Monday, July 14, 2008

ஹஜ் பயணத்திற்கு கோட்டா ஒரு லட்சம் பேர் ஏமாற்றம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களின் எண் ணிக்கை இந்தாண்டு இரு மடங் காகி உள்ளது. சவுதி கோட்டா கட்டுப்பாட்டினால், ஒரு லட்சம் பேருக்கு வாய்ப்பு பறிபோகலாம். ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதம் ஹஜ் யாத்திரையினர் மெக் காவில் கூடி சிறப்பு தொழுகை நடத்துவர். வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டும் என்பது முஸ்லிம்களின் குறிக் கோள்.



சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா ஆகிய புனித இடங்களுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் செல்வர். ஒவ்வொரு நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர் வருவதால், இட நெரிசல், அடிப்படை வசதி பாதிப்பு போன்ற சூழ்நிலையால், ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா கட்டுப்பாடு விதித்துள்ளது சவுதி அரசு. கடந்தாண்டு, இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு ஒரு லட் சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப் பித்தனர். ஹஜ் கமிட்டி நடத்திய குலுக்கலில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு, இரண்டு லட்சத்து 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், சவுதி கோட்டா கட்டுப்பாட்டால், ஒரு லட்சம் பேர் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று தெரிகிறது.



இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் முகமது ஓவைஸ் கூறுகையில், "இந்தியாவில் இருந்து இவ்வளவு பேர் தான் வர வேண்டும் என்று சவுதி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது. முஸ்லிம்களில் பொரு ளாதார வசதி உள்ளவர்கள் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள் ளது' என்று தெரிவித்தார்.



வாய்ப்பு பறிபோகும் பயத்தில் உள்ள சிலர் கூறுகையில், "ஐந்தாண் டுக்குள் ஹஜ் பயணம் மேற்கொண் டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், முதன் முறை விண்ணப் பித்த எங்களை போல பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறினர்.



சவுதியில் பிரதான மசூதி, கபா வளாகத்தை சுற்றி பல கட்டடங்கள் பெருகி வருவதால், குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் பல இடிக்கப்பட்டன. அதனால், வெகு தூரத்தில் தங்கி, மெக்கா செல்ல வேண்டிய நிலையும் இப்போது உருவாகி உள்ளது.

No comments: