Showing posts with label வஃபாத்து. Show all posts
Showing posts with label வஃபாத்து. Show all posts

Sunday, February 24, 2008

ஒரு கவிதை மரணம் அடைந்து விட்டது !!

ஒரு கவிதை மரணம் அடைந்து விட்டது !!

காயல் பிறைக்கொடியான் - அவர்
இறைவனின் நல்லடியான் !

அவருடைய தொகுப்புகள் அனைத்தும்
சமுதாயத்திற்கு வகுப்புகள் !

அவருடைய வார்த்தைகள் அவற்றின்
வார்ப்புகள் !

அவர் சிந்தனையில் கருத்துக்கள்
கரு பிடிக்கும் ! அவைகள்
சமூகத்தின் துரு எடுக்கும் !

கவிஞர் மஹ்மூது ஹுசைன் - அவர்
இன்னும் ஒரு தோண்டப்படாத சுரங்கம்
நல்ல பல கவிதைகள் அதில் உறங்கும் !

அவருடைய ஆக்கங்கள் தனிவுடமை அல்ல
அவைகள் சமூகத்தின் பொதுவுடமை !

தமதாதாயக் கவிஞர்கள் வாழும் இவ்வுலகில்
சமுதாதாயக் கவிஞர் உம் போல் சிலரே !

உம் கவிதைகள் வெளிவுலகிற்கு வராத நிலையிலேயே
நீர் விண்ணுலகை அடைந்துவிட்டீர் !

சுமக்க முடியாத ஒரு கவிதைப் பெட்டகம் - இங்கு
இறக்கி வைக்கப்பட்டுள்ளது ! ( இன்னாலில்லாஹி .......... )

ஒரு கவிதை மரணம் அடைந்தும்
மரணமே கவிதையாய் வாழ்கிறது !

------------- காயல் யு. அஹமது சுலைமான் , துபாய்

காயல் பிறைக்கொடியான் மஹ்மூது ஹுசைன் மறைவையடுத்து எழுந்த கவிதை