Showing posts with label ஷார்ஜா. Show all posts
Showing posts with label ஷார்ஜா. Show all posts

Tuesday, January 12, 2010

ஷார்ஜாவில் அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் ஆங்கில‌ப் பிரிவு துவ‌க்க‌ விழா

ஷார்ஜாவில் அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் ஆங்கில‌ப் பிரிவு துவ‌க்க‌ விழா

ஷார்ஜா : ஷார்ஜாவில் அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் ஆங்கில‌ப் பிரிவு துவ‌க்க‌ விழா 15.01.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை 3.30 முத‌ல் 5.30 ம‌ணி வ‌ரை ஷார்ஜா பீச் ரிசார்ட்டில் ந‌டைபெற‌ உள்ள‌து.

அமீர‌க‌த்தின் இய‌ந்திர‌ம‌ய‌மான‌ வாழ்க்கையில் ஒவ்வொருவ‌ரும் த‌ங்க‌ளுக்குள்ள‌ ந‌கைச்சுவை உண‌ர்வுக‌ளைப் ப‌கிர்ந்து கொள்ள‌ உத‌வும் வ‌கையில் அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ம் துவ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

குடும்ப‌த்தினருட‌ன் இந்நிக‌ழ்வில் ப‌ங்கு பெற‌லாம். ப‌ங்குபெற‌ விரும்புவோர் தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் :

ப‌ன்னீர் 056-6406757

மின்ன‌ஞ்ச‌ல் : emirateshumourclub@gmail.com

---------- Forwarded message ----------
From: Emirates Humour Club
Date: Sun, Jan 10, 2010 at 6:39 PM
Subject: Inauguration of Emirates Humour Club (English Session) – 15th January,2010
To: skambadi@gmail.com



Dear Members & Friends,

Greetings from Emirates Humour Club.

A community club that aims to facilitate tension free life, in general.

Our long cherished dream has come true. We are now geared-up to inaugurate the ‘English Session’ of Emirates Humour Club, as scheduled below.

Date : 15th January,2010
Time : 3.30 – 7.30PM.
Day : Friday
Venue : Lou'Lou'a Beach Resort, Sharjah (Location Map attached).

Those who aspire to add a magic touch of fine humour to platform speaking, will get ample opportunity at EHC to test their joke telling skills. During all our monthly meetings, children and youth will be offered a unique platform to hone their comical and communication skills.

If you believe that “Laughter is a tranquilizer with no side effects” do join us. Remember “Laughter is a part of the Human survival kit”. Let us strengthen our own survival kit.

Kindly join us with your family and children. We request you to bring a few jokes, funny anecdotes to share the same with one and all present to pep-up the laughter session.

We request you to confirm participation in advance to enable us to plan the schedule.

Kindly contact Mr.Panneer on 056-6406757 or e-mail us back at emirateshumourclub@gmail.com

Warm Regards,
K.G.Guna

Sunday, April 26, 2009

ஷார்ஜா க‌ல்ஃப் டுடே அலுவ‌ல‌க‌த்தில்



ஷார்ஜா க‌ல்ஃப் டுடே அலுவ‌ல‌க‌த்தில்

ஷார்ஜா க‌ல்ஃப் டுடே ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்தில் நடைபெற்ற‌ பொருளாதார‌ப் பின்ன‌டைவால் ஏற்ப‌ட்டுள்ள‌ நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ கருத்த‌ரங்கிலிருந்து






ஷார்ஜா க‌ல்ஃப் டுடே ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்தில் நடைபெற்ற‌ பொருளாதார‌ப் பின்ன‌டைவால் ஏற்ப‌ட்டுள்ள‌ நிக‌ழ்வுக‌ள் குறித்த‌ கருத்த‌ரங்கிலிருந்து

ஷார்ஜாவில் இய‌க்க‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் டாக்ட‌ர் கே.வி.எஸ்.





ஷார்ஜாவில் இய‌க்க‌ ஊழிய‌ர்க‌ளுட‌ன் டாக்ட‌ர் கே.வி.எஸ்.

Tuesday, April 7, 2009

Tuesday, September 9, 2008

துபாய் மற்றும் ஷார்ஜாவில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கையூட்டும் சிறப்புப் பயிற்சி முகாம்கள்

துபாய் மற்றும் ஷார்ஜாவில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கையூட்டும் சிறப்புப் பயிற்சி முகாம்கள்

துபாய் தமிழ் பஜார் முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கையூட்டும் சிறப்புப் பயிற்சி முகாம் 11.09.2008 வியாழக்கிழமை இரவு 10.30 மணி முதல் அதிகாலை வரையிலும், ஷார்ஜா இஸ்லாமிய எழுச்சி மையத்தின் சார்பில் 18.09.2008 வியாழக்கிழமை இரவு 10.00 மணி முதல் அதிகாலை வரையிலும் நடைபெற இருக்கிறது.

துபாயில் பங்கேற்க விரும்புவோர் 050 7640972 / 055 9761677 ஆகிய எண்களிலும்

ஷார்ஜாவில் பங்கேற்க விரும்புவோர் 050 537 19 18 / 050 385 19 29 ஆகிய எண்களிலும்

தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு : husainbasha@yahoo.com

தகவல் உதவி : ஹுசைன் பாஷா

Monday, July 14, 2008

ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா

ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா

ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new

Thursday, July 10, 2008

ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு

ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு


ஷார்ஜா தப்லீக் மர்கஸில் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

வியாழன் மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹமது கீரனூரி சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார் என பரவலாக தகவல் கிடைத்ததும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கூடத் தொடங்கினர். எனினும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துவதற்குப் பதிலாக அரபி மொழியில் அரபியர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்த பணிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

வெள்ளிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி உரை நிகழ்த்தினார்கள். தியாகத்தின் மூலமே தீனை நிலைநாட்ட முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.

லெபனானின் தப்லீக் ஜமாஅத் சென்று இரண்டு மாதம் பணியாற்றிவிட்டு அமீரகத்தில் இரண்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. லெபனானில் எழுநூரு வருட பழமை வாய்ந்த பள்ளியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கேற்றனர்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மௌலவி கலீல் அஹமது கீரனூரி உரை நிகழ்த்த உள்ளார்.

Wednesday, June 25, 2008

கைராலி கலா கேந்திரம்

கைராலி கலா கேந்திரம்

கைராலி கலா கேந்திரம் இசை,நடனம் மற்றும் கலை ஆகியவற்றை பயிற்சியளிக்கும் ஒரு மையம்.

இது துபாய், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

ஓவியம், கணினி பயிற்சி, டெய்லரிங், அபாகஸ், மலையாள மொழி கற்றுக்கொடுத்தல் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விபரங்களுக்கு

www.kairali-kalakendram.com

E mail : ashasharathgroup@yahoo.com

Al Quisais : 04 267 2552

Sharjah : 06 572 51 52

Ras Al Khaimah : 07 2286687