Sunday, September 16, 2012

தினமணி - ஆஸ்திரேலியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழி!


தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி என்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்கிறோம். ஆனால், தமிழ் எப்போது ஒரு மொழியாக உருவாகியிருக்கும் என்பதற்கு போதிய சான்றுகள் நம்மிடம் இல்லை. ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வக்குடிகளின் மொழிகளை ஆய்வு செய்வதன் மூலம் இதற்கு விடை காண இயலும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் 200 மொழிகளுக்கு மேல் பேசி வந்திருக்கின்றனர். இவற்றுள் தற்போது இருபதிற்கும் குறைவான வட்டார மொழிகள்தான் பயன்பாட்டில் உள்ளன. இவற்றிற்குத் தனி வரிவடிவம் கிடையாது. ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 50,000. இவர்களில் 30,000 பேர் மட்டுமே தங்கள் தாய்மொழியை ஓரளவு பேசுகின்றனர். இவர்கள் பேசும் மொழிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 150. இம்மொழிகளில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. வெவ்வேறு 15 குடும்பங்களின் வழித் தோன்றல்கள் இம்மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு மொழியையும் 5000 பேருக்கு மேல் பயன்படுத்துவோர் இல்லை. பத்து மொழிகளைப் பேசுவோர் மொத்த எண்ணிக்கை 1,000. "ஆராண்டா" என்னும் மொழியை ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) என்னும் மத்திய ஆஸ்திரேலியப் பகுதியில் இருக்கும் நகரைச் சுற்றியுள்ளவர்கள் பேசுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பேசப்படும் முக்கியமான மொழி "பிதாஞ்ச ஜாத்தா" இன்னொரு மொழி "வால் ம ஜாரி". முன்பு ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா, நியூகினி, இந்தோனேசியா ஆகியவற்றின் நிலப்பகுதி இந்தியாவோடு நெருங்கி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவை அடைந்திருக்கின்றனர். இடையிடையே நீர்ப்பகுதிகள் இருந்தாலும் அவற்றின் தூரம் குறுகிய அளவிலேயே இருந்தது என்று நிலநூல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றவர்கள் மீனவர்களாகவும் கடற்கரைப் பகுதிகளில் உணவைத் தேடிச் சென்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு மிக விரைவாகச் சென்றிருக்க முடியாது என்கிறார் மரபணு விஞ்ஞானி ஸ்பன்சர் வெல்ஸ். கிரஹம் வால்ஷ் என்பவர் வட ஆஸ்திரேலியாவிலுள்ள கிம்பர்லி என்னும் இடத்தில், பாறையில் தீட்டப்பட்ட பழைய சித்திரம் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார். 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் அதில் 29 பேர் படகு ஒன்றில் இருப்பதாக வரையப்பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ்:- தென் இந்தியாவில் வசிக்கும் பிறமலைக் கள்ளர் என்னும் பூர்வக்குடிகளின் இரத்தத்தில் உள்ள மரபணுவும், ஆஸ்திரேலியக் குடிகளின் மரபணுவும் (M130) ஒன்றுபோல் இருக்கின்றன என்று கூறினார். ஸ்பென்சர் கூற்றுப்படி ஆப்பிரிக்காவிலிருந்து 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென் இந்தியா வழியாக ஒரு பகுதி மக்கள் தென் கிழக்கு ஆசியா, நியூகினி ஆகியவற்றின் வழியாக ஆஸ்திரேலியா சென்றடைந்தனர் என்று தெரிகிறது. கடைசி உறைபனி (Last Ice Age) காலத்தில் இந்தக் குடியேற்றம் நடந்தது. அதன்பிறகு கடல் நீர்மட்டம் உயர்ந்தபோது இந்தியத் துணைக்கண்டம் தென் கிழக்காசியாவில் இருந்து துண்டித்துப் போகும் நிலை ஏற்பட்டது. குமரிக் கண்டம்: தமிழகத்தின் தென் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது என்றும், அது கடலில் மூழ்கிப்போனது என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி''. என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறியுள்ளார். "பஃறுளியாறு" - கங்கை போன்று பெரிய ஆறு என்றும், குமரி மலை இமயமலைக்கடுத்த பெரு மலை என்றும் ஊகிக்கலாம். இடைச்சங்க காலத்தில், பாண்டிய நாட்டுப் பகுதி மூழ்கியதன்றி, வேறு ஒரு மாறுதலும் நேர்ந்ததில்லை. பஃறுளி மூழ்கிய பின் தமிழகத்தில் பெரிய ஆறாக இருந்தது குமரியாறே. "தெனா அதுருகெழு குமரி'' (புறம் - 67) கடைச்சங்க காலத்திற்குப் பின் குமரியாறும் மூழ்கிற்று. பஃறுளியும் குமரியும் மூழ்கிய பின்னரே, "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவ துஞ்சோழ மண்டலமே''. என்று கம்பர் பாடுமாறு காவிரி தமிழகத்தில் சிறந்த, சோழ நாடு, புனல் நாடு எனப்பட்டது. (பழந்தமிழராட்சி ஞா.தேவநேயப் பாவாணர்). தமிழ் இலக்கியக் குறிப்புக்களைக் கொண்டு பார்க்கும்போது குமரிக் கண்டம் நீரில் மூழ்கிப் போவதற்கு முன்பு, ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் இக்கண்டம் வழியாகச் சென்றுள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஸ்பென்சர் வெல்ஸின் மரபணு ஆய்வு மெய்ப்பிக்கிறது. பேசியது என்ன மொழி? தமிழகம் வழியாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் சென்றனர் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 50,000 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் என்ன மாதிரியான மொழி பேசியிருக்கக் கூடும் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. தமிழகம் மூலமாகச் சென்றதால் அவர்கள் பேசும் மொழிகளில் ஏதேனும் தமிழ்ச் சார்ந்த சொற்கள் இருக்க வேண்டும் என்று என் உள்ளுணர்வு கூறியது. அண்மையில் நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரில் இருக்கும் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகளைப் பற்றிய சிறிய ஆய்வினை மேற்கொண்டேன். என்னுடைய யூகம் சரியாக இருந்தது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பேச்சு வழக்கில் இருக்கும் அவர்களின் மொழிகளில் சில சொற்கள், இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிச் சொற்களாகவே இருக்கின்றன. * முட்டி - muti : கை, கால் முட்டிகளை முட்டி என்றே ஆஸ்திரேலியப் பூர்வக் குடிகள் கூறுகின்றனர். * பிறை - pira : இளம் திங்களைப் பிறை என்கிறோம். அவர்கள் சந்திரனை இப்படிக் கூறுகின்றனர். * வல்லூறு - waluwuru: கழுகுக்கு வல்லூறு என்றும் பெயர் உண்டு. ஒருவகைக் கழுகை அவர்கள் இப்படி அழைக்கின்றனர். * காகம் - kaanka: காகத்தை "கான்கா" என்கின்றனர். * புற்று - putu: புற்று என்பதை நாம் புத்து என்று பேச்சு தமிழில் வழங்குகின்றோம். அவர்களும் (எறும்பு) புற்றை = புத்து என்றே கூறுகின்றனர். * கிளி - killy : கிளியை அவர்கள் "கீளீ" என்கின்றனர். * குட்டன் - kuta: தமிழில் குட்டம் என்றால் மகள். அவர்கள் அண்ணனை குட்டா என்றழைக்கின்றனர். * வால் - walu, waly: வால்,வாலிது ஆகிய சொற்களுக்குத் தமிழில் வெண்மை, தூய்மை ஆகிய பொருள்கள் உண்டு. கடவுளை "வாலறிவன்" (வால் அறிவன்) என்கிறார் வள்ளுவர். வாலறிவன் என்றால் "தூய அறிவுடையவன்" என்று பொருள். ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் வெள்ளை நிறத்தை wala, waly என்றழைக்கின்றனர். அவர்கள் வெள்ளைக்காரரை walypara என்றும் வெள்ளைக்காரியை walypala என்றும் அழைக்கின்றனர். * இலகரி - Ilakari: நீண்ட அகன்ற பொந்திரைக்குத் தமிழில் இலகரி என்று பெயர். அவர்கள் நீண்ட வான்வெளியை இவ்வாறு அழைக்கின்றனர். * மங்குல் - munga: பகல் பொழுது சிறிது சிறிதாக மங்கிக்கொண்டு வந்து, இறுதியில் இருட்டாகிறது. இத்தகைய இருட்டுதான் இரவு. ஆஸ்திரேலியப் பழங்குடியினர் இரவுப் பொழுதை இவ்வாறு கூறுகின்றனர். "மங்குல்" என்னும் சொல்லுக்குத் தமிழில் இருள் என்னும் பொருள் உண்டு. இன்னும் சில சொற்கள் சிதைந்த நிலையில் வழங்கிவருகின்றன. எ.கா:- இல்லம் - yiwalu; பறத்தல் - parkani மேற்குறிப்பிடும் சொற்கள் pitgantjatjara என்னும் வட்டார மொழியில் காணப்படுகின்றன. இந்த மொழி வட ஆஸ்திரேலியாவிலும் தென் ஆஸ்திரேலியாவிலும் பேசப்படுகிறது. 50,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை இன்னும் பயன்படுத்துகின்றனர் என்பதை அறியும்போது வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இவர்கள் அக்காலத்தில் வழக்கில் இருந்த தமிழ் மொழியைத் தங்களோடு கொண்டு சென்றுள்ளனர். பயன்படுத்தியவை தனித்தமிழ்ச் சொற்கள். வடமொழிக் கலப்பு இல்லாதவை. இறுதியாக:- ஆஸ்திரேலியப் பூர்வக்குடிகள் பேசும் மொழியில் பயன்பாடு காணும் தமிழ்ச் சொற்கள் மூலம், தமிழ்மொழி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான மொழி என்பது உறுதியாகத் தெரிகிறது. க.கந்தசாமி "மலேசிய அறிமுக மலர்" மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம். நன்றி:- தினமணி

நாடுகளும் அதன் தலைநகரங்களும்


நாடுகளும் அதன் தலைநகரங்களும் 1.அங்கோலா — லுவாண்டா. (Luvanda) 2.அசர்பைஜான் — பாகூ. 3.அமெரிக்கா — வாஷிங்டன் டி.சி 4.பியூர்டோரிகோ — சான்ஜிவான் 5.குவாம் — அகானா 6.வடக்கு மரியானாத் தீவுகள் — சாய்பான். 7.சமோவா — பாகோ 8.வெர்ஜின் தீவுகள் — சார்லோட்டா 9.அயர்லாந்து — டப்ளின். (Dublin) 10.அர்மீனியா — ஏரவன். (Yereven) 11.அர்ஜென்டீனா — போனஸ் அயர்ஸ். (Buenos aires) 12.அல்பேனியா — டிரானா. (Tirana) 13.அல்ஜீரியா — அல்ஜீயர்ஸ். (Algiers) 14.அன்டோரா — அண்டோரா லா வெல்லா. (Andorra La velle) 15.ஆப்கானிஸ்தான் — காபூல். (Kabul) 16.ஆண்டிகுவா மற்றும் பார்புடா — செயின்ட் ஜோன்ஸ். (saint Johns) 17.ஆஸ்திரியா — வியன்னா. (Vienne) 18.ஆஸ்திரேலியா — கான்பெர்ரா. (Canberra) 19.இத்தாலி — ரோம். (Rome) 20.இந்தியா — புதுடில்லி. (New Delhi) 21.இந்தோனேசியா — ஜகார்த்தா. (Jakartha) 22.இராக் — பக்தாத். (Baghdad) 23இரான் — டெஹ்ரான். (Teheran) 24.இலங்கை — கொழும்பு. (Colombo) 25.தமிழீழம் — திருகோணமலை. (Tringo) 26.இஸ்ரேல் — ஜெருசலேம். (Jerusalem) 27.ஈக்வாடார் — க்யுடோ. (Quito) 28.ஈக்வடோரியல் கினியா — மலபோ. (Malabo) 29.உக்ரைன் — கீவ். (Kive) 30.உகண்டா — கம்பாலா. (Kampala) 31.உருகுவே — மோண்டேவிடியோ. (Montevodeo) 32.உஸ்பெகிஸ்தான் — தாஷ்கண்ட். (Tashkent) 33.எகிப்து — கெய்ரோ. (Cairo) 34.எத்தியோப்பியா — அடிஸ் அபாபா. (Addis Ababa) 35.எரித்ரியா — அஸ்மாரா. (Asmara) 36.எல்சால்வடார் — சன்சால்வடார். (San Salvador) 37.எஸ்தோனியா — டால்லின். (Tallin) 38.ஐக்கிய அரபுக் குடியரசுகள் — அபுதாபி. (Abudhabi) 39.ஐவரி கோஸ்ட் — யமெளஸ்செளக்ரோ. (Yamoussoukro) 40.ஐஸ்லாந்து — ரெய்க்ஜாவிக். (Reykjqvik) 41.ஓமன் — மஸ்கற். (muscut) 42.கத்தார் — தோஹா. (Doha) 43.கம்போடியா — போனெம்பென்க். (Phnom Penh) 44.கயானா — ஜார்ஜ் ரவுன். (geroge Town) 45.கனடா — ஒட்டாவா. (Ottawa) 46.கஸகஸ்தான் — அல்மாதி. (Almathy) 47.காங்கோ — பிரசஸ்சஸாவில்லே. (Brazzaville) 48.காங்கோ (முன்னாள் ஜயர்) — கின்ஷாஸா. (Kinshasa) 49.காபோன் — லிப்ரவில்லே. (Libreville) 50.காமரூன் –யாவூண்டே. (Yaounde) 51.கமரோஸ் — மொரோனி. (Moroni) 52.காம்பியா — பன்ஜீல் . (Banjul) 53.கானா — அக்ரா. (Accra) 54.கியூபா — ஹவானா. (Havana) 55.கிர்கிஸ்தான் — பிஸ்ஹேக். (Biskek) 56.கிரிபாடி — தராவா. (Tarawa) 57.கிரீஸ் — ஏதென்ஸ். (Athens) 58.கிரெனடா — செயின்ட் ஜார்ஜஸ். (Saint Geroges) 59.கினியா — கோனக்ரி. (Conakry) 60.கினியா_பிஸ்ஸெல் — பிஸ்ஸெல். (Bissau) 61.குரோசியா — சியாக்ரெப். (Zagreb) 62.குவைத் — குவைத். (Kuwait) 63.கென்யா — நைரோபி. (Nairobi) 64.கேப்வெர்ட் — பிரய்யா. (Praia) 65.வடகொரியா — பியோங்யாங். (Pyongyang) 66.தென்கொரியா — சியோல். (Seoul) 67.கொலம்பியா — பொகோடா. ( Bogota) 68.கோஸ்டாரிகா — சான் ஜோஸ். (San Jose) 69.கெளதமாலா — கெளதமாலா நகர். (Gautemala City) 70.மேற்கு சமோவா — அபியா. (Apia) 71.சஹ்ராவி அரபுக் குடியரசு — எல் _ அலயுன். (El_ Alayun) 72.சாத்ட் — இன்ட்ஜாமெனா. (N`Djamena) 73.சாம்பியா — லுசாகா.( lusaka) 74.சாலமன் தீவுகள் — ஹோனியரா. (Honiara) 75.சாடோம் மற்றும் பிரின்சிப் — சாடோம். (Sao Tome) 76.சன்மரினோ — சன்மரினோ. (San Marino) 77.சிங்கப்பூர் — சிங்கப்பூர். (Singapore) 78.ஜிம்பாவ்வே — ஹராரே. (Harera) 79.சிரியா — டமாஸ்கல். (Damascus) 80.சியர்ரா லியோன் — ப்ரீரவுன். (Free Town). 81.சிலி — சாண்டியாகோ. (Santiago) 82.சீனா — பெய்ஜிங். (Beijing) 83.சுவாசிலாந்து — பாபேன். (Mbabne) 84.சுவிட்சர்லாந்து — பெர்ன். (bern) 85.சுவீடன் — ஸ்டாக்ஹோம். (Stockhalm) 86.சுரினாம் — பரமரிபோ. (Paramaribo) 87.சூடான் — கார்டூம். (Khartoum) 88.செக் குடியரசு — பராகுவே. (Prague) 89.செனகல் — .தாகர். (dakar) 90.செயின்ட்கிட்ஸ் — நெவிஸ்_ பெஸ்ஸடர். (Besseterre) 91. செயின்ட் லூசியா — காஸ்ட்ரீஸ். (Castries) 92.செயின்ட்வின்சென்ட் — கிங்ஸ்டவுன். (Kings Town) 93.சேஷெல்ஸ் — விக்டோரியா. (Victoriya) 94.சைப்ரஸ் — நிகோசியா. (Nicosia) 95.சோமாலியா — மொகடிஷூ. (Mogadishu) 96.செளதி அரேபியா — ரியாத். (Riyadh) 97.டிரினிடாப் மற்றும் டொபாகோ — போர்ட் ஆஃப் ஸ்பெயின். (Pot os Spain) 98.டென்மார்க் — கோபன்ஹேகன். (Copenhagen) 99.டொமினிகன் குடியரசு — சான்டோ டொமின்கோ. (Santo Domingo) 100.டொமினிகா — ரோஸியு. (Roseu) 101.டோகோ — லோம் (Lome) 102.டோங்கா — நுகு அலோஃபா (Nuku Alofa) 103.தாய்லாந்து — பாங்காக் (Bangkok) 104.தான்சானியா — டூடுமா (Dodoma) 105.தஜிகிஸ்தான் — துஷான்பே (Dushanbe) 106.துர்க்மேனிஸ்தான் — அஷ்காபாத் (Ashkhabad) 107.துருக்கி — அங்காரா (Ankara) 108.துனிசியா — துனிஸ் (Tunis) 109.துவலு — புனாஃபுதி (Funa Futi) 110.தாய்வான் — தைபே (Taipei) 111.தென் ஆப்பிரிக்கா — கேப்ரவுன் (cape Town) 112.நமீபியா — வின்ட்ஹோக் (Windhoke) 113.நோர்வே — ஒஸ்லோ (Oslo) 114.நிகரகுவா — மனாகுவா (managua) 115.நியூசிலாந்து — வெல்லிங்டன் (Wellington) 116.நெதர்லாந்து — ஆம்ஸ்டர்டாம் (Amsterdam) 117.நேபாளம் — காட்மாண்டு (Kathmandu) 118.நைஜர் — நியாமி (Niyamey) 119.நைஜீரியா — அபுஜா (Abuja) 120.நெளரு — யாரென் (Yaren) 121.பங்களாதேஷ் — டாக்கா (Dhaka) 123.பராகுவே — அகன்சியான் (Aguncian) 124.பல்கேரியா — சோஃபியா (Sofia) 125.பலாவ் — கோரோர் (koror) 126.பனாமா — பனாமா நகர் (Panama City) 127.பஹ்ரைன் — மனாமா (Manama) 128.பஹாமாஸ் — நஸ்ஸாவ் (Nassau) 129.பாகிஸ்தான் — இஸ்லாமாபாத் (Islamabad) 130.பாப்புவா நியூகினியா — போர்ட் மோர்ஸ்பி (Port Moreshby) 131.பார்படோஸ் — பிரிட்ஜ் ரவுன் (Bridge Town) 132.பாலஸ்தீனம் — காஸா (Gaza) 133.ஃபிரான்ஸ் — பாரிஸ் (Paris) 134.பிரிட்டன் — லண்டன் (London) 135.வடக்கு அயர்லாந்து — பெல்ஃபாஸ்ட் (Belfast) 136.ஸ்காட்லாந்து — எடின்பர்க் (Edinburg) 137.ஐஸ் ஆஃப் மேன் — டக்ளஸ் 138.அங்குய்லா — திவாலி 139.பெர்முடா — ஹாமில்டன் 140.மான்ட்செரட் — பிளைமவுத் 141.பிரேசில் — பிரேசிலியா (Brasillia) 142.ஃபிலிப்பைன்ஸ் — மணிலா (manila) 143.ஃபின்லாந்து — ஹெல்சிங்கி (helsinki) 144.ஃபிஜி — சுவா (Suwa) 145.புருண்டி — புஜீம்பரா (Bujumbura) 146.புருனை — பந்தர் செரி பெகாவன் (Bandar seri Begavan) 147.பிர்கினாஃபாஸோ –அவ்கதெளகெள (Ouagadougou) 148.பூட்டான் — திம்பு (Thimpu) 149.பெரு — லிமா (Lima) 150.பெல்ஜியம் — பிரல்ஸல்ஸ் (Brussels] 151.பெலராஸ் — மின்ஸ்க் (Minsk) 152.பெலிஸ் — பெல்மோபான் (Belmopan) 153.பெனின் — போர்டோ (Porto _ Nova) 154.பொலிவியா — லாபாஸ் (Lapaz) 155.போட்ஸ்வானா — காபோரோன் (Gaborne) 156.போர்த்துக்கல் — லிஸ்பன் (Lisbon) 157.போலந்து — வார்ஸா (Warsaw) 158.போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா — சரோஜிவோ (Sarajevo) 159.மங்கோலியா — உலன்பதார் (Ulan Bator) 160.மடகாஸ்கர் — அன்டானானாரிவோ (Antananarivo) 161.மத்திய ஆப்பிரிக்க குடியரசு — பான்குய் (Bangui) 161.மலாவி — லிலாங்வே (Lilongwe) 162.மலேசியா — கோலாலம்பூர் (Kula Lumpore) 163.மார்ஷல் தீவுகள் — மஜீரோ (Majuro) 164.மாரிடானியா — நவாக்சோட் (Nouak Chott) 165.மால்டா — வலேட்டா (Valetta) 166.மால்டோவா — சிசிநவ் (Chisinau) 167.மாலத்தீவுகள் — மஜீரோ (male) 167.மாலி — பமாகோ (Bamako) 168.மாசிடோனியா — ஸ்கோப்ஜே (Skopeje) 169.மியான்மர் — யங்கோன் (Yangon) 170.மெக்சிகோ — மெக்சிகோ நகர் (Mecixo City) 171.மைக்ரோனேஷியா — பாலிகிர் (Palikir) 172.மொரிசியஸ் — போர்ட் லூயிஸ் (Port Louis) 173.மொனாக்கோ — மொனாக்கோ (Monaco) 174.மொசாம்பிக் — மொபுடோ (Maputo) 175.யூகோஸ்லாவியா — பெல்கிரேட் (Belgrade) 176.யேமன் — சனா (Sana) 177.ருமேனியா — புகாரெஸ்ட் (Bucharest) 178.ருவாண்டா — கிகாலி (Kigali) 179.ரஷ்யா — மொஸ்கோ (Moscow) 180.லக்ஸம்பார்க் — லக்ஸம்பார்க் (Luxenberg) 181.லாட்வியா — ரிகா (Riga) 182.லாவோஸ் — வியாணன்டைன் (Vientiane) 183.லிச்டென்ஸ்டெயின் — வடூஸ் (Vaduz) 184.லிதுவேனியா — வில்னியஸ் (Vilnius) 185.லிபியா — திரிபோலி (Tripoli) 186.லெசோதா — மஸெரு (Maseru) 187.லெபனான் — பெய்ரூட் (Beirut) 188.லைபீரியா — மன்ரோவியா (Monorovia) 189.வனுவது — விலா (Vila) 190.வத்திக்கன் — வத்திக்கன் நகர் (Vatican City) 191.வியட்னாம் — ஹனோய் (Hanoi) 192.வெனிசுலா — கராகஸ் (Caracas) 193.ஜப்பான் — டோக்கியோ (Tokyo) 194.ஜமைக்கா — கிங்ஸ்டன் (Kington) 195.ஜார்ஜியா — திபிலிசி (Tbillisi) 196.ஜிபூடி — ஜிபூடி (Djibouti) 197.ஜெர்மனி — பேர்ளின் (Berlin) 198.ஜோர்டான் — அம்மான் (Amman) 199.ஸ்பெயின் — மாட்ரிட் (Madrid) 200.ஸ்லோவாகியா — பிராட்டிஸ்லாவா (Bratislava) 201.ஸ்லோவேனியா — ஜூபில்ஜானா (Ljubljana) 202.ஹங்கேரி — புட்டாபெஸ்ட் (BudaBest) 203.ஹாங்காங் — விக்ரோரியா (Voctoriya) 204.ஹோண்டுராஸ் — டெகுசிகல்பா (Tegueigalpa) 205.ஹைதி — போர்ட் _ அவு _ பிரின்ஸ் (Port _ Au _ Prince)

சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா?


பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கறிக்கோழிதான் காரணமா? குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சுசிலாவுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண்கள் இருவரும் பதினாறு வயதில்தான் பருவமடைந்தார்கள். மூன்றாவது பெண் பத்து வயதில் உட்கார்ந்துவிட்டாள். சின்னமகள் வயதுக்கு வந்ததை வெளியில் சொல்ல வெட்கப்பட்ட தாய், மகளை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். ""எங்க பரம்பரையில யாருமே 15 வயதுக்கு முன்னால பூப்படையமாட்டாங்க. இவள் 10 வயசுல வந்துட்டாள். ஏதாவது நோய் இருக்குமோன்னு பயமா இருக்கு டாக்டர்.'' சிறுமியை பரிசோதித்த டாக்டர், ""புள்ளைக்கு உடம்புல புரோட்டின் சத்து அதிகமாட்டு இருக்கு. பிராய்லர் கோழி இறைச்சியில அதிக புரோட்டின் இருக்கு. அதை அதிகம் சாப்பிட்டால் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர நிறைய வாய்ப்பிருக்கு'' என்றார் டாக்டர்.. ""ஆமாம் டாக்டர், பெரிய பொண்ணுங்களைவிட இவள் பிராய்லரை விரும்பிச் சாப்பிடுவாள். கோழி இறைச்சி இல்லைன்னா இவளுக்கு சாப்பாடு இறங்காது'' என்றார் சுசிலா. இதே ஊரைச்சேர்ந்த கோகிலவாணியின் மகளும் 10 வயதில் வயதுக்கு வந்துவிட்டாள். (Your family too some daughters early happened like this) பாஸ்ட்ஃபுட் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் இந்த வளர்ச்சி மாற்றம் ஏற்பட்டிருக்குமோ? சந்தேகப்பட்ட கோகிலவாணி மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். ""பாஸ்ட்ஃபுட் சாப்பிட்டால் உடல் பருமனாகும். பருவத்திற்கு வரமாட்டாள். பிராய்லர் கோழி விரும்பிப் சாப்பிடுவாளா உங்கள் பெண்?'' -திருப்பிக் கேட்டார் பெண் மருத்துவர். ""கோழிதான் காரணமா டாக்டர்?'' ""கோழிக்கு போடுகிற ஊசி மருந்து காரணமாக இருக்கும்'' என்றார் டாக்டர். தற்போது பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடு வதை இந்தப் பகுதி மக்கள் வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே பிராய்லர்கள்தான் காயத்ரி தேவி என்ற ஆரம்பப் பள்ளி மாணவியையும் தாய்மைக்கு தயாராக்கி யுள்ளது. ""10 வருடத்திற்கு முன்பு நகர்ப் புறத்து மக்கள் பிராய்லர் இறைச்சி யை விரும்பிச் சாப்பிட்டனர். இப்போது பிராய்லர் இறைச்சிக்கடை இல்லாத கிராமம் இல்லை என்கிற அளவுக்கு விற்பனையாகிக்கொண்டிருக் கிறது. பிராய்லர் கோழிகள் சீக்கிரம் பெருக்கவேண்டும், எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார் கள். இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது. இது ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறாô சமூக ஆர்வலர் சேம்ஜி. இது .உண்மை தானா? பட்டுக்கோட்டை அரசு கால் நடை மருந்தக மருத்துவர் பெயர் வேண்டாம் என்ற கண்டிஷனோடு பதில் சொன்னார். ""தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளவை கோழிகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகள்தான். கோழி வளர்ச் சிக்கான மருந்துகள் அல்ல. வெளி நாடுகளில் இறைச்சிக்காக வளர்க்கப் படும் பன்றி மற்றும் மாடுகளுக்கு குறுகிய நாளில் வளர்ச்சியடைய ஊசிகள் போடு வது வழக்கம். சில மாதங்களில் கொழுகொழுவென வளர்ந்துவிடும். இந்தியாவில் அத் தகைய மருந்துகள் பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் அந்த மருந்துகளின் விலை அதிகம். ஆனால் பிராய்லர் இறைச்சியில் அதிகம் புரதச் சத்து இருப்பது உண்மை'' என்றார். கால்நடைகள் ஆய்வு மைய பேராசிரியர் ஒருவரிடம் நாம் இந்த "சிறுமிகள் பூப்படையும்' பிரச்சனை பற்றி கேட்டபோது... ""இந்த சந்தேகம் எங்களுக்கும் இருக்கிறது. தென் மாவட்டங்களில் பிராய்லர் கோழியை அறிமுகப் படுத்தியதே நான்தான். அப்ப ஒரு பிராய்லர் கோழியின் அதிகபட்ச எடை ஒண்ணேகால் கிலோதான் இருக்கும். சிறிது காலத்தில் பெரு முதலாளிகள் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டனர். அவர்கள்தான் குஞ்சு, தீவனம், ஊசி என்று நேரடியாக கொடுத்து கோழி வளர்க்கச் சொல்லி கொள்முதல் செய்து மார்க்கெட்டுக்கு அனுப்புகிறார் கள். முதலில் இந்திய முறைப்படிதான் பிராய்லர் ஜீன் தயாரிக்கப்பட்டது. பெருமுதலாளிகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து தாய்க் கோழி வாங்கி வந்து உற்பத்தி செய்கிறார்கள். மருந்து களும் வெளிநாட்டு ஃபார்முலாதான். விவசாயத்திற்கு அமெரிக்க விதைகள் நுழைந்ததைப் போல கோழி மற்றும் பசுமாடுகளும் நுழைந்துவிட்டது. வெளிநாட்டு ஃபார்முலாப்படி 45 நாளில் 2 கிலோ எடைக்கு வந்துவிடுகிறது பிராய்லர் கோழி. நிச்சயம் இதனால் பாதிப்புதான். இதனை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டால் ஒரேநாளில் பிராய்லர் கோழி விற்பனை படுத்துவிடும். அதனால் தான் நாட்டுக்கோழி வளர்க்குமாறு நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். 10 வயதில் ஒரு சிறுமி பெரிய மனுஷியா வதற்கு பிராய் லர் இறைச்சியும் முக்கியமான காரணமாக இருக்கலாம்'' என்கிறார் பெயர்கூற விரும்பாத ஆய்வு மைய பேராசிரியர். தமிழக சுகாதாரத்துறை அவசர அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனை இது. நன்றி -மணிகண்டன், பகத்சிங் Alternate Solution is Eat "நாட்டுக்கோழி "Country Cock & Hen"

தினமணி - அயல்மாநிலத் தமிழர்களும், தாய்மொழிக் கல்வியும்


அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த உலகத்தில் கல்விதான் மக்களின் நலத்தையும் வளத்தையும் தீர்மானிக்கிறது. பன்மொழிச் சூழல் நிறைந்த இந்தியாவில் தாய்மொழிக் கல்வி என்பது பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்கின்ற மக்களிடம் தாய்மொழிக் கல்வி இன்னும் முழுமையாகச் சென்று சேராத நிலையே தொடர்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழி கல்விமொழியாகவும், ஆட்சிமொழியாகவும் இருந்து வருகிறது. தகவல் தொடர்புச் சாதனங்களிலும் மாநில மொழிகளின் செல்வாக்குக் காணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும், அம்மாநில உள்ளாட்சி அமைப்பும் தாய்மொழி வழிக் கல்வியைப் பயிற்றுமொழியாக்க தொடக்கக் கல்வியில் தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தல் வேண்டும் என்றும், மொழிரீதியான சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இவ்வசதிகளைச் செய்து தரவேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் அறிவுறுத்தியிருந்தாலும், இன்னும் இந்த இலக்கை எட்டமுடியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். அயல் மாநிலங்களில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியைத் தக்கவைத்துக்கொள்ளவும், தங்களுக்கான தாய்மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளவும் ஏராளமான நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுவதற்கான வாய்ப்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஒரு குழந்தை தானாகவே உள்ளூர் மொழியை தனது முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இயல்பாகக் கற்றுக்கொள்கிறது. பேச்சு வழக்கின் தரத்தை அக்குழந்தை கற்றிட மேலும் அதிக வலுவுள்ள கற்கும் சூழலை, அனுபவத்தைப் பெறுதல், உருவாக்கித் தருதல், பேசவும் கவனிக்கவும் ஒரே மொழியாக இருக்கும் சூழலில் கணிசமான குறிப்பிடத்தக்க அளவிற்கு அக்குழந்தை கற்றுவிடும். ஆனால், அயல் மாநிலங்களில் புறச்சூழலில் தாய்மொழி இல்லாத நிலையில் வாழும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய தாய்மொழி அறிவு கிடைப்பதில்லை. இடம்பெயர்ந்த தமிழர்கள் வேலைவாய்ப்புக்காகவும், கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அந்தந்த மாநில மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநிலமொழியின் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க தமிழின் பயன்பாடு குறையத் தொடங்கும். இது இறுதியில் மொழி இழப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே, அயல்மாநிலத் தமிழர்கள் மொழித்தக்கவைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பச் சூழலில் எக்காரணத்தைக் கொண்டும் பிற மொழிப் பயன்பாடு இருத்தல் கூடாது. வீட்டுமொழியாக முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் பயிற்சியைப் பெற்றோர் பெறவேண்டும். அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்ல மறக்கக்கூடாது. பள்ளிகளில் தமிழைப் படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், பெற்றோர்களே ஆசிரியர்களாக மாறி, தமிழைச் சொல்லித்தர முன்வர வேண்டும். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தாய்மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். தாய்மொழியின் தேவையைக் குழந்தைகளின் மனங்கொள்ளுமாறு பதிவுசெய்ய வேண்டும். இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்று குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் விழிப்புடனிருந்து அடிப்படைத் தமிழை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும். பிற மாநிலங்களில் வசித்துக்கொண்டு தமிழ்ச்சூழலை நுகர தமிழ் இதழ்கள், தமிழ்த் தொலைக்காட்சிகள், தமிழ் இணையதளங்கள் போன்றவை துணைபுரியும். இவற்றில் குழந்தைகள் ஈடுபாடு கொள்ளச்செய்தல் பெற்றோர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து விலகிச்சென்று வெகுதூரத்தில் பிற மாநிலங்களில் வாழ்ந்தாலும் தமிழ் மண்ணோடு தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உற்றார் உறவினரிடம் தொடர்பு நீடிக்கும்போது இயல்பாகத் தமிழ் மொழியின் மீதும் தொடர்பு அதிகரிக்கும். திருவிழாக் காலங்களில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து போகும் பழக்கத்தைப் பிற மாநிலத் தமிழர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு மற்றும் தமிழரின் மரபார்ந்த பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடியும். தமிழர் திருநாளாகத் திகழ்கின்ற பொங்கல் விழா நாள்களில் இத்தகைய பிறந்த ஊர் நோக்கிய பயணத்தை அமைத்துக் கொண்டால் மிகுந்த பயன் கிடைக்கும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு ஒன்றுகூடி தமிழ்நாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழவேண்டும். தாங்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முனைய வேண்டும். குழந்தைகளின் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றோடு தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் நடத்தும் தொலைநிலைக் கல்வியில் தமிழில் கூடுதல் பட்டம் பெற பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களுக்குக் கேரள மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிலையம் தமிழ்ப் பாடங்களைத் தயாரித்து அளித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் பகுதிகளிலும் தமிழ்க் கல்விக்கான வசதிகள் கிடைக்கின்றன. பெங்களூரில் கல்லூரி அளவிலும் தமிழ்மொழி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்தையொட்டிய மாநிலங்களில் தமிழ்மொழிக் கல்விக்கான வாய்ப்பு ஓரளவு இருந்து வருகிறது. அந்தமானில் வாழும் தமிழர்களுக்காக தீவு மலர் எனப் பாட நூல்களைத் தயாரித்து அளித்து வரும் பணியை மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் செய்து வருகிறது. ஆனால், பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மொழிக் கல்விக்கான வாய்ப்பின்றி இருந்து வரும் சூழலை மாற்ற வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் கால் நூற்றாண்டுக்கு முன்பே இதில் ஆர்வம் கொண்டு பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தொடர்பாக சோமலெ மூலம் கள ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று அதை நூலாகவும் வெளிட்டது. இன்றையச் சூழலில் மீண்டும் கள ஆய்வு மூலம் புதிய தரவுகளைத் திரட்டி அயல் மாநிலத் தமிழர்களின் தாய்மொழிக் கல்வியின் தாகம் தணிக்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறது. முனைவர் திருமலை துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம் நன்றி:- தினமணி