Thursday, April 24, 2008

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவரின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரை வழங்கிய 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களது சீரிய சிந்தனையில் உதித்த பிறைப்பள்ளி இன்று தரமான கல்வியினை வழங்கி வருவது குறித்து பெருமிதம் கொண்டார். மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வரும் சீதக்காதி டிரஸ்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். இத்தகைய நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றதையும் விவரித்தார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதையும் தெரிவித்தார். விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் ஒரு நாடு. முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் பள்ளி குறித்த விளக்கப்படங்களையும், பள்ளியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களயும், கல்விக்கட்டணம், விடுதி வசதி உள்ளிட்டவற்றை கணினி வழியே விவரித்தார். கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி அரபிக்கலூரியில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீது கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், இஸ்மத்துல்லஹ், சேக் முஹம்மது, ஹபிப் திவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ :ஆயுதம் ஏன்? எதற்கு?

ஆயுதம் ஏன்? எதற்கு?
-------------------

யா அல்லாஹ்!
காலையில் விழிக்கும் போது
களிப்போடே எழுகின்றேன் நான்!
உன்பெயர் உச்சரிக்கவும்
உன்திருவடி வணங்குதற்கும்
உன்நினைவி லிருந்து கொண்டே
நல்வினை நினைப்பதற்கும்-அதை
நடைமுறை படுத்துதற்கும்
மீண்டும் ஒர்நாள் கிடைத்ததென்றே
மகிழ்ச்சியில் திளைக்கின்றேன் நான்.


பஜரைத் தொழுத பின்பே -திரு
மறையை ஏந்துகின்றேன்!
இறைவாக்கு ஓதிய பின்பே
இரைதரும் பணியைத் துவங்குகின்றேன்!
ஐவேளை தொழுவதினாலே -மன
அமைதியில் தவழுகின்றேன் நாளும்!
உன்நிழலில் இருக்கும் எனக்கு
வேறுஆயுதம் ஏன்? எதற்கு?

கழிப்பறை சென்று நாளும்
அகப்புற அழுக்கு எல்லாம்
அறவே கழுவுகின்றேன்!
வெளியே வருகின்றபோது
ஒதுவுடன் புனிதனாக
அகப்புற தூய்மை கொண்ட
ஒழுக்க மிக்கவனாக -என்னை
நானே உணர்கின்றேன்!
அதன்படியே நாளும் நானும்
அமைதியில் நிலைத் திருக்கின்றேன்.

இறை மறை வழிநடக்க
வாழ்வை தந்தவன் நீயே!
தீயதை நினைக்க மனதில்
நேரமே இல்லை எனக்கு!
இசுலாத்தின் கடமைகள் யாவும்
இனிதே நிறைவேற்றுதற்கு
வசதியும் வாழ்வும் அளித்த
உனக்கே புகழ் அனைத்தும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.