Monday, February 2, 2009

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

முன்னுரை:

சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.

1. வட்டி என்றால் என்ன?:
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
மற்றொரு அறிவிப்பில்,
'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் :
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
1. நிரந்தர நரகம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.. 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர்.
ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்:
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம்.
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்:
அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?:
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது..
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? :
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது.
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு:
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது:
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது:
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?:
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை:
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!

__._,_.___

Abu Ajmal

'The History of Ka'aba' - Scripting the journey of the soul

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2009020228204

DIWANIYA

'The History of Ka'aba' - Scripting the journey of the soul

By Sameera Aziz

THERE are some writers who are able to get their idea across effortlessly and describe an idea accurately. Rauf Siddiqui's name is among those writers and dedicated Islamic researchers who have unveiled the 'History of Ka'aba'. The distinct voice of his writing is always unmistakable and this time, he has presented an excellent classical book by sketching the history of the Ka'aba, which is considered the center of the Muslim world and is a unifying focal point for Islamic worship.
Siddiqui's research-based compilation on the History of Ka'aba was launched in Arabic, Urdu and English languages on Jan. 28, 2009. The Urdu and Arabic version was released with the name 'Tareekh-e-Baitullah'.
"Keeping in view the significance of the topic and its demand, the book is being launched in three languages and is currently available worldwide," said Rauf Siddiqui to Saudi Gazette.
"Its Persian translation is also being planned in the near future. The publication takes inspiration from a rare booklet of Sh. Muhammad Saleh Zainul Abideen Al-Sheebi who wrote on the history of Holy Ka'aba in 1299 Hijri," he said.
Though a number of books have been written on the history of Islam and the history of Makkah, however, there was still room for an exclusive book on the history of the Holy Ka'aba. The book contains Siddiqui's research work to trace back the origins of Holy Ka'aba and elaborates on the various developments through the pages of history, incorporating important pictures and references side by side.
"I hope that Tareekh-e- Baitullah' will clarify significant aspects relating to the history of Ka'aba as the publication has been produced on modern lines after painstaking research containing relevant references and pictorial insertations," noted Siddiqui.
Siddiqui is a well known figure in Pakistani politics and is providing his services as the Minister of industries and commerce to government of Sindh province. He is also a former Interior Minister of Sindh and has lived in the Kingdom since a long time. His friendship with Al-Sheebi family directed him to contribute further research work on the Holy Ka'aba through an insightful and well written book.
"The copy of the rare booklet was gifted to me by my friend from Al-Sheebi family, Abdul Rehman Salah Zain Ul Abideen Al-Sheebi and hence, I decided to carry on the research work for making this Islamic history accessible to world," said Siddiqui.
Earlier, Siddiqui has contributed to literature through his many poetic, literary and journalistic works. His book, 'The History of Ka'aba' would be an excellent entry work for those with seeking knowledge of Islamic history. Indeed, it is a fantastic short book on the journey of the soul.
It is a straightforward and accessible historical introduction to the history of Ka'aba, covering theological facts. – SG

துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீடு



























துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீடு

துபாயில் பெர‌ம்ப‌லூர் மாவ‌ட்ட‌ம் வி.க‌ள‌த்தூர் இளைஞ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ரும் இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா ம‌ற்றும் சிற‌ப்பு ம‌ல‌ர் வெளியீட்டு விழா 30.01.2009 வெள்ளிக்கிழ‌மை துபாய் தேரா கேர‌ளா முஸ்லிம் க‌லாச்சார‌ மைய‌த்தில் ந‌டைபெற்ற‌து.

விழாவிற்கு ப‌த்திரிகையாள‌ர் க‌மால் பாஷா த‌லைமை வ‌கித்தார். ஸ‌பியுல்லாஹ் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். எம். ச‌பியுல்லாஹ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஜெ.முஹ‌ம்ம‌து அலி இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை குறித்த‌ அறிமுக‌வ‌ரை நிக‌ழ்த்தினார்.

பொறியாள‌ர் ஷேக் முஹம்ம‌து இந்திய‌ முஸ்லிம் ந‌ல் அற‌க்க‌ட்ட‌ளையின் க‌ல்விப் ப‌ணிக‌ளை விரிவாக‌ எடுத்துரைத்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ல்வி உத‌வி, வ‌ட்டியில்லாக் க‌ட‌ன் உள்ளிட்ட‌ திட்ட‌ங்க‌ள் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தை விரிவாக‌ விள‌க்கினார்.

ம‌வ்ல‌வி நூருல்லா ஹ‌ஜ்ர‌த் ப‌தினொரு ந‌ப‌ர்க‌ளுட‌ன் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ அற‌க்க‌ட்ட‌ளை இன்று உய‌ர்நிலையினை அடைந்துள்ள‌து குறித்து பெருமித‌ம் கொள்வ‌தாக‌த் தெரிவித்தார்.

ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி ச‌முதாய‌ மேம்பாட்டிற்கு க‌ல்வியின் அவ‌சிய‌த்தை வ‌லியுறுத்திப் பேசினார். க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளை தொட‌ர்ந்து சிற‌ப்புற‌ ந‌ட‌த்தி வ‌ர‌ வாழ்த்தினார்.

சிங்க‌ப்பூர் ஆடிட்ட‌ர் ஃபெரோஸ் கான் க‌ல்வியின் முக்கிய‌த்துவ‌ குறித்து நீண்ட‌ உரை நிக‌ழ்த்தினார். அதில் ஆசிரிய‌ர்க‌ள் ச‌மூக‌ அக்க‌றையுட‌ன் செய‌லாற்ற‌ வேண்டும் என‌ வேண்டுகோள் விடுத்தார். ம‌னித‌ன் புனித‌னாக‌ க‌ல்வி மிக‌வும் அவ‌சிய‌மான‌ ஒன்று என்றார்.
இந்திய‌ முஸ்லிம் ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளையின் ஐந்தாம் ஆண்டு ம‌ல‌ரை ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை தொழில‌திப‌ர் அபுதாஹிர் பெற்றுக்கொண்டார்.

ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், ஆடிட்ட‌ர் ஃபாரூக், ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா,அய்மான் க‌ல்லூரி செய‌லர் சைய‌து ஜாப‌ர், சாதிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்தின‌ர்.

Muslim leaders launch national movement for Muslim reservation

Muslim leaders launch national movement for Muslim reservation

http://www.indianmuslims.info/news/2009/feb/01/muslim_leaders_launch_national_movement_muslim_reservation.html
http://www.indianmuslims.info/news/2009/feb/01/govt_urged_grant_reservation_muslims_community.html
http://www.twocircles.net/2009feb01/give_muslims_jobs_development_benefits_bridge_alienation.html
http://www.hindustantimes.com/StoryPage/Print.aspx?Id=8d490b8c-2ddf-4b24-bfdd-f186e23a0723

New Delhi: The Muslim community in India should be recognized as a Backward Class and should be given reservation along with SCs, STs, and OBCs, demanded Joint Committee of Muslim Organizations for Empowerment (JCMOE) at the end of a national convention for Muslim reservation in New Delhi today. New Delhi: Presiding over the first session of the convention, former Chief Justice of India A.M. Ahmadi, who said in his view secularism is the vision of India, averred, "No country can progress if a sizeable section is denied the opportunity to participate in development… We are yet to see our democracy blossom to its full when minorities are meted out equal treatment." Earlier, in his welcome and introductory speech, Convenor of JCMOE and former president All India Muslim Majlis-e-Mushawarat and Ex-MP Syed Shahabuddin said, "The Muslim community today is demanding reservation as a Backward Class, as a deprived group, who is almost as backward as SC/ST and more backward than the non-Muslim OBCs. The second session chaired by Maulana Syed Jalaluddin Umari, Ameer Jamaat-e-Islami Hind, provided the delegates and participants to interact. Ameer of Jamaat said the Sachar Report has established that the governments have been biased against the Muslim community, so it is necessary for them to grant reservation to the community for its social, economic and education progress. He assured the JCMOE leaders that Jamaat will give its full support to the Muslim reservation movement. Shahnawaz Ali Raihan, secretary, Students Islamic Organization of India, told the elders to offer full support of the youth organization to the movement for reservation. Speaking on the occasion Raihan said as Muslims constitute 13.4% of total population and compared to SC/ST 90% of the community is backward, 12% reservation should be given to them. He also called for a nationwide movement against casteism and communalism – both hard and soft communalism. "Dr. Sayyid Hamid, renowned educationist and Chancellor Jamia Hamdard, also pleaded for Muslim reservation. Mr. Ram Vilas Pawan, Chemicals, Fertiliser and Steel Minister and president Lok Janshakti Party, said that Muslim community should be provided reservation in government employment and higher education under the relevant sections of the Constitution for the socio-economic upliftment of the socially and economically backward sections of the population. A.B. Bardhan of Communist Party of India, Debabrata Biswas of All India Forward Block, representatives of Janta Dal (S) and Nationalist Congress Party, and Christian leader Fr. Dominic Emmanuel and Jail leader Bal Patil also endorsed the Muslims' demand for reservation. The third and final session chaired by Dr. Zafarul-Islam Khan, president All India Muslim Majlis-e-Mushawarat and Editor Milli Gazette. JCMOE, which has in its fold all major Muslim organizations including Jamiat Ulema-I-Hind, Jamaat-e-Islami Hind, All India Muslim Majlise Mushawarat, All India Milli Council and Markazi Jamiat Ahle Hadis, has launched a national movement for Muslim reservation and appealed to Muslim community and organizations to rise above all considerations and participate in the movement wholeheartedly. Twocircles.net/ Ians/ ndtv/HT

காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை

காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி,,இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி,,,---மாணவர் பேரவை

தளமும் மாணவர் பேரவையும் ஏன்? எதற்கு? எப்படி?
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...


அன்புள்ள முன்னாள்,இன்னாள் மாணவர்களே!


நலம்!

நலம் பல சூழ்க,


நாம் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி நாம் கற்ற கல்விக்கூடத்திற்கு ஏதேனும் செய்திடல் வேண்டும்!!

அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரண காரியங்களை விவாதித்து, நல்ல விசயங்களில் நிருவாகதிற்கு துணை நின்றிட வேண்டும்;



அதற்கு இடற்பாடுகள் வருகிறபோது துணை நிற்கவும்; தடுமாறுகிற போது ஆலேசனைக் கூறி தடம் மாறாமல் இருக்கவுமே இத்தளம்!!


எனவே, முன்னாள், இன்னாள் மாணவர்களே!!


தளத்தில் உங்களை இனைத்துக்கொண்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!

அதன் தனெழுச்சியே இத்தளமும் மாணவர் பேரவையும்!!!


இவைப்போக, உங்களுடைய கல்விக் கற்ற/கற்கும் நாட்களின் மறக்கமுடியாத

சம்பவங்கள்,

நகைச்சுவைகள்,

உங்களைப்பாதித்த விசயங்கள்,

ஆசிரியர்கள் பற்றி...

இன்னும் பள்ளி, கல்வி மேம்பாடு குறித்து...

எங்களுக்கு மின்னஞ்சல் adiraipost@gmail.com அனுப்பினால் பதிவோம்!


அல்லது பின்னூட்டமாகவும் பதியவும்!

C BOX-ஸையும் பயன் படுத்திக்கொள்ளவும்!!


இன்ஷாஅல்லாஹ்...

மீண்டும் சந்திப்போம்........




காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் மேல் நிலைப்பள்ளி
மாணவர் பேரவை www.kmcadirai.blogspot.com




இமாம் ஷாஃபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளி
மாணவர் பேரவை www.imamshafi.blogspot.com

த‌க்க‌லையில் அன்புட‌ன் அல்லாவுக்கு................. நூல் வெளியீட்டு விழா

த‌க்க‌லையில் அன்புட‌ன் அல்லாவுக்கு................. நூல் வெளியீட்டு விழா

த‌க்க‌லை பீர் முஹ‌ம்ம‌து அப்பா அர‌ங்கில் 2009 பிப்ர‌வ‌ரி 6 வெள்ளிக்கிழ‌மை மாலை 4.30 ம‌ணிக்கு அன்புட‌ன் அல்லாவுக்கு.... எனும் நூல் வெளியீட்டு விழா ந‌டைபெற‌ இருக்கிற‌து.

நூல் வெளியீட்டு விழாவிற்கு உத்த‌மபாளைய‌ம் ஹாஜி க‌ருத்த‌ ராவுத்த‌ர் க‌ல்லூரி பேராசிரிய‌ர் மு. அப்துல் ச‌ம‌து த‌லைமை தாங்குகிறார்.

ஏ. அப்துல் ர‌வூஃப் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார். ம‌வ்ல‌வி எச்.எம். சித்தீக் கிராஅத் ஓதுகிறார். முன்னாள் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் பி. முஹ‌ம்ம‌து இஸ்மாயில், நாகர்கோவில் சுகாதார‌த்துறை துணை இய‌க்குந‌ர் டாக்ட‌ர் ரால்ஃப் செல்வின், ஹாஜி என்.எஸ்.எஸ். தாஜுத்தீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.
நெல்லை ச‌த‌க்க‌த்துல்லாஹ் அப்பா க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ முத‌ல்வ‌ர் கா. முஹ‌ம‌ம்து ஃபாரூக், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்த‌வ‌ க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஜேம்ஸ் ஆர். டேனிய‌ல், க‌விஞ‌ர் த‌க்க‌லை ஹ‌லீமா உள்ளிட்டோர் க‌ருத்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.

க‌விமாம‌ணி பேராசிரிய‌ர் தி.மு.அப்துல் காத‌ர் நூல் வெளியிட்டு சிற‌ப்புரை நிக‌ழ்த்துகிறார்.
நூலின் பிர‌திக‌ளை எஸ். முஹ‌ம்ம‌து முஸ்த‌பா,துபாய் ஈடிஏ அஸ்கான் பொறியாள‌ர் எம். ஷாகுல் ஹ‌மீது, ஓய்வு பெற்ற‌ முத‌ன்மைக் க‌ல்வி அலுவ‌ல‌ர் ச‌ந்தான‌ குமார‌சுவாமி, என்.எஸ். ஹ‌மீது, எஸ். ஷேக் ப‌ரீது, ம‌க்காய்பாளைய‌ம் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் ஏ.பி.எம். ராபி, டிடிஎன் தொலைக்காட்சி உரிமையாள‌ர் ஏ.எஸ். ஜ‌ஹ‌ப‌ர் சாதிக் உள்ளிட்டோர் பெறுகின்ற‌ன‌ர்.

நூலாசிரிய‌ர் எம்.ஏ. ஷாகுல் ஹ‌மீது ஏற்புரை நிக‌ழ்த்துகிறார். எச். ஹாமீம் முஸ்த‌பா ந‌ன்றி கூறுகிறார். நாவ‌லாசிரிய‌ர் எம். மீரான் மைதீன் நிக‌ழ்ச்சியினை ஒருங்கிணைக்கிறார்.

இந்நூல் லைலா ப‌திப்ப‌க‌ம், 6 35 முகில் இல்லம், இராஜ‌ல‌ட்சுமி ந‌க‌ர், பெருவிளை ரோடு, நாக‌ர்கோவில் 3 என்ற‌ ப‌திப்ப‌க‌த்தால் வெளியிட‌ப்ப‌டுகிற‌து. வெளியீட்டு விழாவில் நூல் ரூ. 100 க்கு கிடைக்கும்.

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு

சேது பொறியியல் கல்லூரி 10_வது பட்டமளிப்பு விழா அமைச்சர் அன்பழகன் பங்கேற்பு
மதுரை,பிப்.2


சேது பொறியியல் கல்லூரியின் 10_வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு மாணவ_மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.




மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 10_வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் முகமது ஜலீல் பட்டமளிப்பு விழாவை துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அ.செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.




இந்த விழாவில் நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கலந்துகொண்டு 250 மாணவ_மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:_




தமிழ்நாட்டில் அண்மையில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நடைபெறாத வளர்ச்சி கல்வித்துறையில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ.டி.துறை உலக அளவில் இந்திய நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஐ.டி.துறையில் கைதேர்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஐ.டி.துறையில் சிறந்து பணியாற்றி வருகிறார்கள். இது நமது மாநிலத்தை உலக அளவில் அறியச்செய்துள்ளது. ஒரு காலத்தில் பலருக்கு கல்வி மறுக்கப்பட்டது.




இன்னார்தான் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது யார் வேண்டுமானாலும் கல்வியை பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியை புகுட்டுவது ஒரு அரசின் கடமை. கல்வி யாருக்கும் மறுக்கப்பட கூடாது என்ற நிலை இப்போது உள்ளது. எனவே இதை பயன்படுத்தி அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும். அதற்கான முயற்சியில் ஞிங்கள் ஈடுபட வேண்டும். இங்கு படித்து பட்டங்களை பெற்றுச்செல்லும் ஞிங்கள் உங்களது தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஏராளமாக சம்பாதித்து வீட்டையும் நாட்டையும் வளப்படுத்த எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.




பட்டமளிப்பு விழாவில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதன்மை கல்வி அதிகாரி சீனி முகைதீன் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை தலைவர் கிறிஸ்டோபர் ரமேஷ் நன்றி கூறினார்.