Thursday, June 11, 2009

மகிழ்ச்சி - ஒரு கலை …!

மகிழ்ச்சி - ஒரு கலை …!

மகிழ்ச்சியான, உறுதியான, அமைதியான உள்ளம் தான் அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்தது. ஏனெனில் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகள் பிறக்கும். மகிழ்ச்சி என்பது ஒரு கலை. அதைக் கற்றுத்தான் அறிந்து கொள்ள முடியும் என்பவை அறிஞர்களின் கருத்து. எனவே மகிழ்ச்சிக்கலையைக் கற்றவர் மிகச் சிறந்த அருட்கொடையைப் பெற்றவர் ஆகி விடுவார். அவரது வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக அமையும்.

மகிழ்ச்சியை எவ்வாறு கற்பது? எதையும் தாங்கும் இதயமும், மன வலிமையும்தான் மகிழ்ச்சியின் ஆணி வேர். எனவே, உனது வாழ்க்கையில் எந்தப் புயல் வீசினாலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டாலும் நீ அசைந்துவிடாதே!

அவற்றைக் கண்டு நடுங்கிவிடாதே! ஒரு மனிதனின் உறுதிமிக்க, தூய்மையான இதயத்தைப் பொறுத்து அவனது மனம் பிரகாசமடையும் மகிழ்வுறும்.

பயந்த சுபாவம், நடுங்கும் உள்ளம், பலவீனமான இதயம் இவைதாம் கவலையையும், துக்கத்தையும் நம் அருகே அழைத்து வருகின்றன. எனவே, பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் நீ பழக்கப்படுத்திக் கொண்டால் காயங்கள், வலிகள், துயரங்கள் எல்லாமே எளிதாகிவிடும். உன்னிடமிருந்து காணாமல் போய்விடும்.

ஒரு கவிஞர் பாடுகிறார்:

இயற்கையின் இடர்களைத் தாங்க
உன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால்
பேராபத்துகள் எளிதாகிவிடும்.

குறுகிய பார்வையும், சுயநலமும் மகிழ்ச்சியின் எதிரிகள் உலகையும் அதில் வாழும் பிற உயிர்களையும் மறப்பது கூட ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கெடுக்கும். இறைவன் தன் எதிரிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது மற்றொரு கூட்டத்தினரைக் கவலை பிடித்துக் கொண்டது. (அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தனர்) (அல்குர்ஆன், 31:54)

இத்தகைய குறுகிய மனம் படைத்தவர்கள் தாங்கள் தாம் உலகம் என எண்ணுகிறார்கள். பிறர் நலன் குறித்து இவர்கள் சிந்திப்பதுமில்லை. அக்கறை கொள்வதுமில்லை. எப்போதும் தம் வாழ்க்கையைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக் கிறார்கள். பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற சிந்தனை இவர்களிடம் கொஞ்சமும் இல்லை.

எனவே, நீயும் நானும் நம்மைப் பற்றி மட்டும் சிந்திப்பதை கவலைப்படுவதை சில காலம் நிறுத்தி வைக்க வேண்டும். சில நேரங்களில் நம்மை நாம் மறக்க வேண்டும். நமது காயங்களையும், கவலைகளையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு பிறரது இன்னல்களைப் போக்க முயல வேண்டும். இதன் மூலம் நமக்கு இரண்டு இலாபம்; நாமும் மகிழ்ச்சியாக வாழலாம். பிறரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கலாம்.

மகிழ்ச்சிக் கலையின் மற்றொரு முக்கியமான அம்சம்: சிந்தனைக்குக் கடிவாளமிட்டு அதை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது பிடியிலிருந்து தப்பிக்கவோ, ஓடவோ, சிதறவோ அதை அனுமதிக்கக் கூடாது. நமது சிந்தனையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது நமது பிடி தளரும்போது அது நம்மைக் கட்டுப்படுத்தும்; பலவந்தப்படுத்தும். அடங்க மறுத்து அது அதன் வழியில் செல்லும்.

உனக்கு அடங்காத சிந்தனை கடந்த கால கவலைக் கோப்புகளைத் திறந்து பிறந்தது முதல் நீ வாழ்க்கையில் சந்தித்தப் பழைய துயரங்களையெல்லாம் உன்னிடம் வாசித்துக்காட்டும்; மறைந்து போன வேதனைகளை மீண்டும் நினைவுபடுத்தும்; வருங்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி உன்னை ஆட்டம் காண வைக்கும்; உனது உணர்வுகளை சுட்டெரிக்கும். எனவே, முழு முயற்சியுடன் சிந்தனையை ஒருமுகப்படுத்தி அதை உனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வா. அப்போது நல்ல பயனுள்ள ஆக்கப்பூர்வமான செயல்கள் உன்னிலிருந்து வெளிப்படும்.

‘’மரணமற்ற என்றும் நிரந்தரமான இறைவன் மீது முழு நம்பிக்கை வையுங்கள்’’ (அல்குர்ஆன், 25:58)

மகிழ்ச்சிக் கலையின் இன்னொரு அடிப்படையான கூறு: வாழ்க்கையை அதற்குரிய இடத்தில் நீ வைக்க வேண்டும் அதன் தகுதிக்கேற்ற மரியாதையை மட்டுமே அதற்கு வழங்க வேண்டும். இந்த உலக வாழ்க்கை அற்பமானது. அது உன்னிடமிருந்து எதையும் உரிமை கொண்டாட நீ இடம் தராதே! ஏனெனில் இவ்வாழ்க்கை இடர்கள், காயங்கள், துயரங்கள் ஆகியவற்றின் பிறப்பிடம். இந்த உலக வாழ்க்கையின் இயல்பே இதுதான் என்றாகிவிட்ட பிறகு இந்த வாழ்க்கையை நினைத்து நீ ஏன் கவலைப்பட வேண்டும்? இழப்புகளுக்காக ஏன் வருந்த வேண்டும்? இந்த வாழ்க்கையின் மிக நல்ல பாகம் கூட கறைபடிந்திருக்கிறது. அதன் மின்னல் ஏமாற்றுகிறது. அதன் வாக்குறுதிகள் வெறும் கானல் நீராகக் காட்சி தருகின்றன. அதன் செல்லக் குழந்தை தவறிவிடுகிறது. வாழ்க்கையின் தலைவன் பொறாமைக் கொள்ளப்படுகிறான். வாழ்க்கையை அனுபவிப்பவன் அச்சுறுத்தப்படுகிறான். வாழ்க்கையின் காதலன் காதலியின் சதியினாலேயே கொலைசெய்யப்படுகிறான்.

கற்றுக்கொள்வதன் மூலமாகவே கல்வியைப் பெறமுடியும். பொறுமையைக் கடைபிடிப்பதன் மூலமாகவே பொறுமை யாளனாக ஆகமுடியும். ( நபிமொழி )

மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியைப் பெற முடியும். எனவே முதலில் சிரிக்கப் பழகு. மகிழ்ச்சியின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயல்படுத்து. மகிழ்ச்சி உன் இயல்பாக மாறும்வரை மகிழ்ச்சியுடன் இருக்க தொடர்ந்து உன்னை நீ கட்டாயப்படுத்து. இத்தகைய வழிமுறைகள் மூலம் நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என மனிதப்பண்புகள் பற்றிய கலை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.


எனவே, இந்த உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இடர்களைக் கண்டு வெறுப்போ, வேதனையோ அடையக் கூடாது.

ஒரு கவிஞர் பாடுகிறார்:

பூமியில் மரண ஆட்சி நடக்கிறது
இந்த உலகம் நிரந்தரம் அல்ல
சேறோ, அழுக்கோ அற்ற
தூய வாழ்க்கையை நீ விரும்புகிறாய்
ஆனால், வாழ்க்கை
சேற்றில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
இயற்கைக்கு மாறாக ஒவ்வொரு நாளும்
துன்பங்களை அனுபவிப்பவன்
தண்ணீரில், எரி கொள்ளியைத் தேடுகிறான்
கிடைக்காததற்கு ஆசைப்படுவது
பள்ளத்தாக்கின் விளிம்பில்
ஆசை எனும் வீட்டை
கட்டுவதற்குச் சமம்.
வாழ்க்கை உறங்கிக் கொண்டிருக்கிறது
மரணம் விழித்துக் கொண்டிருக்கிறது
இரண்டுக்குமிடையே மனிதன்
கற்பனையில் நடமாடிக் கொண்டிருக்கிறான்.
எனவே
உங்கள் இலக்கை
விரைவில் அடைந்துகொள்ளுங்கள்
உங்கள் ஆயுள் ஒரு புனித நூல்; இரவல் பொருள்
அதை மீட்க
இளமைக் குதிரையில் வேகமாகச் செல்லுங்கள்
அமைதியாக வாழ
நீ பேராசை கொண்டாலும்
காலம் அமைதியானது அல்ல
சுதந்திரத்திற்கு எதிர்ப்பு என்பது
காலத்தின் இயல்பு

உண்மையில் எல்லா கவலைகளிலிருந்தும் உன்னால் விடுபட முடியாது. வாழ்க்கை இவ்வாறு தான். படைக்கப் பட்டிருக்கிறது.

‘’மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கின வனாகவே படைத்திருக்கின்றோம்.’’ (அல்குர்ஆன், 90:4)
‘’(ஆண், பெண்) கலந்த இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற் காகவே செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.’’ (அல்குர்ஆன், 76:2)

‘’உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும் வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான்).’’ (அல்குர்ஆன், 11:7)

எனவே இயன்றவரை கவலையை, துக்கத்தைக் குறைக்க முயற்சிமேற்கொள்ள வேண்டும் இதுதான் நமது நோக்கம். முற்றிலும் கவலையில்லாத வாழ்க்கை சொர்க்கத்தில்தான் கிடைக்கும். எனவேதான் சொர்க்கவாசிகள் ‘’எங்களை விட்டும் எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட இறைவனுக்கே எல்லாப் புகழும்’’ (அல்குர்ஆன், 35:34) என்று கூறுவார்கள். சொர்க்கத்தில் நுழைவது வரை நமது கவலை, வெறுப்பு முழுமையாக நம்மை விட்டு மறையாது என்பதை இந்த வசனத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

ஆகவே, இந்த உலக வாழ்க்கையின் இயல்பை தன்மையை அறிந்துகொள்பவர் உலக வாழ்க்கை வறட்சியானது சூழ்ச்சிமிக்கது என்பதைப் புரிந்து கொள்வார். இது வாழ்க்கையின் இயற்கைப் பண்பு என்பதையும் அவர் உணர்ந்து கொள்வார்.

ஒரு கவிஞர் உலக வாழ்க்கையைப் பற்றி பாடுகிறார்:

உடன்படிக்கைக்குத் துரோகம்
செய்யமாட்டேன் என
வாழ்க்கை நம்மிடம் சத்தியமிட்டு கூறியது
இது வாக்குறுதியைக் காப்பாற்றமாட்டேன் என
சத்தியம் செய்வதைப் போல உள்ளது.

ஆகவே, இந்த உலக வாழ்க்கை பற்றி நாம் கூறியவற்றைக் கொண்டு வாழ்க்கையை விவேகத்துடனும் விழிப்போடும் எதிர்கொள். அதன் சூழ்ச்சியில் சிக்கிவிடாதே. துன்பம், துக்கம், கவலை ஆகியவற்றைக் கண்டு பயந்து ஓடாதே. அவற்றிற்கு அடிபணிந்து வாழ்க்கையின் சதிக்கு நீ உதவிசெய்யாதே. உன்னால் முடிந்தவரை அவற்றை எதிர்த்துத் துணிவுடன் போராடு.
“அவர்களை எதிர்ப்பதற்காக பலத்தையும், லாயத்தில் ( திறமையான ) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் ( எந்நேரமும் ) தயார்படுத்தி வையுங்கள். இதன் மூலம் இறைவனுடைய எதிரிகளையும் உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் அச்சுறுத்தலாம்.” ( அல்குர்ஆன் 8:60 )
”அவர்கள் இறைவனது பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட்த்தின் காரணமாக அவர்கள் தங்களது தைரியத்தை இழந்திடவுமில்லை. பலவீனமாகிவிடவுமில்லை.” (அல்குர்ஆன் 3:146 )

நன்றி : சமரசம் ( 1 -15 மே 2009 )

www.samarasam.net
www.ift-chennai.org

samarasam12@gmail.com

ஜிமெயில் காலை வாரினால் கூட ஜிமெயிலை சுலபமாக படிக்கலாம்

ஜிமெயில் காலை வாரினால் கூட ஜிமெயிலை சுலபமாக படிக்கலாம்
நண்பர்களே நம்முடைய கூகிள் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும். திடீரென்று இந்த இலவச சேவையை நிறுத்த கூகிளுக்கு முழு அதிகாரம் உண்டு!!!!! (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.) அப்படி நிறுத்திவிட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன்வழியாக நமக்கு வந்த மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும். இதுமட்டுமா சில நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும் அப்பொழுதும் இந்த தரவிறக்கி வைத்த மெயில்கள் கைகொடுக்கும் உங்களுக்கு. இது போல் ஒன்று நடந்தால் நிறைய பேர் தலை வெடித்துவிடும். அதுமட்டுமல்லா உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் விழி பிதுங்கிவிடும் அதனால் இது நடக்ககூடாது என்று நம்புவோம். அப்படி நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது. எப்பொழுதும் வரும்முன் காப்போம் நடவடிக்கை நல்லது. இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் கணக்கில் உள்ள அஞ்சல்களை (அட்டாச்மென்ட் கோப்பு) உட்பட தரவிறக்கி கொடுத்து விடும். அதுவும் சாதாராண அவுட்லுக் கோப்புகள் வடிவத்தில். அதுவும் முற்றிலும் இலவசமாக


முதலில் இந்த மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

http://home.zcu.cz/%7Ehonzas/gmb/gmail-backup-0.107.exe

பின்னர் இந்த மென்பொருளை சாதாரண மென்பொருள் நிறுவிக் கொள்ளுங்கள்

பிறகு நிறுவிய மென்பொருளை இயக்குங்கள்.

அதில் Gmail Login என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் மெயில் முகவரி கொடுக்கவும்

அதற்கு கீழே Gmail Password என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்டை கொடுக்கவும்.

அதற்கு கீழே நீங்கள் உங்களுடைய அஞ்சல்களை எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.

அதன் கீழே எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை வேண்டுமென்று தேர்வு செய்து கொண்டு Backup என்பதனை கிளிக் செய்யுங்கள்.

தானாகவே நீங்கள் தேர்வு செய்த போல்டரில் உங்களுடைய அஞ்சல்கள் தரவிறக்கமாகும்.

உங்கள் இணைய இணைப்பை பொறுத்து அஞ்சல் தரவிறக்கும் வேகம் மாறுபடும்.

சில நேரங்கள் உங்கள் இணைய இணைப்பு விட்டு போனால் பரவாயில்லை இணைய இணைப்பு வந்தவுடன் திரும்பவும் Backup கிளிக் செய்டால் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் அதுமட்டுமில்லை மாதம் ஒருமுறை இந்த பொருள் இலவசமாக அப்டேட் செய்யப்படுகிறது.


--
அன்புடன்...
முஹம்மது இஸ்ஹாக்
Ishaq KAM

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களிடமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர்.

‏‏இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வேளைக ளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிறது.

வர்த்தக நோக்கில் வரும் ‏ ‏ இந்த ஸ்பாம் மெயில்கள்,
• எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
• நம்ப முடியாத விலைக் கழிவுட பொருட்கள்
• ‏இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சா‎‎‎ன்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மெ‎‎‎‎ன்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம்
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் ‎ சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல் போன்‎‎ற
தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். ‏ ‏இந்த தலைப்பைக் கொண்டே ‏ ‏இவை ஸ்பாம் அஞ்சல் எ‎ன்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சில வேளை ‏ந்த ஸ்பாம் மெயில்கள் உங்களுக்கு வழமையாக வரும் ஒரு தனிப்பட்ட மெயில் போ‎‎‎ன்ற தோற்றத்துடன் அல்லது தலைப்புட‎ன் வந்தும் உங்களைத் திசை திருப்பக் கூடும்.

ஸ்பாம் உண்மையில் எமக்குப் பிரச்சினைதானா?

கணினி வைரஸ் போல் ஸ்பாம் அஞ்சல்கள் உங்கள் கனினியி‎ன்; செயற்பாட்டையோ அல்லது டேட்டாவையோ பாதிப்பதில்லை. எனினும் உங்கள் வியாபார நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு நேர விரயத்தையும் பண விரயத்தையும் கூட உண்டாக்குகிறது.

நீங்கள் தினமும் நூற்றுக் கணக்கான ‏,மெயில்களை வாடிக்கையாளர் களிடமிருந்து பெருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ‏இவற்றுள் எவை ஸ்பாம் மெயில் என்பதைக் கண்டு பிடித்து அழிப்பதில் உங்களது அல்லது உங்கள் அலுவலக ஊழியரது நேரம் வீணாக விரயமாக்கப் படுகிறது. (மிக அரிதாக ‏ மி‎ன்னஞ்சல் பெறுபவர்கள் வே‎ண்டுமானால் ஸ்பாம்களைப் பார்த்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.)

சில வேளை எது ஸ்பாம் எனக் கண்டறிய முடியாமல் உங்களுக்கு வந்த ஒரு முக்கிய ‏மெயிலையும் கூட தவறுதலாக நீங்கள் அழித்து விட வாய்ப்புண்டு.

நமக்கு முன்பின் அறியாத ஒரு நபர் நமது கம்பியூட்டரை தனது கட்டுப் பாட்டி‎ன் கீழ் கொண்டு வருவதோடு நமது கணினியிலிருந்தே, ஸ்பாம் அ‎ஞ்சல்களை வேறு நபர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ‏ இதனால் யரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

ஏ‎ன் ஸ்பாம் அஞ்சல்கள் அனுப்புகிறார்கள்?

‏ஸ்பாம் ஒரு வகை விளம்பர உத்தி எனக் கூடக் கூறலாம். மிகக் மிகக் குறைந்த செலவில் ஆ‏யிரக்கணக்கான மெயில்களை ‏ ஒரே தடவையில் அனுப்பி விடுகிறார்கள் ஸபாமர்கள். ‏இவர்கள் அனுப்பும் ‏மெயில்கள் கிடைக்கப் பெறும் பத்தாயிரம் பேரில் ஒரே ஒருவர் மட்டும் ஒரு பொருளை ‏இவர்களிடமிருந்து கொள்வனவு செய்து விட்டால் அல்லது சேவையைப் பெற்று விட்டால் போதும். அதன் மூலம் அந்த ஸ்பாமர் ,இலாபமடைந்து விடுகிறார்.

ஸ்பாம் அஞ்சலைத் தவிர்ப்பது எப்படி?

1. ஸ்பாம் எதிர்ப்பு அல்லது ஸ்பாம் வடிகட்டும் (spam filter) மெ‎‎‎‎‎ன்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். ‏இதன் மூலம் ஸ்பாம் அஞ்சல்களை ஓரளவுக்குக் குறைத்து விடலாம். அத்துட‎ன் ஸ்பாம் பில்டரில் எவை எவை ஸ்பாம் என நாமே மு‎ன் கூட்டியே காட்டி விட்டால் மீ‎ண்டும் மீ‎ண்டும் அதே ஸ்பாம் வருவதைத் தடுக்கலாம்.

2. உங்களுக்கு வரும் ,மெயில் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை அழித்து விடுங்கள். சில வேளை அந்த ‏ஸ்பாம் மெயிலுடன் வைரசும் சேர்ந்திருக்கக் கூடும். அதனைத் திறந்து பார்க்க உங்கள் கணினி வைரஸ் தாக்கத்திற்குள்ளாகலாம்.

3. ஸ்பாம் அஞ்சலுக்கு ஒரு போதும் பதில் அளிக்கவோ அல்லது அதனோடு வரும் லிங்கில் க்ளிக் செய்யவோ வேண்டாம். அவ்வாறு பதிலளிப்பது சரியான ஒரு முகவரிக்கே நாம் மெயில் அனுப்பியுள்ளோம் எd;பதை ஸ்பாமருக்கு உணர்த்தி விடும்.

4. ஸ்பாம் ‏அஞ்சலில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களையோ சேவையையோ பெற்று விடாதீர்கள். ‏இது மேலும் மேலும் ஸ்பாம் அஞ்சலைப் பெற வழி வகுப்பதோடு மாத்திரமி‎d;றி நமது ‏‏ஈ-மெயில் முகவரி ஏனைய ஸ்பாமர்களி‎ன் கையிலும் சேர வாய்ப்புள்ளது.

5. சில ‏ இணைய தளங்களில் படிவங்களை நிரப்பும்போது “மேலதிக விவரங்களைப் பெற” ஒரு check box ஐ தெரிவு செய்யவோ அல்லது நீக்கவோ வேண்டியிருக்கும். அதனைத் தெரிவு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

6. இமெயில் அனுப்பும் ப்ரோக்ரம்களில் (Mail Client) உங்களது ‏மெயிலைத் திறந்து பார்க்காமலேயே அதன்‎‎‎ உள்ளடக்கத்தைக் காட்டும் (preview) வசதியுள்ளது. ‏ இவ்வாறு preview ல் பார்க்கும் போதே ஸ்பாமர்கள் தா‎ங்கள் அனுப்பிய ஸ்பாம் உரியவரைச் செ‎‎‎ன்றடைந்து விட்டதை உறுதி செய்து கொள்வார்கள். அவ்வாறு Preview ல் காட்ட வைக்காமல் அதன் தலைப்பை மட்டுமே பார்த்து நம்பகமான ‏மெயிலை மட்டும் திறவுங்கள்.

7. ஒரே ‏மெயிலைப் பல பேருக்கு அனுப்பும் போது Bcc (Blind Carbon Copy) எனும் , இ‏டத்தில் முகவரிகளை டைப் செய்யுங்கள். இந்த Bcc பகுதியில் டைப் செய்யும் ‏மெயில் முகவரிகள் நீங்கள் யார் யாருக்கு‎ ‏ இந்த இமெயில் அனுப்பியுள்ளீர்கள் எ‎ன்பதை மறைத்து விடும். மாறாக To பகுதியில் டைப் செய்தால் நீங்கள் டைப் செய்யும் முகவரிகள் அனைத்தும் ஸ்பாமர்களை அடையும்.

8. உங்கள் ‏மி‎ன்னஞ்சல் முகவரிகளை‎ நம்பிக்கையானவர்களிடம்‎ மட் டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. இணைய தளங்கள் மற்றும் நியூஸ் க்ரூப் போன்றவற்றைப் பார்வையிடும் போதும் ‏‏‏‏ இணைய அரட்டையில் ஈடுபடும் போதும் ‏இமெயில் முகவரிகளை வழங்க நேரிடும் போது மி‎ன்னஞ்சல் முகவரிகளில் பய‎ன்படுத்தப்படும் “ @ “ எனும் குறியீட்டுக்குப் பதிலாக AT என டைப் செய்யுங்கள். ‏இந்த “ @ “ குறியீட்டைக் கொண்டே ஸ்பாமர்கள் ‏ பயன்படுத்தும் ப்ரோக்ரம்கள் இது ஒரு மின்னஞ்சல் முகவரியென கண்டறிந்து கொள்ளும்.

10. எப்போதும் ஒரே‏ ‏இமெயில் முகவரியை மட்டும் பய‎ன் படுத்தாமால் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட முகவரிகளை பயன்ப‎டுத்துங்கள். உதாரணமாக அலுவலக தேவைக்கென ஒ‎ரு ‏‏இமெயில் முகவரி, தனிப்பட்ட தேவைக் கென ஒன்று மற்றும்‏,இணைய தளங்களில் வரும் படிவங்களை நிரப்பும் தேவைக்கென வேறொ‎‎‎‎‎ன்றும் என வெவ்வேறாக வைத்துக் கொள்ளுங் கள். ஸ்பாமர்களிடமிருந்து ஓரளவுக்குத் தப்பிக் கொள்ளலாம்.


--
அன்புடன்...
முஹம்மது இஸ்ஹாக்
Ishaq KAM