Showing posts with label முட்டை. Show all posts
Showing posts with label முட்டை. Show all posts

Wednesday, December 17, 2008

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?

முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதையும் அளவுக்கு அதிமாகச் சாப்பிட்டால் ஆபத்து என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு நல்லது என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவைப் பின்பற்றி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

அதன் இறுதியில், அமெரிக்க ஆய்வுக்கு நேர்மாறான முடிவு தான் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களுக்கு கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட, அது அவர்களின் நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் தினமும் ஒரு முட்டையோ, அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான முட்டைகளைச் சாப்பிட்டாலோ, சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 சதவீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரிய தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)