Tuesday, August 4, 2009

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி


இன்று காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி எனும் ஒரு காவியத்திற்கு பிரிவு உபச்சார நிமித்தமாக நாம் கூடியுள்ளோம்! அவரைப்பற்றிச் சொல்ல பல விஷயங்கள் உண்டு என்பதால் அவற்றை பகுதி பகுதியாக பிரித்துக் கூறப்போகிறேன்! முடிவில் நீங்கள் விருப்பப்பட்டால் மொத்தமாகவும் .. இன்னும் சத்தமாகவும் கூற நான் தயார் என்று கூறி நிகழ்ச்சிக்குள் செல்கிறேன்!

இவர் ஒரு கவிஞர்

ஒற்றை வரி ஹைக்கூ

கருவெடுத்து

புதுக்கவிதைகளின்

புதுமைச் சேர்த்து

மரபுக்கவிதைகளின்

மரபுமீறாமல்

இவர்தரும் அதிரடி

கவி கேட்போர்

‘சும்மா அதிருதில்ல”

எனச்சொல்வார்…


இவர் ஒரு பேச்சாளர்

வார்த்தைச் சரம் தொடுத்து – அதில்

தன் சிம்மக்குரல் கோர்த்து – கூட்டத்தை

சிறுத்தைபோல் சில கணம் பார்த்து

அவர் கர்ஜி;கும் சத்தத்தில்

கட்டுண்டு கிடக்கும் கூட்டம்

இவர் மேடையில் நடத்துவார்

பேச்சில் ஆட்டம் பாட்டம்


இவர் ஒரு ஆன்மீகவாதி

ஆன்மீகம் என்றுவிட்டால்

யார்மீதும் நாட்டமில்லாமல்

உலகின்மீது நோட்டமில்லாமல்

தன்னைச்சுற்றிக் கூட்டமில்லாமல்

தனித்திருப்பார் சிலர்!

இவர் இலக்கியம் இஸ்லாம்

இரண்டையும் இருகண்களாய் கொண்டவர்

இலக்கியம் என்று வந்துவிட்டால்

கலக்கிடுவார்

இஸ்லாம் என்று வந்துவிட்டால்

கலங்கிடுவார்


மதமென்று மதங்கொள்ளாமல்

மார்க்கமெனும் வாழ்க்கை நெறிகாட்டி

இவர் செய்யும் மார்க்கப்பிரசாரம்;!

மனம்நொந்தோருக்கும் கிடைக்கும்

வாழ்க்கைப் பிரசாதம்!

இவர் ஒரு நடிகர்

இதற்கு முன் வந்தமுகம்

தெரிந்திருந்தாலும்

இந்த முகம் உங்களுக்கு

தெரிய வாய்ப்பில்லை

விருச்சங்கள் சிலநேரம்

விதைக்குள்ளே நசுக்கப்படுவதுபோல்

இந்தத் திறன் இவர்தம்

பள்ளி நாட்களுடன்

தள்ளிப் போனது

பச்சையப்பன் கல்லூரியில்

இவர் நடித்த நாடகங்களின் காட்சிகள்

அவர்தம் நடிப்புத்திறனுக்கான மாட்சிகள்!


இவர் ஒரு பழம்பெரும்கவிஞர்

பலம்பெற்ற கவிஞர் - அவ்வப்போது

பழம்பெற்ற கவிஞர்

புலவர் நாராயணனால்

நடத்தப்பட்ட

மகிழ்நன் தமிழ்க்கழகத்தினரால்

நிகழ்த்தப்பட்ட பழங்கள் கவியரங்கி;ல்

இவர் பாடிய ‘மாதுளம்பழம்’ கவிதை

இவர் இலக்கிய வாழ்விற்கு ஆனது விதை!


எத்தனையோ திறமைகள் இவருள்

அடங்கியிருந்தாலும் - அவையில்

அடங்கியிருத்தல் இவர்

தனித்திறன்..

அதற்கேற்றார் போல்

வேலூர் கவியரங்கில்

இவர்பாடிய அவையடக்கக் கவிதை

இவருக்கு சபையடங்கா கைத்தட்டை

பெற்றுத்தந்தது!

இவர்தம் கவித்திறனை விற்றுத்தந்தது1


இவர் ஒரு திறனாய்வாளர்;

மற்றவர் இவர் திறன் ஆய்வு

செய்து கொண்டிருந்த வேளையில்

மு.மேத்தாவின்

கண்ணீர்ப+க்களை இவர்செய்த

திறனாய்வு

இவர் திறன் மேன்படச்

செய்த ஆய்வு

என்றுமே இல்லை இவர்தம்

திறன் ஓய்வு

இவர் ஒரு கவிக்கடல்

இவர் ஒரு கவிக்கடல் - ஆம்

அரபுமொழி என்று விட்டால

இவர் ஒரு அரபிக்கடல்!

இந்தி உருது என வந்துவிட்டால்

இவர் ஒரு இந்து மகா சமுத்திரம்

முத்தமிழை முகர்ந்து விட்டால்

முக்கடல் சங்கமம்

கவி எழுத கங்கணம் கட்டிவிட்டால்

இவர் ஒரு செங்கடல்

இதை அன்றே அறிந்தோ

என்னவோ சென்னையில்

கவிஞர் பொன்னடியான்

நடத்திய கடற்கரை கவியரங்கில்

இந்த கவிக்கடலின் பங்கு ஏராளம்

கவிதைகளோ தாராளம்!


இவருக்கு வெடிகுண்டு

வைத்த அனுபவமும் உண்டு

எவன் எப்படி போனால் என்னவென்று

வெறித்தனமாய் வைக்கப்படும்

வீணர்களின் வெடியல்ல இது

எம்மதமும் சம்மதம் என வேற்றுமையை அகற்ற

வைக்கப்பட்ட கவிதை வெடிகுண்டு இது..

ஆம்.. சென்னை இஸ்லாமியக் கவியரங்கில்

வேற்றுமைக்கு வெடிவைப்போம்

என்ற தலைப்பில் இவர் பாடிய கணங்கள்

சமூக அக்கறை கொண்டோரின்

மறக்க இயலா தினங்கள்!


25 வருடங்கள் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்! சில காலம் பதுங்கியிருந்தார்! புலி பதுங்கல் பாய்வதற்கே! பாயும் காலம் வந்தது.. காவிரிமைந்தனின் பழக்கம் தந்தது.. கிரசண்ட் டி.வி.யின் முதல் சந்திப்பு அந்தப் பிறை தொலைக்காட்சியின் சந்திப்பிற்குப்பிறகு அவர்தம் இலக்கிய ஆர்வ பிறை முழுநிலவாக வளர ஆரம்பித்தது! நிலாவண்ணனாக ஜொலி ஜொலித்தது!


அப்படி புதைந்த சந்திரனை

தூசுதட்டி தூக்கிய நிறுத்திய பெருமை

நம் காவிரிமைந்தனை; சாரும்..

அவரை அப்துல் ரவ+ப் சார்பாகவும் சிலநொடிகள் கரகோசத்தினால்

சுரம் சேருங்கள்..

இங்கு காவிரிமைந்தனைப் பற்றி ஓரிருவரிகள் கூறியாக வேண்டும் - சில பேர் கவிதைகளை உருவாக்குகிறார்கள். வெகுசிலர் அந்தக் கவிஞர்களை உருவாக்குகிறார்கள். அந்த வெகுசிலரில் ஒருவர் நம் காவிரிமைந்தன். ஆவர் முழுநேர கவிஞர் ஆனாலும் சிலநேரம் அவர் ஒருதொல் பொருள் ஆராய்ச்சியாளர்! அவர் ஒரு அகழ்வாரர்ய்ச்சியாளர்! அதிகம் புகழ்வதாய் நினைத்துவிட வேண்டாம்! கவிதைக்கு பொய்யழகு என்றாலும் என் கவிதையில் நான் அழகு சேர்க்க முயற்சிப்பதில்லை. வானலை வளர்தமிழின் பெரும்பாலோனாரில் யாரிடம் கேட்டாலும் என்னை, எனது திறமையைக் கண்டுபிடித்தவர் காவிரிமைந்தன் .. எனது திறன்களை என்னுள் தோண்டியெடுத்தவர் காவிரிமைந்தன் என்பார்கள்! மொத்தத்தில் இவர் வானலை வளர்தமிழின் ஆராய்ச்சியாளர்!


அதன்பின் ரவ+ஃபின் வளர்ச்சிக்கு அவர்தம் கவிதை எழுத்திற்கு அவர் எண்ண ஓட்டத்திற்கு எந்த எழுத்தாணியும் ஈடுகொடுக்கவில்ல என்பது வேறு விஷயம்!


அதன்பின் வானலை வளர்தமிழில் அவர் பாடிய கவி வரிகள்! தேனலை நினைவுகளுடன் கூடிய கவிச்சரங்கள்!


ரவ+ஃப் அவர்கள் கவிபாடும் வானலை வளர்தமிழில் நாமும் பாடுவதே பெருமை என்போர் இங்கே ஏராளம்!

இவரின் மறுபக்கத்தை அறிய முயன்றால் நமக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது!

இவரா.. இவருடனா நாம் சக நண்பராக இத்தனை நாள் பழகிவந்தோம் .. ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறேன்..

திருக்குர் ஆன் .. இஸ்லாமியர்களின் புனித நூல்..

அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் இவரின் பங்கு ஏராளம்!

மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர்

புகாரி – ஹதீஸின் 6 பாகங்கள் மொழிபெயர்ப்பு

மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர் -

நபி வரலாறு – பெரியவர்கள், சிறியவர்கள் இருவருக்குமாக தனித்தனியாக..

இப்படி இவரின் பின்னணியில்

பல முன்னணிப் பதவிகள் உண்டு..


இன்று வரை இவர் எழுதப்படாத கவிதை

விடைகாண இயலா வினா..

இவர் இங்கு தொட்டுச்சென்ற இலக்கியப் பயணத்தை

நாட்டில் சென்று தொடர்ந்து இன்னும் பல வெற்றிகளைப் பெற

எல்லாம் வல்லோனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!


RAJAKHAN ARCHITECT
dateTue, Aug 4, 2009 at 11:42 AM
ABDUL RAVOOF - KEEZHAI RAZA WRITE UP (PRESENTED ON THE STAGE)

ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹ‌ஜ்ர‌த் அமீர‌க‌ம் வ‌ருகை

ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹ‌ஜ்ர‌த் அமீர‌க‌ம் வ‌ருகை

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=199

துபாய் : ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹ‌ஜ்ர‌த் 04.08.2009 செவ்வாய்க்கிழ‌மை மாலை இந்திய‌ன் ஏர்லைன்ஸ் விமானம் மூல‌ம் ஷார்ஜா வ‌ருகை புரிந்தார்.

துபாயில் ந‌டைபெற‌ இருக்கும் ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளில் க‌ல‌ந்து கொள்வ‌த‌ற்காக‌ ஆவூர் தாருஸ் ஸ‌லாம் அர‌பி ம‌த‌ர‌ஸா முத‌ல்வ‌ர் ம‌ணிமொழி ம‌வ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் ம‌ன்ப‌ஈ வ‌ருகை புரிந்தார். அவ‌ரை விமான‌ நிலையத்தில் க‌வானிஜ் ஹிப்ஸ் ம‌த‌ர‌ஸா நிர்வாகி அப்பாஸ் ஹ‌ஜ்ர‌த், அப்துல் ர‌ஹ்மான், ம‌வ்ல‌வி இஸ்மாயில் ஹ‌ஸ‌னி, பொறியாள‌ர் பீர் முஹ‌ம்ம‌து, ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொதுச்செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வ‌ர‌வேற்ற‌ன‌ர்.








ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹ‌ஜ்ர‌த் அமீர‌க‌ம் வ‌ருகை

துபாய் : ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹ‌ஜ்ர‌த் 04.08.2009 செவ்வாய்க்கிழ‌மை மாலை இந்திய‌ன் ஏர்லைன்ஸ் விமானம் மூல‌ம் ஷார்ஜா வ‌ருகை புரிந்தார்.

துபாயில் ந‌டைபெற‌ இருக்கும் ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளில் க‌ல‌ந்து கொள்வ‌த‌ற்காக‌ ஆவூர் தாருஸ் ஸ‌லாம் அர‌பி ம‌த‌ர‌ஸா முத‌ல்வ‌ர் ம‌ணிமொழி ம‌வ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் ம‌ன்ப‌ஈ வ‌ருகை புரிந்தார். அவ‌ரை விமான‌ நிலையத்தில் க‌வானிஜ் ஹிப்ஸ் ம‌த‌ர‌ஸா நிர்வாகி அப்பாஸ் ஹ‌ஜ்ர‌த், அப்துல் ர‌ஹ்மான், ம‌வ்ல‌வி இஸ்மாயில் ஹ‌ஸ‌னி, பொறியாள‌ர் பீர் முஹ‌ம்ம‌து, ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொதுச்செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வ‌ர‌வேற்ற‌ன‌ர்.