Showing posts with label நர்கிஸ். Show all posts
Showing posts with label நர்கிஸ். Show all posts

Sunday, February 22, 2009

கொய்யா பழம்

கொய்யா பழம்
( ஹாஜியா ஹெச். ரஹ்மத்துன்னிசா, கோபிச்செட்டிபாளையம் )
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது
சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!
*கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
*கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
*கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
*கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
*கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
*கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
*கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.
*கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.
*இவ்வளவு அருமை பெருமையை பெற்ற கொய்யாப்பழம் மூலம் ஜாம் எப்படி செய்வது என்கிற ரெஸிபி உங்களுக்கு போனஸாக தரப்படுகிறது.
தேவையான பொருட்கள் : நன்கு முற்றிய 10 அல்லது 12 கொய்யாப்பழங்கள், சர்க்கரை 750 கிராம், சிவப்பு நிற கலர்ப்பவுடர் 1 டேபிள்ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை: 10,12 எண்ணிக்கையுள்ள கொய்யாப் பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் பிறகு அவைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின்பு அதிலுள்ள விதைகளை நீக்கி விடவேண்டும் ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை தேவையான அளவுக்கு (சுமார் 1 அல்லது ½ டம்ளர் ) நன்கு சூடு படுத்த வேண்டும் நன்கு கொதித்த நீரில் சேர்ந்து பேஸ்ட் போன்ற பதத்துக்கு வரும். மேலும் தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் இப்போது சர்க்கரையை (சுமார் கால் கிலோ )சேர்த்து கிளற வேண்டும் இப்போது குறைவான தீ கொடுத்து பாத்திரத்திலுள்ள கொய்யா சர்க்கரை போன்றவை ஜாம் போன்ற பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும் பிறகு பதம் வந்த ஜாமுடன் ரெட் கலர் பவுடரைத் தூவி கலக்க வேண்டும் கலக்க கலக்க ஒரு சுகந்தமான நறுமணம் வருவதை உணர்வீர்கள் இவ்வாறு தயாரித்து முடித்த சிவப்பு நிற கொய்யா ஜாமை குளிமைப்படுத்தி சப்பாத்தி பிரட் போன்ற உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடலாம் இதன் ருசியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. .

நன்றி : நர்கிஸ் மாத இதழ்
பிப்ரவரி 2009

Saturday, February 14, 2009

வட்டி அழியும் !

வட்டி அழியும் !

அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !

ஏன் இது நிகழ்ந்தது?

இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.

ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !
அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.

அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்

*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது

*ஊக வணிகத்துக்கு வழியில்லை

*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை

*கடனுக்கு உடைமை உத்தரவாதம்

*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு

*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்

*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி
இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்

இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.

நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் )
தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )

உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?

இனியாவது விழித்துக் கொள்வோமா?

இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது

*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக

*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)

*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)

*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)
*கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)

*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.

*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)

*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் இருக்கிறது (94:06)

எனவே அல்லாஹ்வின் எச்சரிக்கையை அலட்சியப் படுத்தாமல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இனியேனும் ஆவன் செய்வோமா ?

( நர்கிஸ் டிசம்பர் 2008 இதழின் தலையங்கத்தில் இருந்து )

நர்கிஸ் மாத இதழ்

நிறுவனர் : மர்ஹூம் எம். முஸ்தபா ஹுசைன்
நிர்வாக ஆசிரியை : எம். அனீஸ் ஃபாத்திமா
கௌரவ ஆசிரியர் : டாக்டர் ஏ. சையத் இப்ராஹிம் எம்.பி.பி.எஸ். ( ஹிமானா சையத் )
துணை ஆசிரியை : எம். பர்வீன் ஃபாத்திமா

முகவரி :
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சிராப்பள்ளி 620 001
தொலைபேசி : 0431 2301255
அலைபேசி : 94 875 70135
மின்ன ஞ்சல் : aneesnargis@hotmail.com

Wednesday, April 23, 2008

நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்





நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம் நாவல் -கட்டுரைப் போட்டிகள்


நர்கிஸ் - மல்லாரிப் பதிப்பகம்

இணைந்து நடத்தும்

"முகம்மது இஸ்மாயில் -இபுறாஹீம் பீவி நினைவு"

நாவல் -கட்டுரைப் போட்டிகள்

கட்டுரை

தலைப்பு

"இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்"

முதல் பரிசு: ரூபாய் 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.கட்டுரை 12 முதல் 15 அத்தியாயங்களைக் கொண்டதாக அமையவேண்டும்.

2. ஒவ்வொரு அத்தியாயமும் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில்
4 - 6 பக்கம் அச்சில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. குர்ன் , ஹதீஸ் , நூல் மேற்கோல்கள் பயன்படுத்தும் போது சரியான
ஆதாரங்கள் தரப்பட வேண்டும்.


நாவல்

முதல் பரிசு: ரூபாய 5000/-
இரண்டாம் பரிசு: 3000/-
மூன்றாம் பரிசு: 2000/
5 ஆறுதல் பரிசுகள் : 1000/-

விதிகள்

1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம்,
நாட்டுப்பற்று மேவும் முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும்
சமகால சமூக நாவலாயிருக்கவேண்டும். வரலாற்று நாவல்கள் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டா.

2. அத்தியாயங்கள் 15 முதல் 18 -க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

3. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 6 - 8
பக்கம் அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

பொது விதிகள்

1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான
பெயர்/தகப்பனார்/கணவர் பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/
ஈமெயில் இவற்றுடன் ஆக்கம் தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது
மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும்
உறுதிமொழி அளித்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்

2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்

3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். க்கங்கள் கிடைத்த
ஒரு வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு
அது சம்பந்தமாக அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள்
தவிர்க்கப்பட வேண்டும்.

4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

5. ஆக்கங்கள் ஜூலை மாதம் 31 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்

6. ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.

7.பரிசு பெறும் நாவல்கள்/ கட்டுரைகள் முழுமையாகவோ/ பகுதியாகவோ நர்கிஸில்
தொடர் கதைகளாக/ கட்டுரைகளாக வெளிவரும்; அவற்றை நர்கிஸில் வெளிவரும் வரை
வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.

8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்;
அதைத்தொடர்ந்து பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ்
மூலம் தெரிவிக்கப்படும். அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம்
அனுப்பிவைக்கப்படும்.

9.கட்டுரைகள்/ நாவல்கள் நர்கிஸ் முகவரிக்கு ( 54, மரியம் நகர்,
மல்லிகைபுரம், திருச்சி- 620001, தமிழ்நாடு, இந்தியா) அனுப்பப் பட
வேண்டும் ; கடித உறையின்மீது கட்டுரை/ நாவல் என்று தெளிவாகக்
குறிப்பிடவேண்டும்

10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட
ஆக்கங்களையும் அனுப்பலாம்.


எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001


டாக்டர் அ. சையத் இப்ராஹீம்
(ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
சித்தார்கோட்டை-623513