Thursday, October 28, 2010

முஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை

முஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை

பிறப்புரிமை, கைதியின் கதை ஆகிய ஆவணப் படங்களை இயக்கி, தமிழக முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆளூர் ஷாநவாஸ். இளம் ஆவணப்பட இயக்குனரான அவர், தற்போது காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முஸ்லிம்களின் பிரச்சனைகளை, வரலாறுகளை, சேவைகளை பொது சமூக மத்தியில் எடுத்துச் செல்ல ஆவணப்படங்கள் தான் மிகச் சரியான ஆயுதம் எனச் சொல்லும் ஷாநவாஸ் உடன் ஒரு நேர்காணல்.

பல்வேறு விசயங்களை மையப்படுத்தி மேலும் சில புதிய ஆவணப்படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆவணப்படம் என்பது என்ன?

Documentary என்பதை ஆவணம் என்ற பாரம்பரியமான தமிழ்ச் சொல் குறிக்கும். அதனால் Documentary Film என்ற பதத்தை ஆவணப்படம் என்று நல்ல தமிழில் இன்று அழைக்கின்றோம். இதற்கு முன் இச்சொல்லை தகவல் படம், விவரணப் படம், செய்திப் படம் என்றெல்லாம் கூட அழைத்தார்கள். ஆனால் காலப்போக்கில் ஆவணப்படம் என்ற பெயர் சூட்டப்பட்டு அதுவே பொருத்தமானதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்திருக்கிறது.

ஆவணப்படங்களால் என்ன மாதிரியான பயன்பாடுகள் விளையும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

கதை தழுவாமல் யதார்த்தத்தை பிரதிபலிப்பவைகளே ஆவணப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் ஆவணப்படங்கள் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

உதாரணத்திற்கு, பாரன்ஹீட் 9/11 என்ற ஆவணப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்கத் திரையுலக வரலாற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஆவணப்படத்தை மைக்கேல் மூர் [http://www.michaelmoore.com] என்பவர் இயக்கி இருந்தார். செப்டம்பர் 11 இல் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்ட நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அந்தப் படம் அமெரிக்க ஆட்சியாளர்களைத் தோலுரித்துக் காட்டியது.

ஊடகங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கைக்கூலிகளாகவும், ஊது குழலாகவும் மாறியிருந்த நிலையில், இந்த ஆவணப்படம் மட்டுமே உண்மையின் பக்கம் நின்று உரத்து முழங்கியது.

உலகம் முழுவதும் ஜனநாயகத்தையும், அமைதியையும் ஏற்படுத்த பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் தங்கள் ஆட்சியாளர்கள், உண்மையில் எப்படிப்பட்ட பயங்கரவாதிகள் என்பதை அமெரிக்க மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்தப்படம் தான்.

கேன்ஸ் திரைப்பட விழாவில், 2004 ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப்பட்டு 'பாம்டி' விருதை இப்படம் பெற்றது. உலகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் கோடிக்கணக்கில் வசூலையும், மிகப்பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்திக் காட்டியது இந்த ஆவணப்படம்.

வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையதளம், பத்திரிகைகள் என்று சக்தி வாய்ந்த ஊடகங்கள் பல இருக்கும்போது ஆவணப்படம் என்ற ஒன்று தனியாக எதற்கு?

'சினிமா மிகச் சிறந்த மக்கள் தொடர்பு சாதனம் தான். ஆனால் அது நம் கைகளில் இல்லையே' என்று ரஷ்யப் புரட்சிக்கு முன்னரே வருத்தப்பட்டுக் கூறினார் லெனின். அவரது கனவை ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், ரஷ்ய இயக்குனர்கள் ஆவணப்படங்களின் மூலமே நனவாக்கினர்.

'அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரிய ஊடக நிறுவனங்களால் புறக்கணிக்கப்படுவதாகக் கருதும் அனைத்து வகைப் போராளிகளும் தற்போது தாங்களே ஊடகங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்' என்று, இந்திய அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் விரியுரையாளராகப் பணியாற்றிய ரவி சுந்தரம் 'இந்தியா டுடே' யில் எழுதி இருந்தார். அவரது இந்தக் கூற்றைத்தான் நாங்கள் இப்போது செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இன்று உலக அளவில் இஸ்லாம் பயங்கரவாத மார்க்கமாகப் பார்க்கப்படுகிறது. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே ஊடகங்கள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முஸ்லிம்களைத் தவறாக சித்தரிப்பதில் வேகம் காட்டும் இதே ஊடகங்கள், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை மட்டும் வேண்டுமென்றே புறக்கணிக்கின்றன. இத்தகைய சூழலில் நமக்கான ஆயுதத்தை நாம்தான் கையில் எடுக்க வேண்டும். சுற்றிலும் எதிரிகள் நின்று தாக்கும் போது திருப்பித் தாக்குகின்ற அளவுக்கு வலிமை பெறாவிட்டாலும், குறைந்த பட்சம் தம்மைத் தற்காத்துக் கொள்கிற அளவுக்காவது முஸ்லிம்கள் தயாராக வேண்டாமா?

சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சிகள் என்று சொல்லப்படுகின்ற சக்திவாய்ந்த ஊடகங்கள் அனைத்தும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவே இயங்குகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டுமெனில் அந்த சக்திவாய்ந்த ஊடகங்களுக்கு நிகராக முஸ்லிம்களும் ஊடகங்களைத் தொடங்க வேண்டும். ஆனால் இன்றைய தமிழ் முஸ்லிம் சூழலில் அது சாத்திய மற்றதாகவே தெரிகிறது.

சாத்தியப்படாது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

'நமக்கென்று ஒரு நாளிதழ்' என்ற முழக்கத்துடன் முஸ்லிம்கள் பலர் சிலமுறை கூடி, பல முறை பிரிந்த நிகழ்வுகள்தான் இங்கே நிறைய நடந்திருக்கிறது.

தொலைக்காட்சிகளில் slot எடுத்து அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று தனித் தனியே நிகழ்ச்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட, தமிழ் முஸ்லிம் ஊடக நிறுவனங்கள் பல, அந்த அரைமணி நேர நிகழ்ச்சிகளைக் கூட நேர்த்தியாகத் தர முடியாமல் இழுத்து மூடப்பட்ட நிகழ்வுகள்தான் ஏராளம்.

முஸ்லிம்களால், ஒரு பொதுத் தன்மையுடன் நடத்தப்பட்டு, வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'வளைகுடாச் செய்திகள்' என்னும் நிகழ்ச்சி சுவடு தெரியாமல் அழிந்துவிட்டது. அந்த அரைமணி நேர நிகழ்ச்சியைக் கூட தொடர்ந்து நடத்த முடியாமல் திவாலானவர்கள் இன்று தனியே ஒரு தொலைக்காட்சி என்ற அளவுக்குத் துணிந்திருக்கிறார்கள். இது பற்றியெல்லாம் முஸ்லிம் சமூகப் புரவலர்கள் சிந்திப்பதே இல்லை.

மீடியாக்களின் பிதாமகனாகவும், வெகுமக்களின் சுவாசமாகவும் விளங்குகின்ற சினிமாவைப் பற்றி இன்னுமே முஸ்லிம்களுக்குச் சரியான புரிதல் ஏற்படவில்லை. சினிமா 'ஹராம்' [விலக்கப்பட்டது] என்ற அறியாமையிலேயே இன்றும் மூழ்கி இருக்கிறது முஸ்லிம் சமூகம்.

இப்படி சக்திவாய்ந்த ஊடகங்கள் அனைத்தும் பல்வேறு காரணங்களால் முஸ்லிம்களை விட்டும் தூரமாக இருக்கின்றன. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கான ஒரே ஆயுதமாக, மாற்று ஊடகம் என்று அழைக்கப்படுகின்ற எளிய ஊடகமான ஆவணப்படம் மட்டுமே இருக்கிறது.

தற்போது சில தமிழ் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளில் இருந்து நீங்கள் எடுக்கின்ற ஆவணப்படங்கள் எப்படி வேறுபடுகின்றன?

தொலைக்காட்சியை 'ஹராம்' என்று சொல்லிவந்த முஸ்லிம் சமூகம், அந்த தொலைக்காட்சியின் வீச்சையும் பயனையும் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும், அது ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நின்று விட்டதுதான் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

இன்றைய முஸ்லிம் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை முஸ்லிம் அமைப்புகளால் வழங்கப் படுகின்றன. அமைப்புகள் தங்களின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் முஸ்லிம்களிடம் எடுத்துச் செல்வதற்கு இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்கின்றன. எப்படி இங்கே ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு பத்திரிகை இருக்கின்றதோ, அதைப் போலவே தொலைக்காட்சி நிகழ்சிகளும் இருக்கின்றன. சில சமயங்களில் இது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் களமாகவும் மாறிவிடுகிறது. முஸ்லிம் பத்திரிகைகளின் மூலம் சண்டை இட்டுக்கொண்டால் அது முஸ்லிம்களோடு நின்று விடும். ஆனால் அதுவே தொலைக் காட்சி நிகழ்ச்சி வரை நீளுகின்றபோது எல்லா சமூக மக்களும் அதைப் பார்த்து முகம் சுழிக்கின்ற அவலம் ஏற்பட்டு விடுகிறது. கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவை சந்தித்தது தொடர்பாக, இரண்டு முஸ்லிம் அறிஞர்கள் தொலைக்காட்சியில் சொற்போர் நடத்தியதைப் பார்த்து எல்லோரும் ரசித்துச் சிரித்தார்கள்.

மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் முஸ்லிம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆன்மீகத்தோடு மட்டுமே நின்று விடுகின்றன. முஸ்லிம்களின் கலை, இலக்கியம், பண்பாடுகள் குறித்தோ, அரசியல் அரங்கில் முஸ்லிம்கள் தோழமை சக்திகளுடன் இணைந்து நிற்பதற்கான வழிகள் பற்றியோ பேசுகிற எந்த நிகழ்ச்சியும் இங்கு இல்லை.

முஸ்லிம்களுக்கு ஊடகப் பயன்பாடு குறித்த தெளிவான புரிதல் இல்லை என்கிறீர்களா?

ஆமாம், visual media என்றழைக்கப்படும் காட்சி ஊடகத்தைப் பற்றி முஸ்லிம்களுக்கு சரியானப் புரிதல் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. தற்போது முஸ்லிம் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடக்கம் முதல் முடிவு வரை ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்.

visual media என்றால் அது அசைவுகளைத் தொடர்வதாக இருக்க வேண்டும். நொடிக்கு நொடி காட்சிகள் மாறிக் கொண்டே இருக்க வேண்டும். நவீன தொழில் நுட்ப யுத்திகளைக் கையாண்டு, அதற்கேற்ப நிகழ்சிகளைத் தயாரித்து மக்களை ஈர்க்கும் வகையில் ஒளிபரப்ப வேண்டும். ஆனால் இங்கே அப்படி எதுவுமே நடப்பதில்லை. எல்லா மட்டத்திலும் சிந்தனை வறட்சியே நிலவுகின்றது. நிகழ்ச்சி முழுவதும் ஒருவருடைய பேச்சை மட்டுமே ஒளிபரப்புவதென்றால் அதற்கு வானொலி போதுமே; தொலைக்காட்சி எதற்கு?

தமிழகத்தில் முஸ்லிம்களால் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேற்குறிப்பிட்ட தேக்க நிலைக்குள் சிக்கியுள்ளதால் அவை அந்தந்த வட்டாரத்தோடு நின்று விடுகின்றன. வெகு மக்களை ஈர்ப்பதில்லை.

இப்படிப்பட்ட நிகழ்சிகளை வழங்கி பொருளாதாரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணாக்குவதை விட,வெகு மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட மாற்று ஊடகத்தைக் கையில் எடுக்கலாம். அப்படி எடுத்தால் இலக்கை அடைய முடியும் என்பதற்கு எனது படங்களே சாட்சி.

உங்களின் படங்களைப் பற்றி கூறுங்கள்?

மாற்று ஊடகத்தின் மூலம் முஸ்லிம்களின் அவலங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு நாங்கள் களமிறங்கிய நேரத்தில், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்த குரல் வியாபித்திருந்தது. எல்லா முஸ்லிம் அமைப்புகளும், கட்சிகளும், பத்திரிக்கைகளும், நிறுவனங்களும் முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்தே விவாதித்துக் கொண்டிருந்தன. 1995 இல் தமுமுக தொடங்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியாக அழுத்தம் பெற்ற அந்தக் கோரிக்கை முஸ்லிம்களிடம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் 'இட ஒதுக்கீடு' குறித்து உரையாற்றி விட்டு மேடையிலிருந்து கீழிறங்கி வந்த முஸ்லிம் இயக்கத் தலைவர் ஒருவரிடம் முஸ்லிம் பெரியவர் ஒருவர் வந்து, 'பாய் கேட்கிறதைத்தான் கேட்கிறீங்க, கொஞ்சம் நல்ல இடமாப் பார்த்து கேளுங்க பாய்' என்று கூறியுள்ளார். அந்தப் பெரியவரின் அறியாமையைக் கண்டு வேதனையடைந்த தலைவர், இத்தனைப் போராட்டங்களை நடத்தியப் பின்னரும் இட ஒதுக்கீடு குறித்து இந்தச் சமுதாயத்திற்கு சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லையே என்று எம்மிடம் வருந்தினார்.

அப்போதுதான், முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஆவணப்படம் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மறு நிமிடமே அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினோம். 2006 சட்ட மன்றத் தேர்தல் முடிந்து, கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்த மாதத்திலேயே, அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த 'பிறப்புரிமை' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டோம்.

அனைத்து வெகுஜனப் பத்திரிக்கைகளும் படத்தைப் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டன. அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் ஆவணப்படத்தை சென்றடையச் செய்தோம். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் படம் திரையிடப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பிறப்புரிமை பங்கேற்றது.

நிழல் திரைப்பட இயக்கத்தின் பாராட்டையும், பரிசையும் பெற்றது. வெளிநாடுகளில் உள்ள எமது அன்பர்கள் குறுந்தகடுகள் மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டுரை வாசித்தனர். எங்களின் முதல் முயற்சியே இந்த அளவுக்கு பேசப்படும் என்று துளியளவு கூட நினைக்கவில்லை. அந்த வெற்றி தந்த உற்சாகமும், பெருமிதமும் உடனேயே இரண்டாவது ஆவணப் படத்திற்கான விதையைத் தூவியது.

இரண்டாவது ஆவணப்படம் எதைப் பற்றி எடுக்கப் பட்டது?

பிறப்புரிமை ஆவணப்படத்திற்கான நிழல் இயக்கத்தின் விருதளிப்பு விழா திருப்பூரில் நடைபெற்றது. அதற்காக கோவை சென்றிருந்த போது, அங்கு குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் நாசர் மதானியையும், இதர முஸ்லிம் சிறைவாசிகளையும் சந்தித்தேன்.

சிறையில் நடந்த அந்தச் சந்திப்பு உள்ளத்தை உலுக்கியது. குற்றம் புரியாமல் விசாரணைக் கைதியாக வதைபடும் அந்த அப்பாவிகளின் அவல நிலையை உரத்து முழங்கும் வகையில், 'கைதியின் கதை' என்ற ஆவணப்படத்தை இயக்கினோம். காவல் துறையின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் அந்தப்படம் வெளி வந்தது.

பிறப்புரிமை ஆவணப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட அதிகமான வரவேற்பை கைதியின் கதை பெற்றது. பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆவணப்படம் சென்றடைந்தது. தமிழ்ச் சூழலில், மதானி என்றாலே தீண்டத்தகாத தீவிரவாதி என்பது போன்று வரையப்பட்டிருந்த மாயச் சித்திரத்தை அடித்து நொறுக்கி, மதானி பற்றிய உண்மை நிலையை கைதியின் கதை ஆவணப்படம் விதைத்தது.

பிறப்புரிமை, கைதியின் கதை என்ற எமது இரண்டு ஆவணப்படங்களும் முன்னெடுத்த இரண்டு கோரிக்கைகளும் இறுதியில் வெற்றியும் பெற்றன. முஸ்லிம் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது; மதானியும் குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டார்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவெனில், தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் முஸ்லிம் நிகழ்ச்சிகளின் மூலம் காலங்காலமாக இட ஒதுக்கீடு பற்றியும், சிறை வாசிகளின் விடுதலை பற்றியும் விவாதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு எந்தப் பத்திரிகையும் விமர்சனம் எழுதியதில்லை. அரசியல் தலைவர்களை அந்த நிகழ்ச்சிகள் ஈர்த்ததில்லை. ஆவணப்படம் அத்தகைய நிலையையே தலைகீழாக மாற்றி வெற்றி தேடித் தந்தது.

கமர்ஷியல் திரைப்படங்கள் மாதிரி ஆவணப்படங்கள் மக்களைச் சென்று சீக்கிரம் 'ரீச்' ஆகிறதில்லையே. ஆவணப்படங்களை மக்கள் மத்தியில் எப்படி எடுத்துச் செல்வது?

ஆவணப்படங்கள் மக்களைச் சென்று அடைவதில்லை என்று சொல்வதே தவறு என்று நினைக்கிறேன். மேலும் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருப்பது போல் ஆவணப்படங்களை எடுத்துக் கொண்டு நாம் ஊர் ஊராக அலைய வேண்டியதில்லை. படம் வெளிவந்த மறு நிமிடத்திலிருந்து தன்னெழுச்சியாய் அது மக்களை சென்றடைந்து விடும். உலகம் முழுவதும் நடைபெறுகின்ற திரைப்பட விழாக்களில் ஆவணப்படங்கள் பங்கேற்பது சிறப்புக்குரிய அம்சமாகும். கேன்ஸ், பெர்லின், சைப்ரஸ், நியூ ஜெர்ஸி, லண்டன், பாரிஸ், மெல்பெர்ன், டொராண்டோ, இலங்கை, மும்பை, கேரளா என்று நடைபெறும் உலகத் திரைப்பட விழாக்களில் ஆவணப்படங்கள் பங்கு பெறவும், பரிசு பெறவும் நிறைய வாய்ப்புகள் உண்டு.

தமிழ்நாட்டில் நிழல் திரைப்பட இயக்கம் பெரிய அளவில் இயங்கி வருகிறது. மேலும் பல திரைப்பட இயக்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாடு குறும்பட ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் முக்கியமான அமைப்பாக இயங்குகின்றது. இந்த அமைப்புகளின் மூலம் ஆவணப்படங்கள் மக்களை சென்றடைகின்றன. மேலும் வெகுஜன ஊடகங்கள் ஆவணப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விமர்சனம் எழுதத் தொடங்கி இருப்பதால், மாற்று ஊடகத்திற்கான வாசல் விசாலமாகி உள்ளது என்றே கூற வேண்டும்.

ஏற்கனவே வெளிவந்து வெற்றி பெற்றுள்ள ஆவணப்படங்கள் பற்றி கூற முடியுமா?

ஒன்றா, இரண்டா ஓராயிரம் படங்கள் இருக்கின்றன. அமெரிக்க ஆட்சியாளர்களைத் தோலுரித்துக் காட்டிய 'பாரன்ஹீட் 9 /11 ' பற்றி முன்னரே குறிப்பிட்டோம். நம் நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படங்கள் பல உள்ளன. மும்பையைச் சேர்ந்த 'ஆனந்த் பட்வர்தன்' [http://www.patwardhan.com] என்ற பிரபல இயக்குநர் இயக்கிய ஆவணப்படங்கள் புரட்சி விதைகளைத் தூவிய படங்களாகும்.

பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தை ராமஜென்ம பூமியாக மாற்றுவதற்கு இந்துத்துவ சக்திகள் மேற்கொண்ட பயங்கரவாதங்களை 'ராம் கி நாம்' [ராமனின் பெயரால்] என்ற தமது ஆவணப்படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஆனந்த் பட்டவர்தன்.

அதே போல் குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளை மக்கள் மத்தியில் படம் பிடித்துக் காட்டிய 'Final Solution ' மற்றும் 'கோத்ரா தக்' ஆகிய ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

தமிழ்நாட்டிலும் ஏராளமான ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் உருவாகி இருக்கிறார்கள். ஆனால் இங்கே முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகின்ற ஆவணப்படங்களும் இல்லை; இயக்குனர்களும் இல்லை என்பது தான் வருந்தத்தக்க விசயம்.

காந்தியைப் பற்றியும், பகத்சிங்கைப் பற்றியும் இன்னும் பல தலைவர்களைப் பற்றியும் தலைமுறைக்கு நினைவூட்டுகின்ற வகையில் ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழில் முத்திரை பதித்த படைப்பாளிகளான ஜெயகாந்தன், அசோகமித்ரன், தி. க. சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, இளையராஜா என்று பட்டியலிட முடியாத அளவுக்கு பலரைப் பற்றியும் ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பெரியாரைப் பற்றியும் காமராஜரைப் பற்றியும் திரைப்படங்களே எடுக்கப்பட்டு விட்டன. ஆனால் இந்திய முஸ்லிம்களின் மகத்தான தலைவரும், ஆட்சி மொழி தமிழே என்று அரசியல் நிர்ணய சபையில் முதல் குரல் எழுப்பியவருமான கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் பற்றி இங்கே எந்தப் பதிவும் இல்லை.

தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளாக விளங்கும் கவிக்கோ அப்துல் ரகுமானைப் பற்றியோ, போராளிக் கவிஞர் இன்குலாப் பற்றியோ, சாகித்ய அகாடமி விருதை வென்ற நாவலாசிரியர் தோப்பில் மீரானைப் பற்றியோ இங்கே யாரும் படமெடுக்கவில்லை. எடுப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றியும், முஸ்லிம்களின் அளப்பெரிய பங்களிப்புகளைப் பற்றியும் இங்கே முஸ்லிம்கள் தான் பேசியாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அதனால் தான் காயிதே மில்லத் இறந்து 40 ஆண்டுகள் கடந்த நிலையில், 28 வயதே உடைய ஒரு முஸ்லிமாகிய நான் அவரைப் பற்றி படமெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம்களுக்காக மற்றவர்களும், மற்றவர்களுக்காக முஸ்லிம்களும் பேசுகின்ற நிலை மலர வேண்டும்.

***
நன்றி : சமநிலைச் சமுதாயம் மற்றும் கீற்று இணையதளம்

Tuesday, October 26, 2010

மருந்தொன்று இருக்கிறது

அழுதது போதும் சமுதாயமே ஆர்த்தெழு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஒ)

23.10.2010ந்தேதி ஹிந்துப் பத்திரிக்கையில் குஜராத் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. எம். ஜாப்ரே அவர்களும் மற்றும் அவர் வீட்டில் தஜ்சம் புகுந்த குல்பர்கா சொசையிட்டி உறுப்பினர்களும் எவ்வாறு கோத்ரா ரயில் தீ விபத்திற்குப் பின் கொல்லப்பட்டார்கள் என்று நேரில் பார்த்ததினை கோர்ட்டில் மறைந்த ஜாப்ரே அவர்களின் வயதான துணைவியார் ஜாக்கியா அவர்கள் காவியுடைகாலிகள் நடத்திய மனித வேட்டையினை விவரிக்கும் போது துக்கம் தாளாது பலர் முன்னிலையில் அழுது விட்டாராம். அத்துடன் அவர் மனம் விம்மி விவரிக்கும் போது தனது பக்கத்து வீட்டு கௌசாம்பியின் கர்ப்பிணி மனைவியின் வயிற்றினை கத்தியால் கீறி அந்த சிசுவினை வெளியே எடுத்து வீசி மகிழ்ந்த பினம் தின்னி கழுகுகளின் வேட்டையினை விவரித்து அழுது கண்ணீர் விட்டாராம். அவர் விவரித்தது கல் மனம் கொண்ட கயவர்களைக் கரைக்குமாவென்றால் கரைக்காதுதான் ஏனென்றால் அவர்கள் பிணம் தின்னும் கழுகுகளாயிற்றே!. பின்னென்ன மைனாரிட்டி சமூகம் அழுதுதான் புலம்பவேண்டுமா? என்ற கேள்வி உங்கள் மனதில் உதிக்கலாம். ஏனென்றால் இது போன்ற சோக சம்பவங்கள் உலக முஸ்லிம் சமூகத்தினை கவ்விக் கொண்டுதான் உள்ளன என்பதினை சில சம்பவங்கள் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.
கோத்ரா ரயில் சம்பவத்திற்கு பின்பு மனித வேட்டைக்கு சொக்ராபுதீன் அவர் அன்பு மனைவி கௌசர்பி அவர்களை தீவிரவாதிகள் என முத்திரையிட்டு கொன்று தீர்த்தனர். அந்த தம்பதியினர் இருவரும் முகலாப மன்னர் தன் பாச மனைவி மும்தாஜ் பேகத்திற்காக கட்டிவைத்த தாஜ்மஹால் முன்னாள் அமர்ந்து எடுத்துக் கொண்ட நினைவுப்படத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.




அவர்களின் கொலை பாதக செயல் யாரையும் சும்மா விடாது என்பதிற்கிணங்க குஜராத் முன்னாள் உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலரை சிபிஐ கைது செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் என்றாலே புனித தலம் என கருதும் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவரும் உள்ளனர். எப்படி தேர்தல் நேரத்தில் சென்னை அண்ணாசாலையிலுள்ள மக்கா மஸ்ஜித் அருகிலுள்ள கபர்ஸ்தானை முஸ்லிம்களின் புனித தலமாக சில பெயரளிலுள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவரும் வருகை தந்து பட்டாடை போர்த்துகிறார்களோ அதே போன்று தான் அஜ்மிர் தர்ஹாவையும் தேர்தல் நேரத்தில் பலரும் மறப்பதில்லை. ஆனால் அந்த தர்காவினையும் குண்டு வைத்து தகர்த்ததாக ராஜஸ்தான் மாநில ஆர்.எஸ..எஸ் தலைவர் இந்திரேஸ் குமார் பெயரும் சிறப்பு புலனாய்வு குழு கோர்ட்டில தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.. அவர் குற்றுவாளியாக சேர்க்கக்கூடவில்லை, கைது செய்யப்படவுமில்லை. அதற்குள்ளாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகத் அவர்கள் இது காங்கிரஸின் சதிவேலை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதனையே பி.ஜே.பியும் மால்கான், ஹைதாரபாத் குண்டுவெடிப்புகளில் அபினவ் பாரத் மற்றும் சமதான் சான்ஸ்தா உறுப்பினர்களான கைது செய்யப்பட்ட பெண்சாமியார் பிராக்யா சிங்கிற்கும், முன்னாள் ராணுவ கர்னல் புரோகித்துக்கும் வக்காலத்து வாங்கி கூக்குரல் எழுப்புகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிட்டு அதற்கு குரல் எழுப்பினால் மட்டும் குரல் எழுப்பும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அதன் அமைப்பு தீவிரவாத அமைப்பு அதனை தடைசெய்யவேண்டும் என கூக்குரல் எழுப்புகின்றனர் காவியுடை நண்பர்கள்.
அதனால் அத்தனை படுபாதக சம்பவங்களையும் தாங்கிக்கொண்டு அழுது புலம்பவா வேண்டும் இந்த திருநாட்டில் என்ற கேள்வி உங்கள் மனதில் எழவது நியாயமானதே!
இது போன்ற பயங்கர கொடுமைகள் உலக முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன என் பல செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. உதாரணமாக:
1) பாலஸ்தீன பகுதிகளில் ஆக்கிரமித்து அங்கே யூதர்கள் வீடுகளை கட்ட அனுமதி அளித்து அங்கேயுள்ள பாலஸ்தீன மக்களின் வீடுகளை புல்டோஸர் கொண்டு தரைமட்டமாக்கும் போது மனம் வெதும்பிய குடும்பத்துடன் சுற்றுலா வந்த அமெரிக்கர் ராக்கேல் கொரி அந்த புல்டோஸரை தடுத்து நிறுத்தும் போது தன் குழந்தைகள் கண்ணெதிரே புல்டோஸரால் நசுக்கப்பட்ட காட்சியினை ஊடகங்களில் படமாக பார்த்தபோது எந்த வாய்பேசாத மாற்றுத் திரனாளி கூட் வாய்விட்டு கதறத்தான் தூண்டுகிறது.
2) லிபியா விடுதலைக்காக போரிட்டு தூக்குமேடை ஏறிய மாவீர் உமர் முக்தாரினை நினைவூட்டும் மாவீரன் ஈராக் நாட்டின் அதிபர சதாம் ஹ_சைன் மக்கள் கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக ஐ.நா. சபையின் ஆயுத விசாரணை தலைவர் ஹன்ஸ் பிலிக்ஸ் தடுத்தும் போலியான குற்றச்சாட்டினைக் கூறி அந்த நாட்டில படையெடுத்து சதாம் ஹ_சைனையும் துடிக்கத்துடிக்க தூக்கிலேற்றி விட:டு ஆக்கிரமிப்பு படை கொன்ற அப்பாவி பொது மக்கள் மட்டும் எவ்வளவு தெரியுமா? 66081 பேர்கள். தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் வெறும் 15196 பேர்கள் தானாம். இதனை நான் சொல்லவில்லை சமீபத்தில் ‘விக்கி லீக்’ ஆதாரத்துடன் ஆக்கிரமிப்பு படை செய்த அட்டூளியங்களை தோலுரித்துக்காட்டியிருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? ‘விக்கி லீக்’கின் உரிமையாளர் ஜூலியன் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மாறுவேடத்தில் ஐரோப்பா நாடுகளில் ஒவ்வொன்றாக அலைகிறாரென்றால் ஆச்சரியமாக இல்லையா? சாதாரண ஒரு அமெரிக்கா குடிமகனுக்கே அவர்களின் வண்ட வாளங்களை எடுத்துச் சொன்ன ஜூலியனுக்கே உயிர் உத்திரவாதமில்லாதபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று உங்கள் மனதில் தோன்றலாம். இதற்கு பரிகாரம் தான் என்ன? இது போன்ற குற்ற செயல்களை விசாரிக்க சர்வதேச நீதிமன்றம் ஒன்றுள்ளது. அதுதான் செர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி மில்சோவிச், தளபதி ஹார்டிவிக் போஸ்னிய முஸ்லிம்கள் மீது மனித படுகொலைகள் ஈடுபட்டனர் என்று சொல்லி விசாரணையில் ஈடுபட்டது. அபோன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக சூடான் ஜனாதிபதி முகம்மது அல் பசீர்; மீது குற்றம் சாட்டி அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் அதன் கரங்கள் மட்டும் ஈராக்கில் 66081 அப்பாவி மக்களைக் கொன்றவர்களையோ அல்லது பாலஸ்தீனர்களை மட்டுமல்லாது பஞ்சத்தால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு உதவிப்பொருட்கள் கொண்டு சென்றவர்களையும் படுகொலை செய்து அவர்கள் வீடுகளை அபகரிப்பவர்களயோ நெருங்க முடியவில்லையே அது ஏன்?
இதற்கு பரிகாரம் தான் என்ன?
இசைமுரசு நாகூர் ஹனிபா பாடியது போல ‘மருந்தொன்று இருக்கிறது’ அதுதான் நமது சமுதாய ஒற்றுமையிலே என்றால் மிகையாகாகுமா?
1) நாள்தோறும் பாகிஸ்தானிலோ, இராக்கிலோ அல்லது ஆப்கானிஸ்தானிலோ நாட்டோ படைகள் ஒருபக்கம் அட்டூழிய நடவடிக்கைகள் ஈடுபடும்போது நமது உம்மத்துக்களுக்கிடையே சியா, சன்னி என்ற உச்ச கட்ட யுத்தத்தால் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைகுப் பள்ளிக்கச் செல்லும் அப்பாவி முஸ்லிம்களும் குண்டுகளுக்கு பலியாகி இருக்கின்றனர் என்றால் பரிதாபமான செயலாக இல்லையா? ஏன் உலக பணக்கார நாடுகளான சௌதி அரேபியா மற்றும் நியூக்கிலயர் ஆயுதங்களை வைத்துள்ள ஈரான் போன்ற அரேபிய நாடுகள் ஒற்றுமைக்கு வழிகாட்டி அதே நேரத்தில் முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அத்து மீறல்களுக்கு குரல் கொடுக்க மறுக்கின்றன என்பது விநோதமாக இல்லையா? ஆனால் மிகவும் ஊழல் நிறைந்த ஆப்கான் ஜனாதிபதி கர்சாய்க்கு மட்டும் தன் பதவியினை தக்க வைத்துக் கொள்ள லட்சக்கணக்கான ஈரோ கரன்ஸிக்களை மட்டும் உதவி தன் நாட்டின் செல்வாக்கினை உயர்த்த முயற்சிப்பதேன் என்று புரியவில்லை..‘விக்கிலீக்’ வெளியிட்ட அப்பட்டமான அட்டூளியங்களுக்காவது ஓங்கி குரல் எழுப்ப வேண்டாமா? அவைகளைப் பார்த்ததும் அமெரிக்கர்களுக்கு வராத கோபம் ஈராக் அரசின் பிரதமர் மாலிக்கி அவர்களுக்கு வந்து அந்த வெளியீட்டாரைச் சாடுவதேன். அதுதான் பூனைக்குட்டி பையிலிருந்து வெளியே வந்து வண்டளாம் தண்டவாளத்தில் ஏறிய கதை என்பதால்தானே என்றால் மிகையாகுமா?
2) நம்மிடையே மதவழிபாடுகளில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு சமீபத்தில் திருவிடைச்சேரி போன்ற ரத்தக்களறி மற்றும் மீடியாக்களில் ஒருவருக்கொருவர் வசைபாடும் நிகழ்ச்சிகள் அரங்கேறவில்லையா? அதனை நண்பர் நபிநேஷனும் அமெரிக்கா நண்பர் சதக்கும் தங்களுடைய ‘இ’ மீடியாக்களில் எடுத்தியம்பிருக்கிறதே எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளாக பல இயக்கத்தலைவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாமா?
நபிநேசன் அப்படியென்ன எழுதியிருந்தார் தனது, ‘இஸ்லாமிய சமுதாயம் எங்கே செல்கிறது?’ என்ற கட்டுரையில். சகோதரர் நபிநேசன் தனது கட்டுரையில், ‘பா.ஜ..க, பஜ்ரங்தளம், விசுவ ஹிந்து பரிசத், துர்கா வாகினி, அபினவ் பாரத், இந்து முன்னணி போன்ற அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆர்.எஸ்.எஸ் சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஒன்றே குலம், ஒருவனே அல்லாஹ், ஒரு வேதம் குர்ஆன் என்று சொல்லும் நாம் மற்றும் எந்த இலக்குமில்லாமல் தடுமாறிக்கொண்டிருப்பதாக’ கூறியிருக்கிறார்.
அமெரிக்கா நாடு சாண்டிகோ நகரில் தமிழ் முஸ்லிம் அமைப்பின் உறுப்பினராகவும் கனிணி பொறியாளராகவும் பணியாற்றும் சகோதரர் சதக் அவர்கள் இலங்கையில் உள்ள ‘ஆல் சிலோன் ஜம்ளயத்துல் உலா’ சபையின் ஒற்றுமை பிரகடன நோட்டீஸை அனுப்பி அது போன்ற ஒரு ஒற்றுமை பிரகடனம் நமது வேறுபட்டு கிடக்கும் இஸ்லாமிய சமூக அமைப்பினிடையே ஏற்பட வழி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். சிலோன் பிரகடனத்தில் ‘மார்க்கத்தின் பெயரால் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது சமூகம் பிறைபட்டு சிதறி விடுமோ எனும் அச்சம் தோன்றியுள்ளது. இக்கவலைக் குறிய நிலையைக் கவனத்திற் கொண்டு சமூகத்தில் மீண்டும் சுமுக நிலையை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும் என்பதினை உணர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு அமைப்புகள் கொண்ட இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்ற ஒருங்கிணைப்பு குழு உருவாகியுள்ளது. அந்த குழுவில் எடுத்த தீர்மானங்கள் கீழ் வருமாறு:
1) இஸ்லாமிய பேரறிஞர்கள் மத்தியில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் சமூகத்தினை பிளவுபடுத்தக் கூறப்பட்டன அல்ல என்பதினையும் அவைகள் நன்மை பயக்கக்கூடியவை என்பதினையும் புரிந்து கொள்ளல்.
2) கருத்து வேறுபாடுகளில் ஒருவர் மற்றொருவரை மதித்து நடத்தல்.
3) தனது கருத்து அல்லது நிலைப்பாடு மாத்திரமே சரியென நிறுவ மனைவதினையும் ஏனையோர் மீது அதளை பலவந்தமாகத் திணிக்க எத்தனிப்பதையும் அதனை ஏற்க மறுப்பவரை எதிர்த்து நிற்பதையும் தவிர்த்தல்.
4) தான் கொண்டுள்ள அல்லது சார்ந்துள்ள கருத்துக்கு முரண்பட்ட கருத்தினரை அபிப்பிராய பேதத்துக்கப்பால் நின்று நேசித்தல்.
5) கருத்து லேறுபாடுகளை சகோதரத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பங்கம் உண்டு பண்ணும் வண்ணம் கையாளாகாதிருத்தல்.
6) இஸ்லாமிய நிறுவனங்கள், தரீக்காக்கள், தஃவா அமைப்புகள் தங்களுடைய கருத்து வேறுபாடுகளை ஊடகங்களில் வெளியிட்டும், பொதுக்கூட்டம் போட்டு சமுதாயத்தினரிடையே கருத்து வேறுபாடுகளை ஊதி பெரதாக்குதல்.
7) இறைவனை தொழும் பள்ளிவாசலினை தங்களது கருத்து வேறுபாடுகளுக்கு அங்கீகாரம்; கிடைக்கும் இடமாக மாற்றுவதினை தவிர்த்தல்.
8) ஓலி பெருக்கியினை விளம்பரமாகவும், பிரச்சார பீரங்கிகளாகவும் கட்டுப்பாடு அற்ற செயலில் ஈடுபடல்.

நான் மேலே குறிப்பிட்ட செய்திகள் எவ்வாறு சமூதாயம் கட்டுபாடு இல்லாத நிலையில் இருப்பதினையும் அதனை மற்ற சமுதாய அமைப்புகள் போல ஒற்றுமையுடன் ஒருங்கிணைக்க ஒரு முயற்சி சிலோன் போன்று தமிழகத்திலும் தேவையே என்பதினை காட்டவில்லையா? சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரப்பத்திரிக்கையில் திருவிடைச்சேரி சம்பவத்தினை ஒரு சமூக அமைப்புத் தலைவரை சம்பந்தப்படுத்தி ஒரு கட்டுக்கதை வெளிவந்தது. அதனைப் பார்த்து மற்ற சமூக தலைவர்களில் சிலர் முகமலர்ந்ததினையும் அதனைத் தொடர்ந்து அந்த தலைவர் மீதும் அந்த அமைப்பு மீதும் பல கண்டனக் கணைகள் ‘இ’ மீடியாவில் வரத்தொடங்கின. அது போன்ற செயல்கள் சமூதாய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் நல்லதா என்று யோசிக்க வேண்டும். ஒரு அசாதாரண சம்பவம் நடந்தால் அதனை ஊதி பெரிதாக்குவது சகோதரச் செயலா என நோக்க வேண்டும். நம் சமுதாய இயக்கங்கள் வேறுபட்டுக் கிடப்பதால் நாம் பல்வேறு துக்க சம்பவங்களை சந்திக்க இயலாமல் சகோதரி ஜாக்கியா அகமதாபாத் கோர்ட்டில் விட்ட கண்ணீர் போன்று விட வேண்டியுள்ளது. நமது பொது எதிரியினை எதிர்கொள்வதினை விட்டு விட்டு சகோதரர்களுக்குள்ளே கத்தி தூக்கும் செயல் சரிதானா என யோசிக்;க வேண்டும்.
இன்றைய அவசர தேவை சமுதாய ஒற்றுமைதான். அந்த சமுதாய ஒற்றுமை இருந்தால் மட்டுமே இன்றைய சூழலில் நாம் அரசியலில் ஒரு தனியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்று பெற முடியும், சமுதாயத்தில் சகோதரத்தினை நிலைநாட்ட முடியும், ஏழை முஸ்லிம்களுக்கு சமத்துவத்தினை அளிக்க முடீயும். ஆகவே எல்லா சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு ‘சோஸியல் அவேக்கனிங் ஃபிரண்ட்’ அதாவது சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்படுத்தலாமே நமது இயக்கத் தலைவர்கள். அதற்கு தங்களுடைய மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

பொருளை இழந்தால் மீட்கலாம்

பொருளை இழந்தால் மீட்கலாம்
பதவியை இழந்தால் மீட்கலாம்
ஆனால் நம்பிக்கையை இழந்தால் மீளவே முடியாது

ஆயுளின் அற்பம்

மனிதன் உருவாகும் போதே.. அவனின் மரணமும் உறுதி செய்ய படுகிறது!
மனிதனுக்கு மட்டுமல்ல... உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இதுவே,
பொதுவான நியதி! ஆயுளின் அளவுகளில் வேண்டுமானால்... கொஞ்சம்,
‘கூட-குறைய’ன்னு இருக்கலாமேயொழிய, பிறப்பின் முடிவு இறப்பு என்றும்,
ஆக்கத்தின் முடிவு அழிவு என்றும், ஒவ்வொரு தொடக்கத்துக்கும் ஒரு முடிவு
இருக்கவே செய்கிறது.

ஒரு மனிதன்.. பிறந்த வினாடியிலிருந்து, அவனின் ஆயுள் காலம் முழுவதும்
அவனை நிழலாய் பின் தொடர்வது இரண்டு விசயங்கள்தான். ஒன்று ரிஜக்கும்
மற்றொன்று மௌத்தும். அதாவது ‘உணவும் மரணமும்!’
ஒருவனின் ரிஜக் நிறைவுறும்போது.. மௌத் அவனை தழுவச் செய்யும், அல்லது
மரணம் அவனை தீண்டும்போது.. அவனின் உணவு முடிவுற்றிருக்கும்.

’மரணத்தை வென்றவர் எவருமிலர்’ என்ற நிதர்சன உண்மையை ‘மறுப்பவரும்
எவருமிலர்’. ஆயினும்.. தன் விசயத்தில் மட்டும்.. “அது எப்போதோ...
தற்போதைக்கு இல்லை...” என்ற அலட்சியமே ஒவ்வொரு மனிதனுக்கும்.

நேரங்களின் திரட்சி, அல்லது வினாடிகளின் அடர்த்திகளையே காலம் என்கிறோம்.
அடர்த்தியின் அளவுக்கேற்ப, மணித்துளிகள், நாட்கள், வாரங்கள், வருடங்கள் என
வரைவகை படுத்துகிறோம். நடப்பாண்டு முடிந்து புதிய ஆண்டு பிறக்கையில்..
புத்தாண்டு என்ற பெயரிலும், ஒவ்வொரு வயதை கடக்கும் போதும்.. பிறந்தநாள்
என்ற பெயரிலும் காலங்களின் இழப்பை கொண்டாடி குதூகலித்து வருகிறோம்.
மாறாக... ஒவ்வொரு புத்தண்டிலும், பிறந்தநாளிலும், நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை
அல்லது ஒரு வயதை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மேலிடும்போதே
நேரத்தின் அருமையும், காலத்தின் அவசியமும் விளங்கும்.

ஒரு மனிதனின் சராசரி வயது (அதுவும், எந்த ஒரு விபத்திலோ.. நோய்நொடியிலோ
மரணிக்காத பட்சத்தில்) 70 என்று வைத்துக் கொள்வோம். அதில்.. 30 வயதான ஒரு
வாலிபனின்... மீதமுள்ள 40 வருடங்களின் எண்ணிக்கை...
நாட்களின் அடிப்படையில்... 14,600 நாட்கள்.
மணித்துளிகளின் அடிப்படையில்... 3,50,400 மணி நேரங்கள்.
நிமிடங்களின் அடிப்படையில்... 2,10,24,000 நிமிடங்கள்.
வினாடிகளின் அடிப்படையில்... 126,14,40,000 வினாடிகள் மட்டுமே!

இந்த கணக்கின் அடிப்படையில் 70 வருடத்தில் உங்களின் வயதை கழித்து..
மீதமுள்ள வருடங்களின், நேரங்களை கணக்கிட்டு பார்த்தீர்களானால்..
”ஆயுளின் அற்பம்” புரியும். நாள் ஒன்றுக்கு.. 86,400 வினாடிகள், நம் ஒவ்வொருவரையும்
கடந்துக்கொண்டிருக்கிறது.

‘என்ன களத்தூரான்.. ஏதோதோ சொல்லி பயமுறுத்துவது போல தெரியுதே’ன்னு சிலரும்
’ஏதோ புதுசா கண்டு பிடிச்சிட்ட மாதிரி பேசுறே’ன்னு சிலரும் கேட்கலாம்.
அப்படி இல்லீங்க..! நான் யாரையும் பயமுறுத்தவுமில்லை.., புதுசா எதையும்
கண்டு பிடிச்சிடவும் இல்லை. நாமெல்லாம் அறிந்த ஒன்றை அலட்சிய படுத்துவதையும்,
‘பொழுதே போக மாட்டேங்குது... வாழ்க்கையே போரா இருக்குது..’ன்னு பொன்னான
நேரங்களை வீணடிப்பதையும் சுட்டிக் காட்டவே இந்த புள்ளி விபரம்.

இன்னும்.. குடும்பங்களையும், உறவினர்களையும் பிரிந்து.. வெளிநாடுகளில் வேலை
செய்பவர்களுக்கென்று தனி கணக்கு இருக்கத்தான் செய்கிறது. அதாவது..
வருடத்தில் 11 மாதங்கள் வேலை 1 மாதம் விடுமுறையென்று வருடத்திற்கு
ஒரு முறை தாயகம் செல்பவரானாலும் சரி... அல்லது, 2 வருடத்திற்கு ஒரு முறை என்று,
22 மாதங்கள் பனிபுரிந்துவிட்டு, 2 மாத விடுமுறையில் ஊர் செல்பவரானாலும் சரி...
30 வயதில் வேலைத் தேடி, வெளிநாடுகளுக்கு வரும் ஒரு இளைஞன், தன் 60 வயது
(முதுமை) வரை, பனிபுரிந்தால்... (அதற்கு மேல் பனிபுரிய நீங்களே விரும்பினாலும்
அமீரகத்தின் தற்போதைய சட்டத்தில் இடமில்லை) அவன் தன் குடும்பங்களை பிரிந்து
(வாடிய) காலம்.. நாட்களின் அடிப்படையில்... 9,900 நாட்கள். அதாவது 2,37,600 மணி நேரங்கள்.
ஆனால், அவன் தன் குடும்பத்துடன் (மகிழ்சியாக?) இருந்த (விடுமுறை) காலம்..
வெறும் 720 நாட்கள். அதாவது 17,280 மணி நேரங்கள் மட்டுமே!

பெரும்பாலும், குடும்பத்தை பிரிந்து வெளி நாடுகளில் வசிக்கும் நாம்... நம்மை நாமே
சமாதானப் படுத்திக் கொள்ள, நமக்கு நாமே முன் வைக்கும் உதாராண தத்துவம்..
‘திரைக் கடலோடியும் திரவியம் தேடு’
‘ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும்’ போன்றவைகளாகும்.
திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்னும் சொல் நாம் வாழும்.. கிட்டத்தட்ட
துறவரம் போன்ற வாழ்க்கையை நியாயப் படுத்த கூறப்பட்ட தத்துவமல்ல.
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்ற வைரவரிகளில் நம் வாழ்க்கை
எப்படி அடங்கும். எதை பெற, எதை இழக்கிறோம்?. வெறும் 720 நாட்களின் மகிழ்சிக்காக
9,900 நாட்களை தியாகம் செய்கிறோமே இதுவா..? ஒருவன் புழுக்களை போட்டு மீன்களை
பிடிப்பதற்கு பதிலாக, மீன்களை போட்டு புழுக்களை பிடிப்பதற்கும், நமக்கும் பெரிதாய் என்ன
வித்தியாசம் இருக்க முடியும்?. வாழ்க்கையை இழந்து வசதிகளை பெறும் இந்த
”வாழாத வாழ்வு” ஏன்?

அர்ப்பனிப்புகளும் தியாகங்களும் இல்லாத வாழ்க்கை ஒருபோதும் அர்த்தமுள்ள
வாழ்க்கையாய் ஆகாது. முப்பது வருடங்களை கடந்து, வெளிநாடுகளில் வேலை செய்தும்
எண்ணற்ற கடமைகளினால், இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எத்தனை
எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருபோதும் நான் அவர்களை குறிப்பிடுவதாய்
எண்ண வேண்டாம். எல்லா வசதிகளுமிருந்தும், மேலும் வசதிகளை பெருக்க வாழ்க்கையை
இழக்க வேண்டாமே.

இறைவன் தந்த மகத்தான பரிசான, அவன் கொடுத்த பொன்னான நேரங்களை வீனாக்காமல்,
இம்மைக்கும், மறுமைக்குமான, பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து.. ஈருலகிலும் இறைவனுக்கு
பொருத்தமானவர்களாக இறைவன் நம்மையாக்கி அருள்வானாக! (ஆமீன்!)

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சந்திப்போம்.

’களத்தூரான்’

உத்தி…!

உத்தி…!

. M. குதுப்கான்
”ஹலோ …. யாரு?”
“அஸ்ஸலாமு அலைக்கும் ரபீக்தானே? சுல்தானோட மகன் ரபீக்?
‘’ஆமா …. நீங்க?’’
‘’நான் தான் கம்பம்ல் இருந்து காதர் மாமா பேசறேன். சின்னப் புள்ளைல பார்த்தது. சொகமா இருக்கீயா?
‘’ஐயோ காதர் மாமா… ! எங்கப்பாவோட பெஸ்ட் பிரண்ட். சொல்லுங்க மாமா. எப்படியிருக்கீங்க? என்ன விசேஷம்?’’
‘’நல்லார்க்கேன் …. அப்புறம் நஜீபுன்னு ஒரு பையன் இருக்கானாமே, தேனிக்காரப் பையன். உங்கூடப் படிச்சவண்டு சொன்னாங்க. அவன் எப்படி நல்ல பையனா? சும்மா ஒரு காரியமாத்தேன் கேக்கறேன்.’’
‘’சூப்பர் பையன் மாமா. முன்பெல்லாம் அழகா இருப்பான்…’’
’’ஏன் இப்ப அழகா இல்லயா?’’
‘’இப்பக் கொஞ்சம் குடிக்கப் பழகி ஆளு நோஞ்சானாகிப் போனான். இருந்தாலும் விவரமான பையன் மாமா. ரொம்பக் கெட்டிக்காரன்.’’
‘’அப்படியா என்ன தொழில் செய்யறான்?’’
‘’தற்சமயம் ஒண்ணுமில்லை மாமா. அவுங்கப்பா அவன நம்பமாட்டேங்கிறார். ஒரு தரம் ரெண்டு லட்சத்தை தொலைச்சுட்டான்றதுக்காக பெத்த புள்ளைய வாழ்க்கை பூரா நம்பாட்டி எப்படி மாமா… அது சரி எதுக்கு அவனப் பத்திக் கேக்குறீங்க மாமா?’’
‘’சும்மா ஒரு கல்யாண ஆலோசனை. என்னுடைய ஒரு நண்பர் விசாரிக்கச் சொன்னார்.”
‘’தைரியமா பெண் கொடுக்கச் சொல்லுங்க மாமா. கடை வச்சுக் கொடுத்தா எப்படியும் பொழச்சுக்கிறுவான்.’’
‘’ப்ச்… அவன விடு… வேறே ஒரு பையன் இருக்கானாமே நாசர் –ன்னு சின்னமனூர்க்காரன். அவனத் தெரியுமா?’’
‘’நல்லாத் தெரியும். நஜீப விட தங்கமான பையன் மாமா.’’
‘’அவன் என்ன செய்யறானாம்?’’
‘’ஸ்டேசனரிக் கடை வைத்திருந்தான்.’’
’’வைத்திருந்தானா? இப்ப இல்லையா?’’
‘’ஆமா மாமா. ஃபிரண்டுங்க கூட சேர்ந்து சீட்டு விளையாண்டு ஒரே ராத்திரில எழுபத்தைந்தாயிரம் ரூபாய் தோத்துட்டான். அந்த விரக்தில குடி கொஞ்சம் ஓவராயிடுச்சு. மத்தபடி எந்தக் கம்பளைண்டுமில்லங்க மாமா. பொண்ணுக் கொடுக்கிறதாயிருந்தா ரெண்டு பையன்கள்ல யாருக்கு வேணும்னாலும் தைரியமா கொடுக்கச் சொல்லுங்க மாமா. நான் கூட ராத்திரி பூரா அவனுங்க கூடத்தான் இருந்தேன். சுபுஹுக்கு முன்னாடிதான் வந்து படுத்தேன். லுஹர் நேரம் போன் பண்ணி எழுப்பிட்டீங்க. அவனுங்க ரெண்டு பேருமே என்னோட உயிர் நண்பனுங்க. யாரையுமே நான் குறைச்சு சொல்ல மாட்டேன். சரிதானே மாமா?’’
‘’ரொம்ப சரிங்க மருமகனே. உன்னச் சின்னப் பிள்ளைல பார்த்தது. உங்கப்பாவை நல்லாத் தெரியும். நீ உங்கப்பனுக்கு அப்பனா இருக்கிறீயே. நான் அவனுங்களைப் பற்றி விசாரிக்குறதுக்காக போன் பண்ணலை. உன்னைப் பத்தி தெரிஞ்சுக்கிறத்தான் கூப்பிட்டேன். அல்லாஹ் காப்பாத்தினான். வச்சிரட்டா.’’

நன்றி : சமரசம் : ஆகஸ்ட் 1-15,2010 இதழிலிருந்து

Sunday, October 24, 2010

சல்மாவும், சஹர் நேரமும்... தமிழக முஸ்லிம்களின் மூன்றாம் ஜாமத்தின் கதை!

சல்மாவும், சஹர் நேரமும்... தமிழக முஸ்லிம்களின் மூன்றாம் ஜாமத்தின் கதை!


ரமளான் முழுவதும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வழங்கப்பட்ட சஹர் நேர நிகழ்சிகளைப் பற்றி திறனாய்வு செய்து எழுதும் படி ஒரு நண்பர் என்னிடம் கேட்டுக் கொண்டார். திறனாய்வு செய்யும் அளவுக்கு நிகழ்ச்சிகள் ஒன்றும் பிரமாதமாய் இல்லை என்றாலும், அது குறித்து சில விசயங்களை விவாதிக்க வேண்டும் என தோன்றியது.

தொலைக்காட்சியை ஹராம் என்று சொல்லி அதிலிருந்து விலகி நின்ற தமிழ் முஸ்லிம் சமூகம், தொலைக்காட்சியின் வீச்சையும், அது பொது சமூக மத்தியில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும், தாமதமாகவேனும் புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரியதே என்றாலும், ஒளிபரப்பு ஊடகத்தை [visual media ] ஒலிபரப்பு ஊடகமாக [broadcost media ] நம்மவர்கள் கையாண்டு வருவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

திரையில் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தால் தான் அது காட்சி ஊடகம். ஒரு மணிநேரம் முழுவதும் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டு அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தால் அது என்ன ஊடகம்?

இங்கே தொலைக்காட்சிகளில் வழங்கப்படும் ஒவ்வொருமுஸ்லிம் நிகழ்சிகளிலும்
ஒவ்வொருவராக பேசிக் கொண்டே இருக்கிறார்கள், வேறு வழியே இல்லாமல் நாமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

காட்சி ஊடகத்தை காட்சி ஊடகமாகப் பயன்படுத்தக் கூடிய அனுபவமும்,முதிர்ச்சியும்,அறிவு வளர்ச்சியும் இன்றி, தொழில் நுட்பப் புரட்சி மிகுந்த இந்த 2010 -லும் கூட நாம் சிந்தனை வறட்சியிலேயே இருக்கிறோம் என்பதைத்தான் நம்முடைய ஊடகப் பயன்பாடு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சஹர் நேர நிகழ்ச்சிகளில் எந்தச் சேனலைத் திறந்தாலும் ஒரே பேச்சு மயம் தான். கற்குவியல்களுக்கு இடையே சில சோற்றுப் பருக்கைகளைப் போல ஒரு சில நிகழ்சிகளைப் பார்க்க முடிந்தது.

மார்க்க ரீதியான கேள்வி பதில்களும், குழந்தைகளை ஈர்க்கும் வினாடி வினா போட்டிகளும் சற்று மன நிறைவைத் தந்தன.ஆனால், கடந்த காலங்களில் வித்தியாசமான நிகழ்சிகளை வழங்கி வந்த சிலரும் கூட, காலப் போக்கில் பேச்சு என்கிற பழைய நிலைக்கே திரும்பியிருப்பது நமக்கு அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.அவர்களும் வழக்கமான 'பேச்சு' நீரோடையில் கலந்து கரைந்து போவதற்கான காரணம் என்ன என்பதை சற்று ஆராய வேண்டி உள்ளது.

காயல் இளவரசு தொடங்கி வைத்த சஹர்நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, இன்றைக்கு மதிமுகவின் சீமா பஷீர் வரை வளர்ந்திருக்கிறது. அதாவது, காயல் இளவரசு என்னும் தனி நபரில் தொடங்கி, முஸ்லிம் அமைப்புகளிடம் தொடர்ந்து, இன்று மதிமுக என்னும் அரசியல் கட்சி வரை அது விரிவடைந்திருக்கிறது.

முன்பு சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் ஊடக நிறுவனங்களே இல்லை என்ற நிலை இருந்தது.
இன்று சஹர் நிகழ்ச்சி நடத்தாத முஸ்லிம் அமைப்புகளே இல்லை என்ற நிலை இருக்கிறது.
நாளை சஹர் நிகழ்ச்சி நடத்தாத அரசியல் கட்சிகளே இல்லை என்ற நிலை வந்து விடும் என்பதைத்தான் மதிமுகவின் இவ்வருட சஹர் வருகை நமக்கு உணர்த்துகின்றது.

எப்படி இப்தார் நிகழ்ச்சி இன்றைக்கு அரசியல் கேலிக்கூத்துகளின் அடையாளச் சின்னமாக மாறி விட்டதோ, அதைப் போலவே சஹர் நிகழ்சிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தனிநபர் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்படும் நிகழ்சிகளால் சமூகத்திற்கு பெரிய அளவில் பயன் இல்லாவிட்டாலும், சிறிய அளவு கூட தொல்லை இருந்ததில்லை.ஆனால் அமைப்புகள் களத்தில் குதித்த பிறகு சஹர் நேரத்தின் கண்ணியத்திற்கு களங்கம் நேர்ந்து விட்டது. மார்க்க ரீதியான பிரச்சனைகளைக் கிளறி, கருத்து மோதல்களைச் செய்வதற்கான களமாக சஹர் நேரத்தையும், ஊடகத்தையும் மாற்றி விட்டார்கள்.

இறைவனுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்றொரு சண்டை.

காதியானிகள் முஸ்லிமா இல்லையா என்று, ரொம்ப அவசியமான ஒரு விவாதம்.

சமுதாயத்திற்கு யார் உண்மையாக உழைப்பது என்பதை எடுத்துச் சொல்வதில் 'நீயா நானா' போட்டி.

இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தந்தது யார் என்பதில் நீடிக்கும் உரிமைப் போர்.

'அவன் முஸ்லிம் இல்லை, இவன் முஸ்லிம் இல்லை' என்றெல்லாம் சகட்டுமேனிக்கு சான்றிதழ் கொடுக்கும் கொடுமை.

ஜகாத்தையும், நன்கொடைகளையும் எங்களுக்கே அனுப்புங்கள்! அனுப்புங்கள்! என்று கூவிக் கூவி வசூலிக்கும் அவலம்.....

இப்படி நீண்டு கொண்டிருக்கிறது முஸ்லிம் ஊடகத்தின் பரிணாமம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம், மார்க்கம் பேச வேண்டியவர்கள் அரசியல் பேசுகிறார்கள்.
அரசியல் பேச வேண்டியவர்கள் மார்க்கம் பேசுகிறார்கள்.
எதையாவது பேச வேண்டும் என்பதில் இருக்கும் முனைப்பும் வேகமும் எதைப் பேச வேண்டும் என்பதில் இருப்பதில்லை.
பிஜேயின் மார்க்கப் பிரச்சாரம் தான் தமுமுகவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்று சொல்லி முழு நேர அரசியல் பேச வந்தவர்கள், அரசியலை விட்டு விட்டு மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களிடம் கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வாய்ப்பு மிகுந்த ஒரு நேரத்தில், வலிமை மிகுந்த ஒரு ஊடகத்தின் மூலம் சமூக மறுமலர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களை எடுத்து வைத்து மக்களை ஈர்ப்பதை விட்டு விட்டு 'ஏய்..! நானும் ரவுடிதான்; நானும் ரவுடி தான்' என்பது போல மார்க்கப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஊடகத்தின் வழியே யாருமே மார்க்கப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதல்ல நமது கருத்து.
அரசியல் எழுச்சியூட்ட வேண்டியவர்கள் ஊடகத்தை அதற்கு முழுமையாகப் பயன்படுத்தட்டும்,
மார்க்க விழிப்புணர்வூட்ட வேண்டியவர்கள் முழுமையாக மார்க்கப் பிரச்சாரம் செய்யட்டும்.

ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் நம்மில் துறை சார்ந்த வல்லுனர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பிஜே மார்க்கப் பிரச்சாரம் செய்வதால் நானும் மார்க்கப் பிரச்சாரம் செய்வேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தால், அரசியல் விழிப்புணர்வை யார் ஊட்டுவது?

ஒரே வேலையை எல்லோரும் செய்து கொண்டிருப்பதனால் தான் இங்கே சமுதாயத்தின் பிரச்சனைகள் தீர்வின்றித் தொடர்கின்றன.அவரவர் கடமைகளில் இருந்து அவரவர் தவறுவதன் மூலம் சமுதாய மக்களின் பொருளாதாரமும்,
பொன்னான நேரமும் தான் வீணாகிக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரி என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நடைமுறையில் நாம் மற்றவர்களிடம் இருந்து நிறைய பாடம் படிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் எல்லா துறைகளிலும் வேர் பரப்பி, கிளை விரித்து, கோலோச்சி இருக்கிற இந்துத்துவ சக்திகள் ஒருபோதும் தங்களின் ஆற்றலை வீணாக்குவதில்லை. ஒரே வேலையை செய்வதற்காக அவர்கள் தங்கள் சமூகத்தின் பொருளாதாரத்தை விரயம் செய்வதில்லை.

அங்கே பாஜகவுக்கு ஒரு வேலை;பஜ்ரங் தளத்துக்கு ஒரு வேலை;விசுவ ஹிந்து பரிசத்துக்கு ஒரு வேலை;துர்கா வாகினிக்கு ஒரு வேலை;அபினவ் பாரத்துக்கு ஒரு வேலை;இந்து முன்னணிக்கு ஒரு வேலை..இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகள்.இவர்களையெல்லாம் கட்டி மேய்க்கிற பெரியண்ணன் வேலை ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை.

இவர்களில் எந்த அமைப்பும் இன்னொரு அமைப்பைத் தாக்குவதில்லை.தொலைக்காட்சியில் Slot எடுத்து சண்டை போடுவதில்லை. பாபர் மசூதியை இடித்தது நீயா நானா என்று ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்பதில்லை. ஒரு அமைப்பின் வேலையில் இன்னொரு அமைப்பு தலையிடுவதில்லை.ஒரு அமைப்பின் வேலையை இன்னொரு அமைப்பு செய்வதுமில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித் தனி வேலைகள். ஒவ்வொருவருக்கும் தனித் தனிப் பாதைகள்.ஆனால் எல்லோருக்கும் ஒரே இலக்குகள். ஆர்எஸ்எஸ் என்கிற தலைமை அமைப்புக்கு கட்டுப்பட்டவர்களாக,அது போட்டுக் கொடுத்த செயல் திட்டத்தின் படி வழி நடப்பவர்களாக இந்துத்துவ சக்திகள் இயங்கி வருவதை நாம் கண் கூடாக கண்டு வருகிறோம்..

குர்ஆனும், ஹதீசும் இல்லாமல், முறையான வாழ்க்கைத் திட்டம் இல்லாமல், ஒருமுகப்பட்ட நல்ல கோட்பாடு இல்லாமல் அவர்கள் முறையாகவும் தெளிவாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாம் எல்லாம் இருந்தும் இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

எந்த வித திட்டமிடலும் இல்லாமல், தெளிவான வழிமுறைகளைக் கையாளாமல் அமைப்பு நடத்துவது போலவே இங்கே ஊடகமும் நடத்தப்பட்டு வருகிறது. பாபர் மஸ்ஜித் மீட்புப் போராட்டம், இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் என ஒரே விசயத்தைப் பேசுவதற்கு பல அமைப்புகள் இயங்குவது போல, பல்வேறு அமைப்புகளும் தொலைக்காட்சியில் Slot வாங்கி ஒரே விசயத்தைப் பேசுகின்றன.

கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு, எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது, எந்தக் கருத்தைக் கேட்பது என்ற குழப்பம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும்,உறங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை தட்டி எழுப்பவும்,அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசவுமே ஊடகம் பயன்பட வேண்டும்.ஆனால் முஸ்லிம் ஊடகத்தின் மூலம் இன்று சமுதாயத்தில் குழப்பமும் பிரச்சனைகளும் தான் மலிந்து கொண்டிருக்கிறது.

குஜராத் இனப்படுகொலைகளை நிகழ்த்தியது எப்படி என்று, இந்துத்துவ பயங்கரவாதிகளைப் பேச வைத்து பதிவு செய்த தெஹல்காவின் அரும்பணியை நாம் மெச்சிக் கொண்டிருக்கிறோம்.

காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்யும் ஸ்ரீ ராம் சேனாவின் பிரமோத் முத்தலிக்கை, கையும் களவுமாக காட்டிக் கொடுத்த ஊடகத்தின் மேன்மையை நாம் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாடு முழுவதும் நடை பெற்ற ஏழு மிகப்பெரிய குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு உண்டு என்று பகிரங்கமாக அம்பலப் படுத்திய ஹெட்லைன்ஸ் டுடேயின் கேமராவை நாம் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், நமது கைகளில் இருக்கும் கேமராக்கள், என்றைக்காவது நம் பிரச்சனைகளைப் படம் பிடித்துக் காட்டியதுண்டா?
சுய பரிசோதனை செய்யும் வகையில் ஒவ்வொரு முஸ்லிம் ஊடக நிறுவனங்களும் தங்களுக்குள் இந்தக் கேள்வியை எழுப்பிப் பாருங்கள்; வெட்கத்தால் தலை குனிவீர்கள்.

மார்க்க ரீதியான கருத்து முரண்பாடுகளையும், மசாயில் பிரச்சனைகளையும் எப்போதும் படம் பிடித்துக் கொண்டு ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் நம் கேமரா, ஏன் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களைப் படம் பிடிக்கவில்லை?

கோடான கோடி ரூபாய் மதிப்புள்ள வக்புச் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துள்ள அரசியல்வாதிகளையும், தொழில் அதிபர்களையும், நிறுவனங்களையும், தனி நபர்களையும் கையும் களவுமாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் புலனாய்வு வேலையை ஏன் நமது ஊடகம் செய்யவில்லை?

இஸ்லாத்திற்கு வந்த பேராசிரியர் பெரியார் தாசனை போட்டி போட்டுக் கொண்டு படம் பிடிக்கவும், பேட்டி எடுக்கவும் முனைப்பு காட்டுகின்ற நமது ஊடகம், 25 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த அப்துல்லாஹ் அடியாரின் இறுதி நாட்கள் வறுமை நிறைந்ததாக முடிவுக்கு வந்ததைப் பற்றி என்றைக்காவது பேசி இருக்கிறதா?

இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாத்திற்கு வந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் இப்போது எப்படி இருக்கிறார் என்று எப்போதாவது திரும்பிப் பார்த்திருக்கிறோமா? இப்போதும் மொழிப் போராட்ட தியாகிகளுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் அவரது இன்றைய நிலையை சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறோமா?

கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவும் பல்வேறு கிராமங்களில் ஒரு பள்ளிவாசல் கூட கட்ட முடியாமல், இஸ்லாமியக் கருத்தியலை கற்றுக்கொள்ளும் மையம் ஒன்றை நிறுவ முடியாமல், அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் கடும் நெருக்கடியில் சிக்கி உழல்வதை நமது ஊடகங்கள் ஏன் படம் பிடிக்கவில்லை?

பெரியார் தாசனை வாழ்த்த வந்த திருமாவளவன் எப்போது இஸ்லாத்திற்கு வருவார் என்று துரத்தித் துரத்தி கேள்வி எழுப்பி, அதை ஊடகங்களில் ஒளிபரப்பி, சமுதாய மக்களிடம் எதிர்பார்ப்பை கிளறி விட்டவர்களே...சென்னை கொருக்குப்பேட்டையில் வறுமையின் காரணமாக ஆறு முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிச் சென்ற அவலம் நடந்துள்ளதே..அதைப் பற்றியும் கொஞ்சம் பேசுவீர்களா?

சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம் பற்றி முஸ்லிம் இதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரப் படுத்தினோம்.
முஸ்லிம்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வங்கிக் கடன் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று எழுதினோம்.

ஆனால் நடைமுறையில், தொழில் தொடங்க கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடக்கும் முஸ்லிம் இளைஞர்களை, வங்கி அதிகாரிகள் அலட்சியப் படுத்தி திருப்பி அனுப்புவதையும், வேறு வழியே இல்லாமல் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்து வாழ்க்கையை ஓட்டும் நமது சமுதாய இளைஞர்களின் அவலங்களையும் என்றைக்காவது நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோமா? நமது ஊடக நிகழ்ச்சிகளில் இதையெல்லாம் விவாதப் பொருளாக்கி, பாதிக்கப்பட்டவர்களை பேட்டி எடுத்திருக்கிறோமா? சம்மந்தப் பட்ட அதிகாரிகளை அணுகி கேள்வி எழுப்பி இருக்கிறோமா?

பாதிக்கப் பட்ட இளைஞர் தன் பெற்றோருடன் சென்று வங்கி அதிகாரியை நோக்கி கேள்வி எழுப்புவதை விட, பத்து பேராகத் திரண்டு போய் வங்கியை முற்றுகை இடுவதை விட, ஒரு கேமராவை தூக்கிக் கொண்டு ஒரே ஒரு நபர் சென்றால் போதுமே! மறு நொடியே பிரச்சனைக்கு தீர்வு வந்து விடுமே. அதை ஏன் இதுவரை நமது கேமரா செய்யவில்லை?

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதை மாறி, இன்றைக்கு சினிமா துணை நடிகைகளாகவும், விபசாரத்தில் ஈடு படுபவர்களாகவும் ஏராளமான முஸ்லிம் பெண்கள் இருப்பதை ஏன் நமது ஊடக அறிவு கண்டறியவில்லை?

இலங்கையில் இருக்கும் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளைப் படம்பிடித்து, தமிழ்நாட்டில் ஒளிபரப்பத் தெரிந்த நமது கேமராவுக்கு, இலங்கை முஸ்லிம்களின் அகதிமுகாம் வாழ்கையை ஆய்வு செய்யச் சென்ற பேராசிரியர் அ.மார்க்சுடன் பயணித்து அங்குள்ள அவல நிலைகளைப் படம் பிடித்து வந்து ஒளிபரப்ப மனம் வரவில்லையே ஏன்?

தமது இயக்கத்தின் சார்பில் செய்யப்படும் பித்ரா வினியோகத்தையும்,இரத்த தானத்தையும், மருத்துவ முகாம்களையும் மறவாமல் படம் பிடித்து ஆவணப்படுத்தி, அதை சமுதாய மக்களுக்கு காட்சிப் படுத்துவதில் இருக்கும் வேகத்தில் துளியளவாவது , முஸ்லிம் ஆளுமைகளின் சாதனை வாழ்க்கையை ஆவணப்படுத்துவதிலும், முஸ்லிம்கள் குறித்த வரலாற்றுப் படங்களை உருவாக்குவதிலும், இருந்திருக்க வேண்டாமா? அப்படி ஆவணப்படுத்தி இருந்தால், இன்றைய தலைமுறையினர் காயிதே மில்லத்தைப் பார்த்து நாகூர் ஹனிபா என்று சொல்லும் அவலம் நேர்ந்திருக்குமா?

முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறைகளை அம்பலப்படுத்தும் வகையில் அண்மையில் கீற்று இணையதளம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. காவல்துறையின் அடக்குமுறைக்கு இலக்கான முஸ்லிம்கள் பலர் அந்நிகழ்ச்சியில் தோன்றி தங்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தனர்.கீற்று நடத்திய அந்நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படி புதிய கோணத்தில் நமது பிரச்சனைகளை விவாதப்பொருளாக்கும் வேலையை எப்போதாவது நமது ஊடகங்கள் செய்திருக்கிறதா?

கீற்றுக்கு இருக்கிற அக்கறை ஏன் 'மூன்' டிவிக்கு இல்லை?
ஏன் அது போன்ற ஒரு நிகழ்ச்சியை டி.என்.டி.ஜே மீடியா விஷன் செய்யவில்லை?
எந்நேரமும் பிஜேயுடன் வம்பு வளர்ப்பதையே முழு நேரச் செயல்திட்டமாகக் கொண்டு இயங்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின்,
ஆஷிக் மதீனா மீடியா நெட்வொர்க் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை?

இப்படிப் பேசுவதற்கும்,விவாதிப்பதற்கும்,காட்சிப் படுத்துவதற்கும் ஆயிரம் அவலங்கள் குவிந்து கிடக்கின்றன.ஆனால் இவை குறித்தெல்லாம் எந்தச் சிந்தனையும் இன்றி முஸ்லிம் ஊடகம் பொறுப்பற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

சமுதாயத்திற்குப் பயனுள்ள விசயங்களை காட்சிப் படுத்துவதை விட்டு விட்டு, நான்கு பணக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு,அவர்களைப் பேச வைத்துப் படம் பிடித்து, அதையே ஒரு நிகழ்ச்சியாக்கி ஒளிபரப்பக் கூடிய தரகு வேலைதானே, இன்றைக்கு முஸ்லிம் ஊடக சேவையாக இருக்கிறது?

நபிகளார் வலியுறுத்திய பண்புகள் எவற்றையும் நடைமுறை வாழ்வில் கடைப்பிடிக்காதவர்கள் எல்லாம்..தொலைக்காட்சியில் தோன்றி 'ரசூலுல்லாஹ் அப்படிச் சொன்னார்கள்,ரசூலுல்லாஹ் இப்படிச் சொன்னார்கள்' என்று சமுதாயத்திற்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்றெல்லாம் பகுத்துப் பார்க்கத் தெரியாமல் எல்லோருக்கும் வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்.

மார்க்கம் பேசினால் தான் வசூலாகும் என்ற நிலை தொடர்வதனால் தான், மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் விட்டு விட்டு இங்கே எல்லோரும் மார்க்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியலைப் பற்றியும்,வரலாற்றைப் பற்றியும்,கலைகளைப் பற்றியும்,இலக்கியத்தைப் பற்றியும்,அரசியலைப் பற்றியும்,பொருளாதாரத்தைப் பற்றியும், பண்பாட்டைப் பற்றியும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும்,உரையாடுவதற்கும்,நல்ல தீர்வுகளை நோக்கி நகருவதற்கும் யாருமே முன்வருவதில்லை.

அப்படி யாராவது முன்வந்தாலும் அவர்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை.
மார்க்கம் பேசுகிறவர்களுக்கு மட்டுமே பொருளாதாரத்தை வாரி வழங்கும் சமூகப் புரவலர்கள், மற்ற விசயங்களைப் பற்றியும் பேசுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டாமா?

பொதுவான தொலைகாட்சி நிகழ்சிகளுக்கு விளம்பரம் தரக்கூடிய வர்த்தக நிறுவனங்கள்,கண்டபடி எல்லோருக்கும் விளம்பரங்களைக் கொடுப்பதில்லை. எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் ரசிக்கிறார்கள்,எந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது,எந்த நிகழ்ச்சி அதிகமான வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் 'டி.ஆர்.பி. ரேட்டிங்' என்னும் தரவரிசைப் பட்டியலைப் பார்த்து, அதில் சிறந்த இடத்தில் இருக்கும் நிகழ்ச்சிகளுக்கே விளம்பரம் தருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம் ஊடக நிகழ்ச்சிகளை கண்காணிப்பதற்கும்,தரவரிசைப் படுத்துவதற்கும் ஆளுமில்லை;அமைப்புமில்லை.
முஸ்லிம் நிகழ்சிகளுக்கு விளம்பரங்களைத் தரக்கூடிய நிறுவனங்களுக்கு அதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.

இங்கே நிகழ்ச்சிக்காக விளம்பரம் கொடுக்கிறார்கள் என்பதை விட, நிகழ்ச்சியை நடத்தும் நபருக்காகவும், அமைப்புக்காகவுமே விளம்பரம் கொடுக்கிறார்கள். அதனால் தான் வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்துகிறவர்களுக்கும்,வெறுமனே உரை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரே விதமான பொருளாதார உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை மாறவேண்டும்.நல்ல நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் நிலை மலர வேண்டும்.

சங்கபரிவார் அமைப்புகளை கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஆர்.எஸ்.எஸ். என்கிற ஒரு தலைமை அமைப்பு இருப்பது போல் நமது அமைப்புகளை கண்கானிப்பதற்குத்தான் ஒரு அமைப்பு இல்லை; இந்த ஊடக நிகழ்சிகளை கண்காணிக்கவாவது ஒரு ஊடக மையம் இருக்கக் கூடாதா?

நமது பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் நமது எதிரிகளை கைகாட்டுவதை விட்டுவிட்டு, நாம் எந்தெந்த வகையிலெல்லாம் காரணமாய் இருக்கிறோம் என்கிற சுய பரிசோதனையில் ஈடுபடுவதே இனி நமது முன்னேற்றத்திற்கான ஒரே வழி.

******
சஹர் நேர நிகழ்ச்சிகளில் பலராலும் அதிர்ச்சியோடு பார்க்கப் பட்ட இன்னொரு விசயம் கவிஞர் சல்மாவின் உடையும்,அவரது உரையும் தான்.

இலக்கியக் கூட்டங்களிலும்,பொது நிகழ்ச்சிகளிலும் நவ நாகரீகமான ஆடைகளுடனும், நல்ல சிகை அலங்காரத்துடனும் காட்சி அளிக்கும் நம் சகோதரி,சஹர் நேர நிகழ்ச்சியில் தலையில் முக்காடு அணிந்து மார்க்க உபன்யாசம் செய்து கொண்டிருந்தது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

இணையதளத்தில் facebook எனப்படும் முகநூலில் சல்மாவும் அங்கம் வகிக்கிறார். அதில் அவர் தன்னைப் பற்றிய சுய விபரக் குறிப்பில் [profile],தன்னை ஒரு இறைமறுப்பாளர் [athiest] என்று அடையாளப் படுத்தி உள்ளார்.

தன்னை இறைமறுப்பாளர் என்று சொல்லிக் கொள்ளும் கவிஞர் சல்மா,இறையியலோடு தொடர்புடைய சஹர் நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றி, முஸ்லிம்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்தது மிகப்பெரும் முரண்பாடாகவே தெரிந்தது.

''எங்கள் வீட்டில் என் கணவரும் தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருப்போம். முஸ்லீம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை''.

''என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் கண்ணாடி முன்பு நின்று என் நெற்றியில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது அடம்பிடிக்கிறான். “நீ என்ன சாமி கட்சிக்குப் போகப் போகிறாயா” என்கிறான். சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் அழுகிறான்.இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது''.

இப்படியெல்லாம் பேட்டி கொடுத்து, முற்போக்கு முகவரி பெற்ற சல்மாதான், சஹர் நேரத்தில் முக்காடு போட்டு வந்து முஸ்லிம்களுக்கு வகுப்பு எடுத்தார்.

சல்மாவின் வாக்குமூலத்தை வைத்துப் பார்க்கும் போது, சஹர் நேரத்தில் முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி அவரை விட, அவரது பிள்ளைகளுக்கு இருப்பதாகவே நமக்குத் தோன்றியது.

ஊடகத்துறை பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போதே சல்மாவைப் பற்றியும் குறிப்பிட வேண்டி வந்ததால், எனக்கு ஊடகம் தொடர்பாகவும் சல்மா தொடர்பாகவும் நினைவுகள் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றன.

அது ஒரு ரம்மியமான மாலை நேரம்...

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டிய ஒரு குடிலில் இலக்கியவாதிகளும்,இதழியலாளர்களும் பெருமளவில் கூடியிருந்தனர்.

பிரக்ரிதி பவுண்டேசன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் கவிஞர் சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' நாவலைப் பற்றிய உரையாடலும், சல்மாவின் இணையதள அறிமுகமும் நடைபெற்றது.

சல்மா எனது அன்புக்குரிய சகோதரி..
சல்மாவின் இணையதளத்தை அன்று அறிமுகப் படுத்தியவர் எனது அண்ணன் இயக்குநர் அமீர்.
சல்மாவின் நாவலைப் பற்றிய கருத்துப் பதிவை நிகழ்த்தியவர் எனது இதயத்திற்கு இனிய எழுத்தாளர் களந்தை பீர்முகமது.
இப்படி நிகழ்வு நெகிழ்வாய் இருந்தது.

சல்மாவின் படைப்புகளோடு நமக்கு முரண்பாடுகள் உண்டு என்றாலும், எத்தகைய படைப்பையும் எத்தகைய விமர்சனத்தையும் விவாதிக்காமல் உரையாடாமல் கடந்து போகக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் அதில் நானும் பங்கேற்றேன்.

அங்கே குழுமியிருந்த இலக்கியவாதிகளைப் பார்த்தபோது எனக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை.
ஆனால் இதழியலாளர்களைப் பார்த்த போது, அதுவும் அவர்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை பார்த்தபோது மனதில் பல கேள்விகள் எழுந்தன.

அவர்களில் பெரும்பாலானோர் நுனி நாக்கு ஆங்கிலம் உரைப்பவர்களாகவும், முன்னணி ஊடக நிறுவனங்களில் முக்கியப் பங்காற்று பவர்களாகவும் இருந்தனர்.

இன்று சல்மாவுக்கு கிடைத்திருக்கின்ற ஊடக வெளிச்சம் நாம் பலரும் அறிந்ததே.

அரசியல் தளத்தில் அவர் எழுந்து வர வேண்டும் என்று அவர் மீது நாம் காட்டும் கரிசனத்திற்கும், அவரது இலக்கியப் படைப்புகளுக்காகவும் அதில் அவர் பதிந்துள்ள உட்பொருளுக்காகவும் அவரை முன்னிறுத்தி முதன்மைப் படுத்தும் உயர் சாதி ஊடகங்களின் கரிசனத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து,பின்புலமற்ற எளியதொரு குடும்பத்தில் பிறந்து, எழுந்து வந்திருக்கும் ஒரு எழுத்தாளர். அதுவும் பெண் எழுத்தாளர் என்ற கரிசனத்தோடு ஊடகங்கள் அவரை முன்னிறுத்தினால் அதில் கேள்வி எழுப்புவதற்கென்று எதுவும் இல்லை.அது வரவேற்கவும் பாராட்டவும் படவேண்டிய ஒன்று.

ஆனால் நிச்சயமாக ஊடகங்கள் அத்தகைய நல்ல நோக்கத்தோடு சல்மாவை அணுகவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த போதும், இஸ்லாமியக் கருத்தியலை மறுத்து விட்டு ஒரு இறைமறுப்பாளராக தன்னை சல்மா அறிவித்துக் கொண்டதாலும், தனது படைப்புகளில் முஸ்லிம் சமூகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்ததாலும், முஸ்லிம் கலாச்சார அடையாளமின்றி,முக்காடு அணியாமல் மற்ற பெண்களைப் போல் பொது அரங்கில் காட்சியளிப்பதனாலுமே, அவரை முற்போக்குவாதி என்று சொல்லி ஆராதிக்கிறார்கள்;ஆதரவளிக்கிறார்கள்; உச்சிமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம்களின் மார்க்கக் கருத்தியலுக்குள் நுழைந்து சர்ச்சையைக் கிளப்பாமல்,சமூகம் சார்ந்த பதிவுகளையும், கல்வி, பொருளாதாரம்,அரசியல் அதிகாரம் குறித்த விழிப்புணர்வூட்டும் படைப்புகளையும் தந்து கொண்டிருக்கும் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு பொது ஊடகங்களில் எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்ற ஒற்றைக் கேள்வியில் தான், சல்மாவை முன்னிறுத்தும் ஊடகங்களின் நோக்கமும் வேஷமும் அம்பலத்திற்கு வருகிறது.

முஸ்லிம்களின் எழுச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் வேண்டி தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு 'இந்தியா டுடே' பக்கம் ஒதுக்குமா? 'காலச்சுவடு' கட்டுரை எழுதுமா? ஹிந்துவிலும்,விகடனிலும் புகைப் படங்களுடன் செய்தி வருமா? இணைய தளங்கள் இடம் கொடுக்குமா? வெளிநாடுகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் சொல்லி அழைப்புத்தான் வருமா?

அப்படி எதுவுமே வராமல், விளம்பர வெளிச்சமே விழாமல் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் முஸ்லிம் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை மக்கள் மயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

'இரண்டாம் ஜாமங்களின் கதை'யை தந்ததற்காக, எங்கோ இருக்கின்ற அமெரிக்காவில் இருந்து சல்மாவுக்கு அழைப்பு வருகிறது. ஆனால் 'கைதியின் கதை'யை தந்ததற்காக இங்கே இருக்கின்ற ஆண்டிப்பட்டியில் இருந்து கூட எனக்கு அழைப்பு வரவில்லை.

ஏனென்றால், இரண்டாம் ஜாமங்களின் கதை- முஸ்லிம் பெண்கள் முஸ்லிமல்லாத ஆண்களுடன் ஓடிப்போகின்ற சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறது. கைதியின் கதை- அடக்குமுறைக்கு இலக்கான மதானியைப் பற்றியும் இதர முஸ்லிம் சிறைவாசிகளைப் பற்றியும் பேசுகிறது.இது தான் வித்தியாசம்.

இரண்டாம் ஜாமங்களின் கதையைப் பற்றிய அன்றைய பெசன்ட்நகர் நிகழ்வில், ஏற்புரை ஆற்றிய சல்மா ''எனது சமூகத்தைக் கொச்சைப் படுத்துவதோ, என் சமூக மக்களைப் புண் படுத்துவதோ எனது நோக்கமல்ல..நான் கண்டவற்றை, கேட்டவற்றை,அனுபவித்தவற்றை அப்படியே எழுதினேன்'' என்றார்.

முஸ்லிம் சமூகத்தை புண் படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று சல்மா சொல்லி விட்டாலும், அவரது படைப்புகளை தூக்கிப் பிடித்து,அவருக்கு விளம்பர வெளிச்சம் தந்துகொண்டிருக்கும் ஊடகங்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது என்பதை சகோதரி சல்மா புரிந்து கொள்வாரா?

அன்றைய நிகழ்வில் சல்மாவின் நாவல் குறித்து திறனாய்வு உரை நிகழ்த்திய களந்தை பீர்முகமது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.மகிழ்ச்சியின் உச்சத்தில் கருத்துக்களை உதிர்த்த அவர், முஸ்லிம்களுக்கு கருத்துக்களை எதிர்கொள்ளும் பக்குவமில்லை என்று சாடினார்.இறுக்கமான சமூக அமைப்பாக முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்று கொந்தளித்தார்.

சல்மாவின் கதையில் முஸ்லிம் பெண்களின் உள்ளுணர்வுகள் வெளிப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம் பெண்கள் சந்திக்கும் துயரங்கள் துணிச்சலாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பாராட்டினார். அந்தக் கதையை உணர்ச்சிவயப்பட்டு அணுகாமல் முஸ்லிம்கள் அதை ஒரு சிறந்த படைப்பாகப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.

உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ ஆனால் திறந்த மனதோடு அதை ஒரு படைப்பாகப் பார்க்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் சில கேள்விகள் மட்டும் இருந்தது. நிகழ்வு முடிந்தவுடன் நான் பீர்முகமது அவர்களிடம் கேட்டேன்.

தன் சொந்த சமூகத்தின் அவலங்களையும், அங்குள்ள பெண்கள் சந்திக்கும் துயரங்களையும், துணிச்சலாகப் பதிவு செய்துள்ள சல்மா.. தன் சொந்த கட்சியில் நடக்கின்ற அவலங்களையும், குடும்ப ஆதிக்கத்தையும், தொழில் துறையிலும்,கலைத் துறையிலும் அவர்கள் காட்டி வருகின்ற ஏக போகத்தையும் துணிச்சலாகப் பதிவு செய்வாரா? அப்படி செய்தால் அதை அந்தக் கட்சி எப்படி எடுத்துக்கொள்ளும்?

எதையும் கேள்வி கேட்டு ஏற்றுக்கொள்ளச் சொன்ன பெரியாரின் வழியில் கட்டமைக்கப் பட்ட ஒரு கட்சியே, அதை சகிப்புத் தன்மையோடு எடுத்துக் கொள்ளாது எனும் போது, கல்வியின் வாசனை நுகராத ஒரு அறியாமைச் சமூகம் தமக்கு எதிரான கருத்துக்களுக்கு உணர்ச்சிவயத்தில் காட்டும் எதிர்ப்புகளை வைத்து, அந்தச் சமூகத்தை சகிப்புத்தன்மை அற்ற சமூகமாக சித்தரிப்பது முறையா?

என்றெல்லாம் நான் கேட்ட போது..நியாயமான கேள்விதான் என்று பம்முவதே களந்தையாரின் பதிலாக இருந்தது.

தனிப்பட்ட முறையில் சல்மா எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவரது அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் அடிக்கடி சென்று உரையாடும் அளவுக்கு அவரோடு எனக்கு நல்ல நட்பு உண்டு.

ஒருமுறை நான் அவரது வீட்டிற்கு சென்றபோது அவரது தாயாரும், சகோதரிகளும் இஸ்லாம் வலியுறுத்தும் கண்ணியத்தோடும்,
ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றக் கூடிய மார்க்கப் பேணுதலோடும் காட்சியளித்ததை என் கண்ணால் கண்டேன்.

அரசியல் ரீதியாக தனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம், தாம் ஒரு இலக்கியவாதி என்பதற்காக கிடைத்தது அல்ல என்றும், அது தனது சமூகப் பின்புலத்திற்காக கலைஞர் கொடுத்தது என்றும் சல்மா என்னிடம் கூறி இருக்கிறார்.

முஸ்லிம் சமூகம் சந்தித்து வரும் நெருக்கடிகள் பற்றியும், சமூகத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் பற்றியும் அவ்வப்போது கவலையோடு கருத்துப் பரிமாறுவார்.

அப்படிப்பட்டவர் தன்னை 'இறைமறுப்பாளர்' என்று சொல்வதை தவிர்த்து விட்டு, ஓர் உண்மை முஸ்லிமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பமும்; வேண்டுகோளும்; பிரார்த்தனையுமாகும்.

சஹர் நேரத்தில் என்றில்லை; எல்லா நேரத்திலும் முஸ்லிம்களுக்கு அறிவார்ந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லவும், பொது ஊடகங்களால் முஸ்லிம் சமூகம் குறித்து வரையப் பட்டிருக்கின்ற மோசமான பிம்பத்தை அடித்து நொறுக்கவும், முஸ்லிம்களின் வலிகளையும், வேதனைகளையும், துயரங்களையும் துணிச்சலாகப் பதிவு செய்யவும் சல்மா போன்ற படைப்பாளிகள் முன்வர வேண்டும்.

ஒருவர் பெற்றிருக்கின்ற அறிவு மற்றவர்களுக்குப் பயன்படும் போதுதான் சிறப்பு பெறுகிறது என்பது நபிகளாரின் கருத்து.

சல்மாவுக்கு இறைவன் அருளியிருக்கின்ற இலக்கிய அறிவும், அரசியல் தெளிவும் விளிம்பு நிலையில் உள்ள அவரது சொந்த சமூகத்திற்கு முழுமையாகப் பயன்படட்டும் என்பதே நமது பிரார்த்தனை.

[சமநிலைச் சமுதாயம் அக்டோபர்-2010 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய விமர்சனக் கட்டுரை]
Posted by Aloor
--

Friday, October 22, 2010

'கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்"

'கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்"

டாக்டர்.அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) அவர்களின

மனோதத்துவ உரை. குழந்தை வளர்ப்பு பற்றியது

. பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் கேளுங்கள்.

Please don't miss it. (In Video format)

Part1.
http://www.jamath-circle.com/play.php?vid=955
Part.2
http://www.jamath-circle.com/play.php?vid=957

அர் ரஹீக் அல் மக்தூம்

அர் ரஹீக் அல் மக்தூம் - பெருமானார் முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை கூறும் இந்த ஆதாரப்பூர்வமான நூல் ஷெய்க் சைபுர்ரஹ்மான் முபாரக்பூரி அவர்கள் அரபியில் எழுதி உலக இஸ்லாமிய கழகத்தால் 170 போட்டி நூல்களிடையே முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந் நூல் தமிழில் முஃப்தி உமர் ஷெரீஃப் காசிமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிப்பேழையாக உங்கள் அபிமான தமிழ் முஸ்லிம் டியூபில் கீழ்காணும் இணப்புகளில் கிடைக்கிறது.

Ar-Raheeq Al-Makhtum (The Sealed Nectar) Memoirs of the Noble Prophet (Allah bless him and give him peace ) is an authoritative and popular Sira (biography) of the prophet Muhammad sallalahu alaihi wasallam, written in Arabic .Its Arabic version was awarded first prize by the Muslim World League, at the first Islamic Conference on Seerah, following an open competition for a book on the Sirah Rasul Allah (life of Muhammad) in 1979 (1399 AH). The book competed with 170 other manuscripts, 84 in Arabic, 64 in Urdu, 21 in English, one in French and one in Hausa.

This World famous book is written by Saifur Rahman al-Mubarakpur translated in Tamil by Mufti Omar Sherif Kasimi now you can listen in your favorite video website www.tamilmuslimtube.com in following links

நபிகள் நாயகம் வரலாறு Part 1 அராபியர்கள்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Tamil Part 1 - Arabs

http://www.tamilmuslimtube.com/video/120-History-of-Prophet-Mohammed

நபிகள் நாயகம் வரலாறு Part 2 - குடும்பம் மற்றும் பிறப்பு

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Tamil Part 2 - Family History & Birth.

http://www.tamilmuslimtube.com/video/2-History-of-Prophet-Mohammed-S

நபிகள் நாயகம் வரலாறு Part 3 - நபித்துவம் & தாஃவா
History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Tamil Part 3 - Prophet hood & Dawa in Makka
http://www.tamilmuslimtube.com/video/3-History-of-Prophet-Mohammed-S

நபிகள் நாயகம் வரலாறு Part 4-மக்கா வாழ்க்கை

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 4- Prophet Life in Makka
http://www.tamilmuslimtube.com/video/4-History-of-Prophet-Mohammed-S

நபிகள் நாயகம் வரலாறு Part 5-முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்.

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Tamil Part 5 - Atrocities against Muslim
http://www.tamilmuslimtube.com/video/5-298429863007296529953021-2984

நபிகள் நாயகம் வரலாறு Part 6 - ஹபஷா ஹிஜிரத்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 6 - Habasha Hijirath
http://www.tamilmuslimtube.com/video/6-298429863007296529953021-2984

நபிகள் நாயகம் வரலாறு Part 7 - நபிகள் நாயகம் குடும்பத்தினரை இறை மறுப்பாளர்கள் பகிஷ்கரித்தல்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 7 - Boycott of Prophet family

http://www.tamilmuslimtube.com/video/7-298429863007296529953021-2984

நபிகள் நாயகம் வரலாறு Part 8 - முஸ்லிம்களின் சகிப்புத்தன்மை

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 8 - Muslims patience

http://www.tamilmuslimtube.com/video/8-298429863007296529953021-2984

நபிகள் நாயகம் வரலாறு Part 9 - தாயிஃப் தாவா

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 9 - Taif Dawa

http://www.tamilmuslimtube.com/video/9-298429863007296529953021-2984

நபிகள் நாயகம் வரலாறு Part 10 - மெஹ்ராஜ்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 10 - Mehraj

http://www.tamilmuslimtube.com/video/10-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part 11 - அஹபா உடன்பாடு

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 11 - Ahaba Agreement

http://www.tamilmuslimtube.com/video/11-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part 12 - சஹாபாக்களின் ஹிஜிரா

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 12 - Hijira by Sahabas

http://www.tamilmuslimtube.com/video/12-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part Part 13 - நாயகத்தின் ஹிஜிரா

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 13 - Prophets Hijira

http://www.tamilmuslimtube.com/video/13-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part Part 14 மதினா வாழ்க்கை

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 14 - Madina Life

http://www.tamilmuslimtube.com/video/14-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part 15 மதினா வாழ்க்கை மற்றும் சமூகம்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 15 - Medina Life and Society

http://www.tamilmuslimtube.com/video/9-298429863007296529953021-29-2

நபிகள் நாயகம் வரலாறு Part 16 போர்கள்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 16 - Wars

http://www.tamilmuslimtube.com/video/16-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part 17 பத்ர் யுத்தம்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 17 - War of Badr

http://www.tamilmuslimtube.com/video/17-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part 18 பத்ர் யுத்தம்

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 18 - War of Badr

http://www.tamilmuslimtube.com/video/18-298429863007296529953021-298

நபிகள் நாயகம் வரலாறு Part 19 தக்வாவின் சிறப்பு

History of Prophet Mohammed Salallahu Alaihi wa Sallam in Part 19 - Miracles of Taqwa

http://www.tamilmuslimtube.com/video/19-298429863007296529953021-298

__._,_.___

Saturday, October 16, 2010

வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !

வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் :
1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.
2. முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல !
3. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் !
4. முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.
5. காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.
6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.
7. எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் : உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.
8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் : அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.
9. தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.
10. செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும். வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.
-பத்மஹரி
நன்றி :
இனிய திசைகள் மாத இதழ்
செப்டம்பர் 2010

Thursday, October 14, 2010

THE SEVEN RISK FACTORS

THE SEVEN RISK FACTORS


1. Smoking - Smokers risk a heart attack twice as much as non-smokers. Smoking is also the most preventable risk factor. So if you smoke, quit right now. Also remember that non-smokers who are exposed to constant smoke are at an increased risk. And that’s not fair.

2. Cholesterol - Please have your cholesterol levels checked. A diet low in cholesterol, saturated & trans fat will help lower cholesterol levels and reduce the risk of heart disease. Regular exercise will also help lower ‘bad’ cholesterol and raise ‘good’ cholesterol levels.

3. Blood pressure - Like cholesterol, blood pressure interpretation and treatment should be individualized, taking into account your entire risk profile. Control blood pressure through diet, exercise, weight management, and if needed, medication.

4. Diabetes - If not properly controlled, diabetes can lead to significant heart damage, including heart attacks and death. Control diabetes through a healthy diet, exercise, maintaining the right weight, and taking medications as prescribed by your doctor.

5. Sedentary Lifestyle - Many of us lead sedentary lives, exercising infrequently or not at all. Simple leisure-time activities like gardening or walking can lower your risk of heart disease. Try to exercise 30 minutes every day, at moderate intensity.

6. Unhealthy Eating - Eat a heart-healthy diet, low in salt, saturated fat, trans fat, cholesterol, and refined sugars. Try to increase your intake of foods rich in vitamins and other nutrients, especially antioxidants, which have been proven to lower your risk for heart disease. Also eat plant-based foods such as fruits and vegetables, nuts and whole grains.

7. Stress -Poorly controlled stress and anger can lead to heart attacks and strokes. Use stress and anger management techniques to lower your risk. Learn to manage your time better, set realistic goals, and take up activities like Yoga. Meditate for 10 minutes, walk wherever possible, eat right, and keep an eye on the above risk factors.




Regards

Monday, October 11, 2010

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : துல்கஅதா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்:

துல்கஅதா

ஹுதைபிய்யா உடன்படிக்கை:

நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள். ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500 தோழர்களுடன் உம்ரா செய்ய புறப்பட்டார்கள். நபியவர்களின் வருகையை கேள்விப்பட்ட மக்கத்து குறைஷிகள், உம்ரா செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கி தோழர்களுடன் ஆலோசித்து, இறுதியாக ஒரு மரத்தடியில் தோழர்களிடம் போர் செய்வதற்கு உறுதிமொழி வாங்கினார்கள். இந்த உறுதிமொழியைத்தான் “பைஅத்துர் ரிழ்வான்” என்று சொல்லப்படுகிறது. இது குறித்து இறைவன் திருமறையில்.....

(நபியே) நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளை, அவர்கள் மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது பொருந்திக்கொண்டான்; பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்ததை நன்கறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்தான். அன்றியும், சமீபமான வெற்றியையும் அவர்களுக்கு (அருட்கொடையாக)க் கொடுத்தான். அல்குர்ஆன் (48;18)

முஸ்லிகள் போர்செய்யவும் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்த மக்கத்து குரைஷிகள், நபியவர்களிடம் சமாதான ஒப்பந்தம் செய்ய முன் வந்தனர். அதன்படி அடுத்த வருடம் உம்ரா செய்து கொள்ள வேண்டும் என்றும், இருதரப்பிலும் பத்து வருடங்களுக்கு போருக்கான எவ்வித ஆயத்தமும் இருக்கக் கூடாது என்றும், மேலும் சில உறுதிமொழிகள் எழுதப்பட்டு இருதரப்பிலும் கையொப்பமிடப்பட்டது. இதைத்தான் இஸ்லாமிய வரலாற்றில் “ஹுதைபிய்யா உடன்படிக்கை” என்று கூறப்படுகிறது.

பனூகுரைளா யுத்தம்:

ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஆயுதங்களை கீழே வைத்து விட்டீர்களா? என்று கேட்டார்கள். நபியவர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், மலக்குகள் இன்னும் தங்களது ஆயுதங்களை கீழே வைக்கவில்லை. பனூகுரைளாவினரிடம் செல்ல(போரிட) அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் ஒருவரை மக்களிடம் அனுப்பி அறிவிப்புச் செய்ய சொன்னார்கள்.

“யார் செவிசாய்த்து, கட்டளைக்கு கட்டுப்படுகின்றார்களோ அவர்கள் தங்களது அஸ்ர் தொழுகையை பனூகுரைளாவினரிடம் சென்று தொழட்டும்”. அதாவது உடனே போருக்குத் தயாராகி சென்றுவிட வேண்டும் என்று அறிவிப்புச் செய்தார்கள். இப்போர் ஹிஜ்ரி 5-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.

எகிப்து அரசருக்கு இஸ்லாமிய அழைப்பு:

எகிப்து நாட்டு அரசர் “முகவ்கிஸ்” என்பவருக்கு, இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்து நபி(ஸல்)அவர்கள் கடிதம் எழுதினார்கள். இக்கடிதம் ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில் எழுதப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்:

நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளில் நான்கு உம்ராக்களை நிறைவேற்றியுள்ளார்கள். அவை அனைத்துமே “துல்கஅதா” மாதத்தில்தான் செய்துள்ளார்கள்.

1. உம்ரத்துல் ஹுதைபிய்யா (ஹிஜ்ரி-6)
2. உம்ரத்துல் கழா (ஹிஜ்ரி-7)
3. ”ஜிஃரானா” என்ற இடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து செய்த உம்ரா (ஹிஜ்ரி-8)
4. இறுதி ஹஜ்ஜு செய்ய தயாராகிய போது செய்த உம்ரா (ஹிஜ்ரி-10)

முதல் அகபா ஒப்பந்தம்:

நபித்துவத்தின் 11-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்த அன்சாரிகளில் ஆறு பேர்கள், நபி(ஸல்) அவர்களின் போதனையால் முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்று, மதீனா சென்று அவர்கள் இஸ்லாத்தை மற்ற மக்களுக்கும் எடுத்துக் கூறியதின் பலனாக மேலும் சிலர் இஸ்லாத்தை ஏற்றார்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சிலருடன், முதலாவதாக இஸ்லாத்தை ஏற்ற சிலரும் சேர்ந்து........

.......நபித்துவத்தின் 12-வது வருடம், மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு சுமார் 12 பேர் (9-பேர் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள், 3-பேர் அவ்ஸ் கிளையைச் சேர்ந்தவர்கள்) வந்தார்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ‘அகபா’ என்ற இடத்தில், இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ ஒப்பந்தம் செய்தார்கள். இதையே “முதல் அகபா” ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

தொகுப்பு: மவ்லவி அ.சீனி நைனார் முஹம்மது தாவூதி (துபாய் 0559764994)

Wednesday, October 6, 2010

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

அரசியல்தனமான தீர்ப்பு!- தினமணி தலையங்கம்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=311421&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.

நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.

அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.
மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.

நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...
அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!

நன்றி -தினமணி

--

குர்ஆன் விரிவுரை !

குர்ஆன் விரிவுரை !
மெளலவி அப்துர் ரஹ்மான்

வலாயெஹ்ஸ பன்னல்ல ஸீன யப்கலூன பிமா.. ஆதாஹு முல்லாஹு மின் பள்லிஹு ஹுவகைரல் லஹும் பல்ஹுவஷர் ருல்ல ஹும். ஸயுதவ்வ கூனமா பகிலூ பிஹு யவ்மல் கியாமா. வலில்லாஹி மீராஸுஸ் ஸமாவாதிவல் அரள் வல்லாஹு பிமாதஃமலூனகபீர்.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடையிலிருந்து நீங்கள் கஞ்சத்தனம் செய்ய வேண்டாம். மனிதர்கள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கருதிக் கொள்ள வேண்டாம். கஞ்சத்தனம் செய்பவர்களுக்கு அவையே கழுத்தில் அணிவித்து பாம்பாக மாற்றப்படும்.

தமது மனைவி, மக்கள், குடும்பத்தார்க்கு செல்வத்தை சேமித்து வைக்கின்றனர். அவற்றிலிருந்து வழங்கினால் செல்வம் குறைந்து விடும் எனக் கருதுகின்றனர். இந்த நினைப்பு அவர்களுக்கு தீமையாக முடியும். எதைச் சேமித்து செலவு செய்ய மறுத்தார்களோ அதுவே அவர்கள் கழுத்தில் பாம்பாக மாற்றி அணிவிக்கப்படும் என ரசூல் (ஸல்) கூறி புஹாரி ஹதீஸில் பதிவாகியிருக்கிறது.

கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து அவற்றை விட்டுச் செல்லும் போது அதன் உரிமையாளன் அல்லாஹ் அதற்கு பொறுப்பாளன் நான் தான் எனக் கூறுகிறான். இதை உணராத மனிதர்கள் அந்த சொத்துக்களுக்கு தாங்கள்தான் நிலையான வாரிசு எனக் கூறுகின்றனர்.

அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து நம்மால் இயன்ற அளவு சிறு பேரித்தம் பழத்தின் துண்டைக் கொடுத்தாவது நம்மை நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். ‘சதக்கா’ பற்றிய சிறப்புகள் நிரம்ப உள்ளன. கொடுப்போருக்கு ஒரு போதும் குறைவதில்லை.பன்மடங்கு அல்லாஹ் வழங்குவான்.

ஹக்கீம் நிஜாம் (ரலி) என்ற ஸஹாபி ரசூல் (ஸல்) இடம் மூன்று முறை உதவி கேட்டார். கொடுத்தார்கள். நான்காவது முறை கேட்ட போது என்னிடம் இல்லை இருந்தால் தந்திருப்பேன். நீங்கள் அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். அதற்குப்பின் அந்த ஸஹாபி யாரிடமும் உதவி கேட்டதில்லை. அடுத்து ரசூல் (ஸல்) சந்தித்த போது யாரசூலுல்லாஹ் தங்களிடம் கேட்டதைத் தவிர வேறு எவரிடமும் உதவி கேட்டதில்லை. மரணிக்கும்வரை கேட்கக் கூடாது என்ற முடுவோடு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பணத்தை செலவழித்தால் வறுமை வந்து விடும் எனச் ஷைத்தான் பயமுறுத்தலுக்கு பணிந்து ஸதக்கா, ஜகாத் கொடுக்க மறுத்து விடுகின்றனர். 2 பெண்கள் நபியைப் பார்க்க வந்த போது நங்கையரின் கைகளில் தங்கக்காப்பு இருப்பதைப் பார்த்து இதற்கு ஜகாத் கொடுத்தீர்களா என்று நபி கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர். நரக நெருப்பை உங்கள் கரங்களில் அணிய வேண்டாம் என்றால் உடனே ஜகாத் கொடுங்கள் என்று கூறினார்கள்.

இரண்டு தங்கக் காப்புகளுக்கே நரக நெருப்பு தீண்டும் என்றால் 100, 200 பவுன் என தமது மனைவிக்கு அணிவித்து அழகு பார்ப்போரும், கிலோ கணக்கில் வைத்திருப்போரும் ஜகாத் கொடுக்கவில்லையெனில் தமக்கு என்ன நிலை எனச் சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து ஜகாத் கொடுக்க வேண்டும். அபூ வஃபா (ரலி) தாமாக முன் வந்து ஜகாத் கொடுத்தார்கள் ரசூல் (ஸல்) அவருக்காக ‘துஆ’ச் செய்தார்கள்.

அன்று ஜகாத் (ஏழை வரி) வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. அதிகாரத்தோடு கேட்டுப் பெற்றனர். இன்று அது இல்லை. உபதேசம் மட்டுமே செய்யவியலும் அவரவரும் அல்லாஹ்வுக்கு பயந்து தாமாக முன்வந்து
தமது சொத்துக்கள், நகைகள், பணம் கணக்கிட்டு ஜகாத் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்காதவர்களிடமிருந்து நோய், கலவரம், வழக்கு, விபத்து மூலமாக அல்லாஹ் தனது செல்வங்களைப் பறித்துக்கொள்கிறான். ஐந்து லட்சம் செலவு செய்து தமது உடலில் அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்திக் கொள்கின்றனர். அத்தகையோர் ஐந்தாயிரம் ரூபாய் ஸதக்கா வழங்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவான். 10 இலட்சம் நோய்க்குக் கொடுக்க தயாராக இருப்போர் 10 ஆயிரம் ஜகாத் கொடுக்க மாட்டேன் என்னும் நிலை அல்லாஹ்விடம் தண்டனையை பெற்றுத்தரும்.

அல்லாஹ் கூறுகிறான் உலகில் உனக்கு படிப்பினை இருக்கிறது என்று 10 வருடத்திற்கு முன்பு நம்முடன் இருந்தவர்கள் இப்போது இல்லை. அப்போதிருந்த உடல்நிலை இப்போது இல்லை. இந்த துன்யா நிரந்தரம் என்று கருதக்கூடாது. முட்டாள் ஆன்மா மட்டுமே அவ்வாறு கருதும். எல்லாவற்றுக்குமான கூலி இங்கேயே கிட்டாது. கியாமத் நாளில் தான் கிடைக்கும். பலனை உடனுக்குடன் எதிர்பார்க்கக்கூடாது.

துன்யாவிற்காக (இந்த உலகத்திற்காக) தமது வாழ்வை தியாகம் செய்து அல்லாஹ்வை மறந்து வாழ்கின்றனர். இது நிலைத்த வாழ்வு என எண்ணி ஏமாறுகின்றனர். நிலையான, நிரந்தரமான வாழ்வு ஆகரத்தில் தான் உள்ளது.

(மண்ணடி மாமூர் பள்ளிவாசலில் 13.06.10 அன்று மஹ்ரிப் தொழுகைக்குப்பின் நடைபெற்ற குர்ஆன் விரிவுரையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 50 நிமிட உரையில் 75 பேர் கலந்து கொண்டனர்)

முரசு நிருபர்

( முஸ்லிம் முரசு ஜுலை 2010 இதழிலிருந்து )

அயோத்தியும் அற்புதத் தீர்ப்பும்

அயோத்தியும் அற்புதத் தீர்ப்பும்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

http://mudukulathur.com/?p=2515

அயோத்தி பாபரி மஸ்ஜித் சொத்து வழக்கில் அலகபாத் உயர்நீதி மன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச் 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ந்தேதி அலாவுதீனும் அற்புத விளக்கும் போல அதிசயத் தீர்ப்பு வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவும் மூன்று மும்மூர்த்தி ஜட்ஜ்கள் கூடி கையில் கிடைத்த அயோத்தி என்ற அப்பத்தினை மூன்று பகுதியாக பிரித்து மூன்று அமைப்புகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் இஸ்லாமியர் மற்ற இரு அமைப்பினர் ராமர் பக்தர்கள். ஆகவே அப்பம் இரண்டு பகுதி ராமர் பக்தர்களுக்கும்; ஒரு பகுதி இஸ்லாமியருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறுவது மூலம் எப்படி அற்புதமான பங்கீடு என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். அந்த அப்பத்தினை பங்கிட்ட மூன்று ஜட்ஜ்களில் ஒருவர் முஸ்லிம் இருவர் முஸ்லிம் அல்லாதவர். இப்போது தான் கோர்ட்டுகளில் ஏன் நீதி தேவதையின் சிலையில் கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்டுள்ளது என உங்களுக்குப் புரிந்திருக்கும். தினமணி 2.10.2010 தேதியிட்ட பத்திரிக்கையில் அலஹபாத் நீதிமன்ற தீர்ப்பினை விமரிசக்கும் போது ‘அந்த தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு’ என விளக்கம் அளிக்கிறது. ஆங்கிலத்தில் கங்காரு கோர்ட் ஜட்ஜ்மெண்ட் என விமரிசிப்பார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் உ.பி.முதல்வர் கல்யாண் சிங் சொல்கிறார், ராமர் கோயில் கட்ட அந்த இடம் மட்டும் போதாது மீதமுள்ள 66 ஏக்கர் அருகிலுள்ள அரசு நிலமும் வேண்டுமென்கிறார். ஆனால் சர்ச்சைக்குரிய பாபரி மஸ்ஜித் இருந்த இடமே வெறும் இரண்டரை ஏக்க்ர் தான். அதில் மூன்றில் ஒரு பகுதியினைக்கூட விட்டுக் கொடுக்க கல்யாண்சி;ங் தயாரில்லை என உங்களுக்குத் தோனவில்லையா? ஒரு காலத்தில் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங்குடன் கூட்டுச்சேரும் போது அதே கல்யாண்சிங் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதிற்கு வருத்தம் தெரிவித்தவர் தானே! ஆகவே அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவது போல உங்களுக்குத் தோனவில்லையா?

நீதிபதி சர்மா மற்றும் நீதிபதி அகர்வால் அவர்களும் சர்ச்சைக்கரிய இடம் பகவான் ராமர் பிறந்த இடமா என்று கேட்கும் கேள்விக்கு மத நம்பிக்கையின் படி ராமர் என்ற கடவுள் எங்கும் எப்போதும் எந்த உருவத்திலும் நிறைந்துள்ளவர். அந்த நம்பிக்கை அடிப்படையில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22ந்தேதி நடுராத்திரியில் நீதிபதி கான் அவர்கள் சொன்னபடி 1528 ஆம் ஆண்டு பாபராலோ அல்லது அவரது தளபதிகளாலோ இடிந்து கிடந்த இடிபாடுகளுக்கிடையே கட்டப்பட்ட மஸ்ஜிதின் கோபுர நடுவில் வைக்கப்ட்ட ராமர் சிலை இருக்கும் இடத்தில் தான் பிறந்தார் என்ற அதிசய கண்டு பிடிப்பிற்குப் பிறகு தீர்ப்பு நிகழ்த்தியுள்ளார்.

இதில் பொது அறிவிற்கு விளங்காத வாதங்கள் வைக்கப்பட்டது போல உங்களுக்குத் தோனவில்லையா? எல்லாம் வல்ல அல்லாஹ் உருவமற்றவன் அகிலத்தினைப் படைத்து ஆட்சி செய்ய நீக்கமற நிறைந்து இருப்பவன். அவன் இந்த அண்டத்தினை உருவாக்க்p பாரிபாலனம் செய்து நம்மை மனிதப்பிரவியில் படைத்து நல்வாழ்வினைத் தந்ததிற்காக உருவமற்ற பள்ளிவாசல் கட்டி அங்கே இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால் ராமர் என்ற ஒரு சிலையினை இருள் சூழ்ந்த நேரத்தில் வைத்த செயல் தடியெடுத்தவன் தண்டல் காரன் செயலாகவும், சிலையில்லாத பள்ளிவாசலில் சிலையினை வைத்து அதற்கு உரிமையுள்ளது என்று வாதிட்டு அதற்கு சார்பாக தீர்ப்புக்கூறுவது மூலம் எந்த வகையில் நியாயம் என உங்களுக்குத் தோனவில்லையா? அவ்வாறு ராமர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் கிறித்துவர் சர்ச்சிலிலும், சீக்கியர் கோவிலிலும், சைன, புத்தர் கோயிலிலும் அவர் நீக்கமற நிறைந்திருக்கிறாரா? ஏன்ற கேள்வி உங்கள் மனதில.; தோன்றவில்லையா?

புhபரி மஸ்ஜித் கட்ட முன்னோட்டமான கர்சேவர்களின் ரதயாத்திரையினை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய முன்னாள் உ.பி. முதல்வர் முலாயம் சிங்யாதவ் சொல்கிறார், இந்த தீர்ப்பு மத அடிப்படையில் சொல்லப்பட்டது அது சட்டத்திற்குட்பட்டு சொல்லவில்iயென்று. பாபரி மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்காற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி அவர்கள,; பாபரி மஸ்ஜித் தீர்ப்பு பற்றி சொல்லும் போது, நம்பிக்கை சட்ட வடிவில் வந்துள்ளது’ என சொன்னதாக 4.10. 2010 தேதியிட்ட இந்து பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. ஆகவே மத நம்பிக்கையில் எழுதப்பட்ட தீர்ப்பினை சட்ட முன்வடிவில் கொண்டு வர ஆரம்ப முயற்சிதான் அவர் அளித்த பேட்டி என உங்களுக்குத் தோனவில்லையா? அந்த தீர்ப்பினை வரவேற்று சில திராவிட அரசியல் கட்சகளும் கூட அறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆனால் தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை 4.10.2010 அன்று எல்லா பத்திரிக்கையிலும் வெளி வந்துள்ளது. அதில், ‘நீதிபதி டி.பி. சர்மா கூறிய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். ஆங்கு பாபரால் கட்டிடம் எழுப்பபட்டுள்ளது. எந்த வருடம் என்று தெரியவில்லை. சர்ச்கைக்குரிய இடத்தில் 1949ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 22ந்தேதி நள்ளிரவில் சிலை வைக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தினை ராமர் பிறந்த இடமாக கருதி, இந்துக்கள் வழிபட்டு உள்ளனர். ராமர் கிருதயுகத்தில் அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன்பு, ராமர் பிறந்த இடம் இது தான் என்று அறுதியிட்டு உறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நீமன்ற தீர்ப்பு சொல்லும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மக்களாட்சி தத்துவமான குடவோலை தேர்தல் முறை மற்றும் பல் வேறு மக்கள் நல சீர்திருத்தங்கற் அறிமுகப்படுத்திய தென்னகத்தினை ஆண்ட தஞ்சை மன்னன் ராஜ ராஜ சோழன் மறைந்த விதத்தை, அவன் கல்லறை, அவனுக்கு நினைவுத்தூண் அமைத்த இடத்தையோ நம்பமால் இன்னும் காண முடியவில்லை என வருத்தத்துடன’; தெரிவித்துள்ளார். ஏனென்றால் சோழ சாம்ராஜ்ஜியம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழகத்தில் கோலோட்சியது. வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட ராஜராஜசோழன் பற்றி நினைவுச்சின்னம் கூட இந்த நவீன உலகத்தில் கிடைக்காதபோது 17லட்சத்து 28ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ராமரைப்பற்றி அவர் முஸ்லிம் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் கோபுரத்தின் நடுவில் பிறந்தார் என தீர்ப்புக் கூறும் போது முதிர்ந்த நடுநிலையாளர்களுக்கு வியப்பாக இருப்பது நியாயமே! ஆனால் அதற்கு பதில் சொல்லும் விதத்தில் பி.ஜே.பி மாநில தலைவர் 5.10.2010 வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை மத வேற்றுமையினைத் தூண்டுவதாக இருப்பதாக சொல்லியுள்ளார். உண்னையினைச் சொன்னால் ஒருசாராருக்கு குத்தலும்- குடஞ்சலும் வருவதும் இயற்கையே!

என் நண்பர் ஒருவர் கேட்டார், ‘ஏன் சார், பாபரி மஸ்ஜிதில் 1949ஆம் ஆண்டு இரவில் பள்ளியில் ராமர் சிலை தெரியாமல் வைத்தபோது முஸ்லிம்கள் காலையில் பார்த்து எடுத்து அப்புறப்படுத்தியிருக்கலாமே’என்று. அதற்கு நான் சொன்னேன், ‘முஸ்லிம்கள் இந்திய நாட்டின் ஜனநாயத்தில் சம உரிமை பெற்றிருந்தாலும் மைனாரிட்டியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக போகவில்லை. அரசுக்கு முறையாக தெரிவித்து அரசு நியாயமான நடவடிக்கைக்காக காத்திருந்தார்கள். அதற்கு கிடைத்த பரிசுதான் பாபரி மஸ்ஜித் கர்சேவகர்களால் தரைமட்டமாக்கப்பட்டதும், அலஹபாத் நீதிமன்ற அற்புதத் தீர்ப்பும்’ என்றேன். என்னதான் கீழ்கோர்ட்டு தீர்ப்பு சொன்னாலும் மேல் முறையீடு செய்யும் போது உச்ச நீதிமன்றத்திலுமா நமது உண்மைக்கு சரியான முகவரி கிடைக்காது?

தமிழ் நாட்டில் வீட்டுக் குடியுரிமைச்சட்டம் உள்ளது. அதில் பத்தாண்டுகள் அரசு நிலத்தில் குடியிருந்தோருக்கு பட்டா வழங்கப்பட்டு உரிமமும் வழங்கப்படும். அப்படி விவாதத்திற்கு வைப்போமானாலும் பாபரி மஸ்ஜித் சொந்தம் கொண்டாட பத்திர உரிமை இல்லாவிட்டாலும் 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு தொழுகை நடத்திய ஜமாத்திற்குத்தானே அந்த இடம் ஒதுக்க வேண்டும்? அதனை விட்டு விட்டு 1949ஆம் ஆண்டு ராமர் சிலையினை திருட்டுத்தனமாக வைத்தவர்களுக்கு எப்படி வழங்குவது என்பது தான் நடு நிலையாளர்களின் புரியாத கேள்வி?


அலஹபாத் நீதிமன்ற தீர்ப்பு மூலம் சில பாடங்களை நாம் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்:

1) 1990ஆம் ஆண்டு ஒரு நாள் நான் சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் ரோட்டில் போய்க் கொண்டிருந்தேன். லுஹர் நேரம் வந்தது. அருகில் உள்ள ஊரில் பள்ளிவாசல் இருக்கிறதா என கேட்;;;டு அங்கே சென்றேன். ஆனால் அங்குள்ள சிறிய பள்ளிவாசல் மூடியிருந்தது. பள்ளிவாசலினைச் சுற்றியுள்ள வராண்டாவில் ஆட்டு மந்தையிருந்தது. ஆடுகளின் மூத்திரமும், புலுக்கையுமாக இருந்தது. எனது வாகனத்தினைப் பார்த்ததும் ஒரு தாடி வைத்த முதியவர் ஓடி வந்தார். அப்போது அவரிடம் லுஹர் தொழுகை நடத்த வில்லையா எனக் கேட்டேன். அப்போது அவர் சொன்னார் ரெகுலராக தொழுகை நடத்தக் கூட்டம் சேருவதில்லை. ஜூம்மாத்தொழுகைக்கு மட்டும் ஒரு இமாம் சிவகங்கையிலிருந்து வரவழைத்து தொழுகை நடத்துகின்றோமென்றார். இவ்வளவிற்கும் அந்த ஊரில் 20 முஸ்லிம்கள் குடும்பம் உள்ளது. ஆகவே இது போன்ற பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தாதும் ஆள்நடமாட்டம் இல்லாமலும் இருந்தால் மாற்றார் ஆக்கிரமித்து சிலை வழிபாடு நடத்த ஒரு வாய்ப்பு இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே தான் அருகிலுள்ள பெரிய ஜமாத்தார் இது போன்ற சிறிய ஊரில் உள்ளவர்கள் இஸ்லாத்தின் ஐம்பொரும் தூண்களில் இரண்டாவது தூணான தொழுகையினை கண்டிப்பாக நடத்தி வர தூண்டுவது மட்டுமல்லாது அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்து அவர்கள் ஈமான் மாறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

2) மற்ற பள்ளிகளில் தொழுகை முடிந்ததும் அந்த பள்ளி வளாகத்தினை பாதுகாக்க ஜமாத்தார் காவலாளியினை நியமிக்க வேண்டும். வக்ப் சொத்துக்கள் எது என அறிந்து அதனை ஜமாத்தார் தங்கள் வசப்படுத்த சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3) முன்பெல்லாம் பஜ்ர் தொழுகையினுக்கு ஒரு பள்ளியில் ஒரு வரிசை அல்லது இரண்டு வரிசை ஜமாத் நிற்கும். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக சமுதாய இயக்கங்கள் தோன்றய பிறகு தொழுகையில் இளைஞர்களுக்கு ஒரு ஈடுபாடு ஏற்படுத்திய பயனால் நிறைய இளைஞர்கள் பள்ளிவாசலில் தொழுகைக்கு மிகுந்த ஆர்வத்துடன் வருவதினைக் காணலாம். அந்த இளைஞரகளால்தான் சீதனமில்லாது மகர்கொடுத்து திருமணம் அதிக செலவுமில்லாது-ஆடம்பரமில்லாது திருமணம் நடப்பதினைக் காணலாம். அந்த இளைஞர்கள் பள்ளிக்குத் தொழுகைக்கு வரும்போது அவர்கள் தலையில் தொப்பி யணிந்துதான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஜமாத்தார் ஏற்படுத்துவது மூலம் அந்த இளைஞர்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு மேல் வெறுப்பினை ஏற்படுத்தி விடக்கூடாது. இளைஞரகள் வருங்கால முஸ்லிம் சந்ததிகள். அவர்கள் படித்தவர்கள். சுய வேலை செய்து குடும்ப்பொறுப்பினைக் காப்பவர்கள் மட்டுமல்ல சமுதாயத்திற்கு ஒரு பிரச்னை யென்றால் முன்னின்று குரல் ஏழுப்பக் கூடியவர்கள் என்று சமீப காலத்தில் உணர்த்தியுமுல்லார்கள். அவர்களை ஜமாத்தார் அரவணைத்து அவர்களின் உண்மையான உணர்வுப் பூர்வமான கோரிக்கையினை பொறுமையுடன் கேட்டு நிவர்த்தி செய்யதால் அவர்கள் பிற்காலத்தில் அந்த ஜமாத்தினைக் கட்டிக் காப்பார்கள் என்பது வெள்ளிடை மலை. உதாரணத்திற்கு வியாபார ரீதியாக எதிரிகள் போன்று இருந்த துருபாய் அம்பானி மகன்களான முகேஷ் அம்பானியும் அவருடைய தம்பி அனில் அம்பானியும் தங்கள் தொழிலுக்கு போட்டி ஏற்பட்டு தங்கள் தொழில் நசுங்கி விடும் என்ற நிலை ஏற்பட்ட போது 24.5.2010 தாயார் நிரூபன் மூலம் சமாதான ஒப்பந்தம் செய்து இன்று உலக பணக்காரர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆகவே ஒரு தாய் மக்கள் போன்றிருக்கம் ஒரு ஊர் ஜமாத்தார் சிறு சிறு பிரச்னைகளுக்காக பிரிந்து நின்று மாற்றான் உங்கள் வேற்றுமையினைப் பயன் படுத்தி உங்களை அழித்து விட
இடம் கொடுக்கக் கூடாது.

சிந்தனை மன்றம்: இளைஞர்கள் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வரும் அதே நேரத்தில் அவர்கள் உடைகள் கேசுவலாக டி.சர்ட், தொழுகைக்கு வருபவர் கவனத்தினை ஈர்க்கக் கூடிய படங்கள், எழுத்துக்கள் போட்ட விதம் விதமான பேண்ட் சர்ட்டுகள் அணிந்து வருகின்றனர். சமுதாய அமைப்புகள் நடத்திக் கொண்டிருப்பவர்களும், ஜமாத்தாரும், இமாம்களும் அது போன்ற உடைகள் ஏன் அணிந்து வரக்கூடாது என விளக்க வேண்டும். சமீபத்தில் அண்ணா யுனிவர்சிட்டியில் இது போன்ற உடைகள் உடுத்திக் கொண்டு வரக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதற்கு சில எதிர்ப்பு ஆரம்பத்தில் இருந்தாலும் இன்று அதனை கடைப்பிடித்து வருகிறார்கள். அது போன்ற பல கல்வி நிறுவனங்கள் கூட அமல் செய்துள்ளன. திருப்பதி தேவஸ்தானம் கூட அது போன்ற கட்டுப்பாடு பக்தர்களுக்கு விதித்துள்ளதாக 3.10.2010 செய்திகள் கூறுகின்றன. இஸ்லாத்தில் ஏற்கனவே உருவ வழிபாடு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் உருவம் பொறித்த உடைகள் அணிவதினை பள்ளிவாசலுக்கு வெளியே அணிந்தால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆகவே ஏக இறைவனைத் தொழும் பள்ளிவாசலுக்கு அது போன்ற டிரஸ் அணிந்து வருவது முறைகேடானது. ஆகாதா?

Saturday, October 2, 2010

பாப்ரி மஸ்ஜித்: அல்லாஹ்வின் தீர்ப்பு என்ன ?

பாப்ரி மஸ்ஜித்: அல்லாஹ்வின் தீர்ப்பு என்ன ?

இறைவனின் மாபெரும் கிருபையினால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக துபை கோட்டைப் பள்ளியில் மெளலான இஸ்மாயில் ஹஸரத் அவர்களின் திருக்குர்ஆன் விளக்கவுரை நடைபெற்று வருகிறது. சூரா அல்பகராவின் விளக்கவுரை தொடராக நடைபெற்று வருகிறது, அல்லாஹ்வின் அற்புதம், பாப்ரி மஸ்ஜித்தின் தீர்ப்பு நாளையொட்டி அமைந்த ஆயத் “அல்லாஹ்வின் இல்லங்களில் அவனது பெயர் துதிப்பதை தடுப்பவன் மற்றும் அவனது இல்லங்களை பாழாக்குபவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும் என வினவுகிறது. (2:114)

His speech has been updated in http://www.TamilIslamicMedia.com for this speech or follow the link below.

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (24-Sep-2010) :( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#3 )

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (01-Oct-2010): ( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#2 )


பாப்ரி மஸ்ஜித்தை முன்னின்று இடித்த இரண்டு வாலிபர்களின் நிலை என்ன ஆனது என்ற உண்மைச் சம்பவம். அல்லாஹ்வின் கருணையினால் அவர்கள் இன்று முஸ்லீம்களாக, தங்களது பாவத்திற்கு பரிகாரமாக வருடம் ஒரு பள்ளியினைக் கட்டிக் கொண்டிருக்கும் அற்புதம்.

இடித்தவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி அவனிடமே மீண்டுவிடுவதுதான். இல்லையெனில் அவர்கள் இம்மையில் கேவலத்தையும் மறுமையில் கடுமையான தண்டனையையும் அடைவது உறுதி. அது விதிக்கப்பட்ட ஒன்று.


இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (2:114)


His speech has been updated in http://www.TamilIslamicMedia.com f or this speech or follow the link below.

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (24-Sep-2010) :( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#3 )

அல்-பகரா விளக்கவுரை - பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (01-Oct-2010): ( http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=24&authID=37#2 )

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்.

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்.

அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.
பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.
இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.
அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.
ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.
இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.