
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளர்
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி 12 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்று வந்த இப்போட்டிகள் இவ்வாண்டு மம்சார் பகுதியில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்க அரங்கில் நடைபெற்று வருகிறது.
திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளரான கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டி நாட்டைச் சேர்ந்த பதினான்கு வயது நிரம்பிய நியாந்வி மஜலிவா கூறுவதைக் கேளுங்கள் இதோ :
தனது நாடான புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கே ருவாண்டாவும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் டான்ஸானியாவும், மேற்குப் பகுதியில் காங்கோ நாடும் உள்ளன.
எனது தாயாரின் அறிவுரைப்படி திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கினேன்.பத்து வயதான போது திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கிய நான் 2007 ஆம் ஆண்டு நிறைவு செய்தேன்.
அரபி மொழி ஆசிரியரின் உதவியுடன் அரபி மொழி ஓதக் கற்றுக்கொண்ட நான், தனது தாயாரின் உந்துதலின் காரணமாகவே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது என்கிறார்.
தனது தகப்பனார் ஒரு சிறிய வணிகர் என்றும், காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பள்ளி செல்லும் வரையிலும், பின்னர் பள்ளி விட்டு வந்த பின்னர் சூரியன் மறையும் வரையிலும் நான் திருக்குர்ஆன் மனனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இதற்காக எனது ஊரில் மிகச் சிறப்பாக கௌரவப்படுத்தப்பட்டேன்.
தனது ஊரில் 62 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர் எனவும்,8 முதல் 10 சதவீதம் பேரே முஸ்லிம்கள் என்றார். மீதமுள்ளவர்கள் கிறிஸ்துவத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தோராவர்.
உள்நாட்டுப் போரின் காரணமாக தனது நாடு போதிய வளர்ச்சியடையவில்லை என்கிறார் நியாந்வி. தனது நாடு உலகிலுள்ள பத்து ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10243869.html