விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்.
உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில.
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் – வடக்கே பகதூர்~h, வங்கத்தில் சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின் மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.
இவர்களை பற்றி எழுதுவதென்பது, இந்தக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் நாட்டில், அதுவும் திருநெல்வேலி மாவட்டத்து சுதந்திர போராட்ட தியாகிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதான்.
விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்
திருநெல்வேலி பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி. கே. அப்துல்ஹமீது 1929 போராட்டத்திலும் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931 லும் கலந்து கொண்டு சிறை சென்றவர் திருநெல்வேலி நகர்மன்ற துணைத் தலைவராக இருந்தவர். 1-6-1959-ல் காலமானார்.
காதர்முகைதீன் நயினார் இராவுத்தர் புதல்வராக 1904-ல் பிறந்த அப்துல் ஹமீது முகம்மது ஒத்துழையாமைப் போரில் கலந்து கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
செங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித் 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
முகம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துல்சலாம் 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்ப+ர் சிறையில் வாடியவர்.
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம் 1922 போராட்டத்தில் கலந்துக்கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.
திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897-ல் பிறந்தவர். 1921 போராட்டத்திலும்; நாக்ப+ர் கொடிப்போரிலும் கலந்துக் கொண்டு நாக்ப+ர் சிறையில் வாடியவர்.
கடையநல்லூர் எஸ.எம் அப்துல்மஜித் சுதந்திர தமிழகத்தில் மந்திரியாக இருந்தவர். இவரது குடும்பம் நாட்டு விடுதலைக்காக நல்ல தொண்டாற்றியிருக்கிறது.
தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன் 1941-ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவர்.
திருநெல்வேலி எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர் 1894-ல் பிறந்தவர். கற்றறிந்தவர் 1921 ஒத்துழையாமைப் போரிலும் 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.
25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் n~ரீப் கற்றறிந்தவர் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.
தென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் கல்வி பயின்றவர். 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்துக்கொண்டவர்.
வெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித் 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவ+ர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.
செய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்துக்கொண்டு அலிப்புறம் ஜெயிலில் வாடியவர்.
திருநெல்வேலியில் 11-7-1914ல் பிறந்த செய்யது ஜலால் 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், மேலும் அந்நியத் துணி எதிர்ப்பு, தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் பங்கேற்றுப் பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்.
மேலப்பாளையம் வி. எஸ். டி முகம்மது இப்ராகீம் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்; காங்கிரஸ் கமிட்டி சார்பில் தன் பங்களாவில் இரகசியமாக கே.பி.மரு~;வாலா வெளியிட்ட கிராம சுதந்திர பிரகடனத்தை சைக்ளோஸ்டைல் செய்து விநியோகம் செய்தார். ரிசர்வ் போலீசின் தடியடியால் மயக்கமடைந்த எம்.ஆர். உலகநாதனுக்குத் துணிந்து சிகிச்சை அளித்தவர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உதவித் தலைவராகவும், திருநெல்Nலி ஜில்லா போர்டு மெம்பராகவும், மேலப்பாளையம் நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றிய இவரது தேசியச் சேவை நிலைத்து நிற்கக் கூடியது.
செய்குத்தம்பி பாவலரால் ”கோவை” பாடப்பெற்ற இவரது தந்தையார் சம்சுதாசீன் தரகனார் கிலாபத் போரில் தீவிரங்காட்டியவர்.
1926-ல் நெல்லை மாவட்டத்தில் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர்களில் இராதாபுரம் தாலுகா பணகுடி அம்ஜியான் சாஹிப், கள்ளி;குளம் முகைதீன் ஆகியோர் முன்னணியில் நின்றவர்கள். நாங்குநேரி தாலுகா காங்கிரஸ் கமிட்டியில் தீவிர பணியாற்றி ஆற்றியவர்கள். அரசின் அடக்கு முறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற கள்ளிகுளம் முகைதீன் துணிச்சலான செயல்களில் இறங்கியவர்.
முடிவுரை
இந்தத் தியாகிகள் வெளிச்சத்திற்கு வந்தவர்கள். திருவண்ணா மலையில் தந்தை பெரியார் தலைமையில் 15-11-1924ல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் என்று 21-11-1924 நவசக்தி இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இருந்த முதல் பெயர் யாகூப் ஹஸன். அவரைத் தொடர்ந்தே இராஜாஜி, எஸ்.சீனிவாச ஐயங்கார்இ டாக்டர். புp.வரதராஜலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், மற்றும் பலரின் பெயர்களும் இருந்தன. ஆம் விடுதலைப் போரில் முன்னணியில் நின்றவர்கள் தமிழக முஸ்லீம்கள்.
16-11-1924ல் இரண்டாம் நாள் மாநாட்டில் நாமக்கள் உஸ்மான் சாகிப் தீர்மானம் கொண்டு வந்தார் என ”திரு வி.க. வாழ்க்கை குறிப்புகள்” பக். 331ல் உள்ளது.
இவர்கள் யார்? இவர்கள் ஆற்றிய பணிகள் என்ன? இவர்களைப் போல் இன்னும் எத்தனை பேர்? – இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.
நம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் இந்தத் தியாகிகள், கால காலங்களுக்கும் முஸ்லீம்கள், இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு, நிமிர்ந்த தலையோடு வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அது உண்மைத் தியாகிகளை மீண்டும் உருவாக்கி புதிய வரலாறுகளைப் படைக்கும்.
www.kadayanallur.org
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label விடுதலை. Show all posts

Saturday, September 18, 2010
Thursday, May 6, 2010
மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள். அதனையொட்டி அவரது தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக இந்தக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.
அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).
1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.
1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.
திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.
கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.
இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.
போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.
திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.
ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.
எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.
திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.
இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.
வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.
இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.
நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.
அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.
வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.
சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.
இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.
"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."
மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!
கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.
திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.
திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.
இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.
திப்புவின் விவசாயக்கொள்கை
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.
சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.
திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
போர்களத்தில் நேர்மை
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”
மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.
தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.
திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.
திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது. ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது.
கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.
விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.
சஞ்சய்கான் ’the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.
புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.
சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.
அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.
அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும். அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.
Source : http://paalaivanathoothu.blogspot.com/2010/05/blog-post_8711.html

Wednesday, June 3, 2009
வாரியாருக்கு வாயடைப்பு
வாரியாருக்கு வாயடைப்பு
நான் திருவாரூ ரில் படித் துக் கொண்டி ருக் கும் போது எங்கள் ஊருக் குக் காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென் பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண் பர்களுடன் செல் வேன்.
காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர் கள், உருயிருள்ள ஒன் றையும் - மிருகங்க ளையோ, பறவைக ளையோ கொன்று மனிதன் சாப்பிடுவ தற்காக கடவுள் படைக் கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத் திற்கு கடவுள் என்ன உணவைப் படைத் தார் என அவரிடம் கேட்டேன்.
வாரியார் என்னை உட்காரும்படி அடக்கி விட்டு, தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண் போர் கேட்பார்கள். காய்கறிகளை பறித்த பின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவ தில்லை. ஆனால், மனி தன் காய்கறிகளைத் தாராளமாக உண்ண லாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.
உடனே நான் எழுந்து, நான் கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி?என்று கேட் டேன். மறுபடியும் என்னை அடக்கி உட் கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப் பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்க வில்லை. அதனால் நானும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை.
- கலைஞர்
நன்றி;விடுதலை.

Saturday, February 14, 2009
விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்
விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்
(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர், இவர் எழுதிய 'கடற்போர்கள்' 'பார்வை விஞ்ஞானம்' பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் 'விடுதலைப் போரில் இஸ்லாமியர்' என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை 'ஒற்றுமை' என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.
வரி தர மறுத்த வரிப்புலிகள்
இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.
வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.
கதி கலக்கிய கான் சாஹிபு
ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப்.. இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
ஷா அப்துல் அஜீஸ்
இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார்.
ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.
அஞ்சாத புலி ஹைதர் அலி
18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.
தீரன் திப்பு சுல்தான்
'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.
1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.
வங்கத்துச் சிங்கங்கள்
வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.
தென்னாட்டு வேங்கைகள்
தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.
குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.
முஃப்தீ இனாயத் அஹ்மது
தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.
'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
அன்றும்... அயோத்தி அவலம்...
தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.
புதைந்து போன புரட்சி மலர்கள்
வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அன்றும் ஒரு பொடோ
இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.
இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.
முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.
விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் - கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.
சிலையை உடைத்த சீலர்
தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். 'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.
கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.
ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.
பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.
பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.
ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.
பெண் போராளிகள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.
அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.
'என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு'.
வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்திய விடுதலைக்கு உழைத்த இஸ்லாமியர்கள் பலர்.
பஞ்சாபில் பிறந்த உபைதுல்லாஹ் சிந்தி காபூலில் ஏழு ஆண்டுகள் தங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 1923ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையின் ஒரு கிளையை இவர் காபூலில் ஏற்படுத்தினார். பின்னர் துருக்கியின் தலைநகரான ஆங்காரா சென்று அங்கு மூன்று ஆண்டுகள் தங்கி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.
சிங்கை சிங்கம்
1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.
1915 - ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 - ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Saturday, January 24, 2009
இந்திய விடுதலை வீரர் அல்லாமா கரீம் கனி
இந்திய விடுதலை வீரர் அல்லாமா கரீம் கனி
இந்திய துணை கண்டத்தின் விடுதலை வீரர்களில் ஒருவர் அல்லாமா கரீம் கனி.
இளையாங்குடி-சோதுகுடியில் கி.பி. 1907ல் முஹம்மது இபுறாஹீம் அவர்களின் மகனாக பிறந்தார். செய்யது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகையின் வழி வந்த ஐத்ரூஸ் என்னும் பெரியாரின் கொள்ளுப் பேரராவார்.
இளமையிலேயே அபார நினைவாற்றல் பெற்றிருந்த கரீம் கனி ஒரு நாள் ஜும்ஆ தொழுகையில் இமாம் " அல்காஷியா" சூராவை ஓத, அதை அப்படியே மனதில் பதித்துக்கொண்டு வீடு வந்ததும் தம் தந்தையிடம் ஓதிக் காட்டினார்.
அது கண்டு மகிழ்ந்த தந்தை அவரை ரங்கூன் செய்ன்ட் பால்ஸ் ஆங்கில பள்ளியில் சேர்த்தார். ஒவ்வொரு வகுப்பிலும் " டபுள் பிரமோஷன் " பெற்று சில ஆண்டுகளில் எட்டாம் வகுப்பை அடைந்தார்.
அப்பொழுது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரை இலங்கைக்கு அனுப்பி 'லண்டன் மெட்ரிக்' படிக்க செய்தார். அங்கு அதனை படித்துவிட்டு லண்டனுக்கு சென்று 'ஐ.ஸி.எஸ்" நோக்குடன் ப்ர்மா திரும்பிய பொழுது தந்தை திடீர் என காலமாகி விடவே அது நிறைவேறவில்லை.
அதன்பின் சுருக்கெழுத்து பயின்று ' ரங்கூன் டெய்லி நியூஸ் ' பத்திரிக்கையில் நிருபராக திறம்பட பணியாற்றினார்.
'உதய சூரியன்' எனும் பெயரில் ஒரு வார இதழை வெளியிட்டு அதன் மூலம் சமுதாய பணி புரிந்தார்.
அப்பொழுது இளைஞர் முஸ்லீம் லீக் , சோலியா முஸ்லீம் லீக் தேகாப்பியாச சங்கம் ஆகியவற்றை தொடங்கி இளைஞர்களுக்கு பயிர்ச்சி அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.
இந்தியாவில் மீலாத் விழா முதன் முதலாக கொண்டாடிய பொழுது ரங்கூனில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் ஒருங்கிணைத்து 1930ல் மிகப் பெரிய ஊர்வலத்தை நடத்தி ஜூப்ளி மன்றத்தில் மீலாது விழாவை சீரும் சிறப்புமாக நடத்தி வெற்றி கண்டார்.
பர்மா சட்டசபை உறுப்பினராக தேர்தலில் நின்று , தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாமா கரீம் கனி அமைச்சரவையில் பார்லிமெண்டரி செயலாளராக பணியாற்றினார்.
அப்பொழுது 25 வயதே ஆன அல்லாமா கரீம் கனி ( 1934 ) நான்கு மாதங்கள் வட, தென் இந்தியா சுற்றுப் பயணம் செய்து நாட்டின் சமூக நிலைகளை நன்கறிந்து கொண்டார்.
தென் கிழக்காசியாவிலேயே சிறந்த மார்க்க மேதைகளில் ஒருவராக திகழ்ந்தவர். அல்லாமா கரீம் கனி
இந்திய விடுதலை வீரர் மௌலானா முஹம்மது அலி , இந்திய விடுதலை வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் வலக்கரமாக திகழ்ந்தவர் அல்லாமா கரீம் கனி.
" மகாத்மா காந்திக்கு உலகம் அடக்கம், அந்த மகாத்மா இந்த மௌலானா முஹம்மது அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்." --பெரியார்.
"நான் இந்த ( மௌலானா முஹம்மது அலி ) வீரத்தலைவரை வெகுவாக மதிக்கிறேன். இந்தியாவின் விடுதலைக்காக அவர் செய்துள்ள தியாகங்களும் ஆற்றிய அரும்பெறும் தொண்டுகளும் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் தங்க மை கொண்டு எல்லாவற்றையும் விட மிக முக்கியமான இடத்தில் எழுதப்படும் " -நேருஜி.
1929 ஆம் ஆண்டு மியன்மாரின் தலைநகரான ரங்கூனுக்கு ( யாங்கூன் ) வந்திருந்தார் மௌலானா முஹம்மது அலி . அப்பொழுது ஒரு நாள் மௌலானா முஹம்மது அலியும் , அவர் தம் தோழர்களும் புடை சூழ புகழ் பெற்ற ' ரங்கூன் டெய்லி நியூஸ் " பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று அப்பத்திரிக்கையின் ஆசிரியரை சந்தித்து இன்று உங்கள் பத்திரிக்கையில் என்னுடைய பேச்சு ஏழு பத்தியில்
பிரசுரமாகியிருக்கின்றது.
அந்த செய்தியைஉங்கள் பத்திரிக்கைக்கு தொகுத்து கொடுத்தது யார் ? என்று கேட்டதும் , ஆசிரியருக்கு ஏதொ தவறு நடந்துவிட்டதோ என அஞ்சி திகைத்துப் போய் ' முஸ்லீம் இளைஞர் ஒருவர் தான் செய்தியை தந்தார். அவர் முன் எங்களிடம் நிருபராக இருந்தவர். அவர் எழுதி தந்த செய்தியை அப்படியே வெளியிட்டோம். அதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும்," என பரிவோடு கேட்டுக்கொண்டார்.
இதை கேட்டதும் மௌலானா முஹம்மது அலி வாய் விட்டு சிரித்து விட்டார். " நான் உங்களுக்கும் அந்த நிருபருக்கும் நன்றி சொல்ல வந்திருக்கின்றேன். நான் பேசிய பேச்சுக்கள் இந்தியாவிலும் வெளிநாடுக்ளிலும் உள்ள ப புகழ் பெற்ற பத்திரிக்கைளிச் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை இது போன்று முழுமையாக வந்ததில்லை. ஒரு பகுதி வரும். அதுவும் தப்பும் தவறுமாக உறுக்குலைந்து
போய் இருக்கும்.
ஆனால் இச்செய்தியை பார்த்ததும் என்க்கு மிக மன் நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.எனவே உங்களையும் உங்கள் நிருபரையும் பாராட்டி போகத்தான் வந்துள்ளேன்" என கூறியதோடு , மௌலானா தான் தங்கியுள்ள முகவரியை கொடுத்து, கட்டாயமாகத் தங்கள் நிருபரை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள்" என கூறி விடை பெற்றார்..
மாறு நாள் அதிகாலையில் மௌலானா தம் தோழர்களுடன் சுவையான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு 22 வயதே நிரம்பிய ஓர் இளைஞர் முன்தோன்றி " நான் தான் கரீம் கனி, ரங்கூன் டெய்லி நியூஸ் பத்திரிக்கை அலுவலகத்திற்கு என்னை தேடி வந்ததாக சொன்னார்கள்." என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதை கேட்டதும் " நீங்களா அந்த் நிருபர்? என ஆச்சரியத்தோடு கேட்டு கட்டி அனைத்து முத்தமிட்டார் மவ்லானா.
பின் அவர் தன் அருகில் அமர்த்திக்கொண்டு " என் ஆங்கில பேச்சைக் கூட ஒரு சில பத்திரிக்கையாளர்கள் ஓர் அளவு குறிப்பெடுத்துவிடுவார்கள். ஆனால் எனது உருது பேச்சை இதுவரைக்கும் யாரும் முழுமையாக எடுத்ததை நான் பார்த்தில்லை. ஆனால் , நான் சென்ற வெள்ளிக்கிழமை சூரத் பள்ளிவாசல் ஜும்மாவில் உருதுவில் பேசியதை அப்படியே அனுக்குலையாமல் ஒரு வார்த்தை கூட விடாமல் எடுத்து அதை
மிகவும் திறமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தீர்கள்.
அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நல்ல வேலையாக நீங்களே இங்கு வந்துவிட்டடீர்கள்.வரும் வெள்ளிக்கிழமையன்று சோலியா பள்ளியில் உருதுவில் பேசுகிறேன். அதை தாங்கள் தமிழில் மொழி பெயர்த்து பேச வேண்டும்." என மவ்லானா கேட்டுக் கொண்டார். அதை கரீம் கனி ஏற்றுக் கோண்டார்.
ரங்கூன் ( யாங்கூன் ) மாநகரத்தில் பெறிய ஜும் ஆ பள்ளிவாசல்கள் இரண்டு உண்டு. அவற்றில் ஒன்று சூரத்தி முஸ்லீம்களுக்கும் மற்றொன்று தமிழ் முஸ்லீம்களுக்கு, அதாவது சோலியா முஸ்லீம்களுக்கு.அவற்றில் ஏக காலத்தி ஆயிரக்கணக்கானோர் அடுக்கு மாடியுடன் அவை அமைந்துள்ளன.
ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் 1937 வரை இந்தியாவின் ஒரு மாகாணமாக பர்மிய நாடு ( மியன்மார் ) இருந்து வந்ததால் அங்கு இந்தியர் தாங்களின் தாய் திருநாட்டின் ஒரு பகுதியாக அதை கருதினர்.
எனவே காட்டை கழனியாக்கி விவசாயிகளாகவும் வியாபாரிகளாகவும், தோட்டிகளாகவும், தொழிலாளிகளாகவும் அதிகாரிகளாகவும் சுமார் மூன்று லட்சம் இந்தியர்கள் குடியேறி வாழ்ந்து வந்தன்ர்.
இவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள்; அதிலும் சிறப்பாக தமிழ் முஸ்லீம்களாவர், சோலியா முஸ்லீம்கள் என்று அங்கே அழைக்கப்பட்டார்கள்.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னே சோழ நாட்டிலிருந்து முதல்முதலாக குடியேறிய தமிழ் முஸ்லீம்களை 'சோலியா முஸ்லீம்கள்" என்ற அடை மொழியால் அழைத்தார்கள். தொடர்ந்து அங்கு குடியேறிய எல்லா தமிழ் முஸ்லீகளையும் சோலியா முஸ்லீம்கள் என்று அழைக்கத்தொடங்கினர்.(இதே நிலைதான் சிங்கப்பூர், மலேஷியாவிலும். சிங்கப்பூர், பினாங்கு, கோலாலம்பூர், மற்றும் மலேஷியாவின் நகரங்களில்
சோலியா ஸ்ட்ரீட் CHULIA STREET , சோலியா மஸ்ஜித்கள் CHULIA MASJID) அந்த வம்சாவளியில் ஒருவராக திகழ்ந்தவர் தான் அல்லாமா கரீம் கனி.
அதன் பின் சிறிது காலத்தில் மௌலானா முஹம்மது அலி அவர்கள் காலமாகிவிட்டார்கள். மௌலானா முஹம்மது அலி அவர்களின் மறைவு கரீம் கனிக்கு பெரும் வருத்தத்தை தந்தாலும் விடா முயற்ச்சியால் மௌலானா முஹம்மது அலி ஜனஹர் சென்ற அதே வழியில் சென்று வெற்றியும் பெற்றார்.
பின் இந்திய சுதந்திர கழகம் என்ற அமைப்பினை நிறுவி , விடுதலைக்காக தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார். ரங்கூனில் வெளியான 'தேசவுபகாரி’ என்ற பத்திரிக்கையில் கூட்டு ஆசிரியராக பணிபுரிந்தார்.
அவ்வமையம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புரட்சிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமை பொறுப்பை உதறித் தள்ளிவிட்டு ஜெர்மனியின் ஹிட்லரோடும் ஜப்பானிய அரசோடும் பேச்சு நடத்தி விட்டு 1943 ஜூலை 3 ல் போஸ் சிங்கப்பூர் வந்தார். வந்த மறு நாள் இந்திய சுதந்திரப் படை ( ஐ.என்.ஏ.)யின் ரானுவத் தளபதியானார். முற்றிலுமாக தென் கிழக்காசியாவில் வாழ்ந்த இந்தியர்களை கொண்டே உருவாக்கப்பட்ட படை அது.
பர்மாவின் சுதந்திர கழகத் தலைவராக இருந்த அல்லாமா கரீம் கனி, ஜூலை4ம் தேதி நடைபெறவிருந்த ஒரு மகாநாட்டில் கல்ந்து கொள்ள சிங்கப்பூர் வந்திருந்தார். அவர் ஜூல 8ம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். அதன்பிறகு இரு புரட்சித் தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.
மறு நாள் இரங்கூனுக்கு சென்ற கரீம் கனி ' ஆஜாத் ஹிந்து அரசு " பிரகடன விழாவில் கலந்து கொள்ள மீண்டும் சிங்கப்பூர் வந்தார்.
சிங்கப்பூர் நகராட்சி திடலில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் அல்லாமா கரீம் கனி தனக்கே உரித்தான அமுதத் தமிழில் உரையாற்றினார்.
இது உலகில் வேறெந்த தமிழனுக்கும் கிடைத்திராத அற்புதமான பெருமை.
அல்லாமா கரீம் கனி நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்க்கு நெருக்கமாகி இந்திய சுதந்திர அரசின் ஓர் அமைச்சராக பொறுப்பேற்று போஸின் வலது கரமாக பணியாற்றினார்.
இந்த அரசின் தலைமையகம் ரங்கூனுக்கு மாற்றப் பட்டதால் இருவருக்கும் நெருக்கம் இறுக்கமானது. இதனால் அல்லாமா கரீம் கனியின் ஆழ்ந்த நாட்டுப் பற்றையும் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே கணிக்கும் ஆற்றலையும் கண்டு வியந்தார் போஸ்.
இம்பால் படையெடுப்பில் ஏற்பட்ட இழப்பால் மக்களூம் படை வீரர்களும் சோர்வடைந்திருந்தனர். சோர்வை நீக்க ரங்கூனில் 1944 ஜூலை 4ம் தேதி முதல் 11ம் தேதிவரை " நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாரம் கொண்டாட செய்தார். அதில் மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் பொங்கும் ஒரு நாடகத்தை அல்லாமா கரீம் கனி நடத்தினார். அதன் மூலம் சுதந்திர உணர்வு பாதுகாக்கப்பட்டது.
ரங்கூனில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையில் அல்லாமா கரீம் கனி 1945 ஏப்ரலில் பேங்காக் சென்றார். அங்கேதான் கடைசியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை ஆகஸ்ட் 17ம் தேதி சந்தித்தார்.அப்போது " பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்று பேச்சை தொடங்கி அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.
பிரிட்டிஷார் போரில் ஜப்பானிடம் இழந்த மலேயா, சிங்கப்பூரை மீண்டும் கைப்பற்றிய பொழுது, அல்லாமா கரீம் கனியையும் கைது செய்தனர்.
பின்னர் விடுதலை செய்யப்பட்ட அவர் மீண்டும் பர்மா திரும்ப மனமில்லாது
சிங்கப்பூர் வந்தார். வியக்த்தக்க வகையில் 28 நாட்களில் மலாய் மொழியில் பேசவும், எழுதவும், அனல் தெறிக்க சொற்பொழிவுகள் ஆற்றவும் திறமை பெற்றார். சிங்கப்பூர் ' மலேயா நன்பன் ' பத்திரிக்கையின் ஆசிரியரானார்.அத்துடன் மலாய் மொழியிலும் ஒரு பத்திரிக்கை நடத்தினார்.
இரு மொழி பத்திரிக்கைகளின் மூலமாக இந்திய வம்சாவழி, மலாய் வம்சாவழி முஸ்லீம்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வுகளையும் உருவாக்கி அது வரை இருசாராரும் ஒருவர் இனத்தினை மற்றொருவர் இனம் தாழ்ச்சியாக எண்ணி உறவாடிக் கொண்டிருந்த சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
போர்க்காலத்தில் ஒரு ஹாலந்து( DUTCH) தம்பதியர் தம் பெண் குழந்தை ஒன்றை சிங்கப்பூரில் விட்டுவிட்டு தங்கள் நாடு திரும்பி விட்டார்கள். அக்குழந்தையைஒரு மலாய் முஸ்லீம் குடும்பம் " நாதிரா" என பெயரிட்டு இஸ்லாமிய முறைப்படி வளர்த்து ஆளாக்கி ஒரு முஸ்லீமுக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் நாதிராவை எங்களிடம் திரும்பக் கொடு என்று கேட்ட பொழுது சிங்கப்பூரில் இருந்த
கிறிஸ்தவ அமைப்புகளும் ஒட்டு மொத்தமாக பெற்றோர்களுக்கு தூபம் போட அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்களும் ஒத்துழைத்து .குழ்ந்தை மைனராக இருந்தபொழுது மதமாற்றமும் திருமணமும் நிகழ்ந்ததால் அவை செல்லத்தக்கதல்ல என்றும் நாதிரா பெற்றோரிடமே திரும்பிட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி நாதிரா ஒரு கிறிஸ்தவ அமைப்பில் ஒப்படைக்க செய்து விட்டார்கள்.
உணர்ச்சிகளால் உந்தப்பட்டு கொதித்தெழுந்து இந்த தீர்ப்பை , அக்கிரமங்களை எதிர்த்து அல்லாமா கரீம் கனி தம் இரு மொழி பத்திரிகைகளில் எழுதியதுடன் பள்ளிவாயில்களிலும் மலாய் மொழியிலும் தமிழிலும் அனல் பறக்கும் சொற்பொழிவாற்றினார். அதன் காரணமாக மலேயா ,சிங்கப்பூரில் மலாய், இந்திய முஸ்லீம்கள் ஒன்றிணைந்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட இரத்தம் சிந்தப்பட்டு பல
ஆங்கிலேயர்கள் உயிரிழந்து அல்லாமா கரீம் கனி கைது செய்யப்பட்டு சிங்கப்பூரில் சிறையிலடைக்கப்பட்டார்.
பின்னர் பிரிட்டீஷார் மலேயாவுக்கு சுதந்திரம் அளிக்கக்கூடிய தருணத்தில்மலேயாவின் தலைவர்களின் முயற்ச்சிகளால் பிரிட்டீஷார் கரீம் கனியை விடுதலை செய்து பர்மா அல்லது இந்தியாவுக்கு செல்ல அனுமதித்தனர்.
இந்த இரு நாடுகளும் இந்த தியாக செம்மலை ஏற்றுக் கொள்ள மறுத்ததினால் இறுதியாக அரசியலில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பாக்கிஸ்தான் கரீம் கனியை ஏற்றுக் கொண்டது.
அல்லாமா கரீம் கனி திருக்குரான் , ஹதீஸ் ஆராய்ச்சியில் மிகவும் திளைத்தவர். இஸ்லாம் மார்க்க சேவைக்கு தன்னை அர்ப்பணித்தவர்.
அல்லாமா கரீம் கனி தமிழ் , மலாய், ஆங்கிலம்,உருது, அரபி, பார்ஸி ஆகிய புலமை பெற்றவர். மிகவும் விரைவாக எழுதும் ஆற்றல் பெற்ற இவர் தேநீர் அருந்திக்கொண்டு , நிலக்கடலை சாப்பிட்டுக்கொண்டே பத்திரிக்கைக்காண செய்திகள் அனைத்தையும் எழுதி முடித்துவிடுவார். இவர் எழுதிய நூல்கள் சந்நிதானம் அல்லது மூஃமினின் மிராஜ், முஸ்லீமின் முறைப்பாடு,ஜோதி,ஆன்ம சூரியன்,முஹ்யிதீன்
மான்யம்,பிரளய சகாப்தம் ஆகியவை.
அல்லாமா கரீம் கனியின் அருமை பெருமைகளை தெரியாத கராச்சி மக்களிடையே வறுமையோடு வாழ்ந்து 22.6.1978ல் மறைந்தார் சோதுகுடி தந்த மாணிக்கம்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
source :இளையாங்குடி.com
Rajaghiri Gazzali

Thursday, August 14, 2008
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!
இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம்.
-ஆசிரியர், மக்கள் உரிமை வார இதழ், சென்னை.
குஞ்சாலி மரைக்காயர்கள்
போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறை யாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர் களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டி லேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே.
சிராஜுத் தௌலா
17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர் கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத் தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.
மருதநாயகம்
பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத் தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத் துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர் களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கிய தையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
ஹைதர் அலி
17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப் படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.
திப்பு சுல்தான்
'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தி யாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.
ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர் களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கி லேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.
திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட னர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806லிஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார் கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.
இரண்டாம் பகதூர்ஷா
1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்த னர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.
ஜான்சி ராணி லெட்சுமிபாய்
ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங் களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டை யைக் கைப்பற்றி னார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவரா வார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவ ராவார்.
முதல் இந்திய இடைக்கால அரசு
1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கி லேயப் படையை முஸ்லிம்கள் தோற் கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியா வுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல் லாஹ், உள்துறை அமைச்ச ராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்ருதீன் தையாப்ஜி
இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்லிஉன்லிநபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
காங்கிரஸில் முஸ்லிம்கள்
காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல் லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915லில்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந் தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெண்கள்
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அலி சகோதரர்கள்
கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கி களாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.
பகத்சிங்
மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர் கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.
மதரஸாக்களின் சுதந்திர வேட்கை
சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி னர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக் களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.
முஸ்லிம் வள்ளல்கள்
இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்.
ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்
காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.
ஜாலியன் வாலாபாக்
இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கி லேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக் களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.
வள்ளல் ஜமால் முஹம்மது
காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத் திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.
காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.
கேரள மாப்பிள்ளைமார்கள்
1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.
தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்

Subscribe to:
Posts (Atom)