Showing posts with label சேர்க்கை. Show all posts
Showing posts with label சேர்க்கை. Show all posts

Thursday, August 14, 2008

காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டயப் படிப்பு சேர்க்கை

காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டயப் படிப்பு சேர்க்கை


மதுரை, ஆக. 13: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியச் சிந்தனை மற்றும் ஆய்வு நிறுவனத்தின் மூலம் காந்தியச் சிந்தனை சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து அருங்காட்சியகச் செயலர் இரா.ரெங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2008-09-ம் ஆண்டுக்கான காந்தியச் சிந்தனைச் சான்றிதழ், பட்டயப் படிப்புகளுக்கும், யோகா, தியான மற்றும் முழுமை நலவாழ்வு பட்டய மற்றும் உயர் பட்டயப் படிப்புக்கும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது (மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

காந்தியச் சிந்தனை- சான்றிதழ் படிப்பு, காந்தியச் சிந்தனை- பட்டயப் படிப்பு, யோகா, தியானம் மற்றும் முழுமை நலவாழ்வு- பட்டயப் படிப்பு மற்றும் உயர் பட்டயப் படிப்பு.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அல்லது 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும், டிகிரி படிப்பு முடித்தோர் உயர் பட்டயப் படிப்புக்கும் ஆக.25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பேராசிரியர் எஸ்.ஜெயராஜ், காந்தியச் சிந்தனை மற்றும் ஆய்வு நிறுவனம், காந்தி மியூசியம்-625 020 (தொலைபேசி எண்: 9442405759, 9976888960).