Saturday, April 4, 2009

த‌முமுக‌ இணைய‌த்த‌ள‌த்தில் இன்றைய‌ செய்திக‌ள்

08.06.2008 இன்றைய செய்திகள்

http://www.tmmk.info/daily_news/index.htm


அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராகும் முயற்சியை கைவிடுவதாக அறிவித்தார் ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்த­ல் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்காக கிட்டதட்ட பதினேழு மாத காலமாக தான் செய்து வந்த பிரச்சாரத்தை முடித்து, அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி ஆகும் தன்னுடைய முயற்சியை கைவிடுவதாக ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் ஆற்றிய உரையில், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்த­ல் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பர்ராக் ஒபாமாவை இவர் ஆமோதித்துள்ளார்.

கம்யூனிஸ்ட்கள் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை; 30 ஆயிரம் பேர் கைது


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சனிக்கிழமை ஈடுபட்டன.

மொத்தம் மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடின.


வேலூர் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு

வேலூர், ஆம்பூர், ஆரணி பகுதிகளில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிக்கு வந்தனர்.

சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஓர் இயந்திரம் இயங்குவது போன்ற சப்தம் சில விநாடிகள் ஏற்பட்டது. சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. நிலநடுக்கம் எனக் கருதிய அப்பகுதி மக்கள் வீதிக்கு ஓடிவந்தனர்.

செல்போன் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டபோது இதே போன்று வேலூரின் பல பகுதிகளிலும் லேசான நில அதிர்வு நீடித்ததை அறியவந்தனர்.

ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் இதே போன்ற நில அதிர்வு காணப்பட்டதாக தகவல்கள் வந்தன. இருப்பினும், கட்டடங்கள் இடிந்ததாகவோ அல்லது வேறு அசம்பாவிதங்கள் நடந்ததாகவோ தகவல்கள் இல்லை.

Vidiyal Velli

Dear Brothers/Sisters- in-Islam,

Assalamu alaikum..

Vidiyal Velli...the leading monthly magazine (22000 copies per month..Alhamdulilla h) in Tamil has come out with an exclusive subscription offer.

One year subscription - INR 150/- only
Two years subscription - INR 300/- only
Offer period - April 5 - April 15, 2009
Contact your nearest vidiyal velli representative or Vidiyal Velli office to avail the offer.

Address: 25, Barracks Road,
Periamet,
Chennai - 3
Phone: 044-25610969
e-mail: vidialvelli@ gmail.com
Wassalam.

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா, திருப்பாலைக்குடி

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா, திருப்பாலைக்குடி

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா, திருப்பாலைக்குடி என்ற‌ இஸ்லாமிய‌ அஞ்ச‌ல் வ‌ழிக் க‌ல்வி நிறுவ‌ன‌ம் தொட‌க்கப்ப‌ள்ளி ஆசிரியராக‌ ப‌ணிபுரிந்து வ‌ரும் முஹ‌ம்ம‌து அப்துல்லாஹ் அவ‌ர்க‌ளால் க‌ட‌ந்த‌ 1993 ஆம் ஆண்டு முத‌ல் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

த‌ன‌து முய‌ற்சியினால் த‌ன‌து மாத‌ வ‌ருவாயில் பெரும் ப‌குதியினை இத‌ற்காக‌ செல‌விட்டு ச‌முதாய‌க் க‌ல்விப் ப‌ணிக்காக‌ த‌ன்னை அர்ப்ப‌ணித்து வ‌ருகிறார்.

இத்த‌கைய‌ முய‌ற்சிக‌ளுக்கு த‌மிழ‌க‌ இஸ்லாமிய‌ப் பெரும‌க்க‌ள் ஆக்க‌மும், ஊக்க‌மும் அளித்து இக்க‌ல்வி நிறுவ‌ன‌ம் சொந்த‌மாக‌ க‌ட்டிட‌த்தில் இய‌ங்கிட‌ ஆத‌ர‌வ‌ளிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வெளிநாடு வாழ் த‌மிழ‌க‌ இஸ்லாமிய‌ப் பெரும‌க்க‌ள் த‌ங்க‌ள‌து குடும்ப‌த்தின‌ரை இந்த‌ அஞ்ச‌ல் வ‌ழிக் க‌ல்வியில் சேர்ந்து ப‌ய‌ன்பெற‌ கேட்டுக் கொள்ள‌வும்.

ஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா
இஸ்லாமிய‌ அஞ்ச‌ல் வ‌ழிக் க‌ல்வி நிறுவ‌ன‌ம்
திருப்பாலைக்குடி 623 531
செல் : 9488024286

E mail : jamika_edu.in@rediffmail.com

தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு

தந்தை பெரியார் எழுதிய "தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு" என்னும் புத்தகம்
இணையத்தில் முழுவதுமாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகுதி 1- இல் இருந்து பகுதி 7- வரை பிரிக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தில்
தமிழர் என்பவர்கள் யார் என்பது குறித்து விரிவாக தந்தை பெரியாரின் சிந்தனை இருக்கின்றது.
வாசிக்க விரும்பினால் http://tamizachiyin-periyar.com/index.php?ssrubrique=334 செல்லவும்.


தோழமையுடன்
தமிழச்சி