Monday, July 14, 2008

ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா

ஷார்ஜா கனத் அல் கஸ்பாவில் கோடை விழா

ஷார்ஜாவில் அமைந்துள்ள கலாச்சாரப் பகுதி கனத் அல் கஸ்பா ( www.qaq.ae ) . இங்கு கோடை விழா ஜுலை 11 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெறுகிறது.

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கனத் அல் கஸ்பாவில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு தினமும் நள்ளிரவு வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுக்கள், கார்ட்டூன் சினிமா, குடும்பத்தினருடன் செல்வதற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு உணவு பொருட்கள், அரபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உணவு வகைகளில் எண்ணெய் பலகாரம் உள்ளிட்டவை விற்பனைக்கு கிடைக்கின்றன. எண்ணெய் பலகாரத்தில் தமிழகத்தின் போண்டா போன்று சிறிய அளவில் தயார் செய்யப்படும் இனிப்பு சேர்க்கப்படாத போண்டாவின் மேல் தேனை தெளித்து வழங்குகின்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுபோன்ற அரேபிய உணவுப் பொருட்கள் தமிழக உணவுப் பொருட்களுடன் தொடர்புடையதால் அரபிய கலாச்சாரத்திற்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

கண்காட்சிக்கு வந்திருந்த தமிழகப் பிரமுகர் ஹுசைன் பாஷா ஆராய்ச்சியாளர்கள் அரபிய மற்றும் தமிழக கலாச்சாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=825&Country_name=Gulf&cat=new

No comments: