Thursday, June 19, 2008

அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


அமீரக தொழிலதிபருக்கு மாநாட்டில் சமயநல்லிணக்கத்துக்கான விருது


துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, கிறிஸ்தவ பிரமுகர் மறைதிரு வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கு சமய நல்லிணக்கத்துக்கான சிராஜுல் மில்லத் விருது இந்திய யூனியன் முஸ்லிம் 60 ஆம் ஆண்டு மணி விழா மாநாட்டில் சனிக்கிழமை வழங்கப்பட இருக்கிறது.

துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமத்தில் சுமார் 70,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பல்வேறு இன,மொழி, நாடு உள்ளிட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமய பேதமில்லாது சர்வ சமய மக்களும் பணிபுரிந்து வரும் கேந்திரம் ஈடிஏ அஸ்கான் நிறுவனம், சமயநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இடம். இதில் 70,000 பேர் என்றில்லாது 70,000 குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றன.

இதேபோல் சம்ய நல்லிணக்கப் பணிகளை மேற்கொண்டு வரும் நல்லகண்ணு, வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்டோருக்கும் இவ்விருது வ்ழங்கப்பட்டுகிறது.

மேலும் இயக்க வளர்ச்சிக்காக 50 ஆண்டுகள் உழைத்தோருக்கு காயிதெமில்லத் விருது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றியோருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.மேலும் சாதனைப்பெண்மணிகளுக்கும் விருது வழங்கப்படுகிறது.

அமீரக அமைப்புகள் வாழ்த்து : சமய நல்லிணக்க விருது பெறும் செய்யது எம் ஸலாஹுதீனுக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜே. முஹம்மது இக்பால், துபாய் தமிழ்ச் சங்க தலைவர் சபேசன், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், தமிழ்த் தென்றல் இதழ் ஆசிரியர் அப்துல் ரவூஃப், வானலை வளர்தமிழ் நிர்வாகி காவிரி மைந்தன், சுடர் வம்சம் நிறுவனர் ரகுராஜ், உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் சலாஹுதீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

www.muslimleaguetn.com


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் ஜூன் 21 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் காயிதெமில்லத் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 50 ஆண்டுகள் உழைத்த முஸ்லிம் லீக் மூத்த ஊழியர்கள்-

காயிதெ மில்லத் விருது பெறுவோர்:

1. மவ்லவி அப்துல்ஹை நக்காவி - பள்ளபட்டி
2. மவ்லவி எம்.என். அப்துல் காதர் பாகவி - பெரம்பலூர்
3. எம். செய்யது இப்ராஹிம் - வேதாளை
4. ஹாஜி ஏ.கே. அப்துல்ஹலீம் - சென்னை
5. இசைமணி எம்.எம். ய+சுப் - சென்னை
6. ஹாஜி ஜம்ஜம் எஸ்.எம். பதுருத்தீன் - சென்னை
7. எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் - திருச்சி
8. எச்.ஏ. அப்பாஸ்(சுதந்திர போராட்ட வீரர்) - சென்னை
9. ஹாஜி பி.கே.இ. அப்துல்லா - வலங்கைமான்
10. ஹாஜி எம்.ஏ. குலாம்மொய்தீன் - அய்யம்பேட்டை
11. ஹாஜி என்.பி. முஹம்மது உசேன் - ராஜகிரி
12. மொய்தீன் பிச்சை - திருச்சி
13. எஸ்.டி.ஏ. முஹம்மது மீரான் - சென்னை
14. மவ்லவி ஆர்.கே.அப்துல்காதர் பாகவி - பள்ளபட்டி
15. ஹாஜி எம்.அப்துல் கனி - தூத்துக்குடி
16. எஸ்.எஸ்.இ. காழி அலாவுதீன் ஆலிம் - காயல்பட்டினம்
17. ஹாஜி வாவு அப+பக்கர் சித்தீக் - காயல்பட்டினம்
18. எஸ்.டி. நிஸார் அஹமது - வாணியம்பாடி
19. ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் - பள்ளபட்டி
20. மவ்லவி அப்துஸ்ஸமது நத்வி - கோட்டகுப்பம்
21. பி.கே. அப்துல் ஸலாம் - கோயமுத்தூர்
22. வி.எம். முஹம்மது காசீம் - கோயமுத்தூர்
23. அப்துல் ரஹ்மான் (ஏ) பிச்சை ஹாஜியார் - பள்ளபட்டி
24. ஹாஜி எம்.ஓ. செய்யதுஇஸ்மாயில் - சென்னை
25. ஹாஜி எஸ்.எம். கனிசிஷ்தி - சென்னை
26. பேராசிரியர் சாகுல் ஹமீது - குளச்சல்
27. டி.ஏ. அப்துல் மஜீது - குன்னூர்
28. அறமுரசு அப்துல் காதர் - நாகூர்
29. சாந்து முஹம்மது - இனாம்குளத்தூர்
30. முஹம்மது யாக்கூப் - கோயமுத்தூர்
31. புதுப்பேட்டை கே.எஸ்.ஆரிஃப் - சென்னை
32. ஹாஜி எம்.எம். மொகுதூம்கண் சாஹிப் - காயல்பட்டினம்
33. அரிக்கடை பி.எம். முஹம்மது சாலிஹ் - குளச்சல்
34. ஹாஜி எம். பஸ்லுத்தீன் - ஆயங்குடி
35. ஹாஜி மெக்கோ பக்கீர் முகைதீன் - சென்னை
36. ஆயிரம்விளக்கு ஏ.பி.அமானுல்லா - சென்னை
37. இளம் லீகன் ஏ.ஆர். செய்யது இப்ராஹிம் - புதுமடம்
38. கே.எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான் - அதிராம்பட்டினம்
39. எம். சேக்னா மரைக்காயர் - அதிராம்பட்டினம்
40. டாக்டர் ஏ.எம். ஜியாவுதீன் - அய்யம்பேட்டை
41. ஹாஜி என்.பி. அப்துல் வஹாப் - வழுத்தூர்
42. கே.ஏ. அப்துல் கலாம் - கோயமுத்தூர்
43. வி.பி.முஹம்மதலி - கோயமுத்தூர்
44. ஏ.எம். தெராவு ஷா சாஹிப் - கோயமுத்தூர்
45. சர்கார் முஹம்மது இஸ்மாயீல் - சென்னை
46. ஹாஜி எம்.எஸ். அப்துல் ரஹ்மான்நூரி - சங்கரன்கோவில்
47. டாக்டர் கே.எஸ்.டி. ஜமாலுத்தீன் - சேரன்மகாதேவி
48. கே.அப்துல் வஹாப் - சோழமாதேவி
49. என். அப்துல் காதர் - விக்கிரமசிங்கபுரம்
50. ஹாஜி செய்யது பட்டாணி - பாம்புக்கோவில்சந்தை
51. கவிஞர் வீரை எம். அப்துல் ரஹ்மான் - வீரவநல்லூர்
52. வெ.கா. உ.அ. முஹம்மது ஹனீபா - கடையநல்லூர்
53. எஸ். ஹபீபுல்லாஹ் - தென்காசி
54. வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம்(முன்னாள் எம்.எல்.ஏ) - மேலப்பாளையம்
55. ஏ.கே.எச்.அப்துர் ரசாக் - வரகனேரி
56. கே.இ.இப்ராஹிம் - திருச்சி
57. பி.ஆர்.எம். அப்துல் ஸலாம் - இனாம்குளத்தூர்
58. ஷாகுல் ஹமீது - திருச்சி
59. ஹாஜி ஏ.பி. மலுக்காமலி - பத்தமடை
60. ஹாஜி டி.ஜே. பக்கீர் முஹம்மது - லால்பேட்டை
61. அ.க.நெய்னா முஹம்மது - கீழக்கரை
62. ஹ{சைன் பீரான் - சேலம்
63. கே.எஸ். அப்துல்லா பாஷா - காஞ்சிபுரம்
64. ஏ.கே. செய்யது இப்ராஹிம் - எண்ணூர்
65. அல்ஹாஜ் அப்துல் ஹாதி - நெல்லிக்குப்பம்
66. எச்.எம். ஆலியா மரைக்காயர் - காரைக்கால்
67. ஒய். அப்துல் ரஷாக் - காரைக்கால்
68. ஹாஜி எஸ்.டி. வெள்ளைத்தம்பி - காயல்பட்டினம்
69. ஹாஜி ஏ.எம்.ஹனீபா - மங்கலம்பேட்டை
70. ஹாஜி எம்.எஸ். அஹ்மது பாஷா - குடியாத்தம்
71. ஹாஜி வி.எஸ். அமானுல்லாஹ் - கடையநல்லூர்
72. கே.இ. முஹம்மது இப்ராஹிம் - புளியங்குடி
73. மணிவாசகம் ய+சுப் - மதுரை
74. டாக்டர் கே.எம். ஜக்கரிய்யா - மேட்டுப்பாளையம்
75. ரங்கூன் சுலைமான் - சென்னை
76. எழுத்தாளர் ஷேக்கோ - இளையாங்குடி
77. த.உ. அப்துல் காதர் - கடையநல்லூர்
78. ஹாஜி. பி.எம். ஷேக் உதுமான் - கடையநல்லூர்
79. எம்.ஏ. ஷாஹ{ல் ஹமீது(மூப்பன்) - கடையநல்லூர்
80. ஹாஜி பி.எம். அப்துல் காதர் - கடையநல்லூர்
81. எஸ்.எம். காஸிம் - மேட்டுப்பாளையம்
82. எம்.கே.இப்றாஹீம் - அதிராம்பட்டினம்
83. ஹாஜி என்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதர் - முத்துப்பேட்டை
84. எம்.எம்.ஷாஹ{ல் ஹமீது - வேதாளை
85. கே.சையது இப்றாம்ஷா - வேதாளை

சிராஜுல் மில்லத் நல்லிணக்க விருது பெறுவோர்:

1. செய்யது எம்.ஸலாஹ{த்தீன்
2. திரு. நல்லகண்ணு
3. மறைதிரு. வின்சென்ட் சின்னதுரை

கல்வி, மருத்துவம், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சமூகநலப் பணியாற்றுபவர்களுக்கான சமுதாய ஒளிவிளக்கு விருது பெறுவோர்:

1. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் - கல்வித்தந்தை
2. மேல்விஷாரம் அல்ஹாஜ் எம்.முஹம்மது ஹாஸிம் - மார்க்கப் பணியும் சமூக சேவையும்
3. அல்ஹாஜ் டாக்டர் எஸ்.எம். ஹாமித் அப்துல் காதர் - கல்வி நிறுவனம்
4. அல்ஹாஜ் டாக்டர் சேகு நூருத்தீன் - பத்திரிகை, கல்விக்கூடம்
5. அல்ஹாஜ் பரகத்அலி மாயின் அப+பக்கர் - பள்ளிவாசல்கள்
6. நோபுள் சாகுல் ஹமீது - ஜகாத் விநியோகத்தில் புதுமை
7. ஒயிட்ஹவுஸ் அல்ஹாஜ் அப்துல் பாரி - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புப் பணிகள்
8. ஹாஜி டி.எஸ். பத்ஹ{ர் ரப்பானி - கல்விக்கூடம்
9. ஹாஜி எஸ். அஹமது மீரான் - புரபஸனல் கூரியர் சர்வீஸ்
10. எஸ்.டி. கூரியர் கே. நவாஸ் கனி - கூரியர் சர்வீஸ்
11. ஹாஜி டாக்டர் செய்யது கலீபத்துல்லா - மருத்துவசேவை
12. ஆம்ப+ர் முஹம்மது சயீது - கல்வி வளர்ச்சி
13. அல்ஹாஜ்வாவு செய்யது அப்துர் ரஹ்மான் - மகளிர் கல்வி
14. அல்லாமா பிலாலிஷாஹ் ஜுஹ{ரி - கல்வி வளர்ச்சி
15. இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா - இசை மூலம் சமயப் பணி
16. அய்யம்பேட்டை மர்ஹபா ஏ.கே.பஷீர்அஹமது - கல்விப் பணி
17. கவிஞர் நாகூர் சலீம் - இலக்கியப் பணி
18. சென்னை ஆர். வரிசை முகம்மது - தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வேலைவாய்ப்பு, சமூகப் பணிகள்
19. திருப்ப+ர் குர்பானி அறக்கட்டளை - கல்வி மற்றும் மருத்துவப் பணி
20. கூத்தாநல்லூர் ஏ.வி.எம். ஜாபருத்தீன் - பத்திரிகை துறை, கல்வித்துறை
21. புதுக்கோட்டை அல்ஹாஜ் ஏ. ஷர்புதீன் - பள்ளிவாசல் கட்டுதல் மற்றும் கல்வி உதவி
23. புதுக்கோட்டை அல்ஹாஜ் எஸ்.எம். செய்யதுஇப்ராஹிம் - வேலை வாய்ப்பு மற்றும் பைத்துல்மால் பணி
24. நாகூர் அல்ஹாஜ் ஆலியா சேக்தாவ+து - கல்விப் பணி
25. கூத்தாநல்லூர் சேக்தாவ+து - நூல் வெளியீட்டில் உலக சாதனை
26. கே.எம்.டி. மருத்துவமனை காயல்பட்டினம் - மருத்துவசேவை
27. மேல்விஷாரம் ஹாஜி ஜியாவுதீன் - கல்விப்பணி
28. இரோடு டாக்டர் அமானுல்லா - மருத்துவம் கல்விப் பணி
29. கோவை கலீல் அஹமது - கல்விப் பணி
30.அழகன்குளம் முகம்மது ஆதம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சமூகப் பணி
31. மேலப்பாளையம் இன்ஜினீயர் செய்யது அஹமது - மகளிர் கல்வி மேம்பாடு
32. தென்காசி ஹாஜி எம்.எஸ். துராப்ஷா - தொழில் கல்வி
33. அதிராம்பட்டினம் ஏ.ஜெ. இக்பால் - மதரஸே நிஸ்வான்
34. உடன்குடி எஸ்.ஜே.எம். ஜமாலுதீன் - கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணி
35. திருச்சி டாக்டர் அஷ்ரப் - இந்திய அளவில் மருத்தவ சேவை முன்னோடி
36. அய்மான் கவிஞர் ஷம்சுதீன் (அய்மான் கல்வி அறக்கட்டளை) - மகளிர் கல்வி மேம்பாடு
37. மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் - ஷரீஅத் பஞ்சாயத்து நிர்மாணம் மற்றும் பள்ளிவாசல்
38. கோட்டாறு மாலிக் தினார் முஹல்லம் பைத்துல்மால் - முன்மாதிரி முஹல்லா ஜமாஅத் அமைப்பு
39. டாக்டர் அயாஸ் அக்பர் - அறுவை சிகிச்சை இல்லாத இருதய நோய் நிவாரணம்
40. டாக்டர் ஜமீர் பாஷா - லேப்ரோஸ் கோபிக் முறையில் மருத்துவ சிகிச்சை
41. திருச்சி ஹாஜி முஹம்மது ய+னுஸ் (எம்.ஐ.இ.டி.) - உயர்கல்விப் பணி
42. காயல்பட்டினம் எஸ். அக்பர்ஷா - வேலைவாய்ப்பு மற்றும் கல்விப் பணிகள்
43. சித்தார்கோட்டை எஸ். தஸ்தகீர் காக்கா - கல்வி நிறுவனங்கள்
44. அல்ஹாஜ் தைக்காலெப்பை - ஆன்மீக வழியில் சமூக அமைதிப்பணி
45. உத்தமபாளையம் ஹாஜி எம்.தர்வேஸ் முகைதீன் - கல்விப் பணி
46. கம்பம் ஹாஜி எம்.கே.முஹம்மது ஷரீப் - இஷாஅத் இஸ்லாம் பணி
47. பழனி முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் - கல்வி திருமண உதவிகள்
48. திருச்சி டாக்டர் ஷேக்முஹம்மது - கணக்கு ஆய்வியல் இந்திய அளவில
; 49. இனாம்குளத்தூர் ஹாஜி சாகுல் ஹமீது - யுக காலண்டர் தயாரித்து சாதனை
50. துவாக்குடி முஹம்மது இல்யாஸ் - தொழில் கல்வி நிறுவனம் மற்றும் பள்ளி நிர்மாணித்தல்
51. திருச்சி பேராசிரியர் டி.சி. அப்துல் மஜீத் - முன்மாதிரி அனாதை நிலையம் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம்
52. திருநெல்வேலி ஹாஜி எம். ஜமால் முஹம்மது - கல்விப்பணி மற்றும் அநாதை நிலையம்
53. மேலப்பாளையம் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துல் ரஹ்மான் - கல்வி பணி
54. கூத்தாநல்லூர் வடக்கு கோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை - சமய நல்லிணக்கப் பணிகள்
55. தஞ்சாவ+ர் ஹாஜி பி.எஸ். ஹமீது - மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை
56. ராஜகிரி ஹாஜி அப்துல் மாலிக் - கல்விப் பணி
57. மதுரை ஹாஜி ராஜா ஹஸன் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
58. வி.எஸ். முஹம்மது முபாரக் (எ) சலீம், குன்னூர் - சமூக சேவைகள்
59. முஸல்மான் உருது பத்திரிக்கை - புகழ்பெற்ற உருது பத்திரிக்கை

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜூன் 21, 2008 காலையில் ராஜாஜி ஹாலில் நடைபெறும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு மகளிர் கருத்தரங்கில் சாதனைப் பெண்மணி விருது பெறுவோர்:

1. மினி கிருஷ்ணன் - சமய நல்லிணக்கம்
2. முனைவர் பேராசிரியை சா. நஸீமாபானு - கல்விப் பணி
3. எம். அனீஸ் ஃபாத்திமா - முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்
4. முனைவர் தா. ஜெய்புன்னிஸா - இலக்கியப் பணி
5. ஏ.எஸ்.குர்சித் பேகம் - சமூக சேவகி
6. கே. மாசா நஜீம் - இளம் வயது உலக சாதனையாளர்

சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் முஸ்லிம் லீக் தலைவர் ஆலோசனை!

http://www.muslimleaguetn.com/news.asp


சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் தலைவர் ஆலோசனை!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை இன்றிரவு ( 19 ஜுன் 2008) 8.15 மணியளவில் காயிதெமில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர்ரஹ்மான், அப்துல் பாஸித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநாட்டு நிகழ்வுகளில், சென்னைவாழ் கேரள முஸ்லிம் லீகர்களின் பங்களிப்புகள் எப்படி அமைந்திட வேண்டும் என்பது குறித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவுரைகள் வழங்கினார். அவர் தனதுரையில், வெளியில் இருந்துகொண்டு இந்த இயக்கம் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனங்களைக் கூறலாம்... ஆனால், அவையெல்லாம் கதைக்குதவாது! சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என அதிகாரங்களில் நமது முறையான பங்களிப்பு இருந்தால் மட்டுமே நமது குரலுக்கு உரிய பதில் கிடைக்கும். அந்த அடிப்படையில் தற்சமயம் தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

உங்கள் கேரள மாநிலம்தான் எங்கள் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், ஓர் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருந்துகொண்டு, அவ்வப்போது சமுதாயத்தின் குரலை நீங்கள்தான் ஓங்கி ஒளித்துக் கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கள் வழிகாட்டிகள்... உங்களை ஒருங்கிணைத்தது இந்த முஸ்லிம் லீக்!

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள - கேரளத்தின் வருங்கால எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சமுதாயப் பிரமுகர்களை நான் உளமார வரவேற்கிறேன்... இந்த மாநாட்டிலும், பேரணியிலும் உங்கள் பங்களிப்பு நிறைவாக இருக்க வேண்டும் என நான் உங்கள் யாவரையும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்... என்றார்.


தொடர்ந்து, சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், சென்னைவாழ் கேரள முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) துணைத்தலைவர் அஃப்ஸீர் நூருத்தீன், செயலாளர் முஜீபுர்ரஹ்மான், துணைச் செயலாளர் முஹ்யித்தீன் மற்றும் மேடையில் முன்னிலை வகித்த அனைவரும் கருத்துரைகள் வழங்கினர்.