Thursday, July 24, 2008

துபாயில் பிரெஷ் பால்

துபாயில் பெரும்பாலோர் டீ, காபி உள்ளிட்டவற்றை தயாரிக்க பால் மாவு அல்லது பிரெஷ் பால் எனக்கூறி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படும் பலையை உபயோகப்படுத்துகின்றனர்.

துபாய் அபட்டைரில் ( Abattoir ) பிரெஷ் பால் கிடைக்கிறது. இதனை காலை ஏழு மணிக்குள்ளும், மாலை 4 மணி முதல் 7 மணிக்குள்ளும் பெறலாம்.







அமீரகத்தில் பேரிட்சை விழா

அமீரகத்தில் பேரிட்சை விழா

ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்குப் பகுதியான மஸிராவில் ( அபுதாபி அருகில் ) நான்காம் வருடமாக பேரிட்சை விழா கலாச்சார நிகழ்வுகளுடன் கோலாகலமாக துவங்கியது.


அமீரக ஆட்சியாளர்களின் மேற்குப் பகுதிக்கான பிரதிநிதி ஷேக் முஹம்மது பின் புதி அல் ஹமத் பேரிட்சை உற்பத்தி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை இவ்விழாவினையொட்டி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் ஷேக் முஹம்மது பின் புதி அல் ஹமத இவ்விழா அமீரக மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இவ்விழாவினையொட்டி விவசாயிகளுக்கான போட்டிகள், இலக்கிய நிகழ்வுகள், கூட்டு திருமண நிகழ்வு, விவசாயம் குறித்த கருத்தரங்குகள், பேரிட்சை மரத்தை பராமரிப்பது குறித்து வருங்கால சந்ததியினருக்கு விளக்கும் பல்வேறு நிகழ்வுகள் என பலவற்றிற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் பேரிட்சை மூட்டை மூட்டையாக ஏலமும் இக்கண்காட்சி மூலம் விடப்படுகிறது. இவ்விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெறும்.

இவ்விழாவினையொட்டி கின்னஸ் சாதனை படைக்கக்கூடிய வகையிலான ஐந்து முதல் ஆறு மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும் உடைய பேரிட்சை கண்காட்சியில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=891&Country_name=Gulf&cat=new