Saturday, August 30, 2008

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு

துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பு நடத்தும் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீடு


துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை துபாய் அல் கிஸஸ் யும்மி இந்தியன் உணவகத்தில் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சைபுதீன் வரவேற்றார்.

கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழா எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் தேதி இந்திய துணைத்தூதரக அரங்கில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து சேலம் வேலு நம்பி எழுதிய ‘கடமை,கண்ணியம், கட்டுப்பாடு' எனும் நூல் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் அஜ்மான் மூர்த்தி அவர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படுவார்.

மேலும் செப்டம்பர் 19 ஆம் தேதி நோன்பு திறப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் உணவகத்தில் நடைபெற இருப்பதாகவும், இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க செயலாளர் சைபுதீன் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் நூர், செந்தில் ஜெரால்டு, சலீம், சபியா நூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நோன்பு - - மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நோன்பு

மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

டாக்டர்
A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)
ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA
ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075
________________________________________
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :

நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.

வயிற்று உபாதைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்)இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல் :

இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்கான முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!

உலகெங்கும் பல இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் டாக்டரின் மருத்துவ கட்டுரைகளை இணையத்தின் மூலம் படித்து பலன் பெறுகிறார்கள். நீங்களும் படிக்கவேண்டுமா? ஒரு முறை விசிட் செய்யுங்கள்:

www.tamilislam.com

டாக்டர்
A.ஷேக் அலாவுதீனை தொடர்பு கொள்ள:
சவூதி அரேபியா:
மெடிக்கல் கன்ஷல்டன்ட் மருத்துவமனை
ரியாத், சவூதி அரேபியா
போன்: 0505258645

தமிழ்நாடு:

தி ஹெல்த் ரிசோர்ட்
HIG
-331 முல்லை நியூ ஹவுசிங் யூனிட், புது பஸ்ஸ்டான்ட் அருகில், தஞ்சாவூர்- போன்: 9442871075, 04362 227414

நலம் பெற வாருங்கள்:

அனைத்து வகையான நரம்பியல் (Neurological) நோய்கள், பலதரப்பட்ட தீராதவலி (Pre-Existing, Chronic), மனநோய்கள் Psycho), பாலியல் பிரச்சனைகள், ஆண்மைக் கோளாறு, பெண்மைக் கோளாறு All types of Sexual Problems), பெண்கள் கர்ப்பபை பிரச்சனைகள் (Uterus)> கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இதயம், கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரக நோய்கள் மற்றும் கைவிடப்பட்ட பல நோய்கள் அனைத்து நோய்களிலிருந்து விடுபட்டு நலமாக வாழ டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்.
[
THANKS SOURCE:http://www.tamilislam.com/MEDICAL/INDEX.HTM

பழனி பாபா ஆவணப்படம்

பழனி பாபா ஆவணப்படம்

முஸ்லிம் சமுதாயத்திற்காக போராடி இளைஞர்களை தனது உணர்வுப்பூர்வமான பேச்சால் தட்டி எழுப்பிய சமூக நீதிப் போராளியும்,சங்பரிபார சக்திகளால் கொலை வெரி தாக்ககுதலுக்கு உள்ளாகி ஷஹிதாக்கப்பட்ட " போராளி பழனி பாபா " அவர்களை இளைய சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆவணம் படம் ஒன்று தயாராகி வருகிறது.
பாபாவைப் பற்றிய செய்திகள்,புகைப்படங்கள், வீடியா படங்கள் வைத்திருக்கக் கூடிய சகோதரர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தொடர்பு
வழக்கறிஞர்.காஞ்சி. எம். ஜைனுல் ஆபிதீன்
அலைபேசி : 9994292932
இமெயில் : zainul123us@yahoo.com

இலங்கை பத்திரிகாசிரியரின் மறைவு - ஓர் இரங்கல்

"நவமணி' இலங்கைத் தமிழ் மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் நாடித்
துடிப்பு. அதன்நாளங்களில் இரத்தமாக
ஓடோ ஓடென்று ஓடி அதற்கு உயிர்த் துடி[ப்பைத் தந்தவர், இன்று தானே அதை
இழந்து அமரராகிவிட்டார்.

சாதாரண நிருபராக இருந்து, பத்திரிகாசிரியராக உயர்வதற்குள் அவர் பட்ட
கஷ்டங்கள், பெற்ற அனுபவங்கள்
வரும் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடியவை. ஆனால், அது முறையாகப்
பதியப்படவில்லை என்பது சோகம்.
ஒரு ஒலிப்பதிவுக் கருவியுடன் என்னோடு ஒன்றிரண்டு மணி நேரம் உட்காருங்கள்.
உங்கள் அனுபவங்களை அசை
போடுங்கள். அதை ஒரு நூலாக - வாழ்க்கைச் சரிதமாக வடிக்கும் பொறுப்பை நான்
ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால், வேலைப்பழு காரணமாக, நேரத்தோடு நித்தம் நித்தம் யுத்தம் நடத்திக்
கொண்டிருந்த அவருக்கு நேரமே
கிடைக்கவில்லை. காலமும், காலனும் கூட காத்திருக்கத் தயாரில்லை.

அரசியலில் ஆழ்ந்த புலமை, சமூகப் பிரச்னைகளில் பிரக்ஞையுடன் கூடிய அக்கறை,
அதை எழுத்தில் வடிக்கும்
வல்லமை. முகம் நோக்காது, விளைவுகளை எண்ணாது, அதே சமயம் முகத்தில்
அடித்தாற்போல் சொல்லாமல்
நளினமாகவும், நாகரீகமாகவும் உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த பாங்கு. அவரை
'பெரிய ம்னிதர்' என்று
முத்திரை குத்தப்பட அருகதை உள்ளவராக்கியது.

உயர் மட்டத்திலுள்ள அத்தனை சமூக - பொருளாதார - அரசியல் பிரமுகர்களையும்
தோழமையுடன் கைலாகு
கொடுத்துப் பழகும் அளவுக்கு பரிச்சயம். ஆனால், இந்த செல்வாக்கின் ஒரு
துளியையேனும் தன் சொந்த
லாபங்களுக்காகப் பயன் படுத்தினாரா என்றால், அழுத்தம் திருத்தமாக வரும்
பதில் " இல்லை" என்பதாகும்.

பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன ? அது வேறொன்றுமில்லை. இலங்கையில்,
அதுவும் தமிழில், அதுவும்
கட்சி சாராது, நடுநிலை நின்று பத்திரிகை நடத்துவதுதான் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள். அது மலையைப்
புரட்டி கட்லில் உருட்டும் பணி. அதை எவ்வித நெம்புகோலும் இல்லாமல்
நெஞ்சுரத்துடன் செய்தார் என்பதுதான்
அவருடைய தனிச்சிறப்பு.

பத்திரிகை வெளிவராமல் இருக்க 99 ஒன்பது காரணம் இருக்கும். அதற்காக
அச்சமோ, கவலையோ படமாட்டார்.
வெளிவர உதவும் அந்த ஒரு காரணம் போதும். பத்திரிகையை வெளிக்கொணர்ந்து
விடுவார். பத்திரிகை அச்சிட
மசிதான் தேவை.ஆனால் இவர் உபயோகித்த மசி இவரது உதிரமும், வியர்வையும் !

சரக்கு குவிந்து கிடந்தது. பக்கங்கள் இல்லை. எதை எடுப்பது, எதை விடுவது,
எப்போதும் அவரை வாட்டிய சவால்.
சளைத்தாரில்லை. பொருளாதாரம் புறமுதுகில் ஓங்கி அடித்தது. தினசரியாக
நட்த்துவது நஷ்டத்தால் இடித்தது.
அதனால் என்ன ? மாற்று வழி கண்டு பிடி. வாரம் ஒரு முறை அல்லது
இருமுறையாக்கு. காலம் கனியாமல்
போகாது அன்று பார்த்துக் கொள்ளலாம் என்கிற வைராக்கியமும் விடா
முயற்சியும் எல்லோருக்கும் வந்து விடாது.

லண்டன் "தீபம்" தொலைகாட்சியில் நான் வாரம் தோறும் நடத்தும் அரசியல்
விமர்சன நிகச்சிக்கு " அரங்கம் -
அந்தரங்கம்" என்று பெயர் வைத்தேன். என்ன ஆச்சரியம் ! நான் அடுத்த முறை
இலங்கை வந்தபோது பார்க்கிறேன்
"நவமணி' யின் இரண்டாம் பக்கத்தில் அவர் எழுதி வந்த பிரசித்தி பெற்ற,
எல்லோரும் படிக்கும், சக்தி வாய்ந்த
அந்தப் பகுதிக்கும் அதுதான் பெயர்.

"உங்களைப் பார்த்து நான் வைக்கவும் இல்லை. என்னைப் பார்த்து நீங்கள்
வைக்கவும் இல்லை. இயல்பாகவே
அப்படி அமைந்து விட்டது. அதன் பொருள் நீங்களும் நானும் ஒரே அலைவரிசையில்
(Wave Length) சிந்திக்கிறோம்
என்பதுதான். அதையிட்டு நான் பெருமைப்படுகிறேன்" என்றார்.

தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள் என்றார். செலவைப் பொருட்படுத்தாது,
தவறாமல் "நவமணி" அனுப்பித் தந்தார் இங்கே, இலங்கை பற்றிய செய்திகளை
நான் விஷய ஞானத்துடன் அணுக அது எனக்குப் பெரிதும் உதவியது.

அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் என் பள்ளித் தோழர். பால்ய நண்பர். அவர் மீது
அதீதமான அன்பும், நட்பும், மதிப்பும்
மரியாதையும் வைத்திருந்தார். அவருடைய வளர்ச்சி தன்னுடைய வளர்ச்சி போல்
எண்ணீ மகிழ்வார். எங்கள்
இருவரையும் சேர்ந்த்தே சந்திக்கப் பிரியப்படுவார்.சுவாரஸ்யமான எங்கள்
இளமைகால அனுபவங்களை
கரிசனத்துடன் கேட்பார். ஒரு நாள் ஸாஹிராக் கல்லூரியைப் பற்றிப்
பேசும்போது, " ஒரே உறையில் எப்படி
இரண்டு வாள்கள் இருந்தீர்கள் ? " என்றார். நான் சொன்னேன். ' இரண்டு
வாள்கள் அல்ல வால்கள். அதுதான் நான்
இந்தியாவுக்கு ஓடி விட்டேன்" என்றேன். வாய்விட்டுச் சிரித்தார்.
நகைச்சுவையை ரசித்துச் சிரிப்பார்.

ஆனால், இவரும், துணைவியாரும் விபத்தில் சிக்கி, தான் தப்பி, துணைவியார்
போய் விட, " அவளோடு நானும் போயிருக்க வேண்டும்" என்றவர் துக்கம் தாளாமல்,
ஓசைப்படாமல், கண்ணீர் விட்டு அழுதார். ஆறுதல் சொன்னோம்.

இன்று அவர் போய் விட்டார். நண்பர்களாகிய நாங்கள் அவரது பிரிவுத் துயர்
தாங்காது கண்ணி வடிக்கிறோம்
எங்கள் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அவர் இல்லை..

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட "நவமணி" யின் ஆசிரியர் திலகம்
அல்ஹாஜ் அஸாருடைய இழப்பு
இலங்கைக்கு மட்டுமல்ல, எழுத்துலகுக்கும், ஊடகத் துறைக்கும் ஈடு செய்ய
முடியாத இழப்பு. அவரது பயிற்சிப்
பட்டறையில் அனுபவ பாடம் கற்றுக் கொண்ட எத்தனையோ மாணவ மணிகள் தாங்கள் சாதனைகள் மூலம்
பெயரெடுத்து அவரது பெயரை பிரகாசிக்கச் செய்வார்களாக. அதுவே அவருக்குச்
செலுத்தும் இதயமார்ந்த
அஞ்சலியாக இருக்கும். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிசு
சுவர்க்கமாக இருக்கட்டும்.

ஆழ்ந்த இரங்கலுடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com
__._,_.___