Sunday, June 8, 2008

உயர்கல்வி பயில உதவியை எதிர்பார்க்கும் ஏழை மாணவி




ஜூனியார் விகடனிள்

இந்த வசனம்,



சாஸிதாவுக்குத் தீர்வு!
பேராவூரணியில் இருந்து சாஸிதா என்ற மாணவி நம்மைத் தொடர்பு கொண் டார்.
''நாங்க ரொம்ப வறுமையான குடும் பத்தைச் சேர்ந்தவங்கண்ணே. அப்பா கிடையாது. அம்மா துணிமணிகளை வாங்கி நடந்து போய் வியாபாரம் பண்றவங்க. இவ்வளவு வறுமையிலும் 1080 மார்க் வாங்கினேன். மேற்கொண்டு படிக்கிறது எப்படின்னு தெரியலை. அண்ணா யுனிவர் சிட்டிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எப்படியும் ஃப்ரீ ஸீட் கிடைச்சிடும். ஆனா, இதர செலவுகளைப் பெரிய மனசுள்ள யாராவது ஏத்துக்கிட்டா புண்ணியமா போகும்'' என சோகத்தோடு சொன்னார் சாஸிதா.
கும்பகோணத்தில் இருக்கும் ஹலிமா எஜுகேஷனல் அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து விஷயத்தைச் சொன்னோம்.
''சாஸிதாவின் படிப்பு செலவுகளை யும் இதர செலவுகளையம் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனி சாஸிதா எங்கள் குழந்தை!'' எனப் பெருமனதோடு சொன்னார்கள் ஹலிமா அறக்கட்டளை நிர்வாகிகள்