Sunday, July 20, 2008

முதுகுளத்தூர் முகவரிகள்

'ஹஜ்ரத் சேட் ஆலிம் சாஹிப்'
புதிய எண் 44 அலியார் தெரு
முதுகுளத்தூர் 623 704
இராமநாதபுரம் மாவட்டம்

தொலைபேசி : 04576 - 222 533
அலைபேசி : 94436 10495

muduvaisaitalim@gmail.com

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஹிந்தி மொழி பயில வாய்ப்பு

வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஹிந்தி மொழி பயிலும் வாய்பினை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஹிந்தி இயக்ககம் வழங்கி வருவதாக அபுதாபி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ஹிந்தி மொழி இயக்ககம் ஹிந்தி மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வ்ழங்கி வருகிறது. இப்படிப்புகளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் ஹிந்தி மொழியினை தாய்மொழியினைக் கொண்டிராதவர்கள் பங்கேற்கலாம்.

இப்படிப்பு ஆங்கிலம், தமிழ், மலையாளம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளின் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புக்கான கட்டணம் ஐம்பது டாலர்கள்.கோடிட்ட வங்கி வரைவோலையினை
The Director, Central Hindi Directorate, New Delhi எனும் பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி : ஆகஸ்ட் 14

மேலதிக விபரம் பெற
Central Hindi Directorate
Department of Correspondence Courses Ministry of Human Resource Development (Department Of Higher Education)
West Block - VII, R.K. Puram
New Delhi
Delhi
Phone-No: 26178454, 26105211, 26105213, 26105214
Fax: 26100758, 26103160


www.hindinideshalaya.nic.inHindi courses for Indian expatriates

By a staff reporter

20 July 2008
PrintE-mail

ABU DHABI — The Central Hindi Directorate of the Department of Secondary and Higher Education at India's Ministry of Human Resources Development has announced Hindi language learning courses for non-Hindi speaking persons residing in India and abroad, a Press release from the Indian Embassy here said.
The department conducts certificate courses in Hindi (Preliminary) and diploma courses for the benefit of non-Hindi speaking Indians who are settled in India and abroad.
Hindi language will be taught through the medium of English, Tamil, Malayalam and Bangla, while the advanced diploma course will be taught through the Hindi medium, the release said.
The fees for certificate/diploma courses in Hindi is US$50 and for advanced diploma courses US$200. The fee could be paid by sending a crossed bank draft, payable to the Director, Central Hindi Directorate, New Delhi.
The last date for submission of application is August 14. Those interested may visit the web site www.hindinideshalaya.nic.in

http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=/data/theuae/2008/July/theuae_July630.xml§ion=theuae

கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்

கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்


கோட்டக்குப்பம் முஸ்லிம் லீக் பிரமுகர் இல்லத் திருமணம்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியும், முஸ்லிம் லீக் பிரமுகருமான அல்ஹாஜ் ஏ. இஹ்சானுல்லா அவர்களது மகன் தீன்குலச் செல்வன் ஒய். அன்வாருல்லா B.B.M. மணாளருக்கும், ஒய். முஹம்மது இஸ்மாயில் அவர்களின் குமாரத்திக்கும் திருமணம் ஹிஜ்ரி 1429 ஆம் ஆண்டு ரஜப் பிறை 23 ( 27 - 07 -2008 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இன்ஷா அல்லாஹ் கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித்( ஷாதி மஹால் ) திருமண இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

இத்திருமண நிகழ்விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., எம்.பி. அவர்கள் தலைமை தாங்குகிறார்.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, துணைச்செயலாளர் கும்பகோணம் தளபதி ஏ. முஹம்மது தாஹா,தீனிசை வேந்தர் தேரிழந்தூர் ஏ.எஸ். தாஜுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி அமைப்பாளர் ஹாஜியா பாத்திமா முஸப்பர், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் மௌலவி வி.ஏ. முஹம்மது யஹ்யா மன்பஈ உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இத்திருமண விழாவில் முஸ்லிம் லீகர்கள் அனைவரும் கலந்து கொண்டு துஆச் செய்திட மணமகனின் சகோதரரும், கோட்டக்குப்பம் துபாய் ஜமாஅத் செயலாளருமான ஒய் ரஹ்மத்துல்லாஹ் கோட்டுக் கொண்டுள்ளார்.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.

சுடர் வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு சேவையாக மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கல்வி உதவிகள் வழங்கினார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி., சுடர் வம்சம் அமைப்பின் தலைவர் ரகுராஜ்,சந்திரன் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு - சட்டியிலிருந்து தப்பி அடுப்பிற்குள்...

நம்பிக்கை வாக்கெடுப்பு - சட்டியிலிருந்து தப்பி அடுப்பிற்குள்...உலக நாடுகள் பலவும் மிக உன்னிப்பாக இந்திய அரசியல் அரங்கை கவனித்துக், கொண்டிருக்கின்றன. பல்வேறு தலைகீழ் அரசியல் மாற்றங்களுக்கான முன்னறிவிப்பு இந்திய அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காண்டு காலம் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி நின்ற பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசானது, தனது ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக நிற்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு:
வருகின்ற ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதன் முடிவு இந்தியாவின் தலைவிதியையே தீர்மானிக்கும் அளவில் உள்ளதால்தான் இத்தனை பரபரப்பு! நான்காண்டு காலம் நல்லாட்சி செய்து வந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை ஏன் வந்தது? காரணம், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் என பரவலாக அறியப்படுகிற அமெரிக்க ஹைட் சட்டத்தின் கீழான 123 ஒப்பந்தம்தான்.

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தேவையா, இல்லையா என்ற விவாதம்தான் இன்று மத்திய அரசை கவிழ்ப்பதற்கான ஆயுதமாக மாறியுள்ளது. ஒரு நாட்டின் அரசையே கவிழ்க்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய அளவிலே அப்படி என்னதான் அந்த ஒப்பந்தத்தில் உள்ளது?

குருடர்கள் யானையைப் பார்த்து விவரித்த கதையாக இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேவைக்கும் அறிவுக்கும் ஏற்ப வியாக்கியானமும், விமர்சனமும் செய்யப்படுகிறது. இதில் யானை முறம் போல் உள்ளது என அதன் காதை தடவிப் பார்த்து சொன்ன குருடனைப் போல மார்க்சிஸ்ட் கம்ய+னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.பாண்டே என்பவர், இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், இதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்றும் தன் அரிய கண்டுபிடிப்பை, இந்த ஒப்பந்தத்திற்கு மதச்சாயம் ப+சி பிரகடணம் செய்தார்.

இவரைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச முதல்வர் செல்வி. மாயாவதியும் தன் பங்குக்கு இந்த அணுசக்தி ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறார். தங்களின் அரசியல் லாபங்களுக்காகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என சில அரசியல் கட்சிகளால் திட்டமிட்டே திரிக்கப்படுகிறது.

அணு மின்சாரம்:
இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காரணமாக பிரதமர் முன் நிறுத்துவது, இந்தியாவிற்கான மின்சார உற்பத்தியைத்தான்! அமெரிக்கா சப்ளை செய்யும் அணு உலைக்கான எரிபொருளை வைத்து அணு மின் உற்பத்தியைப் பெருக்கப் போவதாகவும், இந்தியாவின் எதிர்கால மின்சார தேவையே இதில்தான் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றைக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் அணுமின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் வெறும் மூன்று சதவீதம் மட்டும்தான். அணுமின் நிலையங்களை உருவாக்குவது எளிது. ஆனால் அணு உலைகளின் கழிவைப் பாதுகாப்பது மிக மிக கடினமானது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல அணுஉலைக் கழிவுகள் சரியாக பாதுகாக்கப் படாமல் போனால் அணுகுண்டுகள் வீசாமலே நாட்டில் பல லட்சம் மக்கள் செத்து மடிவார்கள்.

அதனால்தான் உலகம் முழுவதுமே, அனைத்து நாடுகளிலும் அணு உலைகள் அமைப்பதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் உள்ளன. அப்படி அமைக்கப்படும் உலைகள் கூட பல்வேறு பாதுகாப்பு வளையங்களோடு இருப்பதை உறுதி செய்ய விதிகளும், சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் மீறி ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதும் இன்றும் கூட அதன் பாதிப்புகள் தொடர்வதும் உலகமே அறியும்.

அணு உலைகள் எதற்காக?
இவ்வளவு ஆபத்துகளுக்கிடையிலும் அணு உலைகள் ஏன் நிறுவப்படுகின்றன? காரணம் அமெரிக்காவின் ஆயுதப் போட்டிதான். அணு உலைகளில் மின்சார உற்பத்தி என்பது ஒரு உப தயாரிப்புதான். அதன் முதன்மையான தயாரிப்பு அணு ஆயுத தயாரிப்புக்கு மூலமான புளோட்டோனியம்தான். அணு உலைகளில் யுரேனியத்தை எரி பொருளாக பயன்படுத்தி செறிவ+ட்டும்போது புளோட்டோனியம் கிடைக்கிறது. அப்போது வெளிப்படும் வெப்பத்தை உபயோகப்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படும்.

எனவே மின்சாரம் என்பது பிரதான தயாரிப்பு அல்ல. புளோட்டோனியம்தான் பிரதானம். சர்க்கரை ஆலையில் மொலாசஸ் என்ற கழிவுப் பாகு கிடைப்பது போலத்தான் நமக்கு அணு உலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது.

ஆயுத உற்பத்தி:
இன்றைக்கு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய அய்ந்து நாடுகளும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளன. இந்த ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொருளாதார ரீதியாக அவற்றை சுரண்டிக் கொழுக்கின்றன.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இந்த அய்ந்து நாடுகளுக்கும் போட்டியாக தாங்களும் நவீன ஆயுதங்களையும், அணு ஆயுதங்களையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. தங்களை மீறி வேறு எந்த நாடும் தலைதூக்கி விடக்கூடாது என்ற எண்ணத்திலேதான் 1968ஆம் ஆண்டு அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்றை உருவாக்கி அனைத்து நாடுகளையும் அதில் அமெரிக்கா கையெழுத்திடச் செய்தது.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் அதில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் என ஒன்று இருந்தபோதிலும் இந்த வளர்ந்த நாடுகள் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயார் செய்து தங்கள் நட்பு நாடுகளிலே கொண்டுபோய் குவித்து வருகின்றன.

எனவே இராணுவ ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கும் இந்தியாவும் அணு ஆயுதத்தை உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்தும் விட்டது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதை பறை சாற்றிவிட்டது.

இந்தியா மேலும் நவீன அணு ஆயுதங்களை உருவாக்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. எனவேதான் இந்த 123 ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் அணு ஆயுத தயாரிப்புக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறது என்றும் இந்த ஒப்பந்தத்திலே இந்தியாவுக்கும், அதன் இராணுவ பொருளாதார பாதுகாப்பு நலன்களுக்கும் எதிரான ஷரத்துகள் நிறைய உள்ளன என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத்தின் பாதக அம்சங்கள்:
அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடுகிற ஒரு ஷரத்து என்னவெனில், இந்தியாவின் அணு உலைகளுக்கு அவ்வப்போது தேவைப்படுகிற அளவு என அமெரிக்கா நிர்ணயிக்கிற அளவு மட்டுமே யுரேனியத்தை சப்ளை செய்யும். நாம் நமக்கு தேவையான அளவு என அதிகமாக கேட்டுப் பெற முடியாது. எதிர்காலத்தில் அமெரிக்கா தன் சப்ளையை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தி கொள்ள வேண்டி வரும்போது நம்முடைய அணு உலைகள் தொடர்ந்து இயங்க முடியாமல் இழுத்து மூடவேண்டி வரும். இதன் மூலம் இந்திய அணு உலைகளின் இயக்க சாவி அமெரிக்காவின் கையில் இருக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் நம் அணு உலைகளில் அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான புளோட்டோனியம் தயாரிப்பதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிறுத்திவிட வேண்டுமென்கிறது இந்த ஒப்பந்தம். இதன் மூலம் இந்தியாவின் அணு ஆயுத தயாரிப்புக்கு மூடு விழா நடத்த முயற்சிக்கும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.

அணு உலை எரிபொருள் சப்ளையர்கள் குரூப் (என்.எஸ்.ஜி) விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இந்தியாவை கட்டுப்படுத்தும்.

அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளை இந்தியாவும் பின்பற்ற வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு, ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் பட்சத்தில் இந்தியாவும் ஈரானுடனான தன் நீண்டகால உறவை துண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்திய-ஈரான் குழாய் எரிவாயு திட்டம் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டியிருக்கும் என்பதெல்லாம் இவ்வொப்பந்தத்தை குறித்த ஐயப்பாடுகளாகும்.

இந்திய அணு உலைகளில் யுரேனியம் செறிவ+ட்டல், கனநீர் உற்பத்தி ஆகிய இரு நிலைகளில் மட்டுமல்லாமல் மூன்றாவது நிலையான ரீ-ப்ராசசிங்-கிலும் கூட நாம் நம் நாட்டு தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம். அமெரிக்க தொழில் நுட்பத்தை பயன்படுத்தப் போவதில்லை.

எனவே இந்த ரீ-ப்ராசசிங் ய+னிட்கள் அமைக்க இந்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இந்த ய+னிட்டுகளின் கட்டுமான வரைபடங்கள், தொழில் நுட்பங்கள், புள்ளி விவரங்கள் போன்ற அனைத்தையும் அமெரிக்காவிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

பல ஆண்டு காலம் உழைத்து, பாடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து ஆராய்ச்சி செய்து நம் விஞ்ஞானிகள் உருவாக்கிய தொழில் நுட்பங்களையும், புள்ளி விவரங்களையும் அமெரிக்காவிடம் அடகு வைக்கிறோம். இது இந்தியாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஒன்றாகும். எனவே இது இந்தியாவின் இறையாண்மைக்கே சவாலாகும். இந்தியா தன் அணு உலைகளை இயக்குவதற்கான விதிமுறைகளை அமெரிக்கா வகுக்கும். அது என்னவென்று தெரியுமுன்பே அதை ஏற்றுக் கொள்ளவதாக இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இந்த ஒப்பந்தம் குறித்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்றே ஒப்பந்தம் கூறுகிறது. சாதாரண தனிநபர் வியாபார ஒப்பந்தங்களில் கூட இரு நபர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நடுவரிடம் முறையிட்டு தீர்த்துக் கொள்வது பற்றி ஷரத்து இருக்கும். ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான இம்மாபெரும் ஒப்பந்தத்தில் அப்படி ஏதும் இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது என கூறப்படுகிறது.

ஒப்பந்த காலமான 40 வருடம் முடியுமுன்னே இடையில் ரத்து செய்து கொள்வது பற்றிய ஷரத்தில், அதுபற்றி கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என ஒப்பந்தம் கூறுகிறது. அமெரிக்கா ஒப்பந்தத்தை விலக்க ஒத்துக்கொள்ளவில்லையெனில் 40 வருட காலமும் அமெரிக்காவின் ஆதிக்கத்திலும், தயவிலுமே இந்தியா வாழவேண்டி இருக்கும் என்ற ஐயப்பாடும், ஆக்கமும் அர்த்தமும் உள்ளதாகவே உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விசேஷ சூழ்நிலைகளில் கூட இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த முடியாது. ஏனெனில் அது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். ஆனால் அமெரிக்கா ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கலாம். அப்படி நிறுத்தி வைத்தால் இவ்வொப்பந்தத்தை நம்பி பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்த இந்தியா உருவாக்கிய உலைகள் உபயோகமற்று போய்விடும். அதற்கான நஷ்ட ஈடுபற்றி ஒப்பந்தத்தில் ஒரு வரி, கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவிற்கு பாதகமாகவும், அமெரிக்காவிற்கு சாதகமாகவும் இவ்வொப்பந்தத்தில் உள்ளது என்றும்@ ஒரு தலைச்சார்பான இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீர வேண்டுமா என்றும், இப்படிப்பட்ட பாதகமான அம்சங்களை முதலில் நீக்கிவிட்டு அதன் பின்னரே ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரானதா?
இவ்வாறாக பல்வேறு விமர்சனங்கள், உள்ள இந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களுக்கு எதிரான ஒப்பந்தம் என மதச்சாயம் ப+சும் அரசியல் மேதாவிகள் இந்நாட்டு முஸ்லிம்களை தனிமைப்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

இது குறித்து ஜம்மிஅத்-உல்-உலமா-யே-இந்த் என்ற அமைப்பின் சார்பாக மவுலானா அப்துல் அமீது நுமானி தன் கண்டனத்தையும், ஆட்சேபனையையும் பதிவு செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. திரு.எம்.கே.பாண்டே அவர்களின் கீழ்த்தரமான முயற்சியான அணு ஒப்பந்தத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் முடிச்சு போடும் செயலை வன்மையாக கண்டித்துள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி-யின் சார்பிலே எஸ்.க்ய+.ஆர். இல்யாசியும் இச்செயலை மதச்சாயம் ப+சும் செயல் என கண்டித்துள்ளார். எனவே அணு ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற விஷமப் பிரச்சாரத்திற்கு நாம் பலியாகிவிடக் கூடாது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகும் இவ்வொப்பந்தத்தில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து தன் கவலைகளையும், ஆட்சேபனைகளையும் பிரதமரிடம் முறையாக பதிவு செய்துள்ளது. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா அவர்கள் தன் உயிர் பிரிவதற்கு ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியிலே கூட அணு ஒப்பந்தத்தின் பாதகமான தன்மைகள் குறித்த தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் லீக் இவ்வொப்பந்தத்தின் சில அம்சங்களை எதிர்க்கின்ற அதே வேளையில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி, அரசை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தையும் தன் தோள்களிலே சுமந்து கொண்டுள்ளது.

சிறுபான்மையினரின் நலன்காக்கும் அரசு:
டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான இந்த அரசு கடந்த நான்காண்டுகளாக சிறுபான்மையினருக்கு செய்து வரும்பணிகள் ஏராளமானவை. கடந்த ஆட்சியில் ஒரு மதவாத கும்பலின் பிடியில் இந்த நாடு இருந்தபோது இந்திய நாட்டை இந்து நாடாக்க பரிவாரங்கள் படை நடத்திக் கொண்டிருந்தன. பொது சிவில் சட்டம் - என்ற ஆயுதம் கூர்தீட்டப்பட்டது.

அது சிறுபான்மையினரை பதம் பார்க்கும் முன்னரே இந்நாட்டு மக்கள் அந்த கும்பலைத் தூக்கி எறிந்து விட்டு அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை மத்தியில் அமர்த்தியுள்ளனர். இந்த அரசு வந்த பின்னர்தான் இந்நாட்டு முஸ்லிம்களின் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சச்சார் குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் மேல் உடனடி நடவடிக்கை தொடங்கப்பட்டது.

சுமார் 75 சதவீதம் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. அத்துடன் திரு.ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழு அமைக்கப்பட்டு சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரை பெறப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய அனைத்து நிலைகளிலும் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்று பரிந்துரை கூறுகிறது. இதை அமல்படுத்தக் தேவையான இந்திய அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமன்றி இன்றைக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினரும் இந்நாட்டில் பாதுகாப்புடன் வாழ்வதற்கான வழிவகைகளை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. ஒரு மதவாத - பாசிச ஆட்சிலிருந்து விடுபட்ட இந்திய மக்கள் இந்த ஜனநாயக ரீதியிலான ஆட்சியின் கீழ் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அணு ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்க்கப்படுமானால், அது மீண்டும் ஒரு காட்டாட்சிக்கு நம் நாட்டை இழுத்துச் செல்லும்! சட்டியிலிருந்து தப்பி, எரியும் அடுப்பில் விழுந்தது போல மதவாதிகளின் கையிலே இந்நாட்டை ஆகுதி செய்ய வேண்டியதாகிவிடும்.

அமெரிக்க அடிவருடிகள்:
அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசு போடும் முதல் கையெழுத்தே அணு ஒப்பந்தமாகத்தான் இருக்கும். ஏனெனில் பாரதீய ஜனதா மற்றும் சங்பரிவாரங்கள் அமெரிக்காவின் அடிவருடிகள் என்பதுதான் சரித்திர உண்மை. எனவே தலைவலி போய் திருகு வலி வந்தது போல அணு ஒப்பந்தம் இன்னும் அதிக கடுமையான அம்சங்களோடு நிறைவேற்றப்படும்.

செய்ய வேண்டியது என்ன?
இன்றைய நிலையில் அணு ஒப்பந்தத்தின் சில பாதகமான அம்சங்கள் குறித்து நம் கவலை களையும் ஆட்சேபணைகளையும் பதிவு செய்வோம். அதே வேளையில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக விளங்கும் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசை தூக்கி நிறுத்துவோம்.

ஒப்பந்தத்தை காரணம் காட்டி இவ்வரசை கவிழ்ப்பதன் மூலம் மீண்டும் மதவாத கும்பலின் கையில் இந்நாடு சிக்கி சீரழியவே செய்யும் என்பதை அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எடுத்துரைப்போம். அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் இந்த அரசை கவிழ்த்துவிட்டால் அது நரிக்கு நாட்டாண்மை கொடுத்தது போலாகிவிடும். நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால் அது கிடை-க்கு இரண்டு ஆடுகளைக் கேட்கும் என்பதை கவனத்தில் கொள்வோம்.

வெ.ஜீவகிரிநாதன்,
மாநில அமைப்பாளர்,
வழக்கறிஞர் பிரிவு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

(கட்டுரையாளர் வெ.ஜீவகிரிதரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக 20 ஆண்டு காலமாகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளரான இவர், முற்போக்குச் சிந்தனைகளும் சீர்திருத்த எண்ணங்களும் நிறைந்தவர்.)

http://www.muslimleaguetn.com/news.asp?id=108

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!

இந்தூர் கலவரம் - பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ம.பி. முஸ்லிம் லீக் கோரிக்கை!


இந்தூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்தியப்பிரதேச இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய - மாநில அரசுகளுக்கு மத்திய பிரதேச மாநில முஸ்லிம் லீக் செயலாளர் செய்யது அலி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு-

ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்ற பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ~பாரத் பந்த்~தின் போது இந்தூரில் மேற்கத்திய ஆதிக்க சக்திகள் ஒரு கலவரத்தை நடத்தியது. இதில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். அதில் 7 பேர் முஸ்லிம்கள்@ ஒருவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.

இந்த வகுப்பு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று வௌ;வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே நாளில் இந்தூரை சேர்ந்த சில இந்துத்துவ சக்திகள் உதயபுரா, ஹமானியா கல்விக் கூடத்தின் மீது கல் வீசி தாக்கியுள்ளார்கள். முகரிபுரா என்ற இடத்தில் ஒரு இண்டர்நெட் மையத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கணிணிகளை சேதப்படுத்தினர். அங்கு நடந்த வன்முறையில் சிந்தி இனத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த வன்முறைக் கும்பல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கஜரானா, ஜுனாரிஷாலா, முகரிபுரா, பாம்பே பஜார், ஜின்ஸி, ராணிபுரா, மல்ஹர்கன்ஜ், மல்ஹர்பல்தான் மற்றும் சம்பபாக் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் பெண்களையும், குழந்தைகளையும் தாக்கி வீடுகளை சேதப்படுத்தினர்.

இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதங்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம்.

கீழ்க்கண்ட வகைகளில், இழப்பீடு வழங்க வேண்டும்:

மரணமடைந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மத்திய அரசுப் பணி...

படுகாயமுற்று அவதிப்படும் நபர்களுக்கு மாநகராட்சி மார்க்கெட்டில் ஒரு கடை ஒதுக்க வேண்டும்...

கலவரத்தில் கணவனை இழந்து விதவையானவர்களுக்கு ஓய்வ+தியம் வழங்க வேண்டும்@ அவர்களது குடும்ப குழந்தைகளுக்கு கல்வியில் சலுகை அளிக்க வேண்டும்...

கலவரம் குறித்து முழுமையான சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்...

சி.பி.ஐ. விசாரணைக்கு முன்பு எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது...

-இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://www.muslimleaguetn.com/news.asp

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம்
ஐக்கிய அரபு அமீரகம்

துபாய்

ஹஸன் அஜிஸ் ஆமிர் 050 768 67 55

ஹாரிஸ் அன்வர் 050 217 2902

சிகைப் ஆலம் 050 706 1596


ஷார்ஜா

சிராஜ் 050 895 0315

முஹம்மது அல்மன் 050 458 9703

அபுதாபி

ஜுனைத் லோதி 050 268 4858

பதர் உஸ்மான் 050 571 0556

நீங்களும் மாபெரும் மனிதரே! - ஆக்கம் பா.குருசாமி

நீங்களும் மாபெரும் மனிதரே! - ஆக்கம் பா.குருசாமி

நண்பர்களே இங்கு வழங்கப்படும் பன்னிரெண்டு மாய சூத்திரங்களை பின்பற்ற ஆரம்பியுங்கள். என்ன மாயம்? ஓராண்டில் மிகப்பெரிய வெற்றியாளர்,சாதனையாளராக
மாறியிருப்பீர்கள்.

ஆம் நிச்சயம். நிரூபிக்கப்பட்டவை.

இதோ மாயசூத்திரம் ஓன்று

உங்களால் முடியும் என்று நம்புங்கள்.முடித்திருப்பீர்கள் - ஆம் "முடியும் என்ற நம்பிக்கை" எனும் சக்தியால் உங்கள் வெற்றியை நீங்களே நிர்மானியுங்கள். எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் அவநம்பிக்கைகளை இன்றே ஒழியுங்கள். உங்கள மனதை நேர்மறை எண்ணங்களை உருவாக்கும்படி வைத்திருங்கள் எப்படியென்றால், தோல்வியை தவிர்த்து வெற்றியையே எண்ணுங்கள்.தினமும நீங்கள நினைத்ததை விட சிறந்தவராக மாறிவிட்டீர்கள் என்பதை நினைவூருங்கள். இவ்வாறு நினைவூட்ட சிறந்ததையே, மிகப்பெரிய அளவில் எண்ணுங்கள்.

மாய சூத்திரம் இரண்டு

"சாக்குபோக்கு சொல்வது" என்ற கொடிய நோயை நீங்களாகவே குணப்படுத்துங்கள். இதில் முதலாவது "என் உடல் ஆரோக்கியம் நன்றாய இருந்திருக்குமேயானால்" ஒன்றை நினைவில வையுங்கள துருப்பிடித்து போவதைவிட தேய்ந்து போவது மேல். இவ்வுலகில இயக்கத்தில இருக்கும் எந்த பொருள் தேயவில்லை.எனவே இதிலிருந்து விடுபட சிறந்த வழி யாரிடமும உங்கள உடல் ஆரோக்கியம பற்றி பேசாதீர்கள், உடல் நலம் பற்றி கவலை கொள்ள மறுங்கள், உடல் எந்த அளவிற்கு நலமாக இருக்கிறதோ அதை நினைத்து மகிழுங்கள்.

அடுத்ததாக,"ஆனால நான் அந்த அளவிற்கு அறிவாளியாக இருந்தால்" - இதற்கு காரணம் நம அறிவை குறைத்து மதிப்பிட்டு, மற்றவர் அறிவை அதிக மதிப்பிடுவது.ஒன்றை சிந்தியுங்கள் ஏன் சில அறிவாளிகள் தோற்கிறார்கள். பதில் தவறான அணுகுமுறை.எனவே சரியான அணுகுமுறையே அறிவைவிட சிறந்தது.அறிவு என்பதை சிந்திக்கும திறன மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.

கடைசியாக, "எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால்" - இதற்கு காரண காரிய விதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.ஒரு வெற்றியாளன் தோல்வியின போது கற்றுக்கொண்டு வெற்றியடைகிறான் ஆனால ஒரு தோல்வியாளன் தோல்வியில கற்றுக்கொள்ள தோற்கிறான். அதிர்ஷடம என்பதை பரிசு சீட்டு குலுக்கலில உண்டாகும நிகழ்வு(ப்ராபபிலிடி) யுடன குழப்பிக்கொள்ளாதீர்கள் ஒருவனுடைய வெற்றியை(அதிர்ஷடம்)தீர்மானிப்பது அவனுடைய தயாரிப்பு,திட்டமிடல், வெற்றி சிந்தனை ஆகும்.

நண்பர்களே இங்கு வழங்கப்படும் பன்னிரெண்டு மாய சூத்திரங்களை பின்பற்ற ஆரம்பியுங்கள். என்ன ஆச்சர்யம்? ஓராண்டில் மிகப்பெரிய வெற்றியாளர்,சாதனையாளராக
மாறியிருப்பீர்கள்.

ஆம் நிச்சயம். நிரூபிக்கப்பட்டவை.

சென்ற பகுதியில் மாய சூத்திரம் ஒன்று மற்றும் இரண்டு பார்த்தோம். இந்தப் பகுதியில் மூன்று மற்றும் நான்கு பார்ப்போம்.

மாய சூத்திரம் மூன்று

"பயத்தை போக்கி தன்னம்பிக்கை,தைரியத்தை உருவாக்குங்கள்" - பயத்தை போக்குவதில் மிகப்பெரிய எதிரி "தயக்கம்".இதை ஒழித்துக்கட்ட ஒரே வழி "செயலில் இறங்குவது".ஆம் "செயல்" ஒன்றே பயம் என்ற மனோபாவ தொற்றுநோய்க்கு அருமருந்து.முதலில் பயத்தை அடையாளம் கண்டு வகைப்படுத்துங்கள்.பின்பு செயலில் இறங்குங்கள்.உதாரணமாக கூட்டத்தில் அல்லது அலுவலக மீட்டிங்-கில் பேச பயம் என்றால், ஏதாவது உங்கள் கருத்தை கட்டாயமாக வெளிப்படுத்தி பேசுங்கள்.நாளடைவில் நீங்கள் தான் மீட்டிங்கின் ஹீரோ.நினைவில் கொள்ள சில குறிப்புகள் - "எப்போதும் முதல் வரிசையில் அமருங்கள்", "ஒருவருக்கொருவர் பேசும்போது 'இருவரும் சமம் என்ற மனநிலையில்'கண்களைப் பார்த்து பேசுங்கள்","பயம் உணரும்போதெல்லாம் பெரிய புன்னகை செய்யுங்கள்". ஆம் புன்னகை ஒன்றே பயத்தை போக்கி தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வஸ்துவாகும்.

மாய சூத்திரம் நான்கு

"மிக உயர்வாகவே எண்ணுங்கள்" - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதற்கேற்ப உயர்ந்த குறிக்கோளை எண்ணி செயல்படுங்கள். உயர்ந்த இலட்சியத்திற்கு தடையாக இருப்பது "சுயமறுப்பு" சிந்தனையாகும். எ.கா ஒருவர் தனக்கு பிடித்த வேலைக்கான விளம்பரத்தை பார்க்கிறார் ஆனால் ஒரு முயற்சியும் செய்யாமல் வேலைக்கு தேவையான தகுதி தன்னிடம இல்லை என்று எண்ணி விட்டு விடுகிறார்.இதுபோன்ற சுயமறுப்பை இன்றோடு ஒழியுங்கள்.
உயர்ந்த அளவில் சிந்திப்பதற்கு முதலில் நேர்மறை (பாசிட்டிவான) முடிவை சித்தரிக்கும் சொல்,வாக்கியங்களை பயன்படுத்துங்கள்.மற்றவரை பற்றியும் பாசிட்டிவாக பேசிப் பழகுங்கள். "உயர்ந்து விளங்க என்றும் உயர்வாக எண்ணுங்கள்"
நன்றி. மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்

இப்படிக்கு,

பா.குருசாமி (எம்.பி.ஏ)
மேலாளர்,
ரியாத், சவுதி அரேபியா
pgsamy1974@yahoo.com