Showing posts with label பொன்மொழி. Show all posts
Showing posts with label பொன்மொழி. Show all posts

Tuesday, June 15, 2010

அல்லாமா இக்பால் அவர்களின் பொன் மொழிகள் !!!!!!!!!

அல்லாமா இக்பால் அவர்களின் பொன் மொழிகள் !!!!!!!!!

ஆட்சியும் அதிகாரமும்

உண்மையான அரசும் ஆட்சியும், படைத்துகாக்கும் இறைவனுக்கே உரியவை . அவன் ஒருவன் தான் ஆளுபவன் மற்றவைகளுக்கு முழந்தாளிடுவது மக்களின் அறியாமையினால்தான்.

தன்னை தானே ஆட்சி செலுத்தாதவனை மற்றவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.

அரசியல்
அரசியல் ஒரு சூனியக்கலை , ஆளும் வர்கதிரனால் அந்த மந்திர வித்தை செய்யபடுகிறது . ஆளப்படுபவர்களும் , தூங்குபவர்களும் விழித்துக் கொள்ளும்போது , அதிகாரம் செய்யும் அந்த மந்திரவாதிகள் மீண்டும் அவர்களை அறியாமை என்னும் உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள் . ஆனால் நசுக்கபடுபவர்கள் என்றுமே தூங்குவதில்லை .

வண்ணமும் நறுமணமும் இருப்பதாகத் தோன்றும் மாயத் தோற்றந்தான் அரசியல் , ஆனால் இது செல்வந்தர்கள் தாங்கள் செல்வத்தை பெருக்கப் பயன்படுத்தும் ஆயுதம் .

அகம்

தன் அகத்தை முழுதும் தெறித்து கொள்கிறவன் தீமைகள் அனைத்தையும் பயனுள்ளதாக்கி விடுவான் .

அறியாமை
உறுதி மிக்க வைரத்தயும் மெல்லிய மலரின் இதழால் அறுத்துவிடலாம் . ஆனால் அறியாமையில் உழலும் இந்த மனிதனிடம் எவ்வித உபதேசமும்
பலனளிக்காமல் போய் விடுகிறது ; அது எவ்வளவு மிருதுவாக இருந்த போதிலும் சரியே .

அல்லாமா இக்பால் ,