Thursday, December 18, 2008

சிரியாவுக்கு தூதரை நியமித்தது லெபனான்

சிரியாவுக்கு தூதரை நியமித்தது லெபனான்

லெபனான் அரசு முதல் முறையாக சிரியா நாட்டுக்கு மைக்கேல் அல் கூரி என்பவரை தூதராக நியமித்துள்ளது. தற்பொழுது சைப்ரஸ் நாட்டின் தூதரகாக இருக்கும் கூரி சிரியா நாட்டின் தூதராக நியமிக்கப்படுவதற்குரிய முடிவை அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் சிரியா மற்றும் லெபனான் நாட்டுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இரு நாடுகளும் தூதரக உறவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.

இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளையடுத்து முதன் முதலாக தூதரக உறவினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு இறுதிக்குள் புதிய தூதர்களை இரு நாடுகளும் நியமிக்கின்றன.

இதேபோல் சிரியா நாட்டின் மக்ரம் ஒபைத் ஸ்பெயின் நாட்டு தூதராக இருக்கிறார். இவர் லெபனானுக்கான தூதராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.