Wednesday, February 13, 2008

துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது



துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர் விருது' 22.01.2008 செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவுதி இறைவசனங்களை ஓதினார்.

பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார்.

ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர் சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர் ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும் மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வழங்கினார்.

அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம். காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக் முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர் என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.

டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம் பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில் மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி கூறினார்.




நன்றி : இனிய திசைகள் - பிப்ரவரி 2008

No comments: