சங்கத்தமிழ் அனைத்தும் தா !
1. எங்கள் தமிழ் தங்கத் தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ?
2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ?
3. ஆண்டவன்தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி
4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு
5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத் தோற்றுவித்து
6. மாந்திரினம் மாந்துதற்குப் பொழிந்து உவந்தான் !
7. இறைமூலமாய் நிறைமூலமாக வந்த தமிழமிழ்தை முதல் மனிதர் மொழிந்து உவந்தார் !
8. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே உயர் தமிழ்ச் செம்மொழியைக்
9. கற்பனை தாண்டிக் கருவாய்ப் படைத்த பேரிறைவா !
10. முதல் தாய் தாலசைத்து இசைத்த தாலாட்டு எங்ஙனம் இருந்தது?
11. முதல் தாய் பால் குடித்து வளர்ந்த மழலைகள் எம்மொழி மொழிந்தனர் ?
12. அன்றலர்ந்து நின்று வளர்ந்து மறைந்துபோன குறையில்லாச் செல்வங்களை எடுத்துத் தா !
13. முந்தைத் தமிழ் மொத்தமும் தா ! சங்கத்தமிழ் அனைத்தும் தா !
14. சேதுக்கரையோரம் சுந்தரர் ஷீது நபி சிறு நடையிட்ட போதில்
15. செழுந்தமிழில் சிந்திய எண்ணச் சிதறல்கள் சலித்து எடுத்துத்தா !
16. ஏதோ நடந்த பிழையின் ஏதுவாய், தீதறுத்த பிரளய நேரம்
17. ஏந்தலர் நூஹூ நபி எனும் முதல் கப்பலோட்டிய தமிழர் தம் நாவாயில்
18. எடுத்துச் சென்ற இணையில்லா இலக்கியக் குவியலை மீட்டெடுத்துத்தா !
19. இலக்கணத் தந்தை தொல்காப்பியர் கற்றுணர்ந்த இலக்கியங்கள்;
20. குமரிக்கண்டம் அழிவோடு எடுத்துச் சென்ற அறிவுக் கருவூலங்கள்;
21. இந்துமாக்கடலின் ஆழத்தில், ஆணிமுத்தும் வலம்புரிச் சங்கும் பவளமும்
22. சங்கமித்துப் பதிந்து கிடக்கும் – அதை அள்ளி வந்து தா !
23. சிந்துவெளி பரப்பினிலே எதிரொலித்த தீந்தமிழ்ப் பாடல்கள்;
24. முத்தமிழில் சிறந்திருந்த நாடகத்தமிழ் ஆவணங்கள்; மறைந்ததெங்கே ?
25. மொத்தமாக அழிந்துபோன கருவூலத்தைச் சிந்தாமல் திருப்பித்தா !
26. சமயம் எல்லாம் படைத்தளித்த அலங்கார அணிகலன்கள்;
27. சமயம் தாண்டிய விரல்கள் சமைத்தளித்த ஒயில் நகைகள்;
28. அணிந்த அவள் எழில் கூட்டும் வளமைக்கிங்கே இணையே இல்லை.
29. சல்லி வேராய்ப் பன்மொழிகள்; அதைத்தாங்கும் ஆணிவேர் அன்னைத் தமிழ்மொழி !
30. எம்மொழிக்கும் தமிழே அன்னை; எம்மொழிக்கும் எம்மொழியே மேன்மை !
31. கிடைத்தளவே உயர் தனிச் செம்மொழித் தகுதி கொடுத்திடின்,
32. படைத்துள யாவும் கிடைத்திடின் அன்னைத் தமிழுக்கு என்ன பெயரிடுவோம் !
- ஆலிம் செல்வன் .
முகவரி :
S.N.M. AHAMED SAMSUDEEN,
P.O.BOX NO : 1349,
DEIRA, DUBAI, U.A.E.
EMAIL :asdjf73@gmail.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Saturday, June 26, 2010
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு

செம்மொழி மாநாட்டுப் பாடல் கேட்டேன். மிக இனிமையாக அமைந்துள்ளது.
இதுவரை யாராவது இதனை முதல்வரின் பார்வைக்கு எடுத்து வைத்திருக்கலாம். இல்லையெனில், என் மனதில்பட்ட ஒரு சிறு மாற்றத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என ஒலிக்கிறது.
இது மாற்றியமைக்கப்பெறின், காலப்பெட்டகமாகப்போகும் கலைஞரின் இந்த பாடல் மேலும் மிளிரும் என எண்ணுகிறேன்.
அன்புடன்
அப்துல் கதீம்
(யு.ஏ.இ. துபையிலிருந்து)

வலிகளை அகற்றும் உணவு முறை
வலிகளை அகற்றும் உணவு முறை
(சித்த மருத்துவம்)
மூட்டு வலி நீங்க...
(முழங்கை, முழங்கால், கணுக்கால்)
முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.
சாப்பிடும் விதம்
முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸ’யில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.
நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.
தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.
குறுக்கு வலி நீங்க ...
நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.
யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.
நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.
சாப்பிடும் விதம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.
பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.
குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.
முழங்கால் வலி நீங்க ...
நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.
சாப்பிடும் விதம்
பச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.
ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸ’யில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.
ஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.
லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.
இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.
தலைவலி நீங்க ...
பாத்திரத்தில் தண்ர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷ“ட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.
சாப்பிடும் விதம்
அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.
நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.
காலில் வீக்கம் நீங்க ...
நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.
சாப்பிடும் விதம்
தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்ர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் இந்திய தொலைபேசிக்கு பேச
அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் இந்திய தொலைபேசிக்கு பேச ஓர் காலிங்கார்டு உள்ளது. இது Mobileக்கு 10மணி நேரமும், Landlineக்கு 6மணி நேரமும் பேசலாம். 40திரஹம் மட்டுமே.
தொடர்புக்கு - 056 1434481
E-Mail - tbcgroup@hotmail.com
தொடர்புக்கு - 056 1434481
E-Mail - tbcgroup@hotmail.com
Subscribe to:
Posts (Atom)