Thursday, February 19, 2009

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை!

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை!

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய நிலை !

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இராணுவப் போரைச் சிங்கள அரசு முடுக்கி விட்டிருக்கிறது விடுதலைப்புலிகளை முற்றிலும் ஒழித்துவிட வேண்டுமென்ற வெறியில் முல்லைத் தீவை முற்றுகையிட்டிருக்கிறது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் இனப்பிரச்சனை சிங்கள-தமிழ் தமிழ்-முஸ்லிம் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சனையாக முப்பரிமாணம் கொண்டதென்பதை ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய சூழலில் அவர்களின் நிலைமையை அறிவதற்காக தமிழகம் வருகை தந்திருந்த இலங்கைக் கவிஞர்கள் அல் அஸுமத் தாஸிம் அஹமது, அஷ்ரஃப் சிஹாப்தீன், ஆகியோரை அணுகினோம் அவர்களிடம் தொடுக்கப்பட்ட வினாக்களும் அவர்கள் தந்த பதில்களும் இங்கே இருப்பும் பொறுப்புமாக வெளியிடப்படுகிறது.

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன?

கவிஞர் அல் அஸுமத் : வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அதி உயர்நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தாய் மண் வாழ்க்கை அற்றுப் போயிருக்கிறது இன்னுமே அவர்களுக்குரிய மாற்றீடு செம்மையாகச் செய்யப்படவில்லை.

கிழக்கு வாழ் முஸ்லிம்கள் இரு தசாப்தங்களுக்குப் பிறகு ஓரளவு ஆறுதலுடன் இன்று காணப்படுகிறார்கள்.இந்த ஆறுதல் நிலை வாழ்க்கை உறுதியானதை எதிர்காலம்தான் உறுதி செய்ய வேண்டியும் இருக்கிறது.

மூன்றாம் நிலைப்பட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களுடன் இந்திய வம்சாவழித் தமிழர்களுடனும் என்றும் வழக்கம் போல் வாழ்கிறார்கள் வடக்கு, கிழக்கு அல்லாத ஏனைய பகுதிகளில் வாழ்பவர்கள் இவர்கள். வடக்கு, கிழக்கிலும் முன்னரெல்லாம் முஸ்லிம்கள் இவர்களைப் போன்றுதான் வாழ்ந்தார்கள்.

வடக்கு ,கிழக்குப் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் பிற இன-மத மொழி கலாச்சாரத்துப் பெரும்பான்மை மக்களுடன் உலகில் பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்குள்ள அதே வாழ்நிலைதான் எங்களுக்கும் உள்ளது.

அவ்வப்போது சிறு-பெரும் பிரச்சனைகள் எழத்தான் செய்கின்றன சில கலந்துரையாடல்கள் அல்லது சாத்வீகமான பலத்த எதிர்ப்புகள் அவற்றை மாற்றி விடுகின்றன அல்லது அமுக்கி விடுகின்றன.

இலங்கை முஸ்லிம்கள் என்றும் அமைதி விரும்பிகளே ஆயினும் இலங்கையைப் பொறுத்த மட்டில் எங்களுக்குள் நாங்கள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்வதுதான் பெரும்பாடாக இருக்கிறது.

இலங்கை இனவாதயுத்தம் நடந்து கொண்டிருக்கும் இந்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுதான் என்ன?

கவிஞர் தாஸிம் அஹமது : இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் முஸ்லிம்களை மட்டும் பாதிப்புக் குள்ளாக்கவில்லை பொதுவாகப் பெரும்பானமை இனமான சிங்களவர்களும் வடக்கு கிழக்குக்கு அப்பால் வாழ்கின்ற தமிழர்களும், நாட்டில் எங்கும் பரவலாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களும் அரசியல் சமூக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. இதில் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபாடுகள் உண்டு. இதனை இந்த இட்த்தில் விரிவாக கூறமுடியாது.
முப்பது வருடங்களாக நடைபெற்று வரும் இந்த கோர யுத் த த்தினால் அகதி வாழ்க்கையின் துயரங்கள், அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் சொல்லி விளங்க முடியாதவை. குறிப்பாகத் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவரின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், இரு தலை முறையினரின் சமூக – பொருளாதார நிலை மிகமிகப் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. வர்த்தக வாணிபம், தொழில் வாய்ப்புகள் அரசியல் பங்களிப்பு என்பன உள்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் இருந்து இரு சமூகங்களுக்கிடையேயும் காணப்படுகின்றன. இன்றைய இந்த நிலைக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் தேவை. அரசியல் தீர்வு பற்றிப் பேசிப் பேசியே இருபது ஆண்டுகள் கழிந்து விட்டன.

தமிழ் விடுதலைப் போராட்டம் தொய்வுறும் நிலையில் முஸ்லிம் சமூகம் பேரினவாத த் தால்தான் பாதிக்கப்படுவதற்கான நிலை தோன்றுமா ?

கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் :

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அங்கு இரண்டாவது சிறுபான்மையினர் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமூகம் ஒரு பேரினவாத சக்தியேயாகும். விடுதலைப் போராட் ட்த்துக்கு முன்பும் சரி, பின்னும் சரி நம்பிக்கை தரக்கூடிய வகையில் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களோ விடுதலை இயக்கங்களோ நட்ந்து கொண்ட்து கிடயாது. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதங்களில் நம்பிக்கை வைத்து விடாமல் தடுக்கவும் முஸ்லிம்களை ஒரு அரசியல் சக்தியாக மாற்றவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஓர் அரசியல் இயக்கத்தை நிறுவ வேண்டியிருந்தது.

எந்த ஒரு தேசத்திலும் சிறுபான்மையாக வாழ்வோர் சற்று அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் உண்டு. பேரினவாத் தின் கரங்களில் அவ்வப்போது சிக்காத சிறுபான்மை உலகத்தில் கிடையாது.

நாங்கள் இப்போது 1983 க்கு அதாவது தமிழ் விடுதலைப் போராட் ட த்துக்கு முந்திய காலப் பிரிவைக் கனவு காண்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, விடுதலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களவர்களும் அவ்வாறான ஒரு மனநிலையோடுதான் உள்ளார்.
என்றோ ஒரு நாள் சமாதானம் வந்துவிடக்கூடும். அல்லது இப்பிரச்சனை ஏதோ ஒரு வழியில் தீர்வுக்கு வரக்கூடும். ஆனாலும் சிறுபான்மையினரை அலட்சியத்துடனும் சந்தேகத்துடனும் பேரினவாதம் நோக்கும் நிலை உருவாகும். இவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் தார்மீகப் பொறுப்பு ஆயுதமேந்திப் போராடிய விடுதலை இயக்கங்களையே சேரும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எந்த பேரினவாதமும் எந்த சூழ்ச்சிக்கும் திட்டமிடலாம். செய்யலாம். ஆனால் சூழ்ச்சிக்கார ர் களுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் மட்டுமே !

எதிர்காலம் என்பது அல்லாஹ்விடம் உள்ளது. எல்லாவற்றுக்கும் அவனே போதுமானவன்.
மேற்காணும் பதில்கள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களேயாகும்.

எந்த நாடாக இருந்தாலும் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் சூறையாடப்படுவதை எவராலும் பொறுக்கவியலாது. சொந்த மண்ணில் சொத்தையிழந்து, சுகத்தை இழந்து, அகதிகளாக அல்லாடும் அனைத்து மக்களுடைய நல்வாழ்வுக்காகவும் அந்த நாட்டு அரசு பொறுப்பேற்க வேண்டும். போரின் மூலமாக எதையும் நிரந்தரமாகச் சாதித்துவிட முடியாது.

ஆயுதம் ஏந்திய வண்ணமாகவே இருந்து கொண்டு அமைதியை நிலைநாட்ட முடியாது.
அனைத்து தரப்பு மக்களும் சமாதானத்தோடு, சம உரிமையோடும் வாழ அந்நாட்டு அரசு முயலவேண்டும். பிற நாடுகளும் அதற்கு உடனடியாக உதவ வேண்டும். அமைதிப் பேச்சு தொடர்ந்திடவும், இராணுவ நடவடிக்கைகள் ஒழிந்திடவும் வேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே த த் தமக்குள் ஒற்றுமையும், பிறவகுப்பாரிடம் நல்லிணக்கமும் உண்டாகிட வேண்டும். ஒரு காலத்தில் இந்தியத் தீபகற்பத்தின் ஒரு பகுதியாக இலங்கிய இன்றைய இலங்கையில் புத்தரின் கருத்துக்கள் தழைத்த மண்ணில் ஞானிகள் உலா வந்த வளமான தேசத்தில் மத நல்லிணக்கமும், மனித நேய ஒருமைப்பாடும் மலர்ந்து அமைதி தவழ வேண்டும் என்பதே அனைவரது இறைஞ்சுதலாகும்.

( இனிய திசைகள் மாத இதழ் பிப்ரவரி 2009 லிருந்து )

தொடர்புக்கு : 9444 165153

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை !

தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது

நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !

சிறுபான்மையினர் கடமைகள்

நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .

குர்ஆன் போதனை

நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்

அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !

இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது

முஸ்லிம்களின் நிலை தாழ்ந்ததேன்?

எப்பொழுது முஸ்லிம்கள் இறைவனை மறந்தவர்களாய் இஸ்லாமிய போதனைகளை புறக்கணித்தவர்களாய் மாறுபட்டு நடந்தார்களோ அப்போதே முஸ்லிம்களின் நிலையும் தாழ்ந்தது தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவர்கள் மீட்சி பெற முடியவில்லை!

முஸ்லிம்களின் மகத்தான வளர்ச்சி

உலகத்தில் சாம்ராஜ்யங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன ரோமானிய சாம்ராஜ்யமும்,கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன

ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் ( ஸல் ) அவர்களின் மறைவிற்குப் பிறகு பத்தே - ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது இதற்கெல்லாம் மூலகாரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமுமேயாகும் அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும் !

சிறப்படைவது எவ்வாறு?

நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிது படுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்ததற்குக் காரணங் களாகும் ! நமது வேற்றுமையையும் அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அல்லாஹ் வாக்குறுதியை காப்பாற்றுபவன் !

வானம் இடிந்து விழலாம்; பூமி வெடித்து விடலாம்; ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்துப் போவதில்லை அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் !

அவன் நமக்கு அழகான வாக்குறுதிகளை அளித்திருக்கிறான் அதன் பயனை அடைவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒற்றுமையாக இருப்பதுதான் ஒன்றாக செயல்படுவதுதான் !
அரசியல் ரீதியாக ஒன்றுபடுவோம் !

நாம் எல்லாத் துறைகளிலும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் நமக்கு எதற்கு அரசியல் என்று கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்

அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்களுக்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம் ஆனால் நமக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன நமது ஒவ்வொரு செய்கையிலும் இவ்விரண்டும் இணைந்தேயிருக்கின்றன !

இங்கு வாழும் மெஜாரிட்டி சமூகத்தாரில் சிலர் நாம் அரசியலில் மதத்தைப் புகுத்துவதாக நம் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் அரசியல் போர்வையின் கீழ் அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் மதத்தில் தலையிடுவதாகவே இருக்கிறது அவர்கள் செய்வது தவறு எனக் கூறுவதற்குக் கூட நமக்கு உரிமையில்லையா?அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் திருத்துவதுதான் எப்படி? அரசியல் ரீதியாக நாம் ஒன்றுபடாவிடில் நமது உரிமைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்துவதற்காக நாம் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டும் !

முஸ்லிம்கள் வாழ முஸ்லிம் லீக் !

இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ திருப்திகரமாக இருக்கிறது முஸ்லிம்கள் முறையாக ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்களது வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது மாற்றம் காண வேண்டுமானால் இறைவனின் போதனைப்படி நாம் ஒன்றுசேர வேண்டும்.

நாம் ஸ்தாபன ரீதியாக இயங்குகிறோம் என்பதற்கு அத்தாட்சியாக நாம் ஒரே அரசியல் ஸ்தாபனத்தில் ஈடுபட்டு செயல்படவேண்டும் அந்த நன்னாள் இப்போது வந்துவிட்டது நாம் ஒன்றுபட்டு இருக்கிறோமென்று அறிந்த பிறகே வேறுபல சமுதாயத்தவர்களும் நமது உதவியைத் தேடி வருகிறார்கள் நமது ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தினால் மேலும் சிறப்படைவோம் !

அந்த ஒற்றுமையைக் காப்பதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்குப்

பாத்திரமானவர்களாகிறோம் !

நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வல்லமையுடையவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வேயாகும். அவனுடைய பொக்கிஷம் என்றுமே குறையாதது; நாம் அவனையே வணங்குவோம்; அவனையே பணிவோம்; அவனது கட்டளைகளின்படியே நடப்போம்; ஒற்றுமையாக இருந்து சிறப்படைவோமாக .

( கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - நாடாளுமன்ற – சட்டமன்ற – பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பிலிருந்து )

தொகுப்பாளர் :

திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ( குவைத் )
காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
குவைத்
00965 9786 2316

வெளியீடு :

மணிமேகலைப் பிரசுரம்
7 தணிகாசலம் சாலை
தியாயராய நகர்
சென்னை 600 017
தொலைபேசி : 2434 2926

விலை : ரூ. 70 ( எழுபது )

சிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் - வெப்ப‌மூச்சுக‌ள் நூல்க‌ள் வெளியீட்டு விழா

சிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் - வெப்ப‌மூச்சுக‌ள் நூல்க‌ள் வெளியீட்டு விழா

சிங்க‌ப்பூரில் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் அவ‌ர்க‌ளின் ஊற்றுக்க‌ண் - வெப்ப‌மூச்சுக‌ள் ஆகிய‌ நூல்க‌ள் வெளியீட்டு விழா எதிர்வ‌ரும் மார்ச் 1, 2009 ஞாயிறு அன்று பிற்ப‌க‌ல் ச‌ரியாக‌ மூன்று ம‌ணிக்கு சிங்க‌ப்பூர் ம‌ஸ்ஜித் பென்கூல‌ன் ப‌ன்னோக்கு ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

நூல் வெளியீட்டு விழாவிற்கு தொழில‌திப‌ர் சீ.மு.நூ.மு. முஹ‌ம்ம‌து யூசுப் த‌லைமை தாங்குகிறார்.

முத்துப்பேட்டை எம்.ஏ. முஸ்த‌பா, ஆசியான் க‌விஞ‌ர் க‌.து.மு. இக்பால், பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர் ஜெ.எம்.சாலி எம்.ஏ., அமீர் சாஹிப், ந‌ஜ்முத்தீன், மு.அ. ம‌சூது ஆகியோர் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.

எம்.ஒய்.எம்.ஆர். முஹ‌ம்ம‌து ஹாரிஸ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை (கிராஅத்) ஓதுகிறார்.
சிங்க‌ப்பூர் நாண‌ய‌மாற்று வ‌ணிக‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ரும், புதிய‌ நிலா இத‌ழ் சிற‌ப்பாசிரிய‌ருமான மு. ஜஹாங்கீர் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார்.

ஊட‌க‌ வ‌ல்லுந‌ரும், ஆய்வாள‌ருமான‌ எம். முஹ‌ம்ம‌து அலி ஊற்றுக்க‌ண்ணின் சித‌ற‌ல்க‌ள் குறித்தும், சிங்க‌ப்பூர் தேசிய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ பேராசிரிய‌ர் டாக்ட‌ர் சுப‌. திண்ண‌ப்ப‌னார் வெப்ப‌ மூச்சுக்க‌ள் ஓர் ஆய்வு எனும் த‌லைப்பிலும் நூல் அறிமுக‌வுரை நிக‌ழ்த்துகின்ற‌ன‌ர்.

ம‌லேசியா நாண‌ய‌மாற்று வ‌ணிக‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ர் எம்.ஒய். முஹ‌ம்ம‌து சுஐபு, ப‌ன்னூலாசிரிய‌ர் புதுமைத்தேனீ மா.அன்ப‌ழ‌க‌ன் ஆகியோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்க‌ இருக்கின்ற‌ன‌ர்.

த‌மிழ்மொழி ப‌ண்பாட்டுக் க‌ழ‌க‌ த‌லைவ‌ர் மு. ஹ‌ரிகிருஷ்ண‌ன் நூலை வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை ம‌ஸ்ஜித் பென்கூல‌ன் நிர்வாக‌க்குழு த‌லைவ‌ர் எஸ்.எம். ஜ‌லீல் பெறுகிறார்.
நூலாசிரிய‌ர் டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் ஏற்புரை நிக‌ழ்த்துகிறார். ம‌வ்ல‌வி அப்துல் கையூம் ஆலிம் பாக‌வி துஆ ஒதுகிறார். நிக‌ழ்ச்சியினை ச‌ங்க‌ம் எம். இலியாஸ் நெறிப்ப‌டுத்துகிறார்.

நூலாசிரியர் தொடர்புக்கு : himanasyed@yahoo.com
+6592717237

Dhua salam brothers,
Please pray for the successful launching of my latest books "ootrukkan" & "veppa moochukal".

OOTRUKKAN is a compilation of 40 inspiratory articles on community filedwork experiences, spritual messages and medical knowledge. 135 pages

VEPPAMOCHUKAL is a novel which moves around India - Saudi Arabia- Malaysia and UAE -the theme being the hard life of our brothers (who are in the construction and restaurant sectors after having dropped out from school at a tender age ) in these countries. 316 pages

Wassalam
Dr.Himanasyed
+6592717237

Cell phone and Quran

Cell phone and Quran

Ever wonder what would happen
if we treated our Quran
like we treat our cell phone?

What if
we carried it around in our purses or pockets?

What if
we flipped through it several time a day?

What if
we turned back to go get it if we forgot it?

What if
we used it to receive messages from the text?

What if
we treated it like we couldn't live without it?

What if
we gave it to kids as gifts?

What if
we used it when we traveled?

What if
we used it in case of emergency?

This is something to make you go....

hmm... where is my Quran?

One more thing....

Unlike our cell phone,
we don't have to worry
about our Quran being
disconnected.

முல்லாவின் கதைகள் - தலையில் விழுந்த பழம்...

முல்லாவின் கதைகள் - தலையில் விழுந்த பழம்...

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன். உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான். நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.

மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.

அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.

அவன் உரக்கச் சிரித்தான்.

முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.

கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.

கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.

இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.

முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.

சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.

முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.

ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்

கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும். உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.

வழிப்போக்கன் யோசித்தான்.

நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.

இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.

ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.

கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.

துபாயில் அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் ச‌ங்க‌ பொதுக்கூட்ட‌ம் ( அமான் )

துபாயில் அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் ச‌ங்க‌ பொதுக்கூட்ட‌ம் ( அமான் )

துபாயில் அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் ச‌ங்க‌ பொதுக்கூட்ட‌ம் ( அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ‍ அமான் ) இன்ஷா அல்லாஹ் 20.02.2009 வெள்ளிக்கிழ‌மை காலை 9 ம‌ணி முத‌ல் மாலை 6 ம‌ணி வ‌ரை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் ( டி பிளாக் ) ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இக்கூட்ட‌த்தில் ச‌ட்ட‌திட்ட‌ ம‌ல‌ர் வெளியிட‌ப்பட‌ இருக்கிற‌து. மேலும் ஆண்ட‌றிக்கை, நிர்வாகிக‌ள் தேர்வு ஆகிய‌வையும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

மேல‌திக‌ விபர‌ங்க‌ளுக்கு சிராஜுத்தீன் ஹ‌ஜ்ர‌த் 050 3088 494 / இமாமுதீன் 050 2787164 / ஹாஜா முபார‌க் 050 671 58 19 / அல் அமீன் 050 828 3631 / முஹ‌ம்ம‌து பைச‌ல் 050 685 23 58 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

இக்கூட்ட‌த்தில் அடிய‌க்க‌ம‌ங்க‌ல‌ம் ச‌கோத‌ர‌ர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

கவனமாகயிரு

கவனமாகயிரு

கிளியனூர் இஸ்மத்

இளைஞனே…
வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து
வெற்றி பெறவேண்டிய நீ
சிலரது வார்தைகளில்
உன்னை இழந்து விடாதே
கவனமாகயிரு…

மருத்துவனாக
கணினியாளனாக
கணிதமேதையாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோயொன்றாய்
நீ சமைந்திடவே
உன்னைசமைத்தவர்களின்
கனவு
அதை கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு…

பள்ளிப் பாடநூல்களை
சுமக்கவேண்டிய உன்கரத்தில்
கலவரச்செய்திகளையும்
மதவாத பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகள்
திணிக்கப்படுதை அனுமதிக்காதே
கவனமாகயிரு…

கல்லூரி வாயில்களில் சில
புல்லுருவிகளின் கோலங்கள்
உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது
மதவாத கண்ணாடி
கண்ணிலியாய் நீ
உன் வகுப்புத் தோழர்களுடன்
வகுப்புவாதம் செய்வதற்கு
கவனமாகயிரு…

சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…
எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள்
படமெடுக்கப்பட்டு
உன் சிந்தனை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராகி
வினியோகிக்கப்படுகிறது
கவனமாகயிரு…

தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்ற தலைப்புகளில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு
முயற்ச்சிப்பார்கள்
மருள்கொள்ளாதே
கவனமாகயிரு…

வேதத்தை காண்பித்து
உனக்கு ஞானம்போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர் வழிகாட்டுகின்றோம் என்று
மெய்ஞ்ஞானியாகவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கி விடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ விதையுண்டுருக்கிறாய்
அது துளிர்விடுவதை துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய
உன்னை
நான்கு சுவற்றுக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு…

நீ என்பது
இன்னொருவரின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாயிரு….!

www.kiliyanur-ismath.blogspot.com

Empost to handle Indian visa services

Dubai: Indians living in the UAE would not have to go to the Indian missions in Abu Dhabi and Dubai for passport and visa services as these services will now be handled by 12 Empost dedicated centers across the UAE.

The first such office was opened in Deira yesterday at the Al Owais building, office 101 located close to the Nissan Service center. It will start receiving applications from the public from Friday.

The rest of the centers proposed under the agreement between Empost and the Indian diplomatic missions in the UAE, will open their doors for the public from February 22.
Applicants will receive back their documents via courier at their office or residence. Whenever required the centers are also in the position to schedule appointments with the Indian missions.

The centers will remain open from 7 AM to 10 PM.

A website (www.ipavsc.com) is set up to provide information on the various services offered.

A dedicated Call Centre ( 600 522229) to answer telephone queries and inform applicants of the status of their applications. All these Centres will be open from 7 AM to 10 PM on all days of the week.

A nominal service fee will be levied by Empost at a cost of Dh 12 for each passport service and Dh 50 for each visa service, over an above the normal passport visa application fees (detailed on Embassy and Consulate official websites)
List of dedicated centers

101,Al Owais building, Behind Arabian Automobiles.
Deira, Dubai

3, Karama Star Building,
Karama, Dubai

Central Post Office
Karama, Dubai

2nd Floor, EMPOST Building, Madina Zayed,
Abu Dhabi

EMPOST Al Wahda Street
Sharjah

EMPOST
Umm Al Quwain

EMPOST
Ras Al Khaimah

4th Floor, Opp Sabka Bus Station
Naif Dubai

Indian Association Ajman, Opp Lulu
Hypermarket, Al Ittihad Street,
Al Sawan, Ajman

Indian Association RAK Al Mamoyra,
Muntazar Road, Near Old Mamoura Police Station
Ras Al Khaimah

Indian Social Club Fujairah (ISCF)
Al Fazil Road, Opp Hilton Hotel
Fazeel, Fujairah

Indian Social Club Khorfakan (ISCK)
Behind Indian School Kabba
Khorfakan

Indian Social & Cultural Club, Kalba (KISCC)
Opposit Kalba Police Station,
Near Bin Moosa Pharmacy
Kalba

Indian Social Center, Al Saroj District
Al-Ain

Indian Association
Sharjah, United Arab Emirates

துபாயில் பிப். 27ல் தவ்ஹீத் ஜமாஅத் ரத்ததான முகாம்

துபாயில் பிப். 27ல் தவ்ஹீத் ஜமாஅத் ரத்ததான முகாம்
வியாழக்கிழமை, பிப்ரவரி 19, 2009, 11:16 [IST]

துபாய்: துபாயில் வரும் 27ம் தேதி ரத்ததான முகாம் நடக்கிறது.

துபாய் நகரில் உள்ள அல் வசல் மருத்துவமனையில் தமிழ்நாடு ஜமாஅத்துத் தவ்ஹீத் சார்பில் ரத்ததான முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு துவங்குகிறது. ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தானங்களின் சிறந்த தானமான ரத்ததானம் வழங்கவதில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 050-5756518, 04-2715830.