Showing posts with label நூர். Show all posts
Showing posts with label நூர். Show all posts

Sunday, September 14, 2008

நூர் துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டத்தின் மூலம் பார்வையினைப் பெறும் ஈராக்கியப் பெண்


நூர் துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டத்தின் மூலம் பார்வையினைப் பெறும் ஈராக்கியப் பெண்


நூ துபாய் எனும் பார்வையின்மைத் தடுப்புத் திட்டம் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அமீரக துணை அதிபரும்,பிரதம அமைச்சரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பார்வையின்மைக் கோளாறுகளை உடையவர்கள் அதற்கான மருத்துவ செலவுகளைச் செய்ய முடியாதவர்கள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக பறக்கும் மருத்துவமனை ஒன்று தயார் நிலையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயன்பெற மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, தெற்காசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இத்திட்டம் மூலம் முதலில் பார்வையினைப் பெற இருப்பது ஈராக் நாட்டினைச் சேர்ந்த நூர் எனும் ஏழைப்பெண். நூர் என்ற அரபி மொழிக்கு ஒளி என்பதாகும்.

இப்பறக்கும் மருத்துவமனை பார்வையிழப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும்.

http://www.gulfnews.com/nation/Health/10244986.html

Friday, January 18, 2008

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் ஷரிஅத் அடிப்படையில் செயல்படும் ஆறாவது இஸ்லாமிய வங்கியான நூர் இஸ்லாமிய வங்கி" ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

நூர் இஸ்லாமிய வங்கி ஒரு பில்லியன் டாலர் மூலதனத்துடன் துபாயில் ஆறு கிளைகள் உட்பட அமீரகத்தில் பத்து கிளைகளைக் கொண்டதாக துவங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குள் இந்த கிளைகள் இருபதாக விரிவடையும்.
நூர் இஸ்லாமிய வங்கி பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் தனது சேவையை துவங்க ஆவல் கொண்டுள்ளது.

துபாய் இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி,ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கி ஆகியவை ஏற்கனவே அமீரகத்தில் ஷரிஅத் அடிப்படையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.