Sunday, August 1, 2010

தோப்புத்துறை –சேதுமாதவபுரம்

From: AJ 100


மணிச்சுடர் நாளiதழில் வெளiயான கட்டுரை-தோப்புத்துறை ஜாமிய மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர்.

தோப்புத்துறை –சேதுமாதவபுரம்

தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்

அமைப்பாளர், அமெரிக்கா காயிதெ மில்லத் பேரவை
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற அமைப்பு)தமிழக கிழக்கு கடற்கரையோரத்தில் இருக்கும் ஊர்களiல் தோப்புத்துறை சரித்திரம் கொண்ட பசுமை நிறைந்த ஒரு பழைமையான துறைமுக நகரமாகும். பலதரப்பட்ட உள்நாட்டு வணிகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வணிபம் பெரிய அளவில் நடைப்பெற்ற தொன்மைமிக்க ஊர், கடலும் அதை சார்ந்த இடமும் இருப்பதால் சங்க கால தமிழர்கள் வழக்கப்படி தோப்புத்துறை நெய்தல் நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. தோப்பும் துறைமுகம் சார்ந்த ஊர் தோப்புத்துறை எனவே பன்னாட்டு விமானநிலையம் மற்றும் துறைமுகத்திற்கு வழங்கப்படும் குறியீடு சுருக்க எழுத்து வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரியாத விசயம். தோப்புத்துறை துறைமுக குறியீடு – TPH (INTPH-International Port code)

தோப்புத்துறை தோற்றம் மற்றும் வரலாறு பல நூற்றாண்டு காலத்திற்கு முன் என்று பலரும் நம்புகிறார்கள். தமிழக கடற்கரை ஊர்களாக காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், முத்துபேட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை ஊர்வாசிகள் போன்றே தோப்புத்துறை மக்களும் சத்திய மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதுடன், அரபியா மக்களுடன் திருமண பந்த தொடர்பு உறவு முறைகளை கலிபா காலத்திலிருந்து குறிப்பாக கலிபா அபுபக்கர் (ரலி) அவர்கள் காலத்திலிருந்து இருந்ததாக நம்பிக்கை செய்தியாகும். நம்பிக்கைகள் சில நேரத்தில் உலக அளவில் சரியாக இருக்கலாம் அல்லது சந்தேகத்துடன் வலம் வருவது இயற்கையான விசயம் தான். இந்த காலத்தில் தான் நம் ஊர்களiல் இறைநேசர்களாக கடல் மார்க்கமாக வந்தவர்கள் இஸ்லாமிய நெறிகளை போதித்து மக்களை ஏகத்துவநெறியின் பக்கம் அழைத்து அதன் படி தங்கள் வாழ்க்கை அமைத்து கொடுத்தார்கள், அத்துடன் மக்களுடன் கலந்து இறைபோதனையும் மார்க்க நெறிகளையும் வாழ்ந்து காட்டி தங்கள் வாழ்க்கை இறுதி நாள் வரைஇங்கே இருந்துள்ளார்கள்.

விஜய ரகுநாத சோக்கலிங்கர் ஆட்சி காலத்தில் நம் பகுதி அவர்களiன் ஆட்சியின் கீழ் செயல்பட்ட காரணத்தால் வேதாரண்யம்-திருமறைகாடு சுற்றியுள்ள பல சாலைகளுக்கும், ஊர்களுக்கும், வழிபாடு தளங்களுக்கும் அவர்கள் ஆட்சிபகுதியில் இருந்த சமுத்திரத்திற்கு சேது என்ற பெயர் சேர்த்து அழைக்கப்பட்டது. தோப்புத்துறைக்கு சேதுமாதவபுரம் என்ற பெயரும் இருந்தாக சொல்லப்படுகிறது.

தோப்புத்துறை பகுதியும் சாலை மற்றும் வீதிகளiன் அமைப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னை மாநகத்திலிருந்து 365 கீ.மீ தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் ஊர். தோப்புத்துறை 20 கீ.மீ கீழ் பகுதியில் Point calimere என்று அழைக்கப்படும் கோடிக்கரை/காடு உள்ளது. அக்கரைபள்ளi என்று சொல்லப்படும் கடல் பகுதியிலிருந்து தொடங்கும் அடப்பாறு தோப்புத்துறை வழியாக பல ஊர்களை கடந்து நாகப்பட்டினம் வரை ஓடுகிறது. ஒரு காலத்தில் இந்த ஆறுவழியாக தான் விளைநிலங்களiல் சாகுபடி செய்து நெல் மற்றும் தானியங்களை தோனி என்று சொல்லப்படும் பாய்மரசிறுபடகுகள் மூலம் கொண்டு வந்துள்ளார்கள். இந்த ஆறுவழியாக தான் மரகலங்களை செலுத்தி கடல்முகத்துவரத்து சென்று கடல்வழியாக பல்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்துள்ளார்கள். தோப்புத்துறை சாலைகள், தெருகள் பல்நோக்கு பார்வையில், வரும்முன் காக்கும் யோசனையுடன் அமைக்கப்பட்டுள்ளது இன்று நம்மவர்களுக்கு ஆச்சிரியமான விசயம் தோப்புத்துறை ஊர் அமைப்பு ஆகும், ஒரு தேர்ச்சி பெற்ற வல்லு\நர் மூலம் திட்டமிட்டு அமைத்து போல் இருக்கும். வேதாரண்யம்-நாகப்பட்டினம் பிரதான சாலை தொடங்கி ஒவ்வொரு தெரு முடிவும் அடப்பாறு சொல்லப்படும் ஆறு வரை சென்று அடையும். மழை காலங்களiல் மழைநீர் அந்தந்த சாலை தெருவழியாக அடப்பாறு சென்று கலக்கும் இதனால் ஊரில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலை இருக்காது. தெருகளiன் அலகம் வசதியான வகையில் அமைக்கப்பட்டுள்ளது அத்துடன் ஊரின் மத்திய பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் அரபிய கட்டிட கலை அமைப்பில் 5 மண்டபம் கொண்ட ஜாமிaய பெரிய பள்ளi மற்றும் அடக்கஸ்தலமும் ஊர் தெருகளiன் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட உயரம் உயர்த்தி நிறுவப்பட்டு உள்ளது. இந்த பள்ளiயை மாற்றி இன்றைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்றவாறு தற்போது நவீன அரபு கட்டிட கலையில் வடிவமைப்பில் புதிய ஜாமியா பள்ளi பலத்தரப்பட்ட கொடையாளர்களiன் பங்களiப்பின் மூலம் கட்டி முடிக்கப்பட்டு இன்றைய தினம் இறைஇல்லத்தை ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தோப்புத்துறை பெயரில் கப்பல் பதிவு

சிங்கப்பு>ர் மையமாக செயல்படும் கப்பல் பெயர் தோப்புத்துறை என்று பதிவு பெற்றுள்ள ஆவணம் இங்கிலாந்து கப்பல் பதிவேடுகளiல் வெளiயிடப்பட்டுள்ளது.

1911 –ல் இஸ்லாமிய கல்வியாளர் வரிசையில் தோப்புத்துறை மைந்தன்.

வேதம் வழங்கப்பட்ட கிருஸ்த்துவர்களால் குறைகூறப்பட்ட மறுமை வாழ்வை பற்றி தௌiவாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பதில் கூறும் விதமாக புத்தகம் ஒன்று தோப்புத்துறை இஸ்லாமிய கல்வியாளர் மரியாதைக்குரிய முத்து மரைக்காயர் என்பவரால் எழுதப்பட்டு 1911 –ல் அச்சு பதிப்பை வெளiட்டுள்ளார்கள். இதன் மூலம் தமிழக இஸ்லாமிய அடையாள பிரதிபலிப்பு மற்றும் அச்சு பதிப்பு கலாச்சாரம் பங்களiப்பை அவர்கள் கொடுத்து தோப்புத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

வேதாரண்யம்/கோடியக்கரை(பாயிண்ட்காலிமர்) பகுதிக்கு துறைமுகம் தோப்புத்துறை மட்டுமே.
இந்திய துறைமுக சட்டம் 1908 படி வேதாரண்யம் துறைமுகமாக செயல்படவில்லை. அப்போதைய அரசு அனுமதிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறைமுகம் தோப்புத்துறை மட்டும் வேதாரண்யம் சுற்றியுள்ள பகுதிக்கு என்று திறக்கப்பட்டது. தோப்புத்துறை பகுதியில் தத்தர்கள் மற்றும் மரக்கல ஆயர்கள் வாழ்ந்த பு>மியாகும். மரக்கல ஆயர்கள் கடல் வணிபம் மூலம் கொண்டு வரும் பொருள்களை தத்தர்கள் குதிரை மூலம் தரைவழியாக அனைத்து ஊர்களுக்கும் செய்து வியாபாரம் செய்தார்கள். இன்று கிட்டங்கி தெரு என்று பெயர் மறுவி அழைக்கப்படும் லெப்பை அப்பா பள்ளi அருகில் அமைத்துள்ள பண்டகச்சாலையில் ஏற்றுமதி மற்றம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கான கிடங்குகளாக பயன்படுத்தப்பட்டன. இன்று துறைமுக செயல்பாடுகள் இல்லை என்றாலும் கடலோர சுங்கத்துறை அலுவலகம் முழுநேரமாக செயல்படுகிறது.

விசாகப்பட்டினம்/தோப்புத்துறை துறைமுகம்

1949-50 வருடங்களiல் இந்த இரண்டு துறைமுகத்திலும் நடந்த கப்பல் வர்த்தகம் 6.87 லட்ச டன் மேல் தாண்டியதாக அரசு ஆவணங்களiல் பதிப்பட்டுள்ளது.


கல்வி பணியில் தனிப்பங்களiப்பு தோப்புத்துறை சிங்கப்பு>ர் முஸ்லிம் சங்கம்

தமிழ் முஸ்லிம்கள்f கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இவர்கள் தொழில் மற்றும் நிறுவன அதிபர்களாக இருந்து சிங்கப்பு>ர் பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா தமிழக பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் பகுதியை கொடுத்துள்ளார்கள். கடையநல்லு\ர் முஸ்லிம் லீக் மற்றும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் போன்றவைகள் மற்றவர்கள் பார்த்து பெருமை கொள்ளும் அளவிற்கு இந்த சங்கத்தின் பங்களiப்பு சமூகம், மதம் மற்றும் கல்வி தேவைகளுக்கு பெரும் உதவி புரிந்துள்ளார்கள். தோப்புத்துறை சங்கத்தில் செயல்பாடுகள் அரசு பதிவேட்டில் பதியப்பட்டு பெருமை கொள்ளும் அளவில் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி குறிப்பு எழுதப்பட்டுள்ளது. சிங்கப்பு>ர் சங்கம் தான் தோப்புத்துறை வளர்ச்சியில் முதல் வழிக்காட்டியாகும்.

முதல் நூலகம்

தோப்புத்துறையில் இக்பால் நூலகம் ஹுஜ்ரத் சேகு அப்துல் காதிர் வலி தர்ஹா மற்றும் ஆரிபின் பள்ளiவாசல் பரிபாலன சங்கம் நிர்வாகத்தின் மூலம் தொடங்கி புத்தகம் படிக்கும் ஆவலை தோப்புத்துறை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். ஊரில் இருக்கும் சங்கங்களiல் இது மிகவும் பழைமையானது. வருடந்தோரும் வரவு செலவு கணக்குகள் பார்வையில் தவறாமல் வைக்கும் சங்கம் என்ற பெருமையும் உண்டு.


தோப்புத்துறை துறைமுகத்தில் சுங்கவரி வச>ல்

பொதுவாக 20 முதல் 30 சதவீதம் வரை சுங்கவரி ஏற்றுமதி மற்றம் இறக்குமதி பொருகளுக்கு வரி விதிக்கப்பட்டு இந்த வரி வருமானத்தில் ஒரு பகுதியை நவவித்திலாயா பள்ளiயில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகம்

1938 இந்தியன் புவியியில்துறை சஞ்கையில் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுக பட்டியில் வெளiயிட்ட பதிவில் தோப்புத்துறை துறைமுகம் இடம் பெற்றுள்ளது.

தமிழ் பணியில் தோப்புத்துறை வாசிகள்

சிங்கப்பு>ரில் வெளiவரும் நாளiதழ் தமிழ் மலர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம், தமிழ் கல்வி கூட்டமைப்பு, சிங்கப்பு>ர் தமிழ் இளைஞர் மன்றம், தமிழ் நூலகம் மற்றும் சங்கங்கள் அனைத்திலும் தோப்புத்துறை சார்ந்தவர்களiன் பங்களiப்பு இருந்துள்ளது. மக்கள் தொகை சரிபார்க்கும் ஆவண பதிவில் எது குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர போரட்டத்தில் முக்கிய நிகழ்வு உப்பு சத்தியா கிரகம்

1930 ஏப்ரல் 13 தேதியில் இராஜாஜி தலைமையில் ஆங்கில அரசுக்கு எதிராக நடைப்பெற்ற உப்பு சத்தியா கிரகம் நிகழ்வுகளiல் தோப்புத்துறை ஜமாத் பெரிய உதவிகளை செய்துள்ளது. உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு கொள்ள வந்த முகம்மது இஸ்மாயில் தலைமையில் மதுரையிலிருந்து 30 மேற்பட்ட தொண்டருடன் வந்தவர்கள் இவர்கள் தோப்புத்துறை பள்ளiவாசல் மற்றும் தர்ஹா வாளாகத்தில் தங்க வைத்தார்கள். இதை அறிந்த ஆங்கில அரசு காவல் துறை இவர்களை சிறைப்பிடிக்க வந்த போது இது புனிதமிக்க வழிப்பாடுதளம் இங்கு தங்கிருப்பவர்களை கைது செய்ய கூடாது எதுவாக இருந்தாலும் நாளை பகல் நேரத்தில் வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். தடையை மீறி அவர்களுக்கு உணவு மற்றும் வசதிகளை தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்து கொடுத்தார்கள். பள்ளiவாசலில் தங்கியவர்கள் காலை 3 மணிக்கு அகஸ்தியன்பள்ளiக்கு சென்று உப்பு சத்தியா கிரகத்தில் பங்கு பெற்றார்கள்.

தோப்புத்துறை ஜமாத் மக்கள் செய்த இந்த பெருமை கொள்ளும் உதவி பற்றி அரசு ஆவணங்களiல் காணமுடிகிறது.

சர்தார் வேதரத்தினம்பிள்ளை குருகுலம் பெண்கள் கல்விக்கு கலங்கரை விளக்கம்.
வேதாரண்யம் பகுதியில் உப்பு சத்தியா கிரக தியாகி சர்தார் வேதரத்தினம்பிள்ளை அவர்களால் தொடங்கப்பட்ட குருகுலம் வேதாரண்யம் சுற்றி இருக்கும் பெண்களiன் கல்விக்கு திருப்புமுனையாக இந்த கல்வி நிறுவனம் செயல்படுகிறது. குறிப்பாக தோப்புத்துறை முஸ்லிம் பெண்கள் தொடக்க கல்வி மட்டுமே பெற்று வந்த காலம் மாற்றம் பெற்று என்று அறிவியல் கலை பட்டதாரிகளாகவும், டாக்டர் மற்றும் பொறியாளர் என்று ஒரு தன்னிரைவு அடைய இந்த குருகுலத்தின் பங்கு மேன்மையானது.

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் துபாய்

ஊரின் பல்வேறு நலத்திட்டங்களை துபாய் வாழ் தோப்புத்துறைவாசிகள் சங்கம் மூலம் செய்து வருகிறார்கள். குறிப்பாக மார்க்க கல்வி கருத்தில் கொண்டு பெண்கள் அரபி கல்லு\ரி தொடங்கப்பட்டுள்ளது.


சமய நல்லிணகத்திற்கு ஓர் எடுத்துகாட்டான ஊர்

தோப்புத்துறை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களiல் இருக்கும் மாற்று மத சகோதரர்களுடன் பல நூற்றாண்டுகளாக உறவு முறை கூறி அழைத்து பழகி நட்பு பாராட்டும் நிலை இன்றும் தொடர்கிறது. அனைத்துவித வைபவங்கள், விழாகள், திருமண நிகழ்வுகளiல் ஒற்றுமையுடன் பங்கு கொண்டு வருகிறார்கள்.


இன்றைய தோப்புத்துறைவாசிகள்..

கடந்த 10 வருடங்களiல் கல்வியில் மேம்பட்டவர்களாக உருவாகி பல்வேறு பணி மற்றும் தொழில் அலுவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளiநாடு சிங்கப்பு>ர், மலேசியா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளiல் குடும்பமாகவும், தனியாகவும் வசித்து வருகிறார்கள். தொழில் என்று ஒரு சிலரே செய்கிறார்கள்.

இணையதளத்தில் தோப்புத்துறை

தோப்புத்துறை பற்றி மேலும் விபரங்களுக்கு இந்த http://www.thopputhurai.com இணையதளத்தை பார்க்கவும்.
http://www.thopputhurai.com/malarpdf/mani_2.pdf


GATEWAY OF THOPPUTHURAI

--- www.thopputhurai.com ---

(International Port Code: TPH)


விரைவில் புதுப்பொழிவுடன் அனைத்து வித மக்களுக்கு பொதுவாக தோப்புத்துறை டாட்காம் சேவையை தொடரும்
ஆரிபா குழுமம் மற்றும் அல்ஜப்பார் பாத்திமா கனிகல்வி அறக்கட்டளை வழங்கிய தோப்புத்துறை ஜாமியா மஸ்ஜித் நேரடி ஒளiப்பரப்பை தோப்புத்துறை டாட்காமில் 121 நபர்கள் பார்த்த விபரமும், இந்த 121 நபர்களும் 7 நாடுகளiலிருந்து பார்த்த விபரமும் பதிவாகியுள்ளது பற்றி உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். அத்துடன் வீடியோ காட்சிகளை 43 நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.

அத்துடன் தோப்புத்துறை ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழா சிறப்பு மலர் முழுவதும் தோப்பத்துறை டாட்காமில் வாசகர்களiன் வசதிக்காக 32 பாகங்களாக வெளiயிடப்பட்டு இதுவரை 200 நபர்களுக்கு மேல் இந்த மலரை படித்தும், பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.
அத்துடன் மணிச்சுடர் மற்றும் மஸ்ஜித் சம்பந்தமான அனைத்து செய்திகளும் வெளiயிடப்பட்டுள்ளது.
விரைவில் புதுப்பொழிவுடன் அனைத்து வித மக்களுக்கு பொதுவாக தோப்புத்துறை டாட்காம் சேவையை தொடரும். இந்த இணையதளம் குறிப்பிட்டவர்களுக்கு சார்புடையது இல்லை. பொதுவான தகவல் தளம்.

மகிழ்ச்சியுடன் தொடர்ந்து தோப்புத்துறை தகவல் தொடர்பில் பாலமாக தோப்புத்துறை டாட்காம் (www.thopputhurai.com) குழுமம்

www.thopputhurai.com
thopputhurai@hotmail.com

*************************************************************************************************
"Where you seek brightness wisdom lives" Al-Noor Indian Matriculation School Always at your service,
www.alnoorschools.com alnoorschools@live.com alnoorvrm@dataone.in

No comments: