Friday, July 18, 2008

மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!

மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!

த.மு.மு.க. புதிதாக அரசியல் கட்சி தொடங்குகிறதாம் - தொடங்கட்டும்...

ஆனால்..... அதற்கு ஏன் முஸ்லிம் லீகை வம்புக்கு இழுக்க வேண்டும்?

~புதிய கட்சியை விரும்பி தொடங்கவில்லையாம்... மாறாக சமுதாய நிர்ப்பந்தத்தில் தொடங்குகிறார்களாம்... அவர்களின் ~மக்கள் உரிமை~ வார ஏடு சொல்கிறது.
விருப்பம் எப்போதிருந்து - ஏன் வந்தது என்பதற்கு அவர்களின் ~முன்னாள் நண்பர்கள் பதில் சொல்லியும் ~உணர்வு~ வரவில்லையா?

அவர்கள் கட்சி தொடங்க சமுதாய நிர்ப்பந்தமாம் - அடடடடடா.....
தமிழ்நாட்டின் பன்னிரண்டாயிரம் பள்ளிவாயில் களும் மஹல்லா ஜமாஅத்தும், ~நீங்கள் கட்சி தொடங்கி எங்களை காப்பாற்றுங்கள் என்று வரிசையில் நின்றல்லவா இவர்களை கெஞ்சினார்கள்?

அரசியல் நிர்ணய சபையில் முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆற்றிய பங்களிப்பு - நாடாளுமன்றத்தில் நமது தலைவர்களின் முழக்கங்கள் - சட்டமன்றத்தில் தாய்ச்சபையின் மகத்தான பணிகள் சமுதாயத்தின் மானத்தை - ஷரீஅத் சட்டத்தை காப்பாற்றியது@ நம் உரிமைகளை பெற்றுத் தந்தது!

முஸ்லிம் லீக் தலைவர்களை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் அனுப்பியதால் இந்த சமுதாயம் பலன் பெற்றதா, இல்லையா என்ற கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை@ அதற்கு சமுதாயமே பதில் சொல்லியது 2008 ஜூன் 21இல்!
அலைகடலும், மலைமுகடும் அதிர்ந்து போகின்ற அளவிற்கு சென்னை வீதிகளில் சிங்கார நடைபோட்ட பிரம்மாண்டமான பிறைக்கொடி பேரணியும்...

தீவுத்திடலிலே திணறிய மாபெரும் முஸ்லிம் லீக் மாநாடும் சமுதாயம், யார் பக்கம் எனச் சொல்லிக் காட்டியது. பங்கேற்ற தோழமைத் தலைவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். பத்திரிகைகள் அனைத்தும் வித்தியாசம் பாராமல் வியந்து எழுதின. டாக்டர் கலைஞரே ~எங்களோடு சம பலம் உள்ளவர்கள்~ என சான்றளித்தார்.

ஆனால்...

~மக்கள் உரிமைக்கு~ மட்டும் இது ~நோயாளி கட்சி~யாக தெரிகிறதாம். அவர்களுக்கு அப்படித்தான் தெரியும்.

கருப்புக் கண்ணாடி உயர்த்தப்பட்ட சிவப்பு விளக்கு சுழலும் ஏ.சி. காரில் ஓசி பயணம் செல்பவர்களுக்கு இந்த மாபெரும் எழுச்சி தெரியவா போகிறது?

தென்காசி கலவரம் - முஸ்லிம் சிறைவாசிகள் பிரச்சினையில் முஸ்லிம் லீக் குரல் எதிரொலிக்கவில்லையாம்.

சொல்வது யார் தெரியுமா......?

நம் சமுதாயத்தின் அணிவகுப்பை சீர்குலைத்தவர்கள்!

சகோதர சமுதாயங்களோடு நல்லுறவை நாசமாக்கி யவர்கள் - அப்பாவி இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி ~உள்ளே~ தள்ளி விட்டு அவர்கள் குடும்பங்களை நடுவீதிக்கு கொண்டு வந்தவர்கள்!!

இவர்கள் கூற்றுக்கு இந்த மாதத்தின் அத்தனை முஸ்லிம் பத்திரிகைகளும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஆம்!

முஸ்லிம் லீக் மாநாட்டில் இதற்கான தீர்மானத்தை தன்னலம் அறியா சமுதாயத் தலைவர் பேராசிரியர் பெருந்தகை உணர்ச்சிமயமாகி முதல்வர் கலைஞர் முன்னிலையில் முன்மொழிந்தபோது எழுந்த தக்பீர் முழக்கம் அகிலத்தை அதிர வைத்தது@ அதன் எதிரொலி கேட்டு வானமும் அழுதது!

என்ன செய்வது? இந்த முழக்கம் இவர்களுக்கு மட்டும் கேட்கவில்லையெனில் கோளாறு அவர்கள் காதுகளில்தான்!

அடைபட்டுக் கிடப்பவர்கள் பிரார்த்தனை - அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லி எழுதும் கடிதமே இவர்களின் கேள்விக்கு பதில்.

ஏன்....

~வக்ஃபு வாரிய தலைவர்~ பதவியை வாதாடி போராடி கெஞ்சி கூத்தாடி கேட்டுப் பெற்றதற்கு பதில் ~முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை~யை கேட்டுப் பெற்றிருந்தால்...

இல்லை.... இல்லை.....

10 ஆண்டு காலம் சிறையில் வாடும் த.மு.மு.க.வின் நிறுவனத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் விடுதலையை மட்டுமாவது கேட்டுப் பெற்றிருந்தால் இவர்கள்தான் உண்மையான சமுதாய காவலர்கள் என பாராட்டு விழாவே நடத்தியிருப்போம் என்று சமுதாயம் சொல்கிறது.

ஆனால்.... எந்த இயக்கத்தால் வளர்ந்தார்களோ அந்த ~சிமி~ இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்டதையே கண்டுகொள்ளாதவர்கள் இந்த அப்பாவிகளை கண்டுகொள்ளப் போகிறார்களா என சமுதாயம் முணுமுணுப்பதும் நம் காதில் விழுகிறது.
'இறைவனை நம்பி தூய எண்ணங்களோடு" கட்சி தொடங்குகிறார்களாம்.
அடடா... எவ்வளவு இறை பக்தி! எத்தனை தூய எண்ணம்!! 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்றைக்கும் அரசியலுக்கு வரமாட்டோம்" என பொது மேடையில் சத்தியம் செய்தவர்கள்...

~அந்த சத்தியம் என்னாயிற்று?~ என அல்லாஹ் கேட்கவா போகிறான் என்ற அலட்சியத்தில் இன்று அவனை வம்புக்கு இழுக்கின்றனர்.

'சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும், சாக்கடை அரசியலை விட்டும் பாதுகாப்பு தேடுகிறோம்" என மேடைதோறும் சொல்லிவிட்டு, இன்று என்ன தூய எண்ணத்தோடு அரசியல் கட்சி தொடங்குகிறார்களே...?

சாக்கடை சுத்தமாகி விட்டதா? அல்லது அவர்கள் சாக்கடையாகி விட்டார்களா...? என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தெரியாது.

~பொதுச் செயலாளருக்கே~ வாரியத் தலைவர் பதவி என்றால் ~தலைவருக்கும்~ ஒரு பதவி வேண்டாமா? என்ற ஆசையின் வெளிப்பாடுதான் அவர்களின் அரசியல் பிரசவம். இதை சமுதாயம் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறது.

தூய எண்ணத்தோடு கட்சி தொடங்குபவர்களுக்கு ஒரு கேள்வி:

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் முஸ்லிம் லீக் தலைவர்களை சுயநலவாதிகள் என வர்ணித்தவர்களே...!

இந்த ஒப்பந்தம் தொடர்பாக முஸ்லிம் லீகின் நிலைப்பாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இதுதொடர்பான செய்திகளும், சிறப்புக் கட்டுரையும் ~மணிச்சுடரில்~ வெளிவந்துள்ளன.
புகைக்கு பயந்து நெருப்பில் விழுவது புத்திசாலித்தனம் அல்ல!

அணுசக்தி ஒப்பந்தம் என்ற புகையைவிட பாரதீய ஜனதா ஆட்சி என்ற நெருப்பு பயங்கரமானது.

எனவே....

த.மு.மு.க. ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டாம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. ஒரு பிரதான கட்சி. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அது ஆதரவளிக்கிறது.

இப்படி ஆதரவளிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு அடையாளமாக தி.மு.க. எங்களுக்குத் தந்த வக்ஃபு வாரிய தலைவர் பதவியை திரும்ப தருகிறோம் என்று சொல்லி பதவி விலகல் கடிதத்தையும், சிவப்பு விளக்கு காரையும் கொடுத்து விட்டு தங்கள் தூய எண்ணத்தை நிரூபித்து காட்டட்டும்!

அதற்கு சுயநலம் தடையாக இருக்கும் எனில் த.மு.மு.க. வாயை மூடிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன்களில் ஜனாஸா வேலையை மட்டும் பார்க்கட்டும்.

அரசியலை முஸ்லிம் லீக் பார்த்துக் கொள்ளும்...

-நூர் நிஷா


http://www.muslimleaguetn.com/news.asp

Arabi Center for Arabic Studies

Arabi Center for Arabic Studies
Discover the mastery of Arabic
www.Arabi-Center.com



Our aim is to enable non Arabic speakers to master Arabic language correctly and fluently
Our teachers are native Arabic speakers , highly qualified with up-to-data efficient methods of teaching.
Through our different programs you will be able to :
1-Learn Arabic basic skills ( Listening ,Reading ,Writing, and Speaking ).
2-Speak Egyptian colloquial Arabic.
3-Learn Tajwid and the recitation of the Nobel Qur'an.
4-Learn the art of Arabic calligraphy " Khatt Arabi "
Our Mission:
-To provide our non-Arabic students with various programs and courses which meet their needs in the process of learning the Arabic language.
-To help our students master the Arabic Language with its basic skills: listening, reading, writing and speaking.
How do We Accomplish our Mission?
Teachers:
-Our teachers are selected carefully:
.They are certified and experienced teachers
.All of them are native speakers and hold a university degree
.They are qualified to teach Arabic as a foreign language
.They keep up with the up-to-date methods of teaching through joining relevant workshops, seminars, courses.........etc.
Learning:
-You can practice Arabic through real life situations by joining the trips organized occasionally by the center.
-The Teaching materials, selected carefully by professional educators, has been widely accredited.
-A library and a book store are available at all times.
-Audio and visual aids are used in class.
-A guide in class is available for beginners whose native language is : English, Spanish, Japanese, Italian, French, or German.
-Free internet service for the students. ( Free cyber , wireless connection for personal computers )
-Arabic Language lap available for all students.
Courses:
-Courses are offered at any level of Arabic: from the beginners to the advanced level.
-The maximum number of students in each class is eight.
-Regular and intensive courses are available.
-Individual courses are available throughout the year.
Offers:
-Arabi center presents several offers from which you can choose whatever suits you.
-Special packages for families.
Services:
- Pick up service (from Borg Al-Arab, Alexandria Airport or Al-Nozha, Alexandria Airport to your lodging address).
-Accommodation:Various prices, various options (Hotels, single apartment or shared apartments).
-Helping you get the driving license, work permit or renew visa.
Our Courses
Modern Standard Arabic (MSA).
Classic Arabic (CA).
Egyptian Colloquial Arabic (ECA).
Arabic calligraphy ‘Khatt-Arabi’.
Conversation course.
Arabic- for-business course.
Advanced Arabic studies ‘Sarf (morphology), Nahu (grammer), Balaghah (rhetoric)’.
Courses for children
Training courses for Arabic language teachers
Islamic Courses:
Qu’ranic Recitation and Memorization “Tajweed & Hifz”.
Islamic culture and basics.
Courses for children
General and Special Arabic Courses with prices list
Courses times tables with details
Arabi Center special Offers




For more information about Arabi Center visit us at :
www.Arabi-Center.com

கோபத்தை வெல்ல...

1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.
.

.2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ? வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.

.

.3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும்.

.

.4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும்.

.

.5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்.


. 6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

.

.7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.

.

.8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.

.

.9. பேசுங்கள். உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.

A Program on Shariah-compliant investments in Indian Stocks

A Program on Shariah-compliant investments in Indian Stocks

Assalamualaikum,

It is a great pleasure in inviting you to an introductory program on investments in India Stocks in a Shariah-compliant way. Please note the following details and mark your calendar for the program at Etawah, Uttar Pradesh.


City: Etawah (Uttar Pradesh)
Venue: Chanakya Hotel, Pakka Talab, Agra Road, Etawah, UP 206001
Date: Sunday, 20-Jul-2008
Time: 11.00 am - 01.30 pm (A brief introduction on Shariah-compliant investments in Indian Stocks)
01.30pm – 02.00pm (Break for Salaat)
02.00pm – 04.00pm (Question Hour & Relationship Building)



For more details, please contact
+91-98494 73470 (Riaz) or +91-93913 98455 (Ahmed Siddiq)

Local Contact (Etawah)
+91-9897027019 (Mr. Azharuddin Riyazi)

Hidayaa?

Hidayaa endeavours to bring to you the best of Indian stocks and the trading practices which are Shariah-compliant all under one roof. Hidayaa, a novel concept of investing in stocks, is a pioneering effort of corporate member of NSE, BSE & CDSL viz., Saaketa Consultants Limited having professionals with an experience of over a decade in the stock advisory and trading services.

Services

Hidayaa, the innovative concept offers the following stock related services
· Stock trading on NSE, BSE
o Trade Online
o Trade on Telephone
o Trade in Person
· IPO (Primary Market Issue)
· Stock Research & Recommendations
· Demat Services (Dematerialization of share certificates)





Wassalam,
Syed, Abdul Najeeb

Hidayaa (A Shariah-compliant Investment Concept),
Saaketa Consultants Ltd. (Member: NSE, BSE & CDSL),
8-1-21/169,S.K Enclave (Ground floor)
Opp-Reliance Fresh, Surya Nagar Colony,
Tolichowki, Hyderabad , India 500 008
Website: www.hidayaa.com
Email : hafiz.najeeb@hidayaa.com
Off: +91-40-40-2356-4113, 40-6680-1063
Mob: +91-998-986-8323

ஓமன் நாட்டின் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா

ஓமன் நாட்டின் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா

ஓமன் நாட்டின் கடைக்கோடி நகராம் சலாலாவில் சுற்றுலாத்துறை நடத்தும் வருடாந்திர விழா செவ்வாய் மாலை துவங்கியது. சலாலாவின் அல் முரூஜ் தியேட்டரில் நடைபெற்ற இவ்விழாவில் 6000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

சலாலாவின் காலநிலை மாறுபாட்டையொட்டி நடக்கும் இவ்விழா கரீஃப் பருவம் என அழைக்கப்படுகிறது. ஆறு வார காலம் இவ்விழா நடைபெறும். வளைகுடாவெங்கும் கடும் வெயில் வாட்டியெடுக்கும் இந்நேரத்தில் இப்பருவத்தில் லேசான மழை, காலநிலை மாறுபாடு இவற்றின் காரணமாக வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் சலாலாவை நோக்கி வருவது அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் சுமார் நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகளில் வருகை புரிந்தனர். இவர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்பவர்களே அதிகம்.

கடந்த வருடம் இவ்விழாவிற்கு சென்று அமீரக வாழ் தமிழர் ஹசன் அஹமது தெரிவிக்கும் போது சலாலா நகரம் இறைவனின் அருட்கொடை எனக் கூறலாம் என்றார். வளைகுடாவெங்கும் பாலை வெளியாக இருக்கும் போது சலாலாவில் தென்னை,இளநீர், வாழை, வெற்றிலை எனப் பல கிடைப்பது அரியதாக உள்ளது. இங்கு அய்யூப் நபி அவர்களது அடக்கத்தலம், கேரளாவை ஆண்ட சேரமான் பெருமான் இஸ்லாத்தை ஏற்று, பின்னர் மரணமடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டதும் சலாலாவில் தான். இறைவனின் அத்தாட்சிகள் பலவற்றைக் காணும் இடமாக சலாலா உள்ளது.

வளைகுடாவில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் ஒரு முறையாவது இப்பகுதிக்குச் சென்று வருவது உடலுக்கும், உள்ளத்துக்கும் சுகமளிக்கும் என்கிறார் அமீரக வாழ் தமிழக பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=855&Country_name=Gulf&cat=new

KSU researchers discover lung cancer biomarker

KSU researchers discover lung cancer biomarker

Arab News

http://www.arabnews.com/?page=1§ion=0&article=111897&d=17&m=7&y=2008&pix=kingdom.jpg&category=Kingdom


RIYADH: King Saud University yesterday announced the discovery of a new lung cancer biomarker by a team of scientists and students led by V. Masilamani of the College of Science.
KSU Rector Abdullah Al-Othman told reporters at a press briefing that the research team headed by Masilamani would bring international fame to the university.
Cancer biomarkers are certain proteins found highly elevated in blood plasma due to the abnormal metabolic activity of cancer cells. Examining biomarkers can be useful in diagnosing cancer.
Masilamani said using the procedure cancer could be diagnosed by testing 5ml blood and 5ml urine. He added that an expert committee set up by the Indian Council of Medical Research has validated this particular protocol. The procedure can be used to diagnose different kinds of cancer.
"We want to become a world class university for research and development," Al-Othman said, adding that the university would recruit more professionals for its research department in the near future.
He said SR350 million had been collected as part of a major research and development program that is being carried out with the support of businessmen to boost the Kingdom's scientific and technological progress.
"It received tremendous support from businessmen and philanthropists, paving the way for launching academic chairs for important topics. The university is also planning to set up an endowment fund worth SR500 million," he said.
— Ghazanfar Ali Khan & Mohammed Rasooldeen

பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம்

பள்ளபட்டி கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை IFT நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சியில் மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

பகுதி 1.அறிமுக உரை பி.எஸ்.உமர் :.பாரூக் மற்றும் எஸ்.எஸ்.எம்.அஷ்ர:.ப் அலி அவர்கள்.
பகுதி 2.வாழ்த்துரை பள்ளபட்டி பேரூராட்சி தலைவி எஸ்.எ.முனவர் ஜான் மற்றும் மருத்துவர் என்.வேலுச்சாமி.
பகுதி 3. முன்னுரை மருத்துவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள்.
பகுதி 4. இஸ்லாமிய நடைமுறைகளும்,கடமைகளும்,சட்டங்களும்,தண்டனைகளும் கடுமையாக இருப்பதேன்?
பகுதி 5. லாட்டரி சமுதாயத்திற்கு நன்மையா? தீமையா?
பகுதி 6. அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் போது ஜகாத் கொடுப்பது தேவையா?
பகுதி 7. ஜகாத் கடமையாக இருந்தும் பெறும்பான்மை முஸ்லிம்கள் வறுமையில் இருப்பதேன்?,
பகுதி 8. பிரச்சனைகளை எதிர் கொள்வது எப்படி?
பகுதி 9. நீதிபதிகளிடையே லஞ்சம்,அநீதிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், பொய் சாட்சி சொல்லும் மக்கள், பொய் வழக்கு போடும் அரசாங்கம் இதற்கு இஸ்லாத்தில் தீர்வு என்ன?
பகுதி 10. இஸ்லாத்தின் வளர்சிக்கு காரணம் என்ன?
பகுதி 11. இஸ்லாம் உலகில் முதன் முதலாக தோன்றிய மதமா?
பகுதி 12. தர்ஹா என்பது என்ன? அதற்கு செல்லலாமா?
பகுதி 13. முஸ்லிம்களின் கடமைகள் என்ன?
பகுதி 14. மாற்று மதத்தவர் குர்'ஆனை வைத்துக் கொள்ளலாமா, படிக்கலாமா, அதன் அர்த்தத்தில் மாற்றம் செய்யலாமா?
பகுதி 15. வட்டியை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பகுதி 16. மரணத்தின் இறுதி நேரத்தில் "கலிமா" சொன்னால் சொர்க்கம் செல்ல முடியுமா?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்கள் www.tamilmuslimtube.com ல் காத்திருக்கிறது.

Non Muslims questions on Islam/Muslims are answered by Dr.KV.S.Habeeb Mohamed at the public meeting conducted by Islamic Foundation Trust (IFT) Chennai held at Pallapatti, Karur District.
Part 1 – Welcome address by Mr.P.S.Umar Farook & Mr.S.S.M.Asraf Ali.

Part 2 – Facilitation by Dr.N. Velu Sami & Pallapatti town Panjayat President Mrs.S.A. Munawar Jan.

Part 3 – Preface Dr.KV.S.Habeeb Mohamed .

Part 4 - Why Islamic practices are difficult, laws are strict & punishments are severe?

Part 5 - Is lottery is good and acceptable for the society?

Part 6 – Is Zakat is necessary, when we are paying tax to government?

Part 7 – Even though Zakat is compulsory, Why poverty is exists among Muslims?

Part 8 – How to face difficulties?

Part 9 – Corruption among judges, lawyers are arguing to uphold falsehood, Peoples giving false witness , Government filing false cases & what is solution in Islam.

Part 10 – What are the reasons for Islam's growth?

Part 11 – Is Islam if the first religion of the world?

Part 12 - What is Dargah and is it allowed to go there?

Part 13 – What are all the responsibilities of Muslims?

Part 14 – Is it allowed to keep and read the Holy Quran by non Muslims and is it allowed change the meaning of Quran?

Part 15 – What is Islam's view on "Interest"?

Part 16 - At the last moment of death, if anyone says "Kalima" will he go to Paradise?



All the above questions & its answers now available at your favorite website www.tamilmuslimtube.com

துபாய் குறித்து அறிய .............

துபாய் குறித்து அறிய .............


தொலைபேசி : 7000 40000

தொலைநகல் ( fax ) : 04 330 3398

இணையத்தளம் : http//askdubai.dubai.ae

மின்னஞ்சல் : help@dubai.ae


ON LINE TAXI BOOKING

www.dubaitaxi.ae

SMS : 4774 ( etisalat )

EMIRATES AIRLINES BOOKING

www.emirates.com

www.dubai.ae

e4all.dubai.ae

emodhesh.ae

Korea

www.egov.gov.kr

முஸ்லிம் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு

முஸ்லிம் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு

புதுடெல்லி, ஜுலை. 17-

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய முஸ்லிம்கள் பெரும் பாலானவர்கள் எதிர்க்கிறார்கள்.

இது பாராளுமன்றத்தில் வரும் 22-ந் தேதி நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிரொலிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் மொத் தம் உள்ள 543 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் முஸ்லிம்கள். இதில் 26 எம்.பி.க்கள் காங் கிரஸ் கூட்டணிக் கட்சி களைச் சேர்ந்தவர்கள்.

மீதமுள்ள 11 எம்.பி.க் களும், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிரணியைச் சேர்ந்தவர்கள். இந்த 11 எம்.பி.க்களும் மத்திய அரசை எதிர்த்து ஓட்டுப் போடுவது உறுதி.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 26 முஸ்லிம் எம்.பி.க் களும் மத்திய அரசுக்கு ஆதர வாக இருப்பார்களா என்ப தில் தொடக்கத்தில் சந்தேகம் நிலவியது. தற்போது இந்த 26 எம்.பி.க்களும் தங்கள் கட்சி கொறடா உத்தரவை ஏற்று மத்திய அரசை ஆதரித்து ஓட்டுப் போடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

முஸ்லிம் லீக் மற்றும் காஷ்மீர் முஸ்லிம் கட்சி கள் மத்திய அரசுக்கு ஆத ரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !

அண்ணா நூற்றாண்டு - முஸ்லிம் சிறைவாசிகளுக்குப் பாரபட்சம் !
முதல்வர் டாக்டர் கலைஞர் - கருணைப் பார்வை கிட்டுமா ?

சேமுமு
prof_semumu@yahoo.com

கோவை உக்கடம் சந்திப்பில் 29-11-1997 அன்று காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக 30-11-1997 மற்றும் 01-12-1997 ஆகிய இரு நாட்களில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும், முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்ப்ட்டதும், பல நூறு முஸ்லிம் குடும்பங்கள் சித்திரவதைக்குட்பட்டதுமான சம்பவங்கள் நிகழ்ந்தேறின. இதன் எதிரொலியாக 14-02-1998 அன்று கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதனைக் கோவை தனிநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உறுதியும் செய்துள்ளது.

43 வழக்குகள் பதியப்பட்டுச் சிறப்பு புலனாய்வு பிரிவால் விசாரிக்கப்பட்டு 181 பேர் மீது 28-09-1998 அன்று முதல் குற்றபத்திரிகையும் 05-05-1999 அன்று இறுதி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன. 1300 சாட்சிகள் விசாரணை 2002 ல் தொடங்கி 2006 ஜன்வரியில் முடிந்தது. 01-08-2007ல் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி 8 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலையாயினர். 43 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றவர்களுக்கு 13,10,7 ஆண்டுகள் சிறைவாசம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டதால் ஏறக்குறைய 100 பேர் வெளியே வந்துவிட்டனர்.

கோவை குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு அடிப்படைக் காரணமாக 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக கைதான குற்றவாளிகளுக்கு தனிநீதிமன்றமோ சிறப்புப் புலனாய்வுக்குழுவோ அமைக்கவில்லை. மேலும் அவர்களுக்கு உடனடி ஜாமீனும் வழங்கப்பட்டது. இப்போது அவர்களில் யாரும் சிறையில் இல்லை. தடா, பொடோ போன்ற கருப்புச் சட்டங்களில் கைது செய்யப்பெற்ற பலரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து சிவகங்கை ஊராட்சித் தலைவரைக் கொன்றவர்களுக்குக் கூட ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் கோவை குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டது. இன்னமும் கூடப் பல முஸ்லிம் சிறைவாசிகள் விசாரணை சிறைவாசிகளாகத் தமிழகச் சிறைகளில் இருந்துவருவது கொடுமையாகும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தரப்பட்ட தீர்ப்பில் ‘ஜாமீன் வழங்காதது குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையின் போது தங்கள் தரப்பு வாதங்களுக்கு வலு சேர்க்கவிடாமல் தடுத்து விட்டது' என்று நீதிபதியே குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது. ஆக ஒரு வழக்கில் ஒருவர் பல்வேறு வழிகளில் ஜாமீன் பெற்றுச் செல்லும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருந்தும் முஸ்லிம்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கொன்றில் இரட்டை ஆயுஸ் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் முகப்பேர் ராஜா சிறையிலிருந்த 16 நாட்களிலேயே ஜாமின் வழங்கப்பெற்றுள்ளார். தர்மபுரி மாணவிகள் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றுவிட்டனர்.

பழனிபாபா படுகொலை வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கச் சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து ஜாமீன் பெற்றதும் பிறகு அவர்கள் விடுதலை ஆனதும் மறக்க முடியாதவை ஆகும். மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் உயர்நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றதும் நினைவுகூரத்தக்கது. ஆயுள் தண்டனை மற்றும் பிற வருடச் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அப்பில் செய்து தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு ஜாமீனில் செல்ல உரிமைபெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இத்தகைய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

வழக்குகளில் கைதவோர் உடல்நிலை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்குக் கருணை அடிப்படையில் சட்டம் உரிமையளிக்கிறது. ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ. ராஜா உடல்நிலையைக் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றது நினைவிருக்கலாம். ஆனால் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 60 வயது தஸ்தகீர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டுக் கிடந்தும் கடைசிவரை ஜாமீன் மறுக்கப்பட்டு இறந்து போனார்; சபூர் ரஹ்மான் 10 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தும் ஜாமீன் கிடைக்காமல் நெஞ்சுவலியால் இறந்து போனார்.

விசாரணைச் சிறைவாசியாக 10 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த ஒரு முஸ்லிம் ‘எய்ட்ஸ்' நோயாளிக்கு ஜாமீன் வழங்கபடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயாளியாகச் சிறையில் வாடும் ஹைதர் அலி, மனநோய்க்குள்ளானவரைச் சிறைக்குள் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயல் என்பதும் மீறப்பட்டு இன்னமும் இருப்பது மிகப்பெரிய கொடுமையாகும். சிகிச்சை பெறவேண்டிய சிறைவாசிகள் ஜாமீன்பெற்றுச் செல்ல உரிமை இருந்தும் முஸ்லிம் சிறைவாசிகள் அந்த உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.


தடா, பொடா பாயப்பெற்ற பல வழக்குகள் மறு ஆய்வுக்குக் கமிட்டிக்கு உட்படுத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையும் பெற்றனர். அதே சமயம் 1995 ல் மதுரை ராஜகோபாலன் கொலை விசாரணைச் சிறைவாசிகளாகவே அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர். 2006ல் மறு ஆய்வுக்கமிட்டி நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மறுஆய்வுக்கமிட்டி நியமிக்கப்படாமலிருப்பது எந்த வகையில் நியாயமென்று புரியவில்லை.

மதுரை லீலாவதி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பரோலில் வெளியே வந்துள்ளனர். கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 2002 ல் சுல்தான் மீரான் என்பவரைக் கொலை செய்து கோவையில் பெரும் பதட்டம் உண்டாக்கத் திட்டமிட்ட ஆயுள் தண்டைக் கைதி பூரிகமலும் அவரோடு ஆயுள் தண்டனை பெற்ற விஜயனும் பரோலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளபோது பொதுவாக முஸ்லிம் சிறைவாசிகள் பரோலில் செல்லக்கூட மறுக்கப்படுவது வேதனையாக இருக்கிறது.

ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணைச் சிறைவாசிகளாகப் பல ஆண்டுகள் சிறையிலிருந்து கடைசியில் அவர்கள் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுப் பல்வேறு வழக்குகளில் 71 முஸ்லிம்கள் விடுதலையாகியுள்ளனர். அவர்களில் 26 பேர் 9 ஆண்டுகளும், 11 பேர் 8 ஆண்டுகளும், 19 பேர் 7 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்பது கொடுமையிலும் கொடுமையல்லவா !

பேரறிஞர் அண்ணா அவர்களின் நூறாவது பிறந்த தினம் வரும் செப்டம்பர் 15 ஆகும். அதனையொட்டித் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் எட்டாண்டுகள் தண்டனை முடித்த கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து முன்கூட்டி விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதை வரவேற்று நன்றி தெரிவிக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.

அவ்வாறு ‘பொது மன்னிப்பு எனற அரசு ஆணையின் பேரில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்வதென்பது அனைத்துக் கைதிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படவேண்டும் என்று உச்சநீதிமனறம் 02-11-2007 ல் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றக் குறிப்பையும் மனதிற்கொண்டு செயல்படக் கோரிக்கை வைக்கப்படுவதன் நியாயத்தைத் தமிழக அரசு உணருமென நம்புகிறோம்.

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 8 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து விடுதலைபெறுவதற்குரிய தகுதியுள்ள முஸ்லி சிறைவாசிகள் 71 பேர் உள்ளனர். இந்த விஷயத்தில் அதிகாரவர்க்கம் பாரபட்சம் காடுமோ என்ற ஐயம் பலரிடம் இருந்து வருகிறது. எனவே தமிழினக் காவலாராக, சிறுபானமையினர் நல அரணாக இலங்கி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எவ்விதப் பாரபட்சமும் காட்டாமல் இந்த 71 முஸ்லிம் சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு - சிறப்பு ஆணை அடிப்படையில் விடுவிக்கச் செய்வாரெனச் சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கிறது.

அதுமட்டுமன்றிப் பிற முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் மற்ற சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஜாமீன், பரோல் போன்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும்., மன நோயாளிகளாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சிறைவாசி ஹைதர் அலியை விடுவிக்க வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே இருந்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். விசாரணைக் காலத்திலும் அப்பீல் செய்யும் காலத்திலும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நீதிமன்ற ஆனையின்படி மறு ஆய்வுக்கமிட்டி அமைக்க மதுரை ராஜகோபாலன் வழக்கில் கூறியபடி தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

அனைத்துச் சிறைவாசிகளுக்கும் அளிக்கப்பட்டு வரும் உரிமைகளை முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாதென்பதே சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

( கட்டுரையாளர் பேராசிரியர் முனைவர் சே மு முஹம்மதலி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் )

நன்றி :

இனிய திசைகள் தமிழ் மாத இதழ்
ஜுலை 2008
எண் 24 நரசிம்மபுரம்
மயிலாப்பூர்
சென்னை 600 004
9444 16 51 53