Tuesday, April 29, 2008

தி இண்டர்நேஷனல் இந்தியன்

சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வரும் தி இண்டர்நேஷனல் இந்தியன் எனும் ஆங்கில மாத இதழ் 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

துபாயில் இதன் தொடர்பு முகவரி :

Expat Group
P O Box No. 181681
Dubai - UAE
Tel : 04 297 3932
Fax : 04 297 4345
E mail : editor@intindian.com
www.intindian.com

ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகள் குறித்த உரை

ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலை நடத்தும் மருத்துவ படிப்புகள் குறித்த உரை


ஜெயா டிவியில் ரஷ்ய மருத்துவ பல்கலைக்கழகங்கள் நடத்தும் எம்.டி, பி.டி.எஸ்.,உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகள் குறித்த விளக்க நிகழ்ச்சியினை சென்னை ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை நிறுவன தலைவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் 30 ஏப்ரல் 2008 புதன்கிழமை காலை இந்திய நேரப்படி 12 மணி முதல் 1 மணி வரை ( அமீரக நேரம் காலை 10.30 முதல் 11.30 வரை ) வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியினை கண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்புகள் குறித்த விளக்கம் பெறலாம்.

மேலும் தகவல் பெற விரும்புவோர்

ஏ.ஜே. டிரஸ்ட் கல்வி ஆலோசனை மையம்
கிரஸெண்ட் கோர்ட் பில்டிங்
எண் 963 பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை 600 084
தொலைபேசி : 2661 4485 / 3295 9991
அலைபேசி : 93 828 62393 / 98 406 52729 / 93 800 05652


மேலும் துபாயில் ரஷ்ய மருத்துவ பலகலை டீன் பங்கேற்கும் நேர்முக நிகழ்ச்சி 11 மே 2008 ஞாயிறன்று மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலின் தேரா அரங்கில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தில் இருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்று ரஷ்ய மருத்துவ பல்கலை குறித்த தன்க்களது ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.


தகவல் : டாக்டர் ஏ. நசீருல் அமீன், சென்னை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நோக்கங்களும், குறிக்கோளும்

இந்திய நாட்டின் சுதந்திரம் இறையாண்மை ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை நிலைநிறுத்திப் பாதுகாப்பது...

தேச மக்களின் வலிமைக்கும் வளத்துக்கும் மகிழ்வுக்கும் பங்களிப்பாற்றி பாடுபடுவது...
இந்திய கூட்டமைப்பில் வாழும் சமுதாயத்தில் சமயசார்பற்ற சமத்துவ ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்துவது...

தேசிய வாழ்வியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாயங்களுக்கும் இடையில் நல்லுறவு நேயம் நட்புறவு கருத்திணக்கம் ஒற்றுமை ஆகியவற்றை ஓங்கச் செய்வதற்கு முனைந்து செயலாற்றுவது...

சிறுபான்மையினர் ஷெட்ய+ல்டு வகுப்பினர் பழங்குடியினர் மற்றும் நலிந்த பிரிவினர் அனைவருடைய அரசியல் சட்ட ரீதியான உரிமைகளுக்கும்
நலன்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து அவர்களின் மொழி கல்வி சமூகப் பொருளாதார அரசியல் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவது...

மாநில அரசினுடையவும் உள்ளாட்சி அமைப்புகளினுடையவுமான அதிகாரங்களை அதிகரிக்கப் பாடுபடுவது...

குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினரின் சமய கலாச்சார தனித்தன்மையை பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் சமாதானம் சுமூகம் கூட்டுறவு முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நவயுக சமுதாயம் உருவாக்கப் பாடுபடுவது...


http://www.muslimleaguetn.com/aims.asp

முன் னாள் போலீஸ் சூப்பிரண்டண்ட் அப்துல் ரவூப் முஸ்லிம் லீகில் இணைந்தார்

முன் னாள் போலீஸ் சூப்பிரண்டண்ட் அப்துல் ரவூப் முஸ்லிம் லீகில் இணைந்தார்



பல விருதுகளைப் பெற்ற வரும் சமூக நல்லிணக்கத் திற்கு பாடுபட்டவரும் முன் னாள் போலீஸ் சூப்பிரண்டு மான அப்துல் ரவ+ப் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. முன்னிலை யில் இணைந்தார்.

~பல முஸ்லிம் இயக்கங் களை ஆய்வு செய்தபின் பேராசிரியர் தலைமையில் உள்ள இயக்கத்தில் இணை கிறேன் என்று அப்துல் ரவ+ப் கூறினார். கம்பம் முஸ்லிம் லீக் சார்பில் மணிவிழா மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்றார். அப்போது முன்னாள் எஸ்.பி. அப்துல் ரவ+ப் பேராசிரியருக்கு பொன்னாடை அணிவித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை வரவேற்ற பேராசிரியர் அவருக்கு பொன்னாடை அணி வித்து கவுரவப்படுத்தினார்.

விழாவில் அப்துல் ரவூஃப் பேசும் போது கூறியதாவது-

தனிமனிதனாக இருந்து கொண்டு சமுதாயத்துக்கு பெரிய அளவில் சேவை செய்துவிட முடியாது. ஏதாவது சமூக இயக்கத் துடன் இணைந்து கொண்டு செயல்பட்டால் சமூகத்துக்கு நல்ல பல சேவைகளை செய்ய முடியும். காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் நான் தனியாக முஸ்லிம் சமுதாயத்துக்கு பணியாற்றுவதைவிட ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்தில் சேர்ந்து பணி யாற்றினால் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.

அதன்பிறகு முஸ்லிம் சமுதாயத்தினரால் முஸ்லிம்களுக்காக நடத் தப்படும் பல இயக்கங் களை ஆய்வு செய்தேன். அந்த ஆய்வுக்குப் பின் முஸ்லிம்களுக்கு பாரபட்ச மற்ற முறையில் பணி யாற்றி வரும் இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான் என்று உணர்ந்தேன். அந்த இயக்கம் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இயக்க மாகும்.

சமுதாய நலனுக்கு தாய்ச்சபையாக இயங்கி வரும் இயக்கமும் அது தான் என்பதை கண்டு கொண்டேன். சமூக நல்லி ணக்கத்துக்கு பாடுபடக் கூடிய இயக்கமும் லீக் தான் என்பதை கண்டு கொண் டேன்.

இந்த இயக்கம் பேராசிரியர் தலைமையில் மரபு நெறி பிறழாமல் பாரம் பரிய பெருமைகளுடன் முஸ்லிம்களுக்காக சிறப் பாக பணியாற்றி வருகிறது என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

எனவே பேராசிரியர் தலைமையில் என்னை இந்தபேரியக்கத்தில் இணைத்துக் கொள்கி றேன்.

என் போன்றே பணியி லிருந்து ஓய்வு பெற்று சமூக பணியாற்ற விரும் பும் பலர் இருக்கிறார்கள். அவர்களை சென்னை மணி விழா மாநாட்டின் போது முஸ்லிம் லீகில் இணைக்க பாடுபடுவேன். இவ்வாறு அப்துல் ரவ+ப் கூறினார்.

பின்பு பேராசிரியர் பேசும்போது அப்துல் ரவூஃப் லீகில் இணைந்ததை வரவேற்றார். அப்துல் ரவூஃப் போன்ற பலர் அரசு போன்ற துறைகளிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். அனுபவமும் ஆற்றலும் மிக்க அவர்கள் உணர்வுப் பூர்வமாக முஸ்லிம்களுக்கு சேவை செய்ய முஸ்லிம் லீகில் தங்களை இணைத் துக் கொள்ள வேண்டும்.

அப்துல் ரவ+ப் காவல் துறைப் பணியில் இருக்கும் போது பல விருதுகளை பெற்றவர். சுனாமி நிவாரணப்பணிகளிலும் பாராட்டு பெற்றவர். சமூக நல்லிணக்கத்திற்காக பாடு பட்டவர். இப்படிப்பட்ட வர்கள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற முன் வர வேண்டும்

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்


http://www.muslimleaguetn.com/news.asp