Showing posts with label கட்டுரைப்போட்டி. Show all posts
Showing posts with label கட்டுரைப்போட்டி. Show all posts

Saturday, December 27, 2008

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்டுரைப் போட்டி

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து கட்டுரைப் போட்டி

சென்னை, டிச. 26: "பயங்கரவாதத்துக்கு எதிரான பதில் நடவடிக்கையில் போலீஸ், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள், மக்கள் பங்களிப்பு' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு போலீஸ் நண்பர்கள் திட்ட இயக்குநரும் ஐ.ஜி. யுமான பிரதீப் வி. பிலிப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர், தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்û

fop@airtelmail.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி தங்களது பங்கேற்பைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பதிவுக் கட்டணம் இல்லை.

பங்கேற்பாளர்கள் தங்களது சுய விவரங்களை atccontest@gmail.com

என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

கட்டுரைகள் 1500 முதல் 2 ஆயிரம் வார்த்தைகள் வரையில் இருக்கலாம். இதற்கான விண்ணப்ப மனுக்களை 2009 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ. 7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 26, 2008

சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி

இறைவனின் மாபெரும் அருளால் கடந்த 2007-08 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றைச் சத்தியமார்க்கம்.காம் நல்லமுறையில் நடத்தியது. அதனைப் போன்றதொரு கட்டுரைப் போட்டியினை தமிழ் மொழியில் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் சத்தியமார்க்கம்.காம் நடத்தத் தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றோடு, எடுத்தாளப்படும் கட்டுரைத் தலைப்பில் சிறப்பான ஆய்வுடன் கூடிய சமுதாயத்தின் எதிர்கால நன்மைக்கான சரியானத் தீர்வைத் தரும் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் தங்களின் அரிய சிந்தனைகளைச் சிறப்பான ஆய்வுகளுடனும் அதற்குரிய சரியான தீர்வுகளுடனும் சமர்ப்பிக்க முன்வருமாறு தமிழ் சமுதாய வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.


------------------------------------------
நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு
------------------------------------------
(பரிசுகள் விபரம்: ஆண்கள் & பெண்கள்)
சிறப்புப் பரிசு: x 1



லேப்டாப் (acer-aspire)

முதல் பரிசு: x 2 (ஆண்-1, பெண்-1)




டிஜிட்டல் திருக்குர்ஆன்
இரண்டாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்,
ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்.

மூன்றாம் பரிசு : x 2 (ஆண்-1, பெண்-1)

ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்

ஆறுதல் பரிசுகள் : x 2 (ஆண்கள்-2, பெண்கள்-2)

ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்




கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்

3.5 சத இடஒதுக்கீடு தீர்வாகுமா?.
இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?
இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!
உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்?
இந்திய அரசியல் முஸ்லிம்களுக்கு ஹராமா?!
இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு...?
காங்கிரஸில் சங்கபரிவாரத்தின் ஊடுருவல்.
பெருகிவரும் போலி முஸ்லிம் தீவிரவாத குற்றச்சாட்டுக்கான தீர்வு!
உலக அமைதி இஸ்லாத்தினூடாக..!
உலகின் அழியா நிலையான இஸம் - இஸ்லாம்!
இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு.
முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதற்கான வழிகள்!
உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!
இஸ்லாமியப் பிரச்சாரம் திரைப்படத்துறை மூலமாக...
சாவர்க்கரும் பாராளுமன்றத்தீட்டும்!
இலங்கை முஸ்லிம்களின் அவலநிலைக்கான தீர்வு!
குண்டுவெடிப்புகளும் திரைமறைவு சதிகளும்!
ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?
போராட்டம் - நிலையான வாழ்விற்கான ஒரே வழி!.
அமெரிக்கா இஸ்லாத்தை நோக்கி..!.
மத்திய கிழக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளும்!
மஸ்ஜிதுல் அக்ஸா - முஸ்லிம்களின் ஆன்மா!
சியோனிஸ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி!
ஊழல் அரசியலை ஒழிப்பதற்கான வழி!
தமிழகம் - ஜாதி அரசியலிலிருந்து விடியலை நோக்கி!


-------------------------------
கட்டுரைப் போட்டிக்கான விதிகள் :
-------------------------------
1. போட்டியாளர் மேற்கூறப்பட்ட தலைப்புகளில் அதிகபட்சமாக மூன்று தலைப்பில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்.

2. கொடுக்கப்பட்ட தலைப்பைத் தழுவி மட்டுமே கட்டுரை இருத்தல் வேண்டும்; சம்பந்தப்பட்டத் தலைப்புக்கான தீர்வு இஸ்லாமிய அடிப்படையில் அலசப்பட்டிருக்க வேண்டும்.

3. போட்டியாளர் சமர்ப்பிக்கும் கட்டுரைகள் தானே சொந்தமாய் எழுதியதாகவும் முன் எந்தத் தாளிகளிலோ இணையத் தளத்திலோ வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்.

4. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைக் குறிப்பிடும் பொழுதுத் தெளிவாக எண்களுடன் குறிப்பிட வேண்டும்.

5. கட்டுரை கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும். எந்த நாட்டினதும் சமயம், அரசியல் கட்சி, இயக்கங்கள் ஆகியவற்றையோ தனிமனிதரையோ இழித்துரைப்பதாகவோ தாக்குவதாகவோ இல்லாமல், தெளிவான ஆதாரங்களுடனும் அழகிய வாதங்களுடன் ஓர் அழகிய இஸ்லாமியப் படைப்பு என்ற தகுதியை நாடுவதாகவும் நயத்துடனும் எழுதப்படவேண்டும்.

6. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் கட்டுரைப்போட்டி குழுவினர்களால் தணிக்கை செய்யப்பட்டு தளத்தில் பதிக்கப்படும்.

7. கட்டுரைப் போட்டியில் பங்குபெறுபவருக்கு வயதிற்கான வரம்பு ஏதுமில்லை.

8. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அறிவிக்கப்படும்.

9. தமிழ் அறிந்த சர்வதேச அளவிலான அனைத்துலக வாசகர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

10. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள் போட்டிகளில் பங்குபெற முடியாது.

11. போட்டியாளர் கண்டிப்பாகத் தனது தொடர்பு எண்ணைத் தவறாமல் கட்டுரையின் இறுதியில் தெரிவித்திருக்க வேண்டும்.

12. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.

------------------------------
கட்டுரை எழுதுபவர் கவனத்திற்கு :
------------------------------
1. கட்டுரைகள் தட்டச்சியோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ எவ்வடிவில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்.

2. கட்டுரை தட்டச்சப்பட்டு அனுப்பப்படுகிறது எனில், கட்டுரையின் எழுத்துரு எண் 10 அளவை தேர்ந்தெடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டு, A4 தாள் அளவில் மூன்று பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டுரை வரைவதற்குத் துணை நின்ற நூல்கள், துணை ஆக்கங்களுக்கான குறிப்புக்களைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட வேண்டும். இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டிருந்தால் தள முகவரியைக் குறிப்பிட வேண்டும். சுட்டப்படும் ஆதாரங்கள் இணையத்தில் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைக்கலாம். போட்டிக்குச் சமர்ப்பிக்கும் கட்டுரையின் துவக்கப் பக்கத்தில் கட்டுரைக்கான தலைப்பைக் குறிப்பிட வேண்டும்.

3. குர்ஆன், ஹதீஸ்களை பக்கபலமாக சேர்க்க விரும்புபவர்கள், மிகவும் அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே சேர்க்கவேண்டும். அதிக அளவில் இறைவசனங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். இறைவசனங்கள், ஹதீஸ் சம்பவங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, சொல்லவரும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.

4. கட்டுரையாளரின் பெயர் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்ணிட்டு முழு முகவரியுடன் 15.12.2008 அன்று இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு வந்து சேரும் ஆக்கங்கள் போட்டிக்குப் பரிசீலிக்கப்படாது.

5. கட்டுரைகளை contest@satyamargam.com This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரையாளரின் ஆக்கத்தை நிர்வாகம் பெற்றவுடன் அதை உறுதிப்படுத்தும் செய்தி கட்டுரையாளருக்கு மின்மடல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

7. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியிடப்படும். வெற்றியாளர்கள் விரும்பினால் அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிடும். பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் இருப்பின் அவர்கள் வெளியிட விரும்பும் புனைப்பெயர்களின் விபரங்களைக் கட்டுரையின் முடிவில் குறிப்பிட வேண்டும்.
போட்டி சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், ஆலோசனை வழங்க விரும்புவோர் நிர்வாகத்தை contest@satyamargam.com This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.