அறிவியல் அதிசயம்
(புத்தக மதிப்புரை - தினத்தந்தி நாளிதழ் 13-1-2009)
தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக வெளிவந்த அறிவியல் அதிசயம் கட்டுரைகள் புத்தக வடிவில் வெளி வந்துள்ளது.
பொறியியல், மருத்துவம், விண்வெளி, ரோபட், தொழில் நுட்பம் என்று அனைத்து தரப்பு அறிவியல் கண்டு பிடிப்புகளும் ஆராய்ச்சி தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக விண்வெளியில் உள்ள கிரகங்களுக்கு லிப்ட் அமைக்கும் ஆராய்ச்சி மற்றும் மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் ஆராய்ச்சிகள் ஆச்சரியமூட்டும் தகவல்கள் ஆகும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் அமைந்திருப்பது சிறப்பு. அழகான அச்சும், நேர்த்-தி-யான வடிவமைப்பும் புத்தகத்தின் சிறப்பை மேம்படுத்துகின்றன. தமிழ்ப்புத்தக உலகுக்கு ஓர் அரிய புது வரவு.
(ஆசிரியர்: எம்.ஜே.எம்.இக்பால் வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை-108; பக்கம்: 440; விலை: ரூ.500)