Thursday, July 2, 2009

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அறந்தாங்கி இஸ்லாமிய சமுக நல அமைப்பின் ஆறாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை துபை தேரா அல் முதினாவில் உள்ள அஸ்கான் D பிளாக்கில் நடைபெற்றது.
அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ அமைப்பின் தலைவர் ஜனாப் முஹ‌ம்ம‌து சாலிஹ் தலைமை வ‌கித்தார். முன்ன‌தாக‌ முஹ‌ம்ம‌து சாலிஹ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

ஜனாப் எம். சைய‌து அபூதாகிர் வரவேற்புரை நல்கினார். ஜனாப் பைசல் அஹ்ம‌த் அமைப்பின் செயல்பாட்டினை தொகுத்து வழங்கினார்.

கீழக்கரை ஜமாஅத் நிர்வாகி ஜனாப் ஹமீத் யாஸீன்,ஐக்கிய‌ முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செய‌லாள‌ர் ஜனாப் கே. முஹ‌ம்ம‌து ஹிதாயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

திருக்குர்ஆன் ஆய்வாள‌ர் ஜனாப் காஞ்சி அப்துல் ர‌வூப் பாக்கவி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் இஸ்லாமிய‌ வ‌ங்கி முறையினைப் பின்ப‌ற்றி க‌ட‌ன் உள்ளிட்ட‌வ‌ற்றை மேற்கொண்டு வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ப் பேச்சாள‌ர் ம‌வ்ல‌வி ஜஹாங்கீகீர் அரூஸி அவ‌ர்க‌ள் த‌ன‌து சிற‌ப்புரையில் பொதுந‌ல‌நோக்குட‌ன் செய‌லாற்றி வ‌ரும் அற‌ந்தாங்கி இஸ்லாமிய‌ ச‌மூக‌ ந‌ல‌ இய‌க்க‌த்தின‌ரைப் பாராட்டினார்.

அமைப்பின் பொருளாளர் ஜ‌னாப் அபூதாகிர் தொகுத்து வழங்க, ஜனாப் கலந்தர் மைதீன் நன்றி உரை வழங்க, விழா இனிதே முடிவடைந்தது


Warm Regards,

FAISAL AHMAD.S.A
M/S SHAHEEN EXCHANGE LLC,
UNITED ARAB EMIRATES,
DUBAI, DEIRA, NAIF ROAD,
POST BOX NO. 28478,
TEL NO. 9714 2266488,
MOB NO. 97150 6579841,
Alternate Email. fasa@india.com

லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

லால்பேட்டை நண்பர்கள்அனைவர்களுக்கும்

அஸ்ஸலாமுஅழைக்கும்

http://lalpetexpress.blogspot.com/

லால்பேட்டை எக்ஸ்பிரஸ் என்னும் புதிய வலைபூவில் லால்பேட்டைசெய்திகள் மற்றும் அரசியல்செய்திகள் அனைத்தும் காணலாம். நீங்கள் நமதுநகரில் நடைபெறும் அனைத்து நீகழ்ச்சிகளையும் எனது lalpetexpress@gmail.com இ மெயில் முகவரிஇல் தெரியபடுத்தவும்.

பிளாஸ்டிக் எமன் - உண்மைகள்

பிளாஸ்டிக் எமன் - உண்மைகள்
ஆதி
- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

துபாயில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத் ஒருங்கிணைப்புக் கூட்ட‌ம்

துபாயில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத் ஒருங்கிணைப்புக் கூட்ட‌ம்

துபாய் : துபாயில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத்தின‌ரை ஒருங்கிணைக்கும் வ‌கையில் கூட்ட‌ம் ஒன்றிற்கு வெள்ளிக்கிழ‌மை ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

கீழ‌க்க‌ரை தெற்குத்தெரு ஜ‌மாஅத் ஒருங்கிணைப்புக் கூட்ட‌ம் 03 ஜுலை 2009 வெள்ளிக்கிழ‌மை மாலை 5.30 ம‌ணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இக்கூட்ட‌த்தில் கீழ‌க்க‌ரை தெற்குத்தெருவைச் சேர்ந்த‌ அனைவ‌ருக் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இந்நிக‌ழ்வின் ஒருங்கிணைப்பாள‌ர் ஏ. ஹ‌மீது யாசின் 050 2533 712 கேட்டுக் கொண்டுள்ளார்.