Tuesday, January 13, 2009

இஸ்லாம் போராளிகள் மத‌மா ? ‍ ப‌. சித‌ம்ப‌ர‌ம் ( ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌ர் )

இஸ்லாம் போராளிகள் மத‌மா ? ‍ ப‌. சித‌ம்ப‌ர‌ம் ( ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌ர் )


கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முத‌லில்
ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன்
நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த‌ மாணவர்களே
(கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள்.சிலகிறிஸ்த‌வர்கள்.அபூர்வமாக
சில முஸ்லிம்கள்.ஆனால்,ஒரு முக்கியமான விஷ‌யம்: இந்து,கிறிஸ்துவர்,இஸ்லாமியர் என்று பொதுவாகத் தெரிந்தாலும் மத‌த்தின் அடிப்படையில் மாணவர்கள் மத்தியில் எந்த‌ வேறுபாடும் கிடையாது. பல நேரங்களில் ஒரு மாணவனின் பெயரைக் கொண்டுதான் அவனுடைய மத‌ம்
தெரிந்த‌து. நடை,உடை,உணவுப் பழக்கவழக்கங்களில் எந்த‌ வேறுபாடும் தெரியவில்லை.
எல்லோரும் காமிக்ஸ் படித்தார்கள். எல்லோரும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள்.

நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த‌ காலத்தில் மத‌ம் ஒரு முக்கிய குறியீடாகக் கருத‌ப்
படவில்லை. ஒவ்வொரு மாணவனும் பைபிள் அல்லது அறநெறி பாடத்தை படிக்க வேண்டும்
என்பது பள்ளியின் விதி. மிகப் பெரும்பான்மையான மாணவர்கள் (அவர்களில் பெரும்பாலோர்
இந்துக்கள்)அவர்களுடைய பெற்றோரின் சம்மத‌த்துடன் பைபிள் பாடத்தையே விரும்பித்
தேர்ந்தெடுத்தார்கள். அநேகமாக எல்லா முஸ்லிம் மாணவர்களும் பைபிள் வகுப்பிலேயே
சேர்ந்தார்கள்.யாரும் யாரையும் கட்டாயமாகவோ அல்லது நைச்சியமாகப் பேசியோ ம‌த‌மாற்றம் செய்ய முற்ப‌டவில்லை.

ஒவ்வொரு வகுப்பிலும் பல பிரிவுகள் இருந்த‌ன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மாணவர்
த‌லைவர்.ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மாணவர் த‌லைவர் என்று மாணவர்களே தேர்ந்
தெடுக்கவேண்டும். ஆறாவது வகுப்பில் (அப்பொழுது முத‌ல் பாரம் என்று அழைத்தார்கள்)
நாங்கள் தேர்ந்தெடுத்த‌ மாணவர் த‌லைவரின் பெயர் ஏ.கே.மூசா. பள்ளியோ கிறிஸ்துவர்கள்
நடத்தும் பள்ளி. பல ஆசிரியர்கள் கிறிஸ்துவர்களே. பெரும்பான்மையான மாணவர்களோ
இந்துக்கள். ஆனால்,எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓர் இஸ்லாமியர்.

அடுத்த‌டுத்த ஆண்டுகளில் ஏழாம்,எட்டாம்,ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளிலும் எங்கள்
வகுப்புத் த‌லைவராக அதே ஏ.கே.மூசா என்ற மாணவரையே தேர்ந்தெடுத்தோம். ஏ.கே.மூசா
எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். ஆனால்,சராசரி மாணவர். சராசரி உயரம். சராசரி கவர்ச்சி. ஆங்கிலம் தெரிந்த‌ போதும் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றக் கூடிய ஆற்றல் கிடையாது.

பதினோராம் வகுப்புக்கு வந்தோம். அதுவே பள்ளியில் இறுதி வகுப்பு. ஆண்டு முடிவில் எஸ்.எஸ் எல்.சி.தேர்வு எழுத‌ வேண்டும்.பதினோராம் வகுப்பின் மாணவர் த‌லைவரே பள்ளியின் மாணவர் த‌லைவர் ஆவார்.பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

அப்பொழுது பள்ளியின் த‌லைமை ஆசிரியர் ஈடும் இணையுமில்லாத‌ திரு.குருவில்லா ஜேக்கப்
அவர்கள். பள்ளி மாணவர் த‌லைவர் உயரமாக,கம்பீரமாக,கவர்ச்சியாக நன்றாகப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவருடைய விருப்பத்திற்கேற்ப பதினோராம் வகுப்பு மற்றும் பள்ளியின் மாணவர் த‌லைவராக நாங்கள் ஒரு கவர்ச்சிகர‌மான மாணவரைத் தேர்ந்து எடுத்தோம். அவருடைய பெயர் ஹாரூன் முஹம்ம‌து.

பள்ளி வாழ்க்கை முடிந்த‌ பிறகு ஏ.கே.மூசாவுடன் தொடர்பு அறுந்து விட்டது. அவர் எங்கே,
எப்படி,என்ன செய்து கொண்டிருந்தார்,செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஹாரூண் முகம்மது ஆஸ்திரேலியா நாட்டில் குடியேறி குடியுரிமையும் பெற்றார். 1998ஆம்
ஆண்டு அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன்.

கான்வென்டில் படிக்கும்போது மல்லிகா என்றொரு மாணவி இருந்தார் பெயர் மல்லிகா
என்றாலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த‌வர். மிக அழகான,மிக புத்திசாலியான
பெண்.வகுப்பில் அந்த‌ப் பெண்ணுடன் தான் முத‌லிடத்திற்குப் போட்டி.

இஸ்லாமியச் சட்டம்,மத‌ம்,வாழ்க்கைமுறை ஆகியவற்றுடன் சட்டக்கல்லுரியில் படிக்கும்
போது தான் அறிமுகம் ஏற்பட்டது. இந்து சட்டங்கள் என்றொரு பாடம் இருந்த‌து. அதைப்
போலவே இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றி பல மாயைத்தோற்றங்கள் இருந்த‌ன.
இந்து சமுதாயத்தின் மத்தியில் அறியாமையே இருந்த‌து.இஸ்லாமிய சட்டங்களை படித்த‌
பிறகு தான் அந்த‌ அறியாமை விலகியது.

இஸ்லாம் ஓர் உயர்ந்த‌ வாழ்க்கை முறை என்பதை யாரும் மறுக்க இயலாது.இந்து திருமணச்
சட்டங்கள்,இந்து வாரிசுரிமைச் சட்டங்கள் ஆகியவற்றிலிருந்து இஸ்லாமியச் சட்டங்கள் வேறு
படுகின்றன என்பது உண்மையே. ஆனால்,இந்த‌ வேறுபாடுகளின் காரணமாக மட்டுமே இந்து
சட்டங்கள் த‌ரம் உயர்ந்த‌வை என்றோ,இஸ்லாமியச் சட்டங்கள் த‌ரம் குறைந்த‌வை என்றோ
முடிவுக்கு வர முடியாது.

இந்து சட்டங்களை இறைவனே அருளினார் என்று வேத‌ங்களும் உபநிஷ‌த்துக்களும் குறிப்பிடு
வதைப்போல இஸ்லாமியச் சட்டங்களை இறைவன் த‌ம்முடைய தூத‌ர் முகம்மது நபி மூலம்
அருளினான் என்று இஸ்லாமியர் நம்புகிறார்கள்.

இஸ்லாமிய வாழ்க்கை முறையிலும் இஸ்லாமியச் சட்டங்களிலும் பல அம்சங்கள் என்னைக்
கவர்ந்துள்ளன.

ம‌னித‌ உரிமைகளைப் பற்றி இஸ்லாமிய பிரகடனம் என்றொரு பிர‌கடனத்தை 1981 ஆம்
ஆண்டில் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மதத்தில் கட்டாயம் கிடையாது என்பது
முக்கியமான கொள்கை.முஸ்லிம் நாடுகளில் வாழ்கின்ற சிறுபான்மை சமயத்தினர் அவர்
களுடைய மத‌ம் வகுத்துள்ள சட்ட விதிகளைப் பின் பற்றி வாழ உரிமை உண்டு என்று
பிரகடனம் அறிவிக்கிறது. ஒருவருடைய ம‌த‌ நம்பிக்கையில் அவரை யாரும் கட்டாயப்
படுத்த‌வோ,கட்டுப்படுத்த‌வோ கூடாது என்பது திருக்குர் ஆனின் அடிப்படைக் கொள்கை.

பெண்களுக்கும் சொத்துரிமை இல்லாத‌ கால‌த்தில் தோன்றியது இஸ்லாம். பெண்கள்
தங்கள் பெயரில் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமையை
இஸ்லாம் அறிவிக்கிறது.

அண்ணல் நபிகள் நாயகம் ஒரு மாமனித‌ர். அவரைக் குறித்து,சண்டையும் சச்சரவும்
நிறைந்த‌ குலம் கோத்திரங்களையும்,நாடோடிகளையும் த‌மது த‌னி முயற்சியால்
இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த‌ பல‌ம் பொருந்திய
சமுகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்த‌தோ என்று வரலாற்று ஆசிரியர்
தாமஸ் கார்லைஸ் வியந்து எழுதினார்.

த‌ம்முடைய‌ ய‌ங் இந்தியா ப‌த்திரிகைக‌ளில் முக‌ம்ம‌து ந‌பியின் உய‌ர் ப‌ண்புக‌ளைக் குறித்து
ம‌காத்மா காந்தி எழுதியதைப் பாருங்க‌ள்.

இஸ்லாத்திற்கு அக்கால‌த்திய‌ வாழ்க்கைய‌மைப்பில் உய‌ர்ந்த‌ ஒர் இட‌த்தைப் பெற்றுத் த‌ந்த‌து
வாள் ப‌ல‌ம‌ல்ல‌ என்று முன் எப்போதையும் விட‌ அதிக‌மாக நான் உண‌ர்ந்தேன். ந‌பிக‌ள் நாய‌க‌த்தின்
மாறாத‌ எளிமை,த‌ம்மைப் பெரிதாக‌க் க‌ருதாம‌ல் சாதார‌ண‌மானவ‌ராக‌ ந‌ட‌ந்து கொள்ளும் உயர் ப‌ண்பு,எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த‌ த‌ன்மை,த‌ம் தோழ‌ர்க‌ள் மீது அவ‌ர்
கொண்டிருந்த‌ ஆழ்ந்த‌ அன்பு,அவ‌ர‌து அஞ்சாமை,இறைவ‌ன் மீதும் த‌ம‌து பிர‌சார‌ப் ப‌ணியிலும்
அவ‌ர் கொண்டிருந்த முழுமையான‌ ந‌ம்பிக்கை ஆகிய‌வை தாம் அவ‌ரது வெற்றிக்குக் காரண‌ங்க‌ள்.
இஸ்லாம் ஒரு போராளிக‌ளின் ம‌த‌ம் என்றொரு தோற்ற‌ம் இருக்கிற‌து.வாள் ப‌ல‌ம் கொண்டே
இஸ்லாம் ப‌ர‌விய‌து என்றும் வாள் ப‌ல‌த்தைக் கொண்டு இஸ்லாமிய‌ர் மற்றவ‌ர்களை அச்சுறுத்து
கிறார்க‌ள் என்றும் ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து.

இஸ்லாமிய இய‌க்க‌ம் ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிற‌கே முன்னேறிய‌து என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில்
கொள்ள‌ வேண்டும். அண்ண‌ல் ந‌பிக‌ள் நாயக‌ம் இறைவ‌னின் தூத‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தை ந‌பித்துவ‌ம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிற‌து.ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் ப‌ணியை இஸ்லாம் அழைப்புப் ப‌ணி என குறிப்பிடுகிற‌து. இந்த‌ அழைப்புப் ப‌ணியை இர‌ண்டு கால‌ க‌ட்ட‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌லாம்.முத‌ல் காலக‌ட்ட‌ம் ம‌க்கா ந‌க‌ரில் ந‌ட‌ந்த‌ ச‌காப்த‌ம்.இது 13 ஆண்டுகள் நீடித்த‌து.இர‌ண்டாவ‌து கால‌ க‌ட்ட‌ம் ம‌த‌னீ ச‌காப்த‌ம்.இது 10 ஆண்டுக‌ள் நீடித்த‌து.

ம‌க்கீ ச‌காப்தத்தில் ந‌பிக‌ள் நாய‌க‌த்தின் மீதும் அவ‌ருடைய‌ அழைப்புப் ப‌ணியின் மீதும்
சொல்லொணாத‌ கொடுமைக‌ளும்,அக்கிர‌ம‌ங்க‌ளும் க‌ட்ட‌விழ்த்து விட‌ப்பட்ட‌ன‌.அன்றைய‌ அதிகார‌
வ‌ர்க்க‌த்தின‌ர் ந‌பிக‌ள் நாய‌க‌த்தை பைத்திய‌க்காரர் என்று ப‌ழித்தார்க‌ள். அவ‌ருடைய‌ பேச்சைக் கேட்க
யாரும் போக‌க் கூடாது என்று த‌டை விதித்தார்க‌ள்.முஸ்லிம்க‌ளைக் க‌ண்ட‌ போது அவ‌ர்க‌ளைத்
திட்டினார்கள்.வ‌சை பாடினார்க‌ள். ஆயினும் இஸ்லாமிய‌ அழைப்பின்பால் ம‌க்க‌ள் க‌வ‌ன‌ம் திரும்பி
ஏராள‌மான‌வ‌ர்கள் திர‌ண்டார்க‌ள். த‌ன்னுடைய‌ இறுதி ஆயுத‌மாக‌ வ‌ன்முறையை அதிகார‌ வ‌ர்க்க‌ம்
ஏவி விட்ட‌து.முஸ்லிம்க‌ள் மீது இழைக்க‌ப்ப‌ட்ட‌ துன்ப‌ங்க‌ள் அவ‌ர்க‌ளால் தாங்க‌ முடியாத‌ அள‌விற்குச் சென்று கொண்டிருந்த‌தைப் பார்த்த‌ பிற‌கு,ம‌க்கா ந‌க‌ரிலிருந்து வெளியேறுவ‌து என்று
ந‌பிக‌ள் நாய‌க‌ம் முடிவெடுத்தார்.ம‌க்கீ ச‌காப்த‌ம் ஒரு பெரும் போராட்ட‌ காலமாக‌ இருந்த‌து.பிற‌கு
தொட‌ங்கிய‌தே ம‌த‌னீ ச‌காப்த‌ம்.

த‌ம்மையும் த‌ம்முடைய‌ ம‌த‌த்தையும் த‌ற்காத்துக் கொள்ள‌வே முஸ்லிம்க‌ள் போராட்ட‌க் குண‌த்தை
வள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டியிருந்த‌து.

அர‌சிய‌ல் ம‌ற்றும் காழ்ப்பு உண‌ர்வுக‌ளின் கார‌ண‌மாக‌வே இஸ்லாத்திற்கு எதிராக‌ அவ‌தூறு பிர‌ச்சார‌ம்
ந‌டந்த‌து என்ப‌தே உண்மை. பேராசிரிய‌ர் பெவான் என்னும் வ‌ர‌லாற்று நூலாசிரிய‌ர்,முக‌ம்ம‌தைப்
பற்றியும் இஸ்லாம் ப‌ற்றியும் 19 ஆம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌வையெல்லாம்
இல‌க்கிய‌ விந்தைக‌ளாகிவிட்ட‌ன என்று குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் ஏக‌த்துவ‌ம்,ம‌றுமை ஆகிய‌ கோட்பாடுக‌ளை வ‌லியுறுத்துகிற‌து. ஒரே இறைவ‌ன் என்ப‌து
மூல‌க்கோட்பாடு.அவ‌னை ஒத்த‌தோ,விஞ்சிய‌தோ ஏதுமில்லை.அவ‌ன் அதிப‌தி. அவ‌னிடம் எந்த‌
குற்ற‌மும்,குறையும் காண‌ முடியாது.அவ‌ன் உட‌ல்க‌ளை உருவாக்கிய‌வ‌ன். ஆன்மாவை
உண்டாக்கிய‌வ‌ன்.அவ‌னே இறுதித் தீர்ப்பு நாளின் அதிப‌தி. இதுவே ஏக‌த்துவ‌ம்.
உங்க‌ளுள் ம‌றைந்திருப்ப‌வையும்,இந்த‌ உல‌கில் உங்க‌ளிட‌மிருந்து ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வையும் மறு
உல‌கில் உங்க‌ள் முன் வெட்ட‌ வெளிச்ச‌மாகிவிடும் என்ப‌து மூல‌க்கோட்பாடு. இதுவே ம‌றுமை.
இந்த‌ அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளில் என்ன‌ குற்ற‌த்தைக் காண‌ முடியும்?

எல்லா ம‌த‌ங்களிலும் அடிப்ப‌டைக் கோட்பாடுக‌ளைச் சிதைப்ப‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்.கால‌ப்
போக்கில் ப‌ல‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளும் ம‌லிந்து விடுகின்ற‌ன‌. ம‌த‌ம் என்ப‌து ஒரு போர் வாளாக‌
மாறிவிடுகிற‌து.

இந்து ச‌ம‌ய‌த்திலும்,கிறிஸ்துவ‌ ச‌ம‌ய‌த்திலும்,யூத‌ ச‌ம‌ய‌த்திலும் தீவிர‌வாதிக‌ள் இருப்ப‌தைப்போல்
இஸ்லாத்திலும் தீவிர‌வாதிகள் இருக்கிறார்க‌ள். இந்த‌ தீவிர‌வாதிக‌ளினால்தான் ம‌த‌ங்க‌ளிடையே
ப‌கை வ‌ள‌ர்கிற‌து.இந்த‌த் தீவிர‌வாதிக‌ளின் சொல்லையும் செய‌லையும் கொண்டு ஒரு ம‌த‌த்தை
ம‌திப்பிட‌க்கூடாது.

திருக்குர் ஆனைப் ப‌டிப்ப‌த‌ற்கும்,ந‌பிகள் நாய‌க‌த்தின் வாழ்க்கை வ‌ர‌லாற்றைப் படிப்ப‌த‌ற்கும்
வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்ள‌ வேண்டும்.திருக்குர் ஆன் ஓத‌ப்ப‌ட்ட‌ கால‌ம் கி.பி.610.
ஓர் எழுத்துக் கூட‌ மாறாம‌ல் எந்த‌ இடைச் செருக‌ல்க‌ளுக்கும் உள்ளாகாம‌ல் ஒரு நூல் உள்ள‌து
என்றால் அது திருக்குர் ஆன் ம‌ட்டுமே என்று ச‌ர் வில்லிய‌ம் மூர் குறிப்பிடுகிறார்.

திருக்குர் ஆனை ஏற்று ந‌பிக‌ள் நாய‌க‌த்தை இறைத்தூத‌ராக‌ப் போற்றும் இஸ்லாமிய‌ ச‌முதாய‌த்தின‌ர்
மற்ற‌ ம‌த‌ங்க‌ளைச் சார்ந்த‌வ‌ர்க‌ளின் சகோத‌ர‌ர்க‌ள் என்ற உண‌ர்வு ப‌ர‌வ‌ வேண்டும் என்று விழைகிறேன்.


( குட‌வாச‌ல் புதிய‌ ப‌ள்ளிவாச‌ல் திற‌ப்பு விழாவினையொட்டி வெளியிட‌ப்ப‌ட்ட‌ அருள் வ‌ச‌ந்த‌ம் எனும் ம‌ல‌ரிலிருந்து )

க‌ட‌ந்த‌ வார‌ம் துபாய் வ‌ருகை புரிந்த‌ சிங்க‌ப்பூர் இலியாஸ் இந்நூலினை வ‌ழ‌ங்கினார்.

இந்நூலின் சிற‌ப்பு குறித்து ந‌ர்கிஸ் மாத‌ இத‌ழின் கேள்வி ப‌திலில் வெளியாகியுள்ள‌து.

ஏழாம் ஆண்டில் இனிய‌ திசைக‌ள் !




ஏழாம் ஆண்டில் இனிய‌ திசைக‌ள் !

இறைய‌ருளால் உங்க‌ள் இனிய‌ திசைக‌ள் இத‌ழ் ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற‌து. இஸ்லாமிய‌த் த‌மிழ் இத‌ழ்க‌ளிலேயே த‌னித்துவ‌ம் மிக்க‌ இத‌ழாக‌ ச‌முதாய‌ மேம்பாடு ஒன்றினையே குறிக்கோளாக‌க் கொண்ட‌ இத‌ழாக‌ இனிய‌ திசைக‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்பி வ‌ருவ‌தை அனைவ‌ரும் உண‌ர்வார்க‌ள்.

ச‌முதாய‌ச் சேவையில் முற்றிலும் த‌ன்னை அர்ப்ப‌ணித்துக் கொண்ட‌ இத‌ழாக‌ வெளிவ‌ந்து கொண்டிருக்கும் இனிய‌ திசைக‌ள் அறிவுஜீவிக‌ளுக்கான‌த‌ல்ல‌, பாம‌ர‌ முஸ்லிம்க‌ளுக்கான‌ தென்ப‌தில் பெருமித‌மும் பேருவ‌கையும் ப‌ர‌வி நிற்கின்ற‌ன‌.

ச‌முதாய‌த்திற்கு அத்தியாவ‌சிய‌ உட‌னடித் தேவைக‌ளாக‌ இருக்கும் க‌ல்வி, வேலைவாய்ப்புச் செய்திக‌ளோடு அர‌சிய‌ல், ஆன்மீக‌ம், இல‌க்கிய‌ம் உள்ளிட்ட‌வ‌ற்றையும் எடுத்துக்கூறி வ‌ழிகாட்டி வ‌ரும் இனிய‌ திசைக‌ள் க‌ட‌ந்த‌ ஆறாண்டுக‌ளாக‌ப் பெரும் ந‌ஷ்ட‌த்தையே அடைந்து வ‌ந்துள்ள‌து. அந்த‌ ந‌ஷ்ட‌த்தைக் கொஞ்ச‌ம் குறைத்துக் கொள்ளும் வ‌கையில் இந்த‌ இத‌ழ் மூல‌ம் த‌னிப்பிர‌தி ரூ.10 ஆண்டுச் ச‌ந்தா ரூ.120 மூன்றாண்டுச் ச‌ந்தா ரூ.350 ஐந்தாண்டுச் ச‌ந்தா ரூ.560 என்ற‌ வ‌கையில் விலையேற்ற‌ம் கொள்கிற‌து.

இனிய‌ திசைக‌ள் இத‌ழை ஆத‌ரித்து வ‌ரும் புர‌வ‌ல‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌ர்க‌ள், சந்தாதார‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து ஆதிக்க‌த்தையும் ஊக்க‌த்தையும் தொட‌ர்ந்து பெருக்கித் தந்துத‌வ‌ ந‌ன்றியுண‌ர்வோடு விழைகிறோம். இனிய‌ திசைக‌ள் எட்டுத் திசையெங்கும் ப‌ர‌விட‌, த‌மிழ‌க‌த்துப் ப‌ள்ளிவாச‌ல்க‌ள், க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள், நூல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் உங்க‌ள் நேச‌த்திற்குரிய‌ ந‌ண்ப‌ர்க‌ள், அன்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் சென்றுசேர‌ ந‌ல்ம‌ன‌ம் கொண்ட‌ ச‌முதாய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் ம‌ற்றும் புர‌வ‌ல‌ர்க‌ள் தாங்க‌ளே ச‌ந்தா செலுத்திச் ச‌முதாய‌ச் சேவையில் த‌ங்க‌ளையும் இணைத்துக் கொள்ள‌ப் பேர‌ன்போடு அழைக்கின்றோம். 5,10,15,20 என்ற‌ க‌ண‌க்கில் ஒருவ‌ரே ச‌ந்தா செலுத்தி, விரும்பும் நிறுவ‌ன‌ங்க‌ள், ம‌ன்ற‌ங்க‌ள், நூல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள் முக‌வ‌ரிக‌ளைத் தெரிய‌ப்ப‌டுத்தினால் இனிய‌ திசைக‌ள் ஆங்காங்கே ப‌ர‌வும். எம‌து இத‌ழிய‌ல் சேவையில் இனிதே த‌ங்க‌ள‌து ப‌ங்க‌ளிப்பையும் தந்துத‌வுக‌.

புர‌வ‌ல‌ர்க‌ள், ஆர்வ‌ல‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌க‌ள், வாச‌க‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ஏழாமாண்டின் இனிய‌ தொட‌க்க‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள் ந‌ன்றியொடு.

ஆசிரிய‌ர் குழு

இனிய‌ திசைக‌ள் ஜ‌ன‌வ‌ரி 2009 மாத‌ இத‌ழ் த‌லைய‌ங்க‌த்திலிருந்து

இனிய‌ திசைக‌ள்
27 ந‌ர‌சிம்ம‌புர‌ம்
ம‌யிலாப்பூர்
சென்னை 600 004
தொலைபேசி : 044 24936115

Cancer Update from John Hopkins

AFTER YEARS OF TELLING PEOPLE CHEMOTHERAPY IS THE ONLY WAY TO TRY ('TRY' IS THE KEY WORD) AND ELIMINATE CANCER, JOHN HOPKINS IS FINALLY STARTING TO TELL YOU THERE IS AN ALTERNATIVE WAY





Cancer Update from John Hopkins

1. Every person has cancer cells in the body. These cancer cells do not show up in the standard tests until they have multiplied to a few billion. When doctors tell cancer patients that there are no more cancer cells in their bodies after treatment, it just means the tests are unable to detect the cancer cells because they have not reached the detectable size.

2. Cancer cells occur between 6 to more than 10 times in a person's lifetime

3. When the person's immune system is strong the cancer cells will be destroyed and prevented from multiplying and forming tumors.

4. When a person has cancer it indicates the person has multiple nutritional deficiencies. These could be due to genetic, environmental, food and lifestyle factors.

5. To overcome the multiple nutritional deficiencies, changing diet and including supplements will strengthen the immune system.

6. Chemotherapy involves poisoning the rapidly-growing cancer cells and also destroys rapidly-growing healthy cells in the bone marrow, gastro-intestinal tract etc, and can cause organ damage, like liver, kidneys, heart, lungs etc.

7. Radiation while destroying cancer cells also burns, scars and damages healthy cells, tissues and organs.

8. Initial treatment with chemotherapy and radiation will often reduce tumor size. However prolonged use of chemotherapy and radiation do not result in more tumor destruction.

9 When the body has too much toxic burden from chemotherapy and radiation the immune system is either compromised or destroyed, hence the person can succumb to various kinds of infections and complications.

10. Chemotherapy and radiation can cause cancer cells to mutate and become resistant and difficult to destroy. Surgery can also cause cancer cells to spread to other sites.

11. An effective way to battle cancer is to starve the cancer cells by not feeding it with the foods it needs to multiply.

CANCER CELLS FEED ON:

a. Sugar is a cancer-feeder. By cutting off sugar it cuts off one important food supply to the cancer cells. Sugar substitutes like NutraSweet, Equal,Spoonful, etc are made with Aspartame and it is harmful. A better natural substitute would be Manuka honey or molasses but only in very small amounts. Table salt has a chemical added to make it white in color. Better alternative is Bragg's aminos or sea salt.

b. Milk causes the body to produce mucus, especially in the gastro-intestinal tract. Cancer feeds on mucus. By cutting off milk and substituting with unsweetened soya milk cancer cells are being starved.

c. Cancer cells thrive in an acid environment. A meat-based diet is acidic and it is best to eat fish, and a little chicken rather than beef or pork. Meat also contains livestock antibiotics, growth hormones and parasites, which are all harmful, especially to people with cancer.

d. A diet made of 80% fresh vegetables and juice, whole grains,seeds, nuts and a little fruits help put the body into an alkaline environment. About 20% can be from cooked food including beans. Fresh vegetable juices provide live enzymes that are easily absorbed and reach down to cellular levels within 15 minutes to nourish and enhance growth of healthy cells. To obtain live enzymes for building healthy cells try and Dr ink fresh vegetable juice (most vegetables including bean sprouts)and eat some raw vege tables 2 or 3 times a day. Enzymes are destroye d at t emperatures of 104 degrees F (40 degre es C).


e. Avoid coffee, tea, and chocolate, which have high caffeine.Green tea is a better alternative and has cancer-fighting properties. Water-best to drink purified water, or filtered, to avoid known toxins and heavy metals in tap water. Distilled water is acidic, avoid it.

12. Meat protein is difficult to digest and requires a lot of digestive enzymes. Undigested meat remaining in the intestines become putrified and leads to more toxic buildup.

13. Cancer cell walls have a tough protein covering. By refraining from or eating less meat it frees more enzymes to attack the protein walls of cancer cells and allows the body's killer cells to destroy the cancer cells.

14. Some supplements build up the immune system (IP6, Flor-ssence,Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc.) to enable the body's own killer cells to destroy cancer cells. Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells.

15. Cancer is a disease of the mind, body, and spirit. A proactive and positive spirit will help the cancer warrior be a survivor. Anger, unforgiveness and bitterness put the body into a stressful and acidic environment. Learn to have a loving and forgiving spirit. Learn to relax and enjoy life.

16. Cancer cells cannot thrive in an oxygenated environment. Exercising daily, and deep breathing help to get more oxygen down to the cellular level. Oxygen therapy is another means employed to destroy cancer cells.

(PLEASE FORWARD IT TO PEOPLE YOU CARE ABOUT)

CANCER UPDATE FROM JOHN HOPKINS HOSPITAL , U S - PLEASE READ

1. No plastic containers in micro.

2. No water bottles in freezer.

3. No plastic wrap in microwave.

Johns Hopkins has recently sent this out in its newsletters. This information is being circulated at Walter Reed Army Medical Center as well.

Dioxin chemicals causes cancer, especially breast cancer. Dioxins are highly poisonous to the cells of our bodies.Don't freeze your plastic bottles with water in them as this releases dioxins from the plastic.

Recently, Dr. Edward Fujimoto, Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this health hazard. He talked about dioxins and how bad they are for us.. He said that we should not be heating our food in the microwave using plastic containers.

This especially applies to foods that contain fat. He said that the combination of fat, high heat, and plastics releases dioxin into the food and ultimately into the cells of the body. Instead, he recommends using glass, such as Corning Ware, Pyrex or ceramic containers for heating food. You get the same results, only without the dioxin. So such things as TV dinners, instant ramen and soups, etc., should be removed from the container and heated in something else.

Paper isn't bad but you don't know what is in the paper. It's just safer to use tempered glass, Corning Ware, etc. He reminded us that a while ago some of the fast food restaurants moved away from the foam containers to paper. The dioxin problem is one of the reasons.

Also, he pointed out that plastic wrap, such as Saran, is just as dangerous when placed over foods to be cooked in the microwave. As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap and drip into the food. Cover food with a paper towel instead.

This is an article that should be sent to anyone important in your life.

Good News for families residing in HARA, Riyadh-Saudi Arabia(Brothers Pass on to others)

Good News for families residing in HARA, Riyadh-Saudi Arabia(Brothers Pass on to others)

BISM ALLAH AL RAHMAN AL RAHEEM,

ASSALAM ALAIKUM TO ALL

Good News for urdu speaking families residing in HARA and adjoining areas.
A short term ( weekend classes) one month Islamic Tarbiyati Course
specifically for Ladies is being conducted in HARA.

The course is completely free (no fees).
Course start date : Thursday, 15th January 2009
Course will be conducted during weekend i.e only on Thursday and Friday.
Timings : After Asr prayer till Maghrib Azaan.

Refreshments (snacks) will be given after each session.

Certificate will be given after the completion of the course.

Valuable Prizes for those who pass with good marks.

Prize distribution on 12-2-2009.
Venue: Dar Al-Nisae building

Beside Masjid Al Kulia

Location : Take right turn from Makkah Polyclinic lane (after Saz
Supermarket)

( Opposite lane to Burjman Supermarket ( Lahori Khabay
Restaurant)

For futher details / information, please contact

"Islamic Propagation Office in Rabwah".

P.O.Box 29465 Riyadh 11457

Phone : 4454900 – 4916065

Mobile : 0508579371