Friday, June 25, 2010

செம்மொழி எம்மொழி

செம்மொழி எம்மொழி

”தமிழ்” என்றாலே “மூவினம்”

த – என்னும் வல்லினம்;
மி – என்னும் மெல்லினம்
ழ் – என்னும் இடையினம்
முத்தமிழாம்
இயல்,இசை,கூத்து
மூவேந்தர்
சேர்,சோழ, பாண்டியர்
முக்கனியின் சுவைபோன்றே
மூன்று தமிழ்ச் சங்கம்
முப்பெரும் கடல் தாண்டி
முழங்கும் மொழி
தாய்மொழியாம் தமிழ் மற்ற மொழிகட்கும்
தாயான மொழி
தொன்மை;வளமை;தனித்தன்மை
செம்மை;இனிமை;எளிமை;இளமை;
வளமை;புதுமை;மென்மை;மேன்மை கண்டு
பரிதிமாற் கலைஞர் ஆய்வு செய்தார்;
மூதறிஞர் கலைஞர் நிறைவு செய்தார்
எம்மொழி “செம்மொழி”யானதே..!!
ஆதாம் பேசியதும் தமிழே என்று
ஆய்வுகள் உண்டு
பேச்சுத் தமிழ்; எங்களின் செவி வழி
மூச்சுத் தமிழ்
அருந்தமிழ்ப் பற்றிய குறுஞ்செய்திகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்;இதுவே இந்தியாவின் முதல் இணையப் பல்கலைக்கழகமாகும்.
“கண்ணுக்கு மையிடுவது போல, பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும்.மை அதிகமானால் கண் எப்படிக் கரித்துவிடுகிறதோ, அதுபோல பிறமொழிகள் அதிகம் கலப்பதும் ஆபத்தான நிலையை உண்டாக்கும்.”- பேரறிஞர் அண்ணா.
நமஸ்காரம் வணக்கமானதும்; உபந்நியாசம் சொற்பொழிவானதும்; பிரகஸ்பதி தலைவரானதும்;
மகாஜனங்கள் பொதுமக்களானதும்; உபாத்தியாயர் ஆசிரியரானதும்; காரியதரிசி செயலாளரானதும்; சர்வகலாசாலை பல்கலைக்கழகமானதும்; ராஜ்ஜியம் மாநிலமானதும்; உப அத்தியட்சகர் துணைவேந்தரானதும் பேரறிஞர் அன்ணாவின் பெரும் முயற்சியே;அதனால் பெற்றது தமிழுக்குப் புதிய வளர்ச்சியே.
சிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்கள், இதழ்கள் கிடைக்கின்றன. அந்நாட்டு குடியரசு தலைவர் செல்லப்பன் ராமநாதன் தமிழர்தான். அங்கே பாராளுமன்றம், அமைச்சரவையிலும் தமிழர்கள் அங்கம் வகிக்கின்றனர்; சிங்கப்பூர் வானூர்தியிலும் தமிழில் அறிவிப்புகள் சொல்லப்படுகின்றன.
1955 ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற 18 மொழிகளின் வல்லுந்னர்களின் ஆய்வரங்கத்தில்
Tax, assessment, duty, customs ஆகிய ஆங்கிலச்சொற்களுக்கு இணையான இந்திய மொழி சொற்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேறு மொழி எதிலும் பொருத்தமான வார்த்தைகள் சமர்ப்பிக்கப் படவில்லை.
தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்ட தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை எழுந்தார்,”இதில் எல்லாச் சொற்களுக்கும் தமிழில் தனி தனி சொற்கள் உண்டு. அவை வரி, தீர்வை, கடமை, சுங்கம்” என்று முழங்கினார்
தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் வல்லுநர்கள்.
1991-ம் ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகபட்சமாக சீன மொழி(மாண்டரின்)பேசுவோர் எண்ணிக்கை 130 கோடியாக இருந்தது. 8-வது இடத்தில் தமிழ்(11 கோடியே 40 லட்சம் பேர்) இருந்தது. இதைவிடக் குறைவே ஆங்கிலம் பேசுவோர்.
திருக்குறளின் பெருமையை அறிந்த காந்தியடிகள்,”திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகின்றேன்” என்றார்.
ரஷ்ய கிரளின் மாளிகையில் அணுத்துளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது திருக்குறள்.
விக்டோரியா அரசியும் வைத்திருந்தார் திருக்குறள்
இங்கிலாந்தில் விவிலியத்துடன் போற்றப்படுகின்றது திருக்குறள்
தமிழ்நாடு சட்டமன்றம் திருக்குறள் ஓதியேத் துவங்கும்
சூரிய ஆண்டு முறையில் திருவள்ளுவராண்டு முறை; தை 1-ந் திகதி புத்தாண்டு;ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவராண்டு 31 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு அரசும் திருவள்ளுவராண்டு முறையைப் பின்பற்றி வருகின்றது. அதன் 12 மாதங்களாவன:
கறவம்(தை); கும்பம்(மாசி);மீனம்(பங்குனி)மேழம்(சித்திரை);விடை(வைகாசி),ஆடவை(ஆனி);கடகம்(ஆடி);மடங்கல்(ஆவணி);கன்னி(புரட்டசி);துலை(ஐப்பசி);நளி(கார்திகை)சிலை(மர்கழி)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிஜி, மொரீசியஸ், பர்மா, தெ ஆப்பிரிக்கா, வியட்நாம் முதலிய நாடுகளில் தமிழ் பேசப்படுகின்றது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தாய்மொழியாக-கல்வி மொழியாக, துணை ஆட்சி மொழியாக, செய்திப் பரவல் தொடர்பு மொழியாக, இலக்கிய மொழியாக பயன்பட்டு வருகின்றது. இந்தோனேசியா, மொரீசியஸ், டிரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் தாய்மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் தமிழ் மொழி பல்கலைக்கழகங்களில் அறிஞர்கள் விரும்பிப் பயிலும் மொழியாக தமிழ் அமைந்துள்ளது. ”பலநாடுகளில் பேசப்படுகின்ற நிலைகளில் உள்ள உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழி திகழ்கின்றது”என்று செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் கமில் கவலபில் கூறியுள்ளார்.”யுனெஸ்கோ” நிறுவனம் தமிழ் மொழியில் இதழ் வெளியிடுவது தமிழுக்கு கிடைத்த இன்னொரு சிறப்பாகும்.
உலகத் தமிழ் மாநாடுகள்:
முதல் மாநாடு கோலாலம்பூர்(1966)
2-வது மாநாடு சென்னை(1968)
3-வது மாநாடு பாரீஸ்(1970)
4-வது மாநாடு யாழ்ப்பாணம்(1974)
5-வது மாநாடு மதுரை(1981)
6-வது மாநாடு கோலாலம்பூர்(1987)
7-வது மாநாடு மொரீசியஸ்(1989)
8-வது மாநாடு தஞ்சாவூர்(1995)
உலகத் தமிழ்ச்
செம்மொழி மாநாடு கோவை(2010)

உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில்
”கற்க கசடற கற்பவைக் கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
“அமிழ்து அமிழ்து” என்று திரும்பத் திரும்ப சொன்னால், “தமிழ்.. தமிழ்” என்று ஒலிக்கும்
தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தானே படித்து “முத்தமிழ்க் காவலர்” ஆனார் கி.ஆ.பெ.விசுவநாதம்.
1967 ஜூலை 18-ல் “தமிழ்நாடு” என்னும் பெயர் அண்ணாவின் ஆட்சியில் சூட்டப்பட்டது.
நொபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் தமிழில் கையொப்பம் இடுவார்.
தமிழில் தட்டச்சை கண்டுபிடித்தவர் தஞ்சை சோமசுந்தர அய்யர்
தமிழில் ஒருங்குறி கணிணி எழுத்து உருவாக்கி உலகுக்கு அர்ப்பணித்தவர் அதிராம்பட்டினம்
உமர்தம்பி என்ற விஞ்ஞானி.
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் பர்சிவெல் என்ற ஆங்கிலேயர்.
செம்மொழி வரையறைகளைப் பெற்ற மொழிகளான லத்தீன்,பாரசீகம்,சீனம்,அரபு,சமச்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் பட்டியலில் தமிழ் மொழியும் இணைந்துள்ளது.
தமிழ்ச்சொற்களின் மூலம் எபிரேய்,மங்கோலிய,ஐரொப்பிய மொழிகலிலும் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து சொன்னவர் ஈழத்தில் உள்ள மானிப்பாய் என்ற ஊரில் 1875-ல் பிறந்த வைத்தியலிங்கம் (ஞானப் பிரகாசம்);இவருக்கு 72 மொழிகள் தெரியும்.

பெண் கவிகள்:
அவ்வையார், ஆதிமந்திரியார், ஆண்டாள், ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப் பாடியானார், கவெற்பெண்டு, குறமகள் இளவெயினி, நக்கன்னையார், நல்முல்லையார், பாரிமகளிர், பூங்கண் உத்தரையார், நல்வெள்ளியார், பாரி மகளிர், பூங்கண் உத்தரையார், இளவெயினி, பொன்முடியார், போந்தைப் பசலையார், முடத்தாமக்கண்னியார், மாற்பித்தியார், மறோகத்து நற்பசலையார், வெண்ணிகுயத்தியார், வெள்ளிவீதியார்,
ஸ்பெயின் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து சமயப் பணியாற்ற வந்த “காண்டன்ஸ்டைன் பெஸ்கி” என்பாரே “வீர்மாமுனிவர்” என்று தன் பெயரை தமிழ்ப் படுத்திய அவர்தான், “தேம்பாவணி” என்ற இலக்கியம் படைத்தார்.
1916-ம் ஆண்டு சுவாமிவேதாசலம் என்பார் தன் 13வயது மகள் நீலாம்பிகையுடன், “திருவருட்பா”வில் “உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்” என்ற வரியினைப் பாடும் போழ்து, “தேகம்” என்ற வடசொல்லுக்கு மாறாக “யாக்கை” என்ற தமிழ்ச் சொல் இருக்குமானால் தமிழ் இனிமைக் குன்றாது இருக்கும் என்று கருதினார். அதைக் கேட்ட நீலாம்பிகை,”அப்படியானால், இன்று முதல் நாம் அயல்மொழிச் சொற்களை நீக்கித் தனித் தமிழிலேயே பேசுதல், அதற்கான முயற்சியை நாம் விடாது செய்தல் வேண்டும் என்று ஆர்வ்த்தோடு கூறினார்.மகளின் வேண்டுகோளை ஏற்று “சுவாமி வேதாசலம்” எனும் தன் பெயரை ”மறைமலை அடிகள்” என்று தனித் தமிழில் மாற்றினார். இப்படித் தோன்றியதுதான் “தனித்தமிழ் இயக்கம்”!
வ.ரா. என அழைக்கப்படும் வ.ராமசாமி, பாரதியாரைச் சந்திக்கப் புதுச்சேரி சென்றார்.அப்போது ஆங்கிலத்தில் வ.ரா.பேசினார்.”ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம்தன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?” என்று கேட்டார் பாரதி. வ.ரா.வுக்கு அழுகையே வந்து விட்டது.
இசையரங்குகளில் பிறமொழிப் பாடல்களே பாடப்பட்ட நேரத்தில், “தமிழிசைச் சங்கம்” நிறிவி-தமிழிசையை வளர்த்த பெருமை ‘செட்டிநாட்டரசர்’ ராஜா அண்ணாமலை செட்டியாரைச் சாரும்.
ஒரு மொழி வழக்கொழிதலுக்கான காரணங்கள் ஆறு என ஆய்வில் கூறுகின்றார்:மார்டின் ஹாஸ்பல்மாத் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
1) மக்கள் இடப்பெயர்ச்சி
2) வணிகம்
3) சிறுபான்மை மக்கள் மீது பெரும்பான்மை மக்களின் ஆதிக்கம்
4) ஊடகங்கள்
5) காலனி ஆதிக்கம்
6) இனப் படுகொலை

முதல் தமிழ்ச் சஙம் 4440 ஆண்டுகளும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் 3700 ஆண்டுகளும், மூன்றாம் தமிழ்ச் சஙம் 1850 ஆண்டுகளும் செயல்பட்டன. இவை முதல், இடை, கடை என வழக்கில் இருந்தன. கி.பி.1-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே சஙகாலம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென் மாநிலங்கள் ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. தமிழ் பேசும் மாந்னிலத்திற்கு “மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்தில் வழங்குதல் கூடாது. “தமிழ்நாடு” என்று பெயரிட வேண்டும் என்று 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் தியாகி சங்கரலிங்கனார். தமிழுக்காகத் தன் உயிரையே தந்து சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

1 comment:

Anonymous said...

இனிய தமிழ் பற்றி எண்ணற்ற செய்திகளை தந்த நண்பர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி -அன்புடன் சந்துரு