இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்
( J.S.S அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி் )
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக ! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது.
இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.
இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள் (ஸஹ்ல் (ரலி) இப்னு குஜைமா)
மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது பர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு. எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும் நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (புகாரி) என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.
இறைவன் கூறியதை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி) என்றும் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். முன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமளான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.
பொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப்பற்றி மனம் வருந்தி மீண்டும் அப்பாவத்தில் ஈடுபடாமல் இருக்க இந்த ரமளான் மாதத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழுகையிலும் அதிலும் குறிப்பாக இருபது ரக்காஅத் தராவீஹ் தொழுத பின்பும், தஹஜ்ஜத் தொழுத பின்பும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை கோர வேண்டும். மேலும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, அல்லது கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ எங்கு நிகழும் போதும் அது அல்லாஹ்வின் பார்வைக்கு மறைந்தது அல்ல, அவன் எந்நேரமும் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான், மேலும் நாம் நிச்சயமாக அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், நன்மையான செயல்களுக்கு பரிசும், தீமைகளுக்கு (இறை மன்னிப்பு இல்லையெனில்) தண்டனை நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் உறுதியாகவும், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தையும் மனதில் உள்வாங்கி நாம் நோன்பிருப்போமானால் கண்டிப்பாக அல்லாஹ் அந்த நோன்பை ஏற்றுக் கொண்டு ரஹ்மத் எனும் கருணையை பொழிவதுடன் நாம் செய்த சிரிய பெரிய தவறுகளை அவனிடம் முறையிடுவதினால் நமக்கு மன்னிப்பையும் வழங்கி நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறச் செய்து சுவர்க்கத்தில் நிச்சயமாக நுழையச் செய்வான் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு உறுதியளிக்கின்றது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் “ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்.(ஸஹ்ல் ரலி : புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.
கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன் வஸ்ஸலாம்
மெளலவி
J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
050/ 5471543
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label ரமளான். Show all posts

Sunday, September 5, 2010
Monday, August 16, 2010
நோன்பின் மாண்புகள்
நோன்பின் மாண்புகள்
மெளலவீ J.S.S. அலிபாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ரமளான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமளான் ! இதோ இன்னும் சில நாட்களே ! மீண்டும் வான்மறை வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம், நம்மை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமான தூய்மையான நாளாகும். இந்த மாதத்தின் ஒவ்வொரு இரவும் அருள் நிறைந்த, பாக்கியம் நிறைந்த இரவாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : ரமளான் மாதம் வருகிறது. வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன. எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது. ஷைத்தான்கள் விளங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். (புகாரி : அபூ ஹுரைரா ரலி)
இத்துனை அருள் வளங்கள் நிறைந்த புனித ரமளான் மாதம் நம்மை நோக்கி இதோ வந்து விட்டது. இறை கருணையும், அருள் வளங்களும், கிருபைகளும், இறை திருப்தியும், இறை மன்னிப்பும் பொதிந்து கிடக்கும் இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும். எனதருமை சகோதரர்களே நம்முடைய பாத்திரம் காலியாக இருக்கிறதே ! இந்த நிலை நமக்கு வேண்டாம். ஏதாவது நாம் செய்ய வேண்டும் நமக்குரிய இறையருள் பங்கை சேகரித்துக் கொள்ள நாம் உறுதியான எண்ணம் கொண்டு எழ வேண்டும் அப்பொழுதுதான் அதன் முழுப்பயனை அடைய முடியும்.
நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் : முஸ்லீம் ஷரீபில் பதிவு செய்யப்பட்டதை கவனித்தீர்களா? இறைவன் என்ன சொல்கிறான் அவனை நோக்கி ஓர் அடி முன்னேறினால் அவன் உங்களை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கிறான். நீங்கள் அவனை (இறைவனை) நோக்கி நடந்து சென்றால் அவன் உங்களிடன் ஓடோடி வருகிறான் என்று இறைவனே சொல்கிறான். எனவே நாம் ஒவ்வொருவரும் இப்புனித ரமளானை சிறப்பாகவும் சரியாகவும் பயன்படுத்துவேன் என்ற திடமான (நிய்யத்) எண்ணம் கொள்ள வேண்டும். அது தொழுகையாக இருக்கட்டும் அல்லது நோன்பாக இருக்கட்டும் அல்லது இதர ஏனைய வணக்க வழிபாடுகளாக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக (நிய்யத்) என்ற எண்ணம் அவசியமானதாக இருக்க வேண்டும். இந்த நிய்யத்துக்கான வாசகங்களை மனதால் நினைத்து நாவால் சொல்லாதவரை எந்த நற்செயலும் நிறைவேறுவதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. (புகாரி உமர் பின் கத்தாப்) அந்த எண்ணம் சரியானதாகவும் இருக்க வேண்டும். வாய்மையானதாகவும் இறைவனின் உவப்பை மட்டுமே ஆதரவு வைத்து ஒரே எண்ணத்திலேயே அனைத்து நற்செயல்களும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறைவனின் அருள்வளங்களை அள்ளி நமது பாத்திரங்களை நிரப்ப முடியும். மேலும் நற்செயல்களில் (அமல்) ஈடுபட முனைந்து விட்ட பின் இந்த மாதத்தில் நாள்தோறும் என்ன செய்ய வேண்டும் எவையெல்லாம் இறைவனால் கடமையாக்கப்பட்டுள்ளது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் எப்படி அமல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொன்னார்களோ செய்தும் காட்டினார்களோ அதை அப்படியே கூடுதல் குறைவின்றி நானும் செய்வேன் என்றும் உறுதி பூண வேண்டும். அப்பொழுதுதான் நோன்பின் மாண்புகளை முழுமையாக அடைய முடியும்.
நோன்பின் மாண்பும் அதன் சிறப்பும் ஏராளம் அதைச் சொல்லிக் கொண்டே போகலாம். வாருங்கள் மேலும் சில நபிமொழிகளை பார்ப்போம். எல்லா நற்செயல்களுக்கும் கூலி தருபவன் அல்லாஹ் தான் என்றாலும் நோன்பை குறிப்பிட்டுச் சொல்லும் போது நோன்பு எனக்குரியது என இறைவனே கூறுகின்றான்.
நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ ! அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் (புகாரி அபூ ஹுரைரா ரலி) மேலும் இம்மாதத்தின் மகத்துவம் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. (முஸ்லிம் அபூ ஹுரைரா) மற்றொரு நபிமொழி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
எனவே இந்த அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தில் ஒரு நொடி பொழுதையும் தவறவிடாமல் மிகுந்த பேணுதலுடன் நோன்பு நோற்று ஐந்து வேளை பர்ளு தொழுகையை ஜமாத்துடன் தொழுது, மேலும் சுன்னத்தான தராவீஹ் தொழுகை 20 (இருபது) ரகாஅத்துகளையும் தொழுது, நபில், தஸ்பீஹ் போன்ற நற்செயல்களில் அதிகம் கவனம் செலுத்தி நோன்பின் மாண்புகளை முழுமையாக பெற்று அல்லாஹ்வின் அருள் வளங்களை அள்ளி நமது பாத்திரங்களை நிரப்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நோன்பின் முழுப் பயனையும் தந்தருள்வானாக ! ஆமீன்
மெளலவி
J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி
050 / 5471543
ஷார்ஜா,
ஐக்கிய அரபு அமீரகம்

Saturday, August 7, 2010
ரமளானே வருகவே...!!!
ரமளானே வருகவே...!!!
பகலெலாம் பசித்து
இரவெலாம் விழித்து
அகமெலாம் நிறைந்து
அல்லாஹ்வைத் துதித்து
முகமத்(ஸல்) உம்மத்து
முழு மாதம் நோன்பு பிடித்து
அகமும் முகமும்
அமல்களால் அலங்கரித்து
இகம் பரம் ஈடேற்றமும் இறையின்
ரகசிய அறிவும் பெற்று தரும்
ரமளானே வருகவே...!!!
பசித்தவரின் பசியினை
பட்டு நீ உணர்த்திடும் பட்டினி- ஊனில்
வசித்திடும் ஷைத்தானை
வதைத்திட வைத்திடும் உண்ணாமை
குடலுக்கு ஓய்வுக் கொடுத்து;
குர்-ஆனின் ஆய்வு தொடுத்து;- மஹ்ஷர்
திடலக்கு தயார்படுத்துதல் உன் கவனம்;
திண்ணமாய் கிட்டும் சுவனம்
பாவம் தடுத்திடும்
பாதுகாப்பு கேடயம்;
கோபம் வென்றிடும்
குணத்தின் பாடம்
அல்லாஹ்வுக்காகவே நோன்பு;
அல்லாஹ் மட்டுமே அறியும் மாண்பு
அல்லாஹ்வே அதற்கான சாட்சி;
அல்லாஹ்வே தருவான் மாட்சி
முப்பது நாட்களை மூன்றாய் வகுத்து
முப்பதின் முதல் பத்தில் ரஹ்மத்து;
முப்பதின் இரண்டாம் பத்தில் மக்பிரத்து;
முப்பதின் மூன்றாம் பத்தில் நஜாத்து;
தப்பாது வேண்டிட வேண்டியே
தகை சான்றோர் வேண்டினரே
வானில் இருந்த இறைவேதம்
வஹியின் வழியாக
தேனினும் இனிய திருநபியின் (ஸல்)
திருவதனம் மொழிய வந்த மாதம்
ஆற்றல் மிக்கதோர் இரவின் பிறப்பு;
ஆயிரம் மாதங்களினும் மிக்க சிறப்பு;
போற்றிடுவோம் பெற்றிடுவோம் அவ்விரவு;
புனிதமிகு ரமளானின் வரவு...!!!
ஈகைத் திருநாளாம்
ஈத் பெருநாளைக்கு முன்பாகவே
வாகைத்தரும் பித்ரா தர்மம்
வழங்குவோம் ஏழைகட்கு அன்பாகவே
"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
குறிப்பு: தடிமன் எழுத்துக்களில் உள்ளவைகள் அரபி பதங்கள்: அதன் பொருள் இதோ:
உம்மத்து= சமுதாயம்
அமல் = செயல்
மஹ்ஷர்= மறுமை தீர்ப்பு நாளின் பெருவெளி மைதானம்
ரஹ்மத்து= இறையருள்
மக்பிரத்து= இறைமன்னிப்பு
நஜாத்து= நரக விடுதலை
வஹி= வானவர் ஜிப்ராயில்(அலை)மூலம் இறைத் தூது
பித்ரா= ஏழைகட்கு ஈந்துவக்கும் தானிய தர்மம் (அதனாற்றான் இந்த நோன்பு பெருநாளை "ஈதுல் பித்ர்" (ஈகைத் திருநாள்) என்பர்.

Sunday, March 14, 2010
ரமளானின் மகிமை
ரமளானின் மகிமை
( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )
புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.
ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.
இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.
நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:
’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’
’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’
’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’
’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’
நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.
‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’
‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’
‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’
எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!
நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை
நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.
நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.
நோன்பின் நிய்யத்
நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.
தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:
நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா
இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.
உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.
நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.
ஸஹர் – நோன்புபிடிப்பது
ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.
ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.
இஃப்தார் – நோன்பு திறப்பது
சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.
மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.
இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி – பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.
நோன்பு திறக்கும் துஆ
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.
’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!
நோன்பின் முறித்தல்கள்
1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.
வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களா’ செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.
நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.
தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.
நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.
நோன்பை முறிக்காதவைகள்
1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.
நோன்பின் மக்ருஹ்கள்
1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.
இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.
நோன்பு வைக்காமலிருப்பதற்கு
அனுமதிக்கப்பட்டவர்கள்
1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.
4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.
5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.
6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.
7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.
8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.
தராவீஹின் சட்டங்கள்
புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.
எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.
குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.
இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.
வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.
தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.
ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.
குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் – மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.
இஃதிகாப்
புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.
ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.
இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.
இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.
ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.
1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.
2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.
அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

Sunday, September 7, 2008
Subscribe to:
Posts (Atom)