Showing posts with label விருந்து. Show all posts
Showing posts with label விருந்து. Show all posts

Wednesday, September 10, 2008

இஃப்தார் விருந்து வழங்கினார் குடியரசுத் துணைத் தலைவர்

இஃப்தார் விருந்து வழங்கினார் குடியரசுத் துணைத் தலைவர்

புது தில்லி, செப். 10: குடியரசுத் துணைத் தலைவர் எம்.ஹமீத் அன்சாரி, முக்கியப் பிரமுகர்களுக்கு தில்லியில் புதன்கிழமை இஃப்தார் விருந்து வழங்கினார்.

பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்றனர்.