Tuesday, February 2, 2010

தமிழ் முஸ்லிம் பிரபலங்கள்.. Tamil Muslim Personalities

தமிழ் முஸ்லிம் பிரபலங்கள்.. Tamil Muslim Personalities

அன்பு சகோதரர்களே!

சமுதாயத்தில் உள்ள அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்கள் இணையத்தில் தேடும் பொழுது கிடைப்பது இல்லை. எனவே தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் பற்றிய விபரங்களை தெரிவியுங்கள்..

குறிப்பாக தமிழ் முஸ்லிம் பத்திரிகையாளர்களின் விபரங்கள் பெயர், முகவரி, தொலைபேசி, மின் அஞ்சல், பனி புரியும் பத்திரிகை நிறுவனத்தின் பெயர் போன்ற விபரங்களை ஆவணபடுத்துங்கள்.

இணைய தளத்தை சமுதாயத்தின் வளர்சிக்காக பயன்படுத்துவோம்..



Rajaghiri Gazzali
www.rajaghiri.net

ஜமாதே இஸ்லாமியின் முதல் மாநில மாநாடு - ஒரு கள தொகுப்பு

ஜமாதே இஸ்லாமியின் முதல் மாநில மாநாடு - ஒரு கள தொகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

1941 துவங்கப்பட்ட ஜாமாதே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தில் தனது முதல் மாநில மாநாட்டை கடந்த வாரம் திருச்சியில் நடத்தியது, ஒரு நேரடி கள தொகுப்பு

சிறப்பம்சங்கள்

1. பெண்களே அதிகம் காணப்ட்டணர் (3:1), பெண்கள் 3 மடங்கு என்றால் ஆண்கள் 1 மடங்கு.

2. மேடையில் ஆண்களுக்கு சமமாக பெண் தலைவர்களையும் அமரவைத்தது, இது வரை தமிழகத்தில் நடந்த இஸ்லாமிய மாநில மாநாடுகளில் இதை கண்டதில்லை.

3. இடம் மிக பெரியது, தஞ்சை வல்லம் மாநாட்டைவிடவும், தாம்பரம் மாநாட்டு திடலைவிடவும் பெரியது.

4. மாநாட்டிற்க்கு வருபவர்கள் ஓய்வெடுப்பதெற்க்கென்றே மிக பிரம்மான்டமான இரண்டு அரங்குகள். (வல்லம் மாநாட்டில் இது மிஸ்ஸிங்.). பெண்கள் ஓய்வெடுக்கும் அரங்கு ஆண்கள் அரங்கைவிட பெரியது.

5. நெரிசலை குறைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தனி மெயின் ஸ்டேஜ். மெடின் ஸ்டேஜ் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முதியவர்களுக்கென தனி இடம், பெண்கள் பகுதி ஆண்கள் பகுதியை விட பெரியது.

6. வருபவர்கள் ஒவ்வருவருக்கும் உணவு கூப்பன் (6 வேளை உணவு) ரூ.125 என வழங்கப்பட்டது. கூடவே ஒரு பிளேட், ஒரு டம்ளர்.

7. கழிப்பிட வசதி : ஆண்கள் பகுதியில் 300 டாய்லெட், 250 பாத்ரூம் .

8. கண்காட்சி : பீஸ் கண்காட்சி அளவிற்க்கு பெரியதாகவும், தகவல் உடனும் இருந்தது. (பீஸ் அளவிற்க்கு அலங்காரமாக இல்லை). பெண்களுக்கென தனி நேரம் , ஆண்களுக்கென தனி நேரம். கண்காட்ட்சியில் பெண் உரிமை சம்மந்தமாக பல பிரிவுகள்.

9. இலவச குடி தண்ணீர் இல்லை, (இருந்திருந்தால் தெரியும் படி இல்லை) குடிக்க கடையில் தான் வாங்க வேண்டும் 3 பாக்கெட் தண்ணீர் ரூ.5.

10. உணவு ஸ்டால்கள் ஏராளம், விலை நடுத்தரமான விலை, சில புத்தக கடைகளும் இருந்தன. (கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமும் மிக பெரியது, நடுவில் ஓய்வெடுக்க தனி இடம்)

11. எங்குபார்த்தாலும் SIO ( Student Islamic Organization) மயம்.

12. தமுமுக, ததஜ , தவ்ஹீத் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த சகோதரர்களை காண முடிந்தது. உருது மொழியிலேயே அதிகமாக காதில் விழுந்தது.

13. தண்ணீர் பிரச்சனை இருக்கத்தான் செய்தது

அரங்க மைப்பு : ஒரு மெயின் ஸ்டேஜ், (ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி). கண்காட்சி அரங்கம், ஓய்வெடுக்க மொத்தம் நான்கு இடங்கள் (இரண்டு அரங்கம் மிக பெரியது). ஆண்களுக்கு ஆண்கள் பகுதியை ஒட்டிய கழிப்பிட வசதி, பெண்களுக்கு பெண்கள் பகுதியை ஒட்டிய கழிப்பிட வசதி. உணவு ஸ்டால்கள் , புத்தக சிடி ஸ்டால்கள், காவல் துறைக்கு தனி இடவசதி, வாலன்டியர்களுக்கு ஓய்வெடுக்க தனி இடம். அவளவுதான். அனைத்து அரங்கங்களும் பெரியதாகவே அமைக்கப்பட்டிருந்தன.

இடம் : பெரம்பலூரில் இருந்து 20 கிலோமீட்டர். (பெரம்பலூர் எல்லையில் இருந்து (திருச்சி நோக்கி) 3 கிலோமீட்டர்). பெரம்பலூர் - திருச்சி நெடுஞ்சாலையில் நெடுங்கூர் என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் உள்ளே உள்ளது இடம். பஸ்வசதி கிடையாது. மாநாடு குழுவின் சார்பாக ஒரு வேன் ( 20 நிமிடத்திற்க்கு ஒரு முறை) மக்களை மாநாட்டுதிடலுக்கு அழைத்து செல்லும். அதை தவிர மாநாட்டு திடலுக்கு போவதற்க்கு வேறு வழிகிடையாது. நடக்க முடியும் என்றால் 3 கிலோமீட்டர் நடந்து செல்லலாம்.


- இம்தியாஸ்

muhmed.imtiaz@gmail.com