Showing posts with label வரவேற்பு. Show all posts
Showing posts with label வரவேற்பு. Show all posts

Sunday, March 29, 2009

கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு

கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு

திருப்பூர், மார்ச் 28: திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்தும் கவிதைப் போட்டிக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கோடையை முன்னிட்டு திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. "கோடையில் வீசிய தென்றல்' என்ற தலைப்பில் கவிதையை 1 பக்கம், 24 வரிகளுக்கு மிகாமல் 3 நகல்கள் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

கவிதையுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஒரு சுய முகவரியிட்ட அஞ்சல் அட்டைகள் சேர்த்து அனுப்ப வேண்டும். கவிதையில் தனிமனிதரை விமர்சிப்பதும், அரசியல் கருத்துக்களும் இருக்கக் கூடாது. படைப்புகளை நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி, திருப்பூர் மக்கள் மாமன்றம், எழுத்தறிவாலயம், மங்கலம் சாலை, திருப்பூர். ஏப்ரல் 15-ம் தேதிக்குள் கவிதைகளை அனுப்ப வேண்டும் என்று அமைப்பின் தலைவர் சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Wednesday, March 25, 2009

துபாய் வருகைபுரிந்த தன்னம்பிக்கை பயிற்சியாளர் சாதத்துல்லா கானுக்கு வரவேற்பு



துபாய் வருகைபுரிந்த தன்னம்பிக்கை பயிற்சியாளர் சாதத்துல்லா கானுக்கு வரவேற்பு

அமீரகத்தில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாமினை நடத்த வருகை புரிந்த பெங்களூர் இஸ்லாமிக் வாய்ஸ் ஆசிரியர் சாதத்துல்லா கான் அவர்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்வரவேற்பில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் மஜித் முகர்ரம், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கெற்றனர்.

Monday, June 2, 2008

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த உணவு விடுதியான யும்மி இந்தியன் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக தமிழர்கள் அமைப்பின் நிர்வாகி பரத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகித்தார். செயலாளர் சைபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்கவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

செந்தில், மதுக்கூர் அன்வர்.அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் அவர்கள் தமது ஏற்புரையில் அமீரகத்தில் கணினியில் தமிழ் எனும் நன்னோக்கோடு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளைப் பாராட்டினார். மேலும் கல்வி மற்றும் தொழிலாளர்களுக்கு தமிழில் ஆர்வமேற்படும் வண்ணம் தமிழ் பயிற்சி வகுப்புகள், உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் அமைப்பின் சேவை மேலும் தொடர வாழ்த்தினார்.

ஹமீது யாசின் நன்றியுரை கூறினார்.

தொடர்பு முகவரி :

அமீரகத் தமிழர்கள் அமைப்பு துபாய்
தபால் பெட்டி எண் 86776
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
மின்னஞ்சல் : etadxb@yahoo.com











Monday, May 19, 2008

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் பேராசிரியருக்கு சிறப்பான வரவேற்பு !


இந்திய துணைத்தூதர் ( Consul General ) வேணு ராஜாமணி - கன்சல் முபாரக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு !!




ஐக்கிய அரபு அமீரகத்தில் எழுச்சிமிகு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நிலையினை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக் களைய முயற்சிகளை மேற்கொள்ள இந்திய துணைத்தூதர் ( Consul General ) திருமிகு வேணு ராஜாமணி, தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கன்சல் ( Consul - Labour & Welfare ) உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது இந்திய துணைத்தூதர் பேராசிரியரிடம் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலைக்காக அமீரகம் வரும் பொழுது வேலைக்கான விசாவில் வராமல் ஆயிரக்கணக்கில் ரூபாய்களை ஏஜெண்டுகளிடம் கட்டி விசிட் விசாவில் வந்து விடுகின்றனர். இதற்குக் காரணம் விசா குறித்த விழிப்புணர்வு தொழிலாளர் மத்தியில் குறிப்பாக தமிழக தொழிலாளர்களிடம் இல்லாததே காரணம். விசிட் விசாவில் வந்து அமீரகத்தில் வேலை செய்யக்கூடாது என்பது சட்டம். இது தெரியாமல் இங்கு வந்து ஏமாந்து விடுகின்றனர். எனவே சட்ட ரீதியாக இதுபோன்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் சிறைச்சலைகளில் பலர் வாடுகின்றனர். எனவே தொழிலாளர்கள் அமீரகம் வரும் பொழுது கண்டிப்பாக வேலைக்கு வருபவர்களாக இருந்தால் வேலைக்கான விசா ( EMPLOYMENT VISA ) வில் மட்டுமே வரவேண்டும்.

மேலும் தங்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதை அறிவதற்கு உதவும் பணியிலும் துபாய் இந்திய துணைத்தூதரகம் உதவத் தயாராக உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் http://www.cgidubai.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டால் அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன. அதன் மூலம் தொடர் கொண்டால் தாங்கள் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனம் நம்பகமானது தானா என்பதனை அறிந்து கொள்வதற்கும் உதவத் தயாராய் உள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் தொடர்பு முகவரி வருமாறு :


Consulate General of India
P.O.Box 737, Dubai
United Arab Emirates

Tel: 3971222/3971333

Fax: 3970453

Email:cgidubai@emirates.net.ae





அமீரகத்திற்கு பணிக்காக அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் சிலர் தவறான வழிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காகவும் இந்திய துணைத்தூதரகம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமீரகத்தில் பணிக்கு வருவோர் இந்திய துணைத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டால் ஆபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவர்களை அதிலிருந்து மீட்டு தாயகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மேலும் இந்தியர்கள் பணியின் நிமித்தமாக அமீரகம வரும் பொழுது எதிர்பாராத விதமாக மரணமடையும் பொழுது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்திய துணைத் தூதரகம் விரைவாக அவர்களது உடல்களை தாயகம் அனுப்பி வைத்து வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமும் இதுபோல் செய்திட பேராசிரியர் முயற்சி மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் இந்தியாவின் பல்வேறு நகர பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சரிபார்கப்பட்டு விரைவாக கொடுக்கப்படுகிறது. எனினும் திருச்சி பாஸ்போர் அலுவலக பாஸ்போர்ட்கள் மட்டும் சிறிது தாமதமடைகிறது. அவையும் விரைவில் சரிசெய்யப்படுவதற்கான முயற்சி கொள்ளப்படும் என்றார்.

இந்தியர் நலன் காக்க எத்தகைய பணிகளானும் இந்திய துணைத் தூதரகம் தனது வாயில்களை இருபத்து நான்கு மணிநேரமும் திறந்தே வைத்துள்ளது. முறையான தகவல்களுடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களது துன்பங்கள் துடைதெரியப்படும் என்றார்.

மேலும் தான் அரபகத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை நூலாக வடிவமைத்து வருவதாக குறிப்பிடார் துணைத் தூதர் வேணு ராஜாமணி. வரலாற்றுப் பேராசிரியரான காதர் மொகிதீன் எம்பி மிகவும் மகிழ்வுடன் அவர்களைப் பாராட்டினார். பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும் அவர்களுக்கு நினைவு கூர்ந்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார்.


கன்சல் முபாரக்

இந்திய துணைத்தூதரகத்தில் மிகவும் சிறப்புடன் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கன்சல் பி.எஸ். முபாரக் ( லேபர் & வெல்பேர் ) அவர்களையும் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி சந்தித்தார். அவர்களது பணிகளை வாழ்த்தினார். மிகவும் இளம் வயதில் உயர் பொறுப்பில் சிறப்புடன் பணியாற்றி வரும் பாங்கை பாராட்டினார்.

பி.எஸ். முபாரக் அவர்கள் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலளர் ஏ. லியாக்கத் அலி, கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தினமும் தங்களது சமுதாயப் பணிகள் பற்றிக் குறிப்பிடாத நாளே இல்லை எனலாம் என்றார்.

இச்சந்திப்பின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஏ ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, காயிதெ மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத் ( முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி )

Thursday, May 15, 2008

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு

துபாயில் பேராசிரியருக்கு வரவேற்பு மற்றும் நூல் வெளியீடு


அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்கள் எழுதிய ' கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத்தின் கருத்துரைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா 17.05.2008 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டல் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள 'காயிதேமில்லத் (ரஹ்) அரங்கில்' நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். சமுதாயப் பிரமுகர்கள் முன்னிலை வகிக்க காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. 'கண்ணியத்திற்குரிய காயிதேமில்லதின் கருத்துரைகள்' நூலை வெளியிட்டு ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஆலிம், குவைத் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா, குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் ( K-Tic ) பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மௌலவி அ.பா. கலீல் அஹ்மத் பாகவி உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

பொருளாளர் கவிஞர் ராஜகிரி அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

விழா குறித்த மேலதிக விபரம் பெற 050 452 4990 / 050 644 04 15 / 050 467 43 99 / 050 51 96 433 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.