இவரைப்போல ஒரு அண்ணன்..! (சிறுகதை)
*******************************************
காலித்தின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பெருநாள் பரிசாக அளித்திருந்தார். பெருநாளுக்கு முதல் நாள் காலித் அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்தியே தெரிந்தது.
காலித்தைப் பார்த்ததும், “இது உங்கள் காரா அங்கிள்?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். ‘ஆமாம்’ என்று தலையசைத்த காலித், “என் அண்ணன் எனக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தது இது” என்று பெருமிதமாகக் கூறினான். சிறுவனின் கண்கள் விரிந்தன.
“உண்மையாகவா சொல்கிறீர்கள்? உங்களுக்கு பைசா கூடச் செலவில்லாமல் இந்த அழகான காரை உங்கள் அண்ணனே வாங்கித் தந்தாரா? இவரைப் போல ஒரு அண்ணன்….” என்று ஏதோ சொல்ல வாயெடுத்த சிறுவன் சற்றுத் தயங்கினான். ‘இவரைப்போல ஒரு அண்ணன் எனக்கும் இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அந்தச் சிறுவன் சொல்ல நினைக்கிறான் என்று யூகித்தான் காலித். ஆனால் அந்தச் சிறுவன் தொடர்ந்துச் சொன்ன
வார்த்தைகள் அவனை அப்படியே உலுக்கி விட்டது.
“இவரைப் போல ஒரு அண்ணனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?” என்று அந்தச் சிறுவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போனான் காலித்.
“இந்தக் காரில் ஒரு ரவுண்டு போகலாம்.. வருகிறாயா?” என்று காலித் கேட்டபோது சந்தோஷமாக ஏறிக் கொண்டான் அச் சிறுவன். சிறிது தூரம் போய்விட்டு திரும்பியபோது, “அங்கிள், இந்தக் காரில் என் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று சற்றுத் தயக்கத்துடன் கேட்டான் அவன். காலித் புன்னகைத்துக் கொண்டான். ‘சின்னப் பையன் தானே..! ஒரு புதிய காரில் தான் சவாரி செய்ததை தனது
தெருத் தோழர்களிடம் பெருமையாக காட்ட நினைக்கிறான் போலிருக்கிறது’ என்று நினைத்தவனாக “ஓ.. போகலாமே!” என்றான் காலித். மீண்டும் அவனது எண்ணம் தவறாகிப் போனது.
“அதோ.. அந்த வீட்டு வாசல் படிக்கருகில் காரை நிறுத்துங்கள் அங்கிள்” என்று சொன்ன அந்தச் சிறுவன், “கொஞ்ச நேரம் பொறுங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு காரை விட்டிறங்கி அந்த வீட்டிற்குள் ஓடிப்போனான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்தபோது அவனது முதுகில் இன்னொரு சிறுவனை அவன் சுமந்துக் கொண்டிருந்தான்.
நடக்க இயலாத அந்தச் சிறுவனை வீட்டு வாசல் படியில் உட்கார வைத்த அவன், “தம்பி! இதோ பார்த்தாயா.. நான் சொன்ன கார் இதுதான்! இந்த அங்கிளின் அண்ணன் அவருக்கு பெருநாள் பரிசாக வாங்கித் தந்தாராம். ஒரு பைசா கூடச் செலவில்லாமல் இவருக்கு இந்தக் கார் கிடைத்திருக்கிறது. நான் வளர்ந்து பெரியவனானவுடன் இதே போல ஒரு காரை உனக்கு வாங்கித் தருவேன். கடைத்தெருவில் நான் பார்த்ததாகச்
சொல்வேனே, அந்த அழகான பொருள்களையெல்லாம் நீ அந்தக் காரில் போய் நேரிலேயே பார்க்கலாம்” என்று ஆவலாகச் சொன்னான்.
காரை விட்டிறங்கிய காலித் அந்தச் சிறுவனைத் தூக்கி காரின் முன் இருக்கையில் உட்கார வைத்தான். அவனது அண்ணனும் பின்னிருக்கையில் ஏறிக்கொள்ள, கண்கள் கலங்கியிருந்த அம்மூவரும் சந்தோஷமாக நகர்வலம் சென்றார்கள்.
“ஒரு இறைநம்பிக்கையாளர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் போதனையின் உண்மையான பொருளை அன்று புரிந்துக் கொண்டான் காலித்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, April 21, 2010
Friday, April 2, 2010
கருமமே ........
From: Sheikh Sintha Mathar Masoud
அஸ்ஸலாமு அலைக்கும்.
கருமமே ........
(ஷேக் சிந்தா மதார்)
அதிகாலை நாலரை மணிக்கு ‘·பஜர்’ தொழுகைக்காக வீட்டிலேயே ‘உளூ’ செய்துகொண்டு, நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்குப் புறப்பட்டார் முஸ்தபா.
தெருவிளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் சமீபத்தில் பெய்த மழையாலும் ஓரிடத்தில் கால்தவறிச் சேற்றுக்குள் விழுந்துவிட்டார்.
உடைகள் முழுக்கச் சேறாகிவிடவே, வீடு திரும்பி அவற்றை மாற்றிக்கொண்டு மீண்டும் ‘உளூ’ செய்துகொண்டு புறப்பட்டார்.
அந்த இடத்தை மிகக் கவனமாகக் கடந்துவிட்டபோதிலும், சற்றுத் தள்ளி வேறொரு இடத்தில் அதேமாதிரிக் கால்தவறி மீண்டும் சேற்றில் விழுந்துவிட்டார்.
திரும்பவும் வீடு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு, மிகவும் தாமதமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாகப் படியிறங்கியபோது, கையில் ‘லாந்தர்’ விளக்குடன் ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார். “பள்ளிக்குத்தானே போறீங்க பாய்? வாங்க, நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவாறு முஸ்தபாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
ஜாக்கிரதையாக நடக்கும் கவனத்தில் எதுவும் பேசிக்கொள்ளாமல் வந்த முஸ்தபா, பள்ளிவாசலை நெருங்கியதும், “நீங்க யாரு, தெரியலையே?” என்றார், அந்த முதியவரிடம்.
“நான்தான் ஷைத்தான்” என்று சிரித்தார் அவர்.
அதிர்ச்சியுடன் நோக்கிய முஸ்தபாவிடம் அமைதியாகத் தொடர்ந்தார் அவர். “உங்களைச் சேற்றிலே விழவச்சது நான்தான். ஆனா நீங்க திரும்பவும் வந்திட்டீங்க. ரண்டாவது தடவையும் விழச் செஞ்சேன். அப்படியும் விடாமே நீங்க மூணாவது தடவையும் வந்திட்டீங்க. முதல் தடவை சேற்றிலே விழுந்திட்டு நீங்க திரும்பவும் கிளம்பினப்பவே அல்லாஹ் உங்க பாவங்களை மன்னிச்சிட்டான். மீண்டும் ஒருதடவை நீங்க புறப்பட்டதும் உங்க குடும்பத்தார் பாவங்களையும் மன்னிச்சிட்டான். இன்னோரு தடவையும் உங்களை விழவச்சு அதுக்கப்புறமும் நீங்க கிளம்பிட்டா, ஊர்க்காரங்க எல்லாரோட பாவங்களையும் மன்னிச்சிடப் போறானேன்னு பயந்துதான் நானே பத்திரமாக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே நடக்கத் தொடங்கினார் அவர்.
* * * * * * * *
ஷேக் சிந்தா மதார்
Sheikh Sintha Mathar
Project Manager
Emirates Electrical Engineering
P.O. Box 16482, Dubai, UAE
Tel : +9714 2954808
Fax : +9714 2954880
Mob: +97150 6245662
Email: sheikh@alrostamanigroup.ae
Website: www.alrostamani.com

Thursday, March 18, 2010
சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010
சமரசம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2010
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1078
• இஸ்லாமிய மாண்புகளை, பண்பாடுகளை வலியுறுத்தும் வகையிலோ, இஸ்லாமிய வாழ்வியலின் சிறப்புக் கூறுகளை எடுத்துக் கூறும் வகையிலோ சிறுகதைகள் அமையலாம்
• சிறுகதைகள் மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ இருக்கக் கூடாது. சொந்தப் படைப்பு என்பதற்கான உறுதிமொழி அளிக்கப்படல் வேண்டும்.
• இதற்கு முன்பு வேறு எந்த ஊடகத்திலும் எந்த வடிவிலும் வெளியானதாக இருக்கக் கூடாது.
• பெயர், முகவரி, அலைப்பேசி எண் ஆகியவற்றைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதைப் பக்கங்களில் பெயரோ, முகவரியோ இடம் பெறக்கூடாது.
• அஞ்சல் தலை வைத்து அனுப்ப வேண்டாம். தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.
• சமரசத்தில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதைகள் அமைய வேண்டும்.
• உறையின் மேல் சமரசம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிடுக
• நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
முதல் பரிசு : ரூ 2000
இரண்டாம் பரிசு : ரூ. 1000
மூன்றாம் பரிசு : ரூ. 500
( பரிசு பெறாத கதைகள் தகுதியிருப்பின் சமரசம் இதழில் வெளியாகும் )
சிறுகதைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 31.03.2010
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர்
சமரசம்
எண் 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
தொலைபேசி : 2662 0091
தொலைநகல் : 2662 0682
மின்னஞ்சல் : samarasam12@gmail.com
www.samarasam.net

Wednesday, May 6, 2009
சிறுகதை : வாழ்க்கையின் விலை ( பா.பாத்துமுத்து – திருமங்கலம் )

முஸ்தாக் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்துக் கொண்டிருந்தான்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணி விட்டோமே என மனம் துடியாய் துடித்தது. யா அல்லாஹ்! வேறு வழியே தெரியவில்லையே. தங்கை ரஷிதா வாழ வேண்டுமே எனப் புலம்பினான். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
முஸ்தாக் பத்தாவது வரை மட்டுமே படித்திருந்தான். குடும்பச் சுமையின் காரணமாக படிக்க ஆசை இருந்தும் அவனால் மேலே படிக்க முடியவில்லை.
ரசாக் பாயின் மளிகைக் கடையில் சிறு வயது முதலே வேலை பார்த்து வந்தான். ரசாக் பாயும், அவர் மனைவி அஜீஜாவும், முஸ்தாக்கை பெற்ற பிள்ளை போல் பார்த்துக் கொண்டார்கள்.
ரசாக் பாயின் வீட்டுக்குள் சுதந்திரமாக சென்று வரும் உரிமை முஸ்தாக்கிற்கு மட்டுமே உண்டு. ரசாக் பாயின் பிள்ளைகள் சல்மானும், சுலைமானும் முஸ்தாக்கிடம் அண்ணே, அண்ணே என்று அன்பாகப் பழகினர்.
முஸ்தாக்கிற்கு அம்மாவும், தங்கையும் மட்டுமே உண்டு. வாப்பா இல்லை. முஸ்தாக் கொண்டு வரும் வருமானமும், தீப்பெட்டி ஒட்டும் வருமானமும் மூவருக்கும் இரண்டு வேளை கஞ்சி குடிக்க போதுமானதாக இருந்தது.
இந்த நிலையில் ரஷிதாவுக்கு பதினைந்து பவுன் நகை போடுவதாகப் பேசி பக்கத்து ஊர் இஸ்மாயிலுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். தாயின் பழைய நகை பத்துப் பவுனைப் போட்டு ஐந்து பவுன் நகை ஆறுமாதம் கழித்துப் போடுவதாகப் பேச்சு. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது.
ரஷிதா பத்து நாளைக்கு முன் கண்ணை கசக்கிக் கொண்டு பெட்டியுடன் ஊர் வந்து சேர்ந்தாள். “என்னம்மா ரஷிதா, தீடீர்னு மச்சான் வரல்லையா?”
அண்ணே, ஐந்து பவுன் நகை வாங்கிட்டுத்தான் ஊருக்கு வரணும்னு என் மாமியார் என்னை துரத்தி விட்டுட்டாங்க.
ஏம்மா மச்சானுக்கு நம்ம நெலமைத் தெரியாதா?
தெரிஞ்சு என்னண்ணே பிரயோஜனம்? என்னை நகை வாங்கிட்டு வா. இல்லைன்னா நகைக்கு உரிய பணத்தை யாவது வாங்கிட்டு வான்னு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறாரு எனத் தேம்பி தேம்பி அழுதாள்.
முஸ்தாக்கின் இரத்தம் கொதித்தது. பொண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்த வக்கில்லை. மாமியார் வீட்டுலேயே புடுங்கணும்னு நெனைக்கிற இவனெல்லாம் ஆம்பிளை எனக் காறி உமிழ்ந்தான்.அதே மனக் கசப்புடன் வேலைக்குச் சென்றான்.
அங்கே அஜீஜா, ஏய் முஸ்தாக், இங்க வாப்பா அஞ்சு பவுன்ல நெக்லஸ் வாங்கி இருக்கேன். முதலாளி டிசைன் நல்லா இல்லைன்னுட்டாரு. நீ பார்த்துச் சொல்லுப்பா நல்ல இருக்கா,இல்லையான்னு.
சூப்பரா இருக்குமா, நீங்க கழுத்துல போட்டா இன்னும் அழகாயிரும். அஜீஜா கணவனை பார்த்து கேட்டுக்கங்க.
அவன் நீ என்ன செஞ்சாலும் சரின்னுதான் மாடு மாதிரி தலையாட்டுவான். அவன் உன்னோட செல்லப் புள்ளையாச்சே!
உங்களுக்குப் பொறாமை தாயும் புள்ளையும் ஒண்ணாப் பேசுறதைப் பாத்து
இப்படி தாயும், தந்தையுமா பழகுறவுங்க வீட்டில் இருந்து முஸ்தாக், அஜீஜா ஆசையாய் வாங்குன நெக்லஸைத் திருடி விட்டான்.
மனம் வெட்டி போட்ட பல்லியின் வாலாய் துடித்தது.
ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு தங்கையின் கையில் கொடுத்து கடன் வாங்கி இந்த நெக்லஸை வாங்கினேன் எனப் பொய் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தான்.
யா அல்லாஹ்! இந்த வரதட்சணை கொடுமை என்றுதான் மறையுமோ? இதனால் பாவங்களுக்கு ஆளாகி வேதனைத் தீயில் வாடிகிறோமே! நான் செய்த நம்பிக்கைத் துரோகத்தை நீயும் உரியவர்களும் மன்னிப்பார்களா? என்று புலம்பித் தள்ளினான்.
அன்று முதல் சிரிப்பை தொலைத்து விட்டு நடை பிணமாக நடமாடினான்.
ரசாக் பாய் நல்ல உள்ளத்துடன் முஸ்தாக் நீ ஏண்டா இப்புடி உம்முன்னு இருக்க, அம்மா ஆசையா வாங்குன நகை தொலைஞ்சு போச்சுன்னா அவ எங்கயாவது ஞாபக மறதியா கழட்டி வச்சுருப்பா இல்லைன்னா கொக்கி கழண்டு எங்கயாவது கீழ விழுந்திருக்கும். நீ கவலைப்படாதடா என உண்மை தெரியாமல் ஆறுதல் சொன்னார். அன்பான இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு மேலும் அனலில் இட்ட புழுவாய்த் துடித்தான். நிம்மதியில்லாமல் தவித்தான். நாட்கள் சென்றன.
ஒரு கல்யாண வீட்டில் தற்செயலாக ரஷிதாவின் கழுத்தில் நகையைப் பார்த்த அஜீஜா திகைத்துப் போனாள்.
ஏம்மா ரஷிதா இந்த நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கே எங்கேம்மா வாங்குன?
அஜீஜா நகையை கழட்டி வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள்.
நான் வாங்கலைம்மா அண்ணன் தான் வாங்கிக் குடுத்தாங்க.
அஜீஜாவிற்கு உண்மை புரிஞ்சு போச்சு. பந்தலில் உட்கார்ந்திருந்த கணவனை அழைத்து உண்மையை விளக்கினாள்.
அப்புடிச் சொல்லாதம்மா அவன் ரொம்ப நல்லவன்.
இல்லைங்க இது என் நெக்லஸ்தான். நான் வாங்குன கடை முத்திரை அதுல இருக்கு. என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. வாங்க வீட்டுக்குப் போவோம். அவனை கூப்பிட்டு விசாரிப்போம்.
அங்கே ரசாக் பாய் முஸ்தாக்கை அழைத்து, முஸ்தாக் அல்லாஹ்வின் மேல் ஆணையா கேக்கிறேன். நீ தப்பு செய்தியா?
வாப்பா, என்னை மன்னிச்சுருங்க, என்னோட தங்கச்சி வாழணும்கிற ஆசையில தப்பு செய்திட்டேன். இந்த பாவ காரியத்தால தினம், தினம் நிம்மதியில்லாம செத்துக்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட என்னைய சோறு போட்ட உங்க கையாலேயே அடிச்சு கொன்னுருங்க என்று பதறித் துடித்து அழுதான்.
விபரங்களை கேட்டறிந்த ரசாக் பாய் கண்கள் கலங்க வரதட்சணை என்கிற பேய் ஒரு நல்லவனை எப்படி திருடனா மாத்தியிருக்கு பாத்தியா! யா அல்லாஹ் இது என்ன கொடுமை! இது மாதிரி எத்தனையெத்தனை நல்லவர்கள் தவறிழைத்து விட்டு துடிக்கிறார்களோ? எத்தனையெத்தனை குடும்பங்கள் கடனில் மூழ்கி நாதியற்று நடுத்தெருவில் தவித்து வருகிறார்களோ? பாழாய் போன இந்த வரதட்சணை பழக்கம் எப்படி மார்க்கத்தில் புகுந்தது? ஆமாம்! இதற்கு எதாவது ஒரு வழி செய்தாகனும். டேய் முஸ்தாக்! நீ செய்த இந்த தவறை நாங்க மன்னிக்கனுமா- வேண்டாமா? சொல்லு
அல்லல்லா – இப்படி சொல்லாதீங்க வாப்பா, நீங்க மன்னிச்சாதான் அல்லாஹ்வும் என்னை மன்னிப்பான் என்று மனசு வெடிக்கக் கதறினான்.
அப்போ நான் சொல்வதை செய்வீயா?
நீங்கள் என்ன சொன்னாலும் சரி அப்படியே செய்வேன் என்றான் விம்மியபடி.
அப்படியா! நீ கல்யாணம் செய்தால் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்க மாட்டேன் என்று சத்தியம் செய். அது மட்டுமல்ல உன் வயிற்று பிள்ளைக்கும் வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தால்தான் நாங்கள் உன்னை மன்னித்து விடுவோம். என்ன சரிதானே?
திடுக்கென்று எழுந்து வல்ல நாயன் மீது ஆணை ! இந்த வரதட்சணை கொடுமையை அனுபவ பூர்வமாக அனுபவித்து துடித்தவன் நான். இந்த கொடுமை யாருக்கும் வேணாம். நானோ எனது பிள்ளைகளோ வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் செய்து நபி (ஸல்) அவர்கள் வழியில் இல்லறத்தை நல்லறம் ஆக்குவேன் வாப்பா என்று கதறியவாறு வாப்பாவை இறுக அணைத்துக் கொண்டான். அங்கே ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது.
நன்றி : நர்கிஸ் – ஏப்ரல் 2009

Labels:
சிறுகதை,
திருமங்கலம்,
பா.பாத்துமுத்து,
வாழ்க்கையின் விலை
Wednesday, April 22, 2009
சிறுகதை : “நான் ஹஜ்ஜூக்குப் போகணும்!” கே.ஜெய்புன்னிஸா ( ஜெய்பு )

தணல் அடுப்போடு இணைக்கப்பட்ட அலுமினிய தேக்சாவோடு ஊர்வலம் புறப்பட்டு விட்டார் அபூபக்கர்.
சுக்கு காப்பி சூடான சுக்கு காப்பி! கட்டமிட்ட லுங்கியும் அரைக்கைச் சட்டையுமாக சுக்குக் காப்பி விற்கக் கிளம்பினார். அவர் காய்கறி, மளிகைக் கடைகள் நிறைந்த அந்த அங்காடியில் இருந்த வியாபாரிகளே அவரது வாடிக்கையாளர்கள் !
என்ன அபூபக்கரே ஹஜ்ஜூக்குப் போகனும்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிட்டிருப்பியே? என்னாச்சு? வெங்காயக் கடை வகாபு வாயைக் கிளறினான்.
நிச்சயமா ஒரு நாளு நானும் ஹஜ்ஜூக்கு மக்கத்துக்குப் போயி அல்லாவோட பள்ளியிலே தொழுவேன்! இது நெசம்! சுக்குக் காப்பியை ஆற்றிக்கொண்டே சொன்ன அபூபக்கரின் வார்த்தைகளில் உறுதி தொனித்தது.
இருக்கப்பட்ட பணக்காரங்களாலேதான் ஹஜ்ஜூக்குப் பயணம் போகமுடியும்? ஒங்களைப்போல கூலிப்பாட்டுக் காரங்களாலே லட்சக்கணக்கிலே பணம் செலவு செஞ்சிட்டுப் போக ஏலுமா? அவன் குரலில் கிண்டல் தெரிந்தது.
நானு சுக்குக் காப்பி விக்கிறவன் தான். நாளு முச்சூடும் சுத்தினாலும் முப்பது ரூபாய்க்கு மேலே கிடைக்காத வருமானம் இதிலே தெனமும் ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைச்சுட்டு பத்து ரூவாயா சேர்த்துக்கிட்டு வர்றேன்!
எந்த வேளைச் சாப்பாட்டை குறைக்கிறே?
காலம்பற பசியாறலைத்தான்! வெறும் சுக்குக் காப்பியோடு சரி!!
இல்லாட்டா மட்டும் பரோட்டாவும் குருமாவுமாக ஆக்கி எறக்குறேயாக்கும்? காயற கும்பி ஒரு நல்ல கொள்கைக் காகக் காயட்டுமே?
பேசிக்கொண்டே லாவகமாகக் கூடியிருந்த கூட்டத்தினருக்குச் சுக்குக் காப்பியை ஆற்றிக் கொடுத்துத் தலைக்கு அறுபது காசாக வாங்கிப் பையில் போட்டுக் கொண்டிருந்தார் அபூபக்கர்.
பத்து ரூபாயாகப் பணம் சேர்த்து மக்கத்துக்குப் போறது எந்த நாளு? அதுக்குளர ஆயுசு முடிஞ்சுருமே? பக்கத்துக் கடை மணியும் அவரைக் கிண்டல் செய்வதில் சேர்ந்து கொண்டான்.
அப்படிச் சொல்லாதீங்க! கண்ணை மூடறதுக்குள்ளே ஹஜ்ஜூக்குப் போயி ஹாஜியாராத் திரும்பணுங்கிறது என்னட நெடுநாளு ஹாஜத்து (ஆசை)
என்னென்னமோ அதிசயமெல்லாம் இந்த கம்ப்யூட்டர் காலத்துல நடக்குது ! அப்படி ஏதாவது அதிசயம் நடந்து லாட்டரியிலே லட்சமாக விழுந்தா நீ ஹாஜியாராகலாம் ! குஞ்சு வாப்பாவின் வார்த்தைகளில் நையாண்டி தொனித்தது.
சுக்குக் காப்பி… சூடான சுக்கு காப்பி … சுமை இறக்கிக் கொண்டிருந்த லாரியை நெருங்கினார் அபூபக்கர் காப்பி பாத்திரம் அந்தக் காலை வேளையில் காலியாகிக் கொண்டிருந்தது.
அபூபக்கருக்கு ஆண் வாரிசு இல்லை. பெற்றது இரண்டுமே பெண்கள் எப்படியோ ஏழெட்டு வகுப்புவரை படிக்க வைத்தார். பெண்கள் புத்தியறிஞ்சவுடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே குர்ஆன் ஓதவைத்தார். மூன்று வருடங்களில் பெண்கள் அரபிப் பாடங்களை ஓதி முடித்தனர்.
சிறுகச் சிறுக சிறுவாடு சேர்த்துக் காதை மூக்கை மூடி அரிசிக் கிடங்கில் சாக்குத் தைத்துக் கொண்டிருந்த ஈசுபுக்கு மூத்த பெண்ணை எளிமையாக மணம் முடித்துக் கொடுத்தார்.
இரண்டாவது பெண் முமினாவையும் சைக்கிளில் சுற்றிப் பழைய பேப்பர் வியாபாரம் செய்து கொண்டிருந்த தூரத்து உறவான இஸ்மாயிலுக்கு மணம் முடித்துக் கொடுத்துத் தன் கடமையை முடித்தார்.
நெஞ்சில் சிறு பொறியாய் ஒளிர்ந்த ஹஜ் பயண ஆசை நாளாக ஆக பெருந்தீயாய்ப் பற்றியெரிந்தது. நபிகள் நாயகம் நடந்த புனித மண்ணை மிதிக்க வேண்டும்! அவர்களின் அடக்கத்தலத்தைக் காணவேண்டும். மக்கத்துப் பள்ளியில் தொழவேண்டும். ஹஜ்ஜூ கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற அவா இப்பொழுது அவர் நெஞ்சின் வேட்கையாகவே மாறிவிட்டது.
அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத ஒரு பரம ஏழை. ஹஜ்ஜூக்கு போகவேண்டும் என்கிற பணக்கார பெரிய கனா காண்பதையறிந்து அந்த வட்டாரத்தில் அவரை அறிந்தவர்கள் வேண்டுமென்றே வாயைக் கிண்டி கிண்டல் செய்வது வாடிக்கையாகிப்போனது.
யார் என்ன கேளி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஹஜ்ஜூப் பயணத்திற்காக யார் யாரையோ போய்ப் பார்த்து அதுபற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு எழுதிப் போட்டார். ஹஜ் கமிட்டி மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவசப் பயணமாக ஒருவரின் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதையறிந்து அதற்கும் பெரிதும் முயன்றார்.
உங்களுக்கு வேற வேலையில்லே! பணம் படைச்சவங்களே ஹஜ்ஜூக்குப் பயணம் பண்ண ஏலும் நம்மப்போல கூலிக்காரங்க அதை நெனச்சுக் கூடப் பார்க்க முடியாதே? வீணா ஏங்க ஆசையை வளர்த்துக்கிறீங்க
அவர் மனைவி புலம்பினாள்.
ஆயிஷா பார்த்துக்கிட்டே இரேன்! என்னை கேலிபேசின இந்த ஊருக்காரங்களே மூக்கு மேலே விரல் வெக்கிற மாதிரி நானும் ஒரு நாளு ஹஜ்ஜூக் கடமையை நிறைவேத்த மக்காவுக்கு போகத்தான் போறேன். எப்பவும்போல ஹஜ்ஜூக் கமிட்டிக்கி எழுதிப் போட்டிருக்கு ! என்னிக்காச்சும் கிடைக்கும் !
மண்ணில் பாய்ந்த ஆணிவேராய் அவர் நெஞ்சில் வேரோடி யிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கை கண்டு மலைத்துப் போனாள் ஆயிஷா.
வெள்ளிக்கிழமை ஜூம் ஆத் தொழுகை நேரத்தில் மவுலவி, ஹதீஸ் என்னும் நபிகள் நாயக வாழ்வின் நிகழ்ச்சி பற்றி உரையாற்றி முடித்தார்.
அப்போது
ஜமாஅத் குழுவில் முத்தவல்லி முக்கிய செய்தியை அறிவிக்கும் பொருட்டுக் கூட்டத்தின் முன் வந்தார். ஊரார் பற்றிய முக்கியமான அறிவிப்பை அப்போதுதான் தெரிவிப்பது அவ்வூரின் வழக்கம்.
முத்தவல்லி தொடர்ந்தார். இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்பவர்கள் பட்டியலில் ஹஜ் கமிட்டியின் செலவில் இலவசப் பயணம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் தெரியுமா? அவர் நிறுத்திவிட்டுக் கூட்டத்தினரைப் பார்த்தார்.
அவைக்கூட்டம் வியப்பும் ஆர்வமுமாகப் பார்த்தது அந்த அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல சுக்குக் காப்பி விற்கும் அபூபக்கர்தான் ! அவருக்கு நாம் உதவுவதோடு நம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
கூட்டத்திலுள்ளவர்கள் அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப் புகழ்ந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்த ஆனந்தம் அடங்க சில நிமிடங்களாயிற்று.
கடைசியில் அவரோட அசைக்க முடியாத நம்பிக்கை நிறைவேறிவிட்டது.
கூட்டம் பரவசத்தோடு முணுமுணுத்தது.
படைச்சவனே! என் நாட்டத்தை நிறைவேத்திட்டே! நன்றி ஆனந்தக் கண்ணீர் பார்வையை மறைக்க இரு கரமேந்தி இறைவனுக்கு நன்றி கூறினார் அபூபக்கர்.
தொழுகைக்கு கூடிய கூட்டத்தினர் அபூபக்கருக்காகத் துண்டேந்தி வந்தவரிடம் தம்மால் முடிந்த தொகையை அள்ளிக்கொடுத்தனர்.
தன்னுடைய புனிதப் பயணத்திற்காக ஊராரே முன்வந்து உதவுவதைக் கண்டு மனமுருக மெய்யுருக மெழுகாய்க் கரைந்து கண்களிலிருந்து நீர் வழிய நின்றார் அவர்.
இறைவன் எவ்வளவு கருணையாளன்!
அந்த நல்ல செய்தியை தம் மனைவி ஆயிஷாவிடம் சொல்ல உள்ளம் நிறைந்த உவகையோடும் கனக்கும் பணப்பையோடும் வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தார் அபூபக்கர்.
நன்றி : இனிய திசைகள் பிப்ரவரி 2003

இனிய திசைகள்,
கே.ஜெய்புன்னிஸா,
சிறுகதை,
ஜெய்பு,
ஹஜ்
Saturday, March 14, 2009
சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி
அமுதம் மாதஇதழ் மற்றும் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி
சிறுகதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 1000
2 வது பரிசு ரூ. 500
3 வது பரிசு ரூ. 300
ஆறுதல் பரிசு - 5 ரூ. 100
சமுதாய சிந்தனையுடன் சமூக, வரலாற்று பின்னணி கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் அமுதம் இதழின் மூன்று பக்கங்களுக்கு மிகாது இருக்க வேண்டும்.
கவிதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 500
2 வது பரிசு ரூ. 300
3 வது பரிசு ரூ. 200
ஆறுதல் பரிசு - 5 ரூ. 50
கவிதைகள் சமுதாய வளர்ச்சி சிந்தனைகள் கொண்டதாகவும் 20 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
சிறுகதை, கவிதைகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள். 31-3-2009
அனுப்ப வேண்டிய முகவரி:
Kathai & Kavithai Potti
Editor,
Amudam tamil monthly,
519, Main Road,
Christu nagar,
Nagercoil - 629003
K.K. Dist., TN, India.

Subscribe to:
Posts (Atom)