Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Wednesday, December 10, 2008

மைந்தனை தியாகம் செய்யத் தூண்டிய கனவு

முஸ்லிம்கள் இரண்டு பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்: 1. ஈதுல்ஃபித்ர் எனும் ஈகைத் திருநாள். இதுவே ரமலான் எனப்படும். 2.ஈதுல் அள்ஹா எனப்படும் தியாகத் திருநாள். யூத நெறி, கிறிஸ்தவ நெறி, இஸ்லாமிய நெறி என்ற மூன்று பேராறுகளுக்கும் மூல ஊற்றாகத் திகழ்பவர் இறைத் தூதர் இப்ராஹிம். யூதரும் கிறிஸ்தவரும் அவரை ஏப்ரஹாம் என்பர். உண்மையில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பவை வெவ்வேறாக இன்று காணப்பட்டாலும் அடிப்படையில் இவை ஏகத்துவ நெறி எனப்படும் ஒரே நெறியைச் சார்ந்தவையே.



இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள் ஒரு நாள் ஒரு கனவு கண்டார். அதில், அவர் தம் அருமந்த மைந்தன் இஸ்மாயில் அவர்களை இறைவனுக்காக பலியிடுவதைப் போல் கண்டார். இறைத் தூதர்களுடைய கனவுகள் மற்ற மனிதர்கள் காணும் கனவு போன்றவையல்ல. அவை கடவுளின் கடிதங்கள். இறைவன் அவருடைய புதல்வர் இஸ்மாயில் அவர்களைத் தனக்குப் பலியிடுமாறு ஆணையிடுவதாகவே இப்ராஹிம் கருதினார்.



இஸ்மாயில், இப்ராஹிம் தம் 86வது வயதில் தவமிருந்து பெற்ற பிள்ளை. அவர் மீது இப்ராஹிம் தம் உயிரையே வைத்திருந்தார். இருப்பினும், இறைவனின் ஆணையைத் தலைமேல் ஏற்றுத் தம் அருமந்த மைந்தனை இறைவனுக்காகத் தியாகம் செய்யத் துணிந்துவிட்டார். இப்ராஹிம் தம் புதல்வரைக் கத்தியால் அறுக்கத் தொடங்கிய போது இறைவன், "இப்ராஹிமே! எனக்காக உம் அருமந்த மைந்தனையே பலி கொடுக்கத் துணிந்த உம்தியாகவுணர்வை ஏற்றுக் கொண்டேன். உம் மகனைப் பலியிட வேண்டாம். நீர் சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர். உம் மகனுக்குப் பகரமாக ஓர் ஆட்டைப் பலியிடுவீராக' என்று கூறினார். இப்ராஹிமும் அதன் படியே ஓர் ஆட்டைப் பலியிட்டார்.



உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தே தியாகத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். அப்போது ஆடு, மாடு, ஒட்டகம் எதையேனும் இறைவனுக்காகப் பலியிடுகின்றனர். இது தியாக உணர்வுக்கான பயிற்சி.



எல்லாமே இறைவன் கொடுத்தவையே. எனவே, மனிதன் அவனுக்காகத் தன் உடல், பொருள், ஆவி மட்டுமின்றித் தம்மால் மிகவும் நேசிக்கப்படும் மனைவி, மக்களைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இத்திருநாள் போதிக்கிறது.



பலியிடப்பட்ட பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதியாகப் பங்கு போட்டு, ஒரு பங்கை ஏழை எளியவருக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினருக்கும் வழங்கிவிட்டு ஒரு பங்கைத் தான், தம் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.



ஏழைகளும் வயிறார உண்டு, பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.



புனிதப் பயணம் (ஹஜ்): இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் ஹஜ் என்ற புனிதப் பயணமும் ஒன்று. இது வசதியுடையவர்களுக்கு மட்டுமே கடமை. அரேபிய நாட்டில் மக்கா என்ற ஊரில் உள்ள கஅபா என்ற இறையில்லத்திற்குச் சென்று வழிபாடுகள் செய்து வருவதே ஹஜ் எனப்படுகிறது. கஅபா இந்த உலகில், ஏக இறைவனுக்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாகும். முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமாகிய ஆதம் (அலை) அவர்கள் அவ்விடத்தில் வழிபட்டிருக்கின்றனர். இப்ராஹிம் (அலை) அவர்கள் மண்மேடாக இருந்த அந்த இடத்தில் இருந்த ஆதம் அவர்கள் கட்டிய ஆலயத்தின் அடித் தளத்தின் மீதே புதிய ஆலயமொன்றைக் கட்டினர். இஸ்மாயில் (அலை) அவர்களும் இத்திருப்பணியில் தந்தைக்கு உதவியாக இருந்தார்.



கஅபா: அரபியில் "கஅபா' என்றால் ஆறு சமசதுரங்கள் கொண்ட கன உருவம் (ஞிதஞஞு) என்று பொருள். கஅபா ஆலயம் இவ்வடிவிலேயே கட்டப் பட்டுள்ளது. இவ்வாலயம் எல்லாப் படைப்புகளையும் பற்றிய கொள்கைகளை இணைத்து, உணர்த்துவதாக அமைக்கப்பட்டுள்ளது. வேதியல், பௌதீகம், பிரபஞ்சவியல், எரிகல் இயல், மருத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையிலும் கஅபா கட்டப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கஅபா அண்டத்தின் பிண்டம். வானியல்படி எத்திசையிலிருந்தும் வீசும் காற்றுகளை எதிர் கொள்ளும் படி ஆலயம் அமைந்திருக்கிறது. கஅபாவின் நீள் சதுர அச்சு சூரியன் பூமிக்கு நெடுந்தொலைவில் இருக்கும் காலத்தில் வரும் கோடைக் காலச் சூரியோதயத்திற்கும், குளிர் காலச் சூரிய அஸ்தமனத்திற்கும் இணைவாக அமைக்கப்பட்டிருக்கிறது.


இடம் சுற்றல்: புனிதப் பயணிகள் கஅபாவை ஏழு முறை சுற்றி வரவேண்டும் என் பது முக்கியமான வழிபாடு. பயணிகள் ஆலயத்தை இடப்புறமாகக் கொண்டு சுற்றி வருவர். இது ஒரு குறியீட்டு நிகழ்ச்சி. சூரியனை மையமாகக் கொண்டு கிரகங் கள் சுற்றுவது போல, (கிரகங்களும் இடம் சுற்றுகின்றன) இறைவனை மையமாகக் கொண்டு சகல உயிர்களும் சுற்றி வருகின்றன. மையமே, உயிர்களை இயக்குகிறது. மையமில்லையேல், உயிர்கள் இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது.



சஃபா மர்வா: சஃபா, மர்வா என்ற இரு சிறு குன்றுகள் கஅபாவுக்கு அருகில் இருக்கின்றன. புனிதப் பயணிகள் இக்குன்றுகளுக்கிடையே ஏழு முறை தொங்கோட்டம் செய்ய வேண்டும். இது இப்ராஹிம் (அலை) அவர்களுடைய துணைவியார் ஹாஜரா தம் கைக் குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்கள் தாகம் தணிக்கத் தண்ணீர் தேடி, சஃபா, மர்வா குன்றுக்களுக்கிடையே ஓடிய நிகழ்ச்சியை நினைவு கூர்வதாகும்.



ஜம் ஜம்: ஜம் ஜம் என்பது கஅபாவில், இருக்கும் புனித தீர்த்தமாகும். இஸ்மாயில் (அலை) சிறு குழந்தையாக இருந்த போது, தாகத் தால் அழுதார். அவர் கால்களை உதைத்துக் கொண்டு அழுதபோது, பூமியே தாய்ப்பாசம் கொண்டு பால் சுரந்தது போல், தரையிலிருந்து நீரூற்று ஒன்று பீறிட்டுப் பெருகியது. இதுவே ஜம் ஜம். இப்போது, இது சிறு கிணறாக இருக்கிறது. ஜம் ஜம் ஓர் அற்புதம். இது சகல ரோக நிவாரணி. ஒவ்வொரு ஹஜ்ஜுக்கும் முப்பதிலிருந்து நாற்பது லட்சம் பயணிகள் கஅபாவுக்கு வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்நீரே குளிக்கவும் குடிக்கவும் பயன்படுகிறது. கேன் கேனாக ஊர்களுக்கும் கொண்டு செல்கின்றனர். மக்கா, மதீனா என்ற இரு நகரங்களுக்குக் குடிநீரும் இது தான். ஜம் ஜம் வற்றாமல் சுரந்து கொண்டே யிருக்கிறது. அருகில் எந்த இடத்தைத் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை.



அரஃபா: புனிதப் பயணிகள் அரஃபா என்ற பெருவெளியில் கூடி வழிபடுவர். இது ஹஜ்ஜின் கடமைகளுள் முக்கியமானது. பயணிகள் முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களிலும் தங்கி வழிபடுவர்.



ஹஜ்ருல் அஸ்வத்: கஅபாவின் தென் கிழக்கு மூலையில் ஒரு கருங்கல் பதிக்கப் பட்டிருக்கிறது. இது ஹஜ்ருல் அஸ்வத் எனப்படுகிறது. இக்கல் புனிதக் கல்லாக மதிக்கப்படுகிறது புனிதப் பயணிகள் இக்கல்லை முத்தமிடுவர். நபிகள் நாயகம் இவ்வாறு செய்தார் என்பதனாலே பயணிகளும் முத்தமிடுகின்றனர். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர், முஸ்லிம்கள் கஅபாவில் கல்லை வணங்குகின்றனர் என்று கூறுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். கல்லை மட்டுமல்ல படைப்புகளில் எதை வணங்கினாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. இறைவனைத் தவிர வேறு யாரையும், எதையும் இறைவனாகக் கருதி வணங்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இதில் சமரசத்திற்கே இடமில்லை.



ஒன்றே குலம் ஒருவனே தேவன்: பல நாடுகளிலிருந்து பல மொழி பேசும் பல இன மக்கள் வேறுபாடின்றி ஹஜ்ஜில் ஒரே உடையணிந்து, ஒரே இறைவனை வணங்குகின்றனர். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற கொள்கையை செயலால் உரத்துச் சொல்லும் வழிபாடே ஹஜ்ஜாகும். கஅபா இதயம் போன்றது. அங்கே அசுத்த ரத்தமாகச் செல்லும் புனிதப் பயணிகள் சுத்த ரத்தமாகித் திரும்புகின்றனர்.



கவிக்கோ அப்துல் ரகுமான்

Saturday, August 16, 2008

கனவு மெய்ப்பட...

கனவு மெய்ப்பட...

கு.சிவக்குமார்


சென்னை, ஆக. 15: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனையொட்டி, பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க கிராமப்புறங்களில் இருந்து சென்னை நகர் நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு சென்னை நகரில் நீண்டநாள்கள் தங்கி, படித்து தங்களது கனவை நனவாக்கிக் கொள்ள குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை வாய்ப்பளிப்பதில்லை. இதனால் தங்களது லட்சியம் வெறும் கனவுதான் என்ற விரக்தியில் ஊருக்குத் திரும்பி விடுகின்றனர்.

அரசின் கவனத்துக்கு...:கடந்த ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அந்தப் பிரிவின் நலத்துறை வாயிலாக தலா ரூ. 25 ஆயிரம் அளிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் எத்தனையோ ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பாராட்டியே தீர வேண்டும்.

அதேசமயம் இந்த இடத்தில் நாம் ஒன்றைப் பற்றி சிந்திக்கத் தவறக்கூடாது. ஏழ்மை என்னும் நோய் சமுதாயத்தின் குறிப்பிட்ட பிரிவை மட்டும் தீண்டிப் பார்ப்பதில்லை. முற்படுத்தப்பட்ட மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இந்த பிரிவுகளைச் சேர்ந்த எத்தனையோ மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவுடன் பொருளாதாரச் சூழ்நிலையால் படிப்பில் முழுக் கவனத்தைச் செலுத்த இயலாத நிலையில் சென்னை நகரில் சோகத்துடன் உலா வருவதைக் கண்கூடாய் காண முடிகிறது.

இந்நிலையில் இதுபோன்ற மாணவர்களுக்கும் அரசு நிதியுதவி அளித்து உதவிக் கரம் நீட்டினால் ஆண்டுதோறும் இன்னும் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து இந்த தேசத்துக்கு சேவை புரியப் புறப்பட்டுச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

செயல்பாடு சரியல்ல...:சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் குடிமைப் பணி பயிற்சி மையம் அண்ணா நகரில் அமைந்துள்ளது. அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த பயிற்சி மையம் கடந்த சில ஆண்டுகளாகச் சரிவரச் செயல்படுவதில்லை என்ற அதிருப்தி மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை உடனடியாக அனுமதித்து முதன்மைத் தேர்வுக்கு படிக்கும் நிலையை கல்வி நிறுவனம் உருவாக்கிக் கொடுப்பதில்லை என்பது மாணவர்களின் முக்கியக் குற்றச்சாட்டு. சென்ற ஆண்டு முதல்நிலைத் தேர்வு முடிவு வெளிவந்த சில நாள்கள் வரை மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கட்டடம் சீரமைக்க வேண்டும், வருமானச் சான்றிதழ் பெற்று வாருங்கள் என பல்வேறு காரணங்களைச் சொல்லி தங்களை இழுத்தடித்து, மன அழுத்தத்துக்கு ஆளாக்கியதாக ஒட்டுமொத்த மாணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாங்கள் அனுமதிக்கப்படும் போது கல்வி நிறுவனத்தின் சில அறைகளில் மின்விளக்குகள் இல்லை என்றும், அந்த அறைகளுக்கு தங்களையே மின்விளக்குகள் வாங்கி பொருத்தச் சொல்லிக் கல்வி நிறுவன நிர்வாகிகள் வற்புறுத்தியதாகவும் சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வி நிறுவனத்தில் அளிக்கப்படும் உணவும் தரம் குறைந்ததாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டு சில மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதைக் கல்வி நிறுவன நிர்வாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுபோனாலும் எவ்விதப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்று அமைதியாக இருந்துவிட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதைக் கல்வி நிறுவன அதிகாரிகள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் நடந்த தவறுகள் இந்த ஆண்டும் தொடராமல் பார்த்துக் கொள்வார்களா அதிகாரிகள்?

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080815133812&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/16/2008&dName=No+Title&Dist=0

Sunday, June 15, 2008

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி

அப்துல் கலாம் கூற்றை நனவாக்கும் ஆலிம் முகம்மது சாலிஹ் கல்லூரி


மாணவ -மாணவியரே கனவு காணுங்கள் என்று உன்னத தலைமகன் மரியாதைக்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் கூற்று நன்கு கற்றால்தான் செயல்திறன் பெறலாம். செயல்திறன் அதிகரித்தால் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் அறிவுசக்தியாக மிளிரும் அந்த அறிவு நல்வாழ்வை வளமாக்கும். இதனால் நம் அறிவு வளர்ந்து நம்நாடு வளம் பெறும்.

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் கல்விப் பணியை கடந்த 15 வருடங்களாக ஆலிஹ் முகம்மது சாலீஹ் அறக்கட்டளை மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கொடுப்பதில் பெருமைப்படுகிறோம். எங்களது கல்லூரியில் இன்ஜினீயரிங் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.

பி.டெக்.கில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப் பிரிவும் சிவில் இன்ஜினீயரிங் மெக்கானிக் இன்ஜினீயரிங் உள்ளது. மற்றும் மேலாண்மைப் படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எம்.பி.ஏ., இரண்டு வருட எம்.சி.ஏ., படிப்பு உள்ளது.

ஆலிஹ் முகம்மது சாலீஹ் பாலிடெக்னிக் பிரிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், சிவில், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகள் மூலம் சிறந்த கல்வியை கொடுத்து வருகிறோம்.

எங்களது கல்வி நிறுவனத்தில் பாரா மெடிக்கல் சயின்ஸ் பிரிவில் பி.பி.டி, படிப்பும் வழங்கி வருகிறோம். இன்டஸ்ட்ரியல் டிரைனிங் பிரிவில் எலக்ரிஷியன், பிட்டர், மோட்டார் வாகனம் பற்றிய படிப்புகளும் உள்ளது.

கடந்த 2003-2004, 2004-05ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் பிசியோதெரபி பாடத்தில் தங்க மெடல் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Najumudin Habeeb
dateMon, Jun 16, 2008 at 1:45 PM

Dear Hidayath, Assalamu Alaikum. The donation they charge for every course is more than 200,000/- and more. This amount is very very high for an ordinary Muslim student. There are lot of poor Muslim students passed out with acadamically rich marks but they could not attend this college due to high donation. If IMAN can make some deal with the management for the admission of poor Muslim students, then we can say that this college is trying to make the dream of Kalaam TRUE. Other wise, it is one of a propaganda to tell lies. Regards. Najumudin.Â