Thursday, January 29, 2009

சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி

சிங்கப்பூர் ஜாமியா நிகழ்ச்சி

சிங்கப்பூர் ஜாமியா அமைப்பினரால் ஜனவரி 18 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியினைக் கேட்க

http://bayan.koothanallur.net/

http;//bayan.koothanallur.net

Solution Vs Problem Mentalities

Assalamu Alaikum,

You probably have read, or at least received several emails on the backwardness of Muslims, atrocities against Muslims, Insults on Islam etc; followed by "Please forward to all your contact" (I don't forward). If you read some of the socio-political magazines, you could see that they also describe the same stuff over and over. It's important that we know what is really going on around us, but

How beneficial it is that these emails / reports are read only by Muslims?
Why is that no email / magazine talks about solutions - even simple actions?
Why did we become a nation (Ummah) of complainers?

Why is that only a few are talking/writing/thinking about solutions? Rather than buying these magazines, I'd rather spend that money to help a student become a journalist who can present our side using The Hindu, Dinamani, NDTV, etc. Or, create a fine lawyer who can defend Muslims in court.

My request: When some speaker or a writer, talks about the issues, or describes the problems – ask him/her this: What do you think are solutions, which can be done by you and me? Let's not get into solutions that require massive investment (from Kings, or Ministers). God will not ask you on things beyond your control. But, if you could do a few things, but didn't (and complained that rulers or rich Muslims aren't doing) - be prepared to answer in the Hereafter.

Role Model: Remember the story of a blind Sahabi (Companion of the Prophet PBUH) who wanted to go to war. He didn't think his blindness is an excuse (like many who think, if only had more money, or if only I were a Prime Minister, I'd do this and that). When others asked him how he could contribute – he replied: "I can carry the flag of Islamic army. Since I'm blind, I won't be afraid of enemy. Besides, I increase the count of Muslims by one"

Please consider this: Some of your class-mates / colleagues may be working to improve the spiritual, educational and financial (poor laborers, don't have money to continue study) status of Muslims in some area. They'll need a few more volunteers. They would request your involvement, suggestions and time/efforts.

Our own problems look smaller (or silly, sometimes) when we see the problems of others, who are in a very bad state. You'll get a sense of supreme satisfaction when your efforts go beyond your family & friends. Trust me, i was lazy & late to join my co-workers in their efforts. But once i became part of it, it is a refreshing experience. You got to experience it to believe it.

And, most importantly – inviting to good, helping the community, and other good deeds are the ones that'll help us once we cease to live.

Bill Gates, when asked "what advice he had for ordinary readers who might want to engage in micro-philanthropy".

Reply: "The key thing is to pick a cause, whether its crops or diseases or great high schools. Pick one and get some more in-depth knowledge. If possible, travel to see the problems firsthand, then pick an organization to support with donations or volunteer time" (NYT Interview. Also in The Hindu Dt. 26-Jan-09)

seyed.ibrahim@gmail.com

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் அமீர‌க‌ வாழ் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ரால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

இக்க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சியினை சிங்க‌ப்பூர் வாழ் இளையான்குடி பிர‌முக‌ர் ஆடிட்ட‌ர் ஃபேரோஸ் கான் ந‌ட‌த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ந‌டைமுறை சாத்திய‌த்தை கூறுவ‌தோடு அல்லாம‌ல் அத‌ற்கான‌ தீர்வினைக் கொடுக்க‌ வேண்டும் என்றார். ஜெர்ம‌ன் அறிஞ‌ர் ஒருவர் ஒரு ம‌னித‌ன் த‌ன‌து வாழ்வின் அனுப‌வ‌த்தை ப‌ள்ளிக்கு வெளியே க‌ற்றுக் கொள்கிறான் என்று கூறிய‌த‌ நினைவு கூர்ந்து த‌ன‌து அனுப‌வ‌த்தின் மூல‌ம் குடும்ப‌ப் பொருளாதார‌த்தை திட்ட‌மிட‌ல் குறித்து விவ‌ரித்தார்.

மேலும் க‌ண‌வ‌ன் ம‌னைவி உற‌வு, பெற்றோர் பிள்ளை உற‌வு, ஆசிரியர் மாண‌வ‌ர் உற‌வு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌லைப்புக‌ளிலும் இவ‌ர் ஆலோச‌னை வழ‌ங்கி வ‌ருகிறார். அமீர‌கத்தில் ஒரு வார‌ம் இருக்கும் இவ‌ரை 055 988 68 05 எனும் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

இவ‌ர‌து http://www.bitter-truth.net ஆக்க‌ங்க‌ளை எனும் இணைய‌த்த‌ள‌த்தில் பார்க்க‌லாம்.

இந்நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை அஷ்ர‌ஃப், க‌பீர் உள்ளிட்டோர் செய்திருந்த‌ன‌ர். இந்நிக‌ழ்வில் ந‌ம்ம‌ ஊரு செய்தி ஆசிரிய‌ர் முனைவ‌ர் அய்யூப், அப்துல் மாலிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

சென்னையில் பிப்.1 இல் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இன்ஷா அல்லாஹ் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும்.

ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே, அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம். தாங்கள் அனைவரும் சிரமத்தை பொருட்படுத்தாமல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி தலைமை வகிக்கிறார்.

தி.மு.க. பொருளாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமாகிய, மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவு பேருரை நிகழ்த்துகின்றார். வக்ஃப் வாரிய அமைச்சர் மாண்புமிகு டி.பி. எம்.மைதீன்கான் வாழ்த்துரை வழங்குகின்றார்.

இம்மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையது சத்தார் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். சையது அஹமது, தமிழக அரசு ஹஜ் கமிட்டி தலைவர் - வக்ஃபு வாரிய உறுப்பினர் ஜே.எம். ஹாரூன் எம்.பி,, தலைமை காஜி முப்தி முஹம்மது ஸலாவுத்தீன் அய்யூப், ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான், செய்யது எம். ஸலாவுத்தீன், காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் முத்துப்பேட்டை அப்துர் ரஹ்மான், இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் மௌலவி அ.முஹம்மது கான் பாகவி, முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவரும், வக்ஃப் வாரிய உறுப்பினருமான ஹாஜி எம். சிக்கந்தர்,, முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் சேமுமு முஹம்மதலி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், சமுதாய புரவலர்கள், மாநில அணி அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்க உள்ளனர். முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.,
தமிழகம் முழுவதும் உள்ள இமாம்கள், சங்கமிகு ஆலிம் பெருமக்கள், முத்தவல்லிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ள இம்மாநாட்டிற்கு அலைகடலென திரண்டுவரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

சீரகம்

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்..

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது

தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது

கனடிய பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இருந்து தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளிடத்தில் (புட்டிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகளைக் காட்டினும்) நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் அறிதியிட்டு கூறிட முடியவில்லை.

சுமார் 14,000 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்ட இவ்வாய்வின் பிரகாரம் தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுகின்றனராம். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது..!

தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் உள்ளன என்பதால் அவற்றின் பங்களிப்பும் இந்த நுண்ணறிவுத்திறன் வளர்ச்சியில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்று கூறும் ஆய்வாளர்கள் பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பெளதீக தொடுகைகள் மற்றும் குரல் (சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் செல்வாக்குச் செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்..!

அதனால் தான் என்னவோ பழங்கால தமிழ் தாய்மார் பாலூட்டும் போதும் நித்திரைக்குச் செல்லும் போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடினரோ..?!

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அந்த நிலையில் இருந்து விலகுவது சிறப்பு என்பதை இவ்வாய்வு எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்..!

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2072:2008-07-07-11-54-46&catid=78:medicine

முன்னாள் மாணவனின் ஆனந்த கண்ணீர் மடல்

மதிப்பு மிக்க எனது (முன்னாள்) பள்ளியின் இன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசான் பெருந்தகைகட்கு, இப்புனித மிக்க கா.மு.பள்ளியின் முன்னாள் பள்ளியின் மாணவன் எழுதும் அஞ்சல்.

முன்னாள் மாணவர் அமைப்பு அமையப் போகும் நற்செய்தி எனக்கு கிட்டியது; மனமெல்லாம் மகிழ்ச்சி எட்டியது. நாங்கள் பள்ளியிறுதித் தேர்வில் எழுபத்தி யிரண்டு விழுக்காடு பெற்றோம்( ஆண்டு 1974 ). ஆனால், தற்பொழுது அதைவிட அதிகம் எடுத்து நம் பள்ளியின் பெருமையை அறியச்செய்திட்ட அறச்செயல் செய்திட்ட ஆசான்கட்கு நிரம்ப நன்றி. என்னைப் பற்றிய் சிறு குறிப்பு கீழே எழுதியுள்ளேன்:

பெயர்: அபுல்கலாம்
பள்ளியிறுதி முடித்த ஆண்டு: 1974

சிறப்பு தகுதிகள் (என் நன்றிக்குரிய ஆசான்களால் பெற்றவைகள்): வகுப்பில் எப்பொழுதும் முதல் தரம் பெறும் பேறு; இறுதி பொதுத் தேர்வில் இரண்டாமிடம்.

"யாப்பிலக்கணத்தின்" அடியொற்றி வெண்பா சுயமாக எழுதியதால் எனது மதிப்பிற்குரிய- தமிழ்ப்பால் ஊட்டிய தமிழாசிரியர்கள் திரு. இராமதாசு /திரு. சண்முகம் மற்றும் என் வகுப்பு தோழர்களால் "கவியன்பன்" என்று அழைக்கப் பெற்றேன்; இன்று வரை அப்பெயரிலேயே கவிதைகள் யாத்தும் உலகமெங்கும் நமதூர் பெயர் அறியச் செய்கின்றேன். எங்கட்கு கிடைத்த ஆசான்களின் அற்புதமான போதனா முறைகளால் தமிழைப் போல் ஆங்கில இலக்கணத்திலும் எங்களுக்கு ஆழமான அறிவமுதம் ஊட்டித்தான் வெளியுலகுக்கு அனுப்பி வைத்தனர். அதனாற்றான், இன்றளவும், இறையருளால், ஆங்கில இலக்கணத்தில் தவறின்றி எழுதவும்; பேசவும் எங்களால் முடியும்.யாராகிலும் தவறாக இலக்கணப் பிழையுடன் பேசினால் உடனேத் திருத்தி கொடுக்கின்றேன்; அதன் விளைவாக, எனது பட்ட படிப்பு -இளங்கலை வணிகவியல் முடித்த ஆண்டு முதல் இன்று வரை இலவசமாக ஆங்கில இலக்கணம் கற்று தருகின்றேன். அத்தனைக்கும் அடிப்படை அதிரையில் பிறக்க வைத்த அல்லாஹ்வின் அருளும் அற்புதமான ஆசான்களின் போதனா முறைகளும். எனவே, என்னை அதிரை என்னும் அழகிய பதியில் உதிக்க வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி. ஆயுள் முழுவதும் என் ஆசான்கட்கு நிரம்ப நன்றி கடன் பட்டுள்ளேன். அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரைச் சென்று உயர்பதவிகளில் உட்கார்ந்து பணியாற்றிட உதவியாக அமைந்தது உண்மையாக எனது தாய்மடி போன்ற என் பள்ளி தான் என்று மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டேன்.
எனது நன்றி மறவா ஆசான்கள்:

தமிழ்ப்பால் ஊட்டிய திரு. இராமதாசு/ திரு.சண்முகம்
ஆங்கிலத்தில் சுயமாக பேச - எழுத பயிற்றிவித்த : ஜனாப். அலியார் சார்
அறிவியல் பாடத்தை அற்புதமாக நடத்தும்; ரெங்கராஜ் ஐயா
ஓவியப்பாடத்தூடே ஆங்கில இலக்கணம் கற்று தந்த : ஜனாப் வாவன்னா சார்
எனது திறமைக்கு மதிப்பளித்து தேர்தலின்றியே- பள்ளித்தலவனாகத் தேர்வு செய்த தலைமை ஆசிரியர்: ஜனாப் இப்றாஹிம் சார்
பல்கலைவேநதராகிய அதிரையின் இயக்குனர் திலகம் : ஜனாப். ஹாஜா முஹையித்தீன் சார்
(அவர்கள் கற்று தறாத பாடமேயில்லை எனலாம். அடிப்படையில் கணித ஆசிரியர். ஆனால், தமிழ்-இலக்கண இலக்க்கியம்; ஆங்கில இலக்கண இலக்கியம்; மற்றும் பேச்சு திறன் எழுத்துத் துறை எல்லாம் கற்ற- கற்பித்த அவர்கள் தான் என் உதாரண புருஷர். அவர்கள் இயற்றி இயக்கிய நாடகத்தில் பங்கு பெற்றது என் வாழ்வில் கிடைத்த ஒரு பேறு.
எனது படைப்புகள்:
என்னைப் படைத்தவனருளால், நான் படைத்து இன்று வரை இணய தளத்தில் உலகமெங்கும் உள்ள் தமிழர்களால் பாராட்டப்பெற்று அதிரையின் பெயர் அகிலம் உணரவும் அதற்கு அடிப்படையான கா.மு.பள்ளியினை நினைவு கூரத்தக்க கவிதைத் தொகுப்பு
ஆங்கில வழி போதனாமுறையில் படித்த எத்தனையோ பட்டதாரிகட்கும் பயன்பெற்று தந்த -தந்து வரும்

"KALAM'S INSTITUE: BASIC LEVEL GRAMMAR TEACHING"என்ற சிறு நூல் ஒன்றும் இயற்றி இலவசமாக இணய தளம் மூலம் உலகத்தமிழர்கட்கு அனுப்பியுள்ளேன்.
அடுத்து வரும் அஞ்சலில் அவ்விரண்டு படைப்புகளும் தங்கட்கு- என் முன்னாள் பள்ளி என்ற தாய்மடிக்கு சமர்ப்பிக்கின்றேன்.
நன்றியுள்ள முன்னாள் மாணவன்


-"கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com


பின் குறிப்பு:
தங்கர்பச்சன் படைத்த "பள்ளிகூடம்" திரைப்படம் பார்த்தபோழ்து என் உள்ளம் என் தாய்மடியான அதிரை கா.மு.பள்ளியை நினைத்து அழுது விட்டேன்; இன்று முன்னாள் மாணவர் சங்கம் அமைத்து அதில் நானும் அங்கம் என்பதை நினத்து ஆனந்த கண்ணீர் விட்டேன். உண்மையாக, ஒவ்வொரு முறை விடுமுறையில் நான் பிறந்த ஊராம்- தமிழகத்தில் சிறந்த ஊராம் "அதிரா(ம்)" ப்ட்டினத்துக்கு வரும்பொழுதெல்லாம், என் பள்ளியினுள்ளேச் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு பழைய நினைவுகளை உள்ளத்தில் ஏந்தி வருவேன்; அது சமயம்- தாயின் மடியில் தலை வைத்த சுகமான உள்ளுணர்வே எனக்கு ஏற்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இம்முறை விடுமுறையில் வரும்பொழுது
முன்னாள் மாணவர் சங்கத்தில் இணய உள்ளேன் என்பதை நினைத்தாலே இனிக்கின்ற நினைவலைகளுடன்................................