Sunday, February 22, 2009

அல்லாஹ்வின் 99 பெயர்கள்.வீடியோ

அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்.

வீடியோ.- இசையுடன்.முஸ்லீம் அன்பர்களுக்கு. அல்லாஹ்வின் 99
பெயர்கள்.கேட்டு மகிழுங்கள்..

click

http://vanjoor-vanjoor.blogspot.com/2009/02/99.html

கொய்யா பழம்

கொய்யா பழம்
( ஹாஜியா ஹெச். ரஹ்மத்துன்னிசா, கோபிச்செட்டிபாளையம் )
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது
சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா!
*கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
*கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
*கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
*கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
*கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
*கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
*கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள் கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.
*கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.
*இவ்வளவு அருமை பெருமையை பெற்ற கொய்யாப்பழம் மூலம் ஜாம் எப்படி செய்வது என்கிற ரெஸிபி உங்களுக்கு போனஸாக தரப்படுகிறது.
தேவையான பொருட்கள் : நன்கு முற்றிய 10 அல்லது 12 கொய்யாப்பழங்கள், சர்க்கரை 750 கிராம், சிவப்பு நிற கலர்ப்பவுடர் 1 டேபிள்ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை: 10,12 எண்ணிக்கையுள்ள கொய்யாப் பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் பிறகு அவைகளை சிறு சிறு துண்டுகளாக்கி பின்பு அதிலுள்ள விதைகளை நீக்கி விடவேண்டும் ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை தேவையான அளவுக்கு (சுமார் 1 அல்லது ½ டம்ளர் ) நன்கு சூடு படுத்த வேண்டும் நன்கு கொதித்த நீரில் சேர்ந்து பேஸ்ட் போன்ற பதத்துக்கு வரும். மேலும் தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் இப்போது சர்க்கரையை (சுமார் கால் கிலோ )சேர்த்து கிளற வேண்டும் இப்போது குறைவான தீ கொடுத்து பாத்திரத்திலுள்ள கொய்யா சர்க்கரை போன்றவை ஜாம் போன்ற பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும் பிறகு பதம் வந்த ஜாமுடன் ரெட் கலர் பவுடரைத் தூவி கலக்க வேண்டும் கலக்க கலக்க ஒரு சுகந்தமான நறுமணம் வருவதை உணர்வீர்கள் இவ்வாறு தயாரித்து முடித்த சிவப்பு நிற கொய்யா ஜாமை குளிமைப்படுத்தி சப்பாத்தி பிரட் போன்ற உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடலாம் இதன் ருசியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. .

நன்றி : நர்கிஸ் மாத இதழ்
பிப்ரவரி 2009

படைப்பாளிகளுக்கு ஒரு வாய்ப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

படைப்பாளிகளுக்கு ஒரு வாய்ப்பு!

எழுத்தார்வம் கொண்ட படைகளிகள் தங்கள் கதை, கவிதை, கட்டுதை ஆகிற படைப்புகளை வலைதளத்திற்குஅனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய email: perambalur.in@gmail.com

தாய்மொழியை பாதுகாப்போம்

தாய்மொழியை பாதுகாப்போம்
Saturday, 21 February 2009 11:21

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாள் கொண்டாடப்படுவது போல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பான் யுனெஸ்கோ இந்த நாளை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடி வருகிறது.

யுனெஸ்கோவின் ஆய்வுப்படி உலகம் முழுவதும் தற்போது 6 ஆயிரத்திற்கும் கூடுதலான மொழிகள் பேசப்பட்டு வருகிறது. இவற்றில் 2500 மொழிகள் அழியும் தருவாயில் இருப்பதாக யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 196 மொழிகள் அழிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 192 மொழிகளும், இந்தோனேசியாவில் 147 மொழிகளும் அழியும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் சுமார் 199 மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே உள்ளது என்றும், மேலும் 10 முதல் 50 பேர் மட்டுமே பேசும் மொழிகளின் எண்ணிக்கையும் 100க்கும் அதிகமாக உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த 3 தலைமுறைகளில் மட்டும் சுமார் 200 மொழிகள் மறைந்துவிட்டன. கடந்த ஆண்டு அலாஸ்காவில் இயாக் மொழியை பேசிக் கொண்டிருந்த ஒரே நபர் இறந்து போனதைத் தொடர்ந்து அந்த மொழியும் மறைந்துபோய்விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமைக்கு உரிய தமிழ் மொழிக்கு அந்த அபாயம் வராது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆயினும் அன்னிய கலாச்சாரத்தை பின்பற்றுவதில் நமது இளைய தலைமுறை அதிக ஆர்வம் காட்டி வருவது கவலை அளிக்கிறது. இந்த நிலை நீடித்தால் மெல்லத் தமிழ் இனி சாகும் என்று பாரதியின் கவலை உண்மையாகிவிடும்.

எனவே தம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பாதுகாப்பது மட்டுமின்றி அதனை மேலும் வளர்க்க பாடுபடுவது என்று உலக தாய்மொழி தினத்தில் உறுதியேற்போம்.
நண்பர்கள் தினம், காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் போன்றவற்றை கொண்டாடுவதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேனும் உலக தாய்மொழி தினத்தை கொண்டாடுவதில் காட்டுவோம்.

வாழ்க தமிழ. வளர்க அதன் புகழ்
nigazhvugal.com

தமிழ் தட்டச்சு செய்ய மேலும் ஒரு இணையத்தளம்

தமிழ் தட்டச்சு செய்ய மேலும் ஒரு இணையத்தளம்

தேமதுரத்தமிழோசை உலமெல்லாம் பரவும் வகை செய்வோம்


நண்பர்களே.. தமிழில் எழுத கீழ்கண்ட வலைப்பகுதிக்குச் செல்லவும்:‍

http://tamileditor.org/


என்றென்றும் அன்புடன்


அலீம்

கேள்வி.நெட்

Tamil Top Blogs

துபாயில் வாரந்தோறும் தமிழில் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாரந்தோறும் தமிழில் மார்க்க சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

18.02.2009 புதன்கிழமை நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் அஸ்கர் அலி பிலாலி சிஷ்தியுல் காதிரி ‘கருணை நபி.......’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தமிழகப் பெருமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக மஃரூப் செயல் பட்டு வருகிறார்.

பெற்றோருக்கான டிப்ஸ்...

பெற்றோருக்கான டிப்ஸ்... தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளை திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். வீடு மாற்றுதல், சுண்ணாம்பு அடித்தல் உள்ளிட்ட வேலைகளை தள்ளிப் போடுங்கள்.

கலை, ஓவியம், விளையாட்டு போன்ற வற்றில் உங்கள் பிள் ளையின் கவனம் சிதறலாம். நீங்கள் தான் பக்குவமாகப் புரிய வைக்க வேண்டும்.வழக்கத்தை விட அதிக, "ஸ்ட்ரெய்ன்' எடுத்துப் படிப்பதால், சீக்கிரமே சோர்வடைந்து விடுவர்.

எனவே, சத்தான உணவையே கொடுங்கள். முக்கியமாக, நேரம் தவறாமல் சாப்பிட வைக்கிற பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது.புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள்(வல்லாரை கீரை ஞாபக சக்தியைத் தரவல்லது) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.அவர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட் டால், "இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே' என்று புலம்ப வேண்டாம். "முதல்ல ரெஸ்ட் எடு; உடம்பு சரியான பிறகு படிச்சுக் கலாம்' என்று சொல்லுங்கள்.படிக்கிற பிள்ளைகளின் பக்கத்தில் உட் கார்ந்து கொண்டு, "அதை முடிச்சிட்டியா? இது தானே படிக்கிற?' என்றெல்லாம் கேட்ப தை விடவும், ஏதேனும் கை வேலை செய்தபடியோ, புத்தகம் படித்தவாறோ சும்மா அவர்களுக்கு, "கம்பெனி' கொடுப்பது அதிக பலன் தரும்.நீங்களும், வீட்டில் உள்ள அனைவரும் தருகிற ஊக்கமும், நம்பிக்கை வார்த்தைகளும் தான் பிள்ளைகளுக்கு கூடுதல் சக்தியைத் தரும். எனவே, கொஞ்சம் கூட சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவர் களை உற்சாகப் படுத்துங்கள்.