Showing posts with label விபத்து. Show all posts
Showing posts with label விபத்து. Show all posts

Friday, September 12, 2008

துபாய் ஹோட்டலில் தீடீர் தீ விபத்து


துபாய் ஹோட்டலில் தீடீர் தீ விபத்து


துபாய் அல் மக்தூம் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்களை தீயணைப்புத்துறை அதிகாரிகள் வேறு பகுதிகள் வழியே திருப்பி விட்டனர்.


பத்து ஆம்புலன்ஸ் வாகனங்ளும், பல தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்தில் தீயினை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக ஈடுபட்டன. பெரும்பாலான விருந்தினர்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றினர்.

ஹோட்டலில் உள்ள உணவகத்தில் இருந்து தீ ஏற்பட்டதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். எனினும் தீ விபத்தில் எவரும் பாதிக்கப்பட்ட தகவல் இதுவரை இல்லை.

சமீபத்தில் அட்லாண்டிஸ் எனும் நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட வடு மறையும் முன் தற்பொழுது ஏற்பட்டுள்ள தீ விபத்து தீயணைப்புத்துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

மேலும் படங்களுக்கு

http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=data/theuae/2008/September/theuae_September298.xml§ion=theuae&col=