், ஜனாப் ஜமால் முகம்மது சாகிப் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின், ஒப்பற்ற மனிதராக விளங்குகின்றார்.
இந்தியா முழுமையிலும் அலிகள் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வாரி வழங்கியவர் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர்.
விடுதலை போரில் செலவுக்காக மகாத்மா காந்தி மூதறிஞர் ராஜாஜியிடம் ( Blank Cheque ) தொகை எழுதப்படாத காசோலை வழங்கிய இத்தகைய வள்ளல் ஜமால் முகம்மது அவர்களுடைய சிறந்த மறுமை வாழ்விற்கு சமவுரிமை இறைவனை இறஞ்சிகிறது.



கட்டுரை எழுதியவர்
டாக்டர். கே.எஸ்.உதுமான் முகைய்தீன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் (ஓய்வு)
பொருளாதாரத்துறை, சென்னை பல்கலைகழகம்,
சென்னை – 600 005.

நன்றி : சம உரிமை மாத இதழ்– ஜுன் 2010
samaurimail@gmail.com
ஆண்டுச் சந்தா : ரூ.144/-
தொடர்பு எண் : சென்னை : 044 4510 810
அமீரகத் தொடர்பு எண் : 050 51 96 433

Thursday, March 18, 2010

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
விளையாட்டு – தங்கும் விடுதி
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன் : 2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010
தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்
ஏழை மாணவர் இல்லம்
தொலைபேசி : 2848 1344

Thursday, December 31, 2009

கல்வி கரையில் !

கல்வி கரையில் !


திருச்சியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனது சொந்த ஊரான கீரனூர் அருகேயிருந்து நாற்பதாண்டுகளுக்கு முன்னர் குடியேறினார் அஹ்மத் என்ற அப்பெரியவர்.

உடன் தனது மனைவி மற்றும் ஒரே மகன் அன்சாரியையும் அழைத்துச் சென்றார்.தொழில் துறையில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததன் காரணமாக எட்டாம் வகுப்புடன் தனது மகன் படிப்புக்கு முழுக்கு போட்டார். தனக்கு உதவியாக தனது மகனை வைத்துக் கொண்டார்.

அல்லாஹ்வின் பேருதவியாலும் தனக்கிருந்த அனுபவத்தின் மூலமாகவும், அயராத உழைப்பின் மூலமாகவும் கடும் போட்டிகளுக்கிடையே திருச்சி மாநகரில் முன்னணி வணிகராக உயர்ந்தார். கிடைத்த லாபத்தில் நகர் முழுக்க சொத்துக்களை வாங்கிக் குவித்தார்.

தக்க சமயத்தில் தனது மகன் அன்சாரிக்கு திருமணம் செய்து வைத்தார். அன்சாரிக்கும் அல்லாஹ்வின் கருணையால் நான்கு ஆண் மக்களும், இரண்டு பெண்களும் பிறந்தனர்.

தொழில்துறையை கவனிக்க ஆட்கள் தேவை இருந்ததால் தனது பேரக்குழந்தைகளை படிக்க வைக்கவில்லை. அவர்களையும் தொழில்துறையில் இணைத்துக் கொண்டார்.

இப்படி சீராகத்தான் அஹமதுடைய வாழ்க்கை போனது. காலத்தின் கட்டாயம் இறைவனின் நாட்டப்படி அஹ்மத் இறைவனடி சேர்ந்தார்.அப்பொழுதுதான் வியாபாரத்தில் பிரச்சனைகள் உறுவானது. அவரது மகன் அன்சாரியின் படிப்பறிவின்மை காரணமாக நிர்வாகத்திறமை இலலாமலும், தனது பிள்ளைகளின் ஆடம்பரபோக்கினை கண்டிக்க முடியாமலும் தேவையற்ற கடன் வாங்கி குவித்தார்.

திடீரென அன்சாரியும் வஃபாத்தானார். பிள்ளைகளோ கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல் தடுமாறினர்.போதிய அனுபவமின்மை, படிப்பறிவின்மை காரணமாக நன்றாக சென்று கொண்டிருந்த வணிகத்தை சமாளிக்க இயலவில்லை.

இதனால் வணிக நிறுவனத்தை கடன் வழங்கிய நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாய சூழல். இறுதியில் தங்களது குடும்பம் அன்றாட செலவுகளுக்கே அல்லாடும் சூழல்களை உறுவாக்கி விட்டது.

போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில், அனைவரும் வியக்கும் படி கஷ்டப்பட்டு முன்னேறிய வணிக குடும்பம் இன்று தள்ளாடும் சூழ்நிலையில்.

நாம் கற்க வேண்டிய பாடம்: குழந்தைகளுக்கு அவர்களது இளமைக் காலத்தில் கல்வியினை வழங்கியிருப்பின் இன்று அதனைக் கொண்டு அவர்கள் குடும்பத்தினை சிறப்பாக நடத்த ஏதுவாய் இருந்திருக்கும் எனவே எத்தகைய சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு கல்வினை வழங்க பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது.

(இது ஒரு உண்மைச் சம்பவம். பெயர் மற்றும் இடம் மாற்றப்பட்டுள்ன)


- காஹிலா

Wednesday, June 3, 2009

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?

பிளஸ் 1 பிளஸ்2 வகுப்பில் சேரப்போகிறீர்களா?
இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, May 14, 2009

வி.களத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வி.களத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் இந்திய முஸ்லீம் நல அறக்கட்டளை சார்பாக 11.05.2009 காலை 10 மணிக்கு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது. வி.களத்தூர் ஜாமிஆ பள்ளிவாசலின் கீழதளத்தில் நடைபெற்ற இந்நிகழ்சிசக்கு அறக்கட்டளையின் கல்விக்குழு தலைவர் ஜனாப் சேக் முஹம்மது(துபய்) தலைமைதாங்கினார். ஐடியல் ஆங்கிலப்பள்ளியின் தாளாளர் ஜனாப் கமால் பாசா (அபுதாபி ) வறவேற்றுப்பேசினார். இந்த கருத்தரங்கில் இளையான்குடி சாகீர்உசேன் கல்லூரி பேராசிரியர,; டாக்டர் ஆபிதீன் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் என்ற தலைப்பில் அறிமுகமில்லாத சுமார் 150 க்கும் மேற்பட்ட புதுப்புபது படிப்புகள் பற்றிய தெளிவான ஆலோசனைகளை ஒளித்திரையின் மூலம் விளக்கி முஸ்லீம்களுக்கு இன்றைய கல்வியின் அவசர அவசியம் குறித்தும் பேசினார்.

இந் நிகழ்சியில் ஆரும்பாவூர் தாஹிர் பாசா, வி களத்தூர் ஹக்கீம் , ஆதம் சரீப், சேக் தாவூத் , சாதிக், அபுதாஹிர், உட்பட சுமார் இறுநூறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, April 30, 2009

TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்

TNTJ மாணவர் அணியின் இந்த வார கல்வி சேவை நிகழ்சிகள்





தர்மபுரியில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்


என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?


நாள் : மே 2 - சனி கிழமை- (இன்ஷா அல்லாஹ் )


நேரம் : காலை 10 மணி


சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : PRK கல்யாண மண்டபம், உருது ஸ்கூல் ரோடு, தர்மபுரி



தொடர்பிற்கு : 9443212388, 9894520178 -அபூ சலீம் (தர்மபுரி மாவட்ட மாணவர் அணி செயலாளர்)


மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. தர்மபுரி மாவட்ட மாணவர் அணி.



லெப்பைகுடி காடு (பெரம்பலுர் மாவட்டம்) -ல் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்


என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?


நாள் : மே 3 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )


நேரம் : காலை 10 மணி


சிறப்புரை : Dr.S.ஜாபர் அலி.PhD. (உதவி பேராசிரியர்)

S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, லெப்பைகுடி காடு, பெரம்பலுர்


தொடர்பிற்கு : 9843398149

மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
பெரம்பலுர் மாவட்ட மாணவர் அணி.



திருப்பதூரில் (சிவகங்கை மாவட்டம்) TNTJ மாணவர் அணியின் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)

நாள் : மே 3- ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )


நேரம் : காலை 10 மணி


இடம் : இமயம் டியூஸன் சென்டர், மேஸ்த்திரியார் தெரு. திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம்


தொடர்பிற்கு : 9003811959, 9944244632

மாணவர்கள், இளைஞர்கள், அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.

Wednesday, April 15, 2009

வேலூரில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

வேலூரில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்

www.mudukulathur.com

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : ஏப்ரல் 19 -ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
இடம் : ஆசிரியர் இல்லம், பில்டர் பெட் ரோடு, வேலூர்-1
தொடர்பிற்கு : 9790113686, 9344686886
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ.வேலூர் மாவட்ட மாணவர் அணி.

திருப்பூரில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : ஏப்ரல் 19 - ஞாயிற்று கிழமை- (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : காலை 10 மணி
சிறப்புரை : S. ஷமீம் M.Sc ( மாநில மாணவர் அணிச் துணை செயலாளர்)
இடம் : ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, மங்களம், திருப்பூர்
தொடர்பிற்கு : 9025236489
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ
திருப்பூர் மாவட்ட மாணவர் அணி.

Monday, March 30, 2009

IQRA'A Institute

Assalamu alaikum.

We are happy to inform that we have started a training centre by name
IQRA'A Institute and took Franchisee of:

Computer Career Park - CCP
Authorized Tally Academy, Tirunelveli jn.
and offer the following programs.

TALLY SOFTWARE EDUCATION
VAT and TAXATION PROCIDURES
COMPANY ACCOUNTS & AUDITING
BASIC & PRACTICAL ACCOUNTING
ENGLISHCOMMUNICATION SKILL
PERSONALITY DEVELOPMENT
CAMPUS INTERVIEW TRAINING

For TALLY Education, Software, Maintenance, Print options and for all
Tally related doubts and clarifications, Pls contact our TALLY EXPERT
Mr.HARI - CCP Tally Academy,Tirunelveli at Mobile: 92454 77810. He
visits Nagercoil and available at our IQRA'A Institute on every Thursdays
and Saturdays. You can consult via mobile or email: hrmadurai@yahoo.com

Kindly inform all our relatives and friends to utilise our centre for their computer related works, software education, computerisation and finalization of accounts, internal auditing, higher education, career and employment guidance.

Truly yours,

Abdul Raziq - Centre Manager
IQRA'A Institute - CCP Tally Franchisee
I Floor, Masjid Ashraf Building,
Opp.Abdul Kadir Hospital,
Elankadai, Nagercoil - 2
Nagercoil. Mobile: 94431 78050

Thursday, February 26, 2009

ச‌வுதி அரேபிய‌ இந்திய‌ப் ப‌ள்ளியில் சேர்க்கை விண்ண‌ப்ப‌ம்

ச‌வுதி அரேபிய‌ இந்திய‌ப் ப‌ள்ளியில் சேர்க்கை விண்ண‌ப்ப‌ம்

ச‌வுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள‌ இந்திய‌ ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் 2009 10 ஆம் க‌ல்வி ஆண்டிற்கான‌ சேர்க்கை விண்ண‌ப்ப‌ங்க‌ல் 27.12.2009 வெள்ளிக் கிழ‌மை மாலை 5 ம‌ணி முத‌ல் 8 ம‌ணி வ‌ரை ஆண்க‌ள் ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.

ஒவ்வொரு வ‌குப்பிலும் உள்ள‌ காலியிட‌ங்க‌ளைப் பொறுத்து விண்ண‌ப்ப‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்படும்.

இவ்வ‌ரிய‌ வாய்ப்பினை ஜித்தாவில் உள்ள‌ இந்திய‌ப் பெரும‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ ஜெத்தா தாஃப்ர‌ஜ் குழுவின‌ர் கேட்டுக்கொள்கின்ற‌னர்.

Dear Parents,

Indian International School, Jeddah, Saudi Arabia announces that admission forms for the Academic Year 2009-10 will be issued as per the availability of seats on Friday,, the 27th of February 2009 in the Boys' School permises from 5:00 pm to 8:00 pm.

Please don't miss this opportunity.

Regards

TAFAREG-Jeddah
tafaregjeddah@gmail.com

Friday, February 13, 2009

துபாயில் உற‌வுக்கான‌ வைட்ட‌மின் சிற‌ப்பு கல்வி நிக‌ழ்ச்சி

துபாயில் உற‌வுக்கான‌ வைட்ட‌மின் சிற‌ப்பு கல்வி நிக‌ழ்ச்சி

துபாயில் உற‌வுக்கான வைட்ட‌மின் எனும் சிற‌ப்பு க்ல்வி நிக‌ழ்ச்சி 18.02.2009 புத‌ன்கிழ‌மை மாலை துபாய் தேரா நாஸ‌ர் ச‌துக்க‌த்தில் அமைந்துள்ள‌ ஃபுளோரா ப‌வுண்டைன் ஹோட்ட‌லில் ந‌டைபெற இருக்கிற‌து.

க‌ல்வியின் மூல‌ம் ச‌முதாய‌ மாற்ற‌த்தை விரும்பும் ஆர்வ‌ல‌ர்க‌ள் இந்நிக‌ழ்வில் ப‌ங்கேற்று ப‌ய‌ன்பெற‌லாம்.

இந்நிக‌ழ்வினை சென்ட‌ர் ஃபார் இன்ஃப‌ர்மேஷ‌ன் அண்ட‌ கைட‌ன்ஸ் இந்தியா ( சிஜி ) எனும் அமைப்பின‌ர் ஏற்பாடு செய்துள்ள‌ன‌ர்.

மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ CIGI cigiclp@gmail.com

Wednesday, February 11, 2009

அஸ் ஸலாம் சாரிடபிள் டிரஸ்ட்

Assalamu Alaikkum (Varah)

Maasha Allah. We are receiving several positive responses from Gulf region about the engineering college project. Hearty thanks to all. Also we humbly request you to kindly forward those details to your friends and relatives and publish all e-papers. We are targeting to reach 100 members before the month end. If you need any clarifications, you can send your representative in person.

This is our address:

As - Salam Charitable & Educational Trust
359 M, Main Road, Aduthurai - 612 101
Thanjavur - Dist

Thanks & Regards,

Shahjahan
Secretary, As-Salam Trust,
98948 94999
99659 04553
shahjahan.am@gmail.com

Monday, February 2, 2009

துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீடு



























துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீடு

துபாயில் பெர‌ம்ப‌லூர் மாவ‌ட்ட‌ம் வி.க‌ள‌த்தூர் இளைஞ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா ம‌ற்றும் சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீட்டு விழா 30.01.2009 வெள்ளிக்கிழ‌மை துபாய் தேரா கேர‌ளா முஸ்லிம் க‌லாச்சார‌ மைய‌த்தில் ந‌டைபெற்ற‌து.

விழாவிற்கு ப‌த்திரிகையாள‌ர் க‌மால் பாஷா த‌லைமை வ‌கித்தார். ஸ‌பியுல்லாஹ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். எம். ச‌பியுல்லாஹ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஜெ.முஹ‌ம்ம‌து அலி இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை குறித்த‌ அறிமுக‌வ‌ரை நிக‌ழ்த்தினார்.

பொறியாள‌ர் ஷேக் முஹம்ம‌து இந்திய‌ முஸ்லிம் ந‌ல் அற‌க்க‌ட்ட‌ளையின் க‌ல்விப் ப‌ணிக‌ளை விரிவாக‌ எடுத்துரைத்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ல்வி உத‌வி, வ‌ட்டியில்லாக் க‌ட‌ன் உள்ளிட்ட‌ திட்ட‌ங்க‌ள் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தை விரிவாக‌ விள‌க்கினார்.

ம‌வ்ல‌வி நூருல்லா ஹ‌ஜ்ர‌த் ப‌தினொரு ந‌ப‌ர்க‌ளுட‌ன் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ அற‌க்க‌ட்ட‌ளை இன்று உய‌ர்நிலையினை அடைந்துள்ள‌து குறித்து பெருமித‌ம் கொள்வ‌தாக‌த் தெரிவித்தார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி ச‌முதாய‌ மேம்பாட்டிற்கு க‌ல்வியின் அவ‌சிய‌த்தை வ‌லியுறுத்திப் பேசினார். க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளை தொட‌ர்ந்து சிற‌ப்புற‌ ந‌ட‌த்தி வ‌ர‌ வாழ்த்தினார்.

சிங்க‌ப்பூர் ஆடிட்ட‌ர் ஃபெரோஸ் கான் க‌ல்வியின் முக்கிய‌த்துவ‌ குறித்து நீண்ட‌ உரை நிக‌ழ்த்தினார். அதில் ஆசிரிய‌ர்க‌ள் ச‌மூக‌ அக்க‌றையுட‌ன் செய‌லாற்ற‌ வேண்டும் என‌ வேண்டுகோள் விடுத்தார். ம‌னித‌ன் புனித‌னாக‌ க‌ல்வி மிக‌வும் அவ‌சிய‌மான‌ ஒன்று என்றார்.
இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஐந்தாம் ஆண்டு ம‌ல‌ரை ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை தொழில‌திப‌ர் அபுதாஹிர் பெற்றுக்கொண்டார்.

ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், ஆடிட்ட‌ர் ஃபாரூக், ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா,அய்மான் க‌ல்லூரி செய‌லர் சைய‌து ஜாப‌ர், சாதிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்தின‌ர்.

Sunday, January 11, 2009

இலவச கல்வி!

இலவச கல்வி!

www.e-learningcenter.com

இந்தத் தளம் கீழ்கண்ட 10 அருமையான கோர்ஸ்களை இலவசமாகச் சொல்லித் தருகிறது. இயன்றவரை அனைத்துச் சகோதரர்களும் பயன்படுத்த முயலுங்கள்.

Elearning Center Demo CurriculumInfo...
Networks (CompTIA A+ Essentials 220-601 - Course 6)Info...
Basics of HTML and XHTML (Web Publishing and Design with HTML 4.01 and XHTML - Course 2)Info...
Start Using JavaScript (JavaScript - Course 1)Info...
Working with Active Directory (Windows Server 2003 - Course 2)Info...
DataSets and XML Data (Visual Basic .NET for XML Web MCSD/MCAD 70-310 - Course 1)Info...
Programming with PHP (PHP and MySQL - Course 3)Info...
Creating a Worksheet (Excel 2007 - Course 2)Info...
Management in Perspective (Fundamentals of Business Management - Course 1)Info...
Communicating (Customer Service - Course 2)Info...
Creating and Communicating Vision (Leadership (Videos) - Course 1)Info...

Thursday, January 8, 2009

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை
மத்திய அரசு உத்தரவு


சென்னை, ஜன.9: தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

மேல்நிலை வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. மேல்நிலைப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளில் டிகிரி படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.1000 என 10 மாதங்கள் தரப்படுகிறது. முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுகளில் மட்டும் மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

விஞ்ஞானம், வணிகவியல் மற்றும் சமூகவியல் படித்தவர்களுக்கு 3:2:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசின் இட ஓதுக்கீடு முறையான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்ற சாதியினர் என்ற இட ஓதுக்கீட்டில் உள்ள சதவிகிதங்கள் பின்பற்றப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை இணை இயக்குநர்(மேல்நிலை வகுப்பு), பள்ளிக் கல்வித் துறையில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, January 6, 2009

கல்வி உதவித்தொகை

1.ஐக்கிய பொருளாதரப் பேரவை
அலி டவர்ஸ் 55 கிரீம்ஸ் ரோடு
ஆயிரம் விளக்கு சென்னை-6
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

2. இஸ்லாமிக் டெவலப்மெண்ட் பேங்க்
முஸ்டாக் அஹமது (ஐ.டி..பி)
11 இராயப்பேட்டை நெடுஞ்சாலை
சென்னை-14
(அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)

3. ஆல் இந்தியா இஸ்லாமிக் ஃபவுண்டேஷன்
688 அண்ணாசாலை
சென்னை-6

4. பி.எஸ் அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் ஃபவுண்டேஷன்
4 மூர்ஸ் சாலை
சென்னை-6
(ஜகாத் உரியவர்களுக்கு மட்டும்)

5. முகம்மது சதக் அறக்கட்டளை
133 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை
சென்னை-34

6. மெஜஸ்டிக் ஃபவுண்டேஷன்
117 ஜெனரல் பேட்டர்ஸ் சாலை
சென்னை-2

7. ஆலிம் முகம்மது சாலிஹ் அறக்கட்டளை
நிசாரா பொனன்ஸா எல்.ஐ.சி எதிரில்
அண்ணாசாலை
சென்னை-2

8. செய்யது வெல்ஃபேர் டிரஸ்ட்
சிந்துபூந்துரை
நெல்லை

9. அஸ்மாகாசிம் அறக்கட்டளை
மாண்ட்டியத் சாலை
எக்மோர் சென்னை-8

10. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்ஃபேர் டிரஸ்ட்
டி-பிளாக் 10(23) 11 வது தெரு
அண்ணா நகர் சென்னை-40

11. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
118பி வேப்பேரி நெடுஞ்சாலை
சென்னை-3

12. இஸ்லாமிய இலக்கியக் கழகம்

27-உட்ஸ் சாலை

சென்னை-2

13. தமிழ்நாடு பைத்துல்மால்
வாலாஜா மசூதி வளாகம்
காயிதே மில்லத் நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி சென்னை-5

14. கீழக்கரை பைத்துல்மால்
கீழக்கரை

15. அடையாறு பைத்துல்மால்
அடையாறு மசூதி எல்.பி ரோடு
சென்னை-41

16. சகோதரத்துவ சமூக நீதிப் பேரவை
ரயிலார் நகர்
மதுரை-18

17. மியாஸி அறக்கட்டளை
புதுக்கல்லூரி வளாகம்
பீட்டர்ஸ் ரோடு
சென்னை-14

18. எஸ்.ஐ.இ.டி.
கே.பி தாசன் ரோடு
தேனாம்பேட்டை சென்னை-18

19. எஸ்.அஹமது மீரான்
புரபசனல் கொரியர்ஸ்
மகாராஐh சூர்யா ராவ் ரோடு
ஆழ்வார்பேட்டைசென்னை-18

20. மெப்கான்
தபால்பெட்டி எண் 3
திருமங்களம்
மதுரை-625106

Saturday, December 27, 2008

நவீன கல்வியின் சிற்பி

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசகல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை
1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும்என்று ஆசாத் வலியுறுத்தினார்.

அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில்ஆசாத் உறுதி காட்டினார்.

10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.

இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச,கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.
1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார்.
17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார்.

கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.


1905 இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது. (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.


முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.

35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.

1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைசெய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல்நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள்
1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராக பொறுப்பேற்றார்.
1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.


ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில்
சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்டபல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.


உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.


தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர்,தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955 இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியகூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.

இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழிபெயர்த்தார்.

1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.


காந்தி மற்றும் நேரு ஆகியோருடன் மௌலானா ஆசாத்




கல்கத்தாவில் உள்ள ஆசாத் அருங்காட்சியகம்



எகிப்தில் உள்ள கலாச்சார மையம்

ஆதாரம்: www.moulanaazad.blogspot.com

ராஜகிரி கஸ்ஸாலி